சைவ முன்னேற்றச் சங்கத்தின்  தைப்பொங்கல் திருநாள்

அன்புடையீர், அருள்மிகு சிவகாமி அம்பாள்  இணை  சிதம்பரேசுவரர் ஆலயத்தில்  சைவ முன்னேற்றச் சங்கத்தின் தைப்பொங்கல் திருநாள்  தை 01, 2049 ஞாயிற்றுக்கிழமை 14.01.2018 மாலை  6.00 மணிமுதல் சிறப்பாக நடைபெறவுள்ளது.   தமிழர் திருநாளை – உழவர் திருநாளை உற்சாகமாகக் கொண்டாட அனைவரையும் வரவேற்கிறோம். திருவாட்டி தயாளன்  செயற்பொறுப்பர் சைவமுன்னேற்றக்கழகம், ஐக்கிய அரசு.

திருவள்ளுவர் சிந்தனை உயராய்வு எழுச்சி மாநாடு

தை 02-3, 2049  சனவரி 15-16, 2018 காலை வள்ளுவர் கோட்டம், சென்னை திருவள்ளுவர் சிந்தனை உயராய்வு எழுச்சி மாநாடு உலகத்திருக்குறள் மையம்

தமிழ்ப்புலவர் சரிதம் – பரிதிமாற்கலைஞர் : 2

(தமிழ்ப்புலவர் சரிதம் – பரிதிமாற்கலைஞர் : 1 – தொடர்ச்சி)   தமிழ்ப்புலவர் சரிதம் – பரிதிமாற்கலைஞர் : 2   இனிக் கும்பகோணக் கலாசாலையில் தமிழ்ப் புலமை நடாத்திவரும் மகா வித்துவான் பிரம்மசிரீ  உ.வே. சுவாமிநாத(ஐய)ரவர்கள் தாம் பதிப்பித்த சிலப்பதிகாரத்தினும்  மணிமேகலையிலும் தமிழ் நூல்கள் பலவற்றைப் பற்றிய குறிப்புக்களெழுதி யிருக்கின்றனர். இன்னும் புறநானூற்றிலும் நல்லிசைப் புலவர் பலருடைய சரித்திரக் குறிப்புக்களும் அப்புலவர்களை யாதரித்தாரைப்பற்றிய குறிப்புகளும் வரையப்பட்டுள. இவையனைத்தையும் ஒருங்கு தொகுத்து இன்னுந் தாம் அருமையாகக் கண்டு குறித்துவைத்துள விசயங் களையுங் கூட்டித் தனி…

தனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள் 2

   (தனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள் 1. தொடர்ச்சி) தனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள் 2   இனித், தமிழ்வளர்ச்சிக்கு மாறான மாறுதல் என்னென்றால், தூய தமிழ்சொற்கள் இருப்பவும் அவற்றை விடுத்து அயன்மொழிச்சொற்களை அதன்கட் கொண்டு வந்து புகுத்தலேயாம். ஓர் உடம்பின் உள்ளும் புறம்பும் உள்ள உறுப்புகள் எல்லாவற்றின் தொகுதியே அவ்வுடம்பாதல்போல, ஒரு மொழியில் உள்ள அதன் எல்லாச் சொற்களின் தொகுதியே அம்மொழியாகும். கூனுங் குறளும் ஊமுஞ் செவிடுஞ் சிதடும் உறுப்பறையுமாய்ச் சில உடம்புகள் இயற்கையிலே பழுதுபட்டிருத்தல் போலவும், அங்ஙனம் பழுதுபட்ட உடம்புகள் அக்குறைபாட்டை…

குடும்ப ஒற்றுமை, கட்சிக்கும் நாட்டிற்கும் நலம் பயக்கும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

குடும்ப ஒற்றுமை, கட்சிக்கும் நாட்டிற்கும் நலம் பயக்கும்! [சுற்றத்தாருடன் அன்புடன் பழகாதவன் வாழ்க்கை கரையில்லாக் குளத்தின் நீர்போன்று பயனற்றுப் போகும்.] அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. (திருவள்ளுவர், திருக்குறள் 523) “ஒருவீர் தோற்பினும் தோற்பது நும் குடியே” புறநானூறு கூறும் இப்பொன்னுரை உலகமக்கள் யாருக்கும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது. சோழவேந்தன் நலங்கிள்ளிக்கும் சோழவேந்தன் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர் மூண்டது. அப்பொழுது புலவர் கோவூர் கிழார் இருவரிடமும் ”இருவர் வெற்றி காண்பது என்பது இயலாத ஒன்று. ஒருவர் வெற்றி பெற்றாலும் மற்றவர் தோற்றவர்…

இரீயூனியன் தமிழன்பர்கள் சந்திப்பு – படங்கள்

இரீயூனியன் தமிழன்பர்கள் சந்திப்பு – படங்கள் சென்னை ஆசியவியல் நிறுவன மாநாட்டு அரங்கில் மார்கழி 18, 2048 செவ்வாய்க் கிழமை – சனவரி மாதம் 2-ஆம் நாள், தாய்த் தமிழகத்திற்கு வருகைதந்த இரீயூனியன் நாட்டைச் சார்ந்த தமிழன்பர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. ஆசியவியல் நிறுவன இயக்குநர் முனைவர் சான் சாமுவேல் வரவேற்று அறிமுக உரை நடத்தினார். தமிழன்பர்களின் குழுத்தலைவரான அருட்திரு இயோ.நீலமேகம், இரீயூனியன் நாட்டில் தமிழ்மக்களிடம் தமிழ் இல்லா நிலை குறித்து விளக்கினார். அவர்களின் இப்போதைய மொழியான கிரயோல் மொழியில் குழுவினர் தங்களை அறிமுகப்படுத்தித் தெவிவித்த…

ப. பழனிச்சாமி எழுதிய அஞ்சலைக்கு அஞ்சலி  நாடக நூலின் வெளியீட்டு விழா

அன்புடையீர், வணக்கம். 14.01.2018 தைத் திருநாள் முதல்நாளன்று மாலை 3.30 மணிக்குச் சென்னைப் புத்தகக் காட்சி வளாக அரங்கில் (பச்சையப்பன் கல்லூரி எதிரில்),  மொரிசியசுத் தமிழர் திரு. ப. பழனிச்சாமி அவர்கள் எழுதிய அஞ்சலைக்கு அஞ்சலி  நாடக நூலின் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. உங்கள் வருகை, தமிழர் நலனையும் பண்பாட்டையும் பேண உழைக்கும் மொரிசியசுத் தமிழர் திரு. பழனிச்சாமி அவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும். அன்புடன் காந்தளகத்துக்காக, சசிரேகா பாலசுப்பிரமணியன்

நாகரத்தினம் கிருட்டிணாவின் ‘இரணகளம்’ நூல் வெளியீட்டு விழா

நாகரத்தினம் கிருட்டிணாவின் ‘இரணகளம்’ நூல் வெளியீட்டு விழா மார்கழி 28, 2048 – வெள்ளி – சனவரி 12, 2018  

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 36 – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 35 தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 36  படக்கலை இதர கலைகளை எல்லாம் பாழாக்கி வருவதைக் கண்டு கவிஞர் வேதனையோடும் உளக்கொதிப்போடும் பாடல்கள் பாடியிருக்கிறார். பிழைப்புக்காக அங்கு நல்லவர்களும் கெட்டுப் போவதை எண்ணி மனம் வருந்துகிறார். கலையை வளர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டு எல்லோரும் வயிற்றைத்தான் வளர்க்கின்றார் என்பதைச் சுட்டுகிறார்.    தமிழரின் பெருமைகளை எண்ணி மகிழும் பெருங்கவிக்கோ இன்றையத் தமிழரின் இழிதன்மைகளை எடுத்துக்கூறப் பின் வாங்குவதில்லை. யார் என்று கேட்டு, இந்தத் தமிழன்தான், தமிழன்தான், தமிழன்தான்…

  2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்

2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்     2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் – யாழ்பாவாணன் வெளியீட்டகம் படத்திற்குக் கவிதை எழுதுங்கள் படத்தைப் பார்த்தீர்களா? நம்ம பிள்ளைகள் பூங்காக்கள் போய் காதலில் மூழ்கித் தங்களை மறந்து தவறு செய்த பின், செய்த தவற்றின் பரிசாகக் கிடைத்த குழந்தைகளைத் தெருவில் போட்டுச் செல்கின்றனர். இந்நிலை மேற்கத்தியப் பண்பாட்டில் இருந்து தமிழ் பண்பாட்டிற்குத் தொற்றிய நஞ்சு தான். இந்த நஞ்சுப் பழக்க வழக்கங்களைத் தமிழ் பண்பாட்டிலிருந்து விரட்ட வேண்டும். இந்தப் பணியை மேற்கொள்ளப் பாவலர்கள்/கவிஞர்கள்…