41ஆவது சென்னை புத்தகக் காட்சி

மார்கழி 26, 2048 – தை 09, 2049 சனவரி 10-22, 2018 தூய சியார்சு ஆங்கிலோ இந்தியன்  மேனிலைப்பள்ளி வளாகம், பச்சையப்பன் கல்லூரி,  சென்னை 41ஆவது சென்னை புத்தகக் காட்சி திருவள்ளுவர் சிலை திறப்பு போட்டிகள் – பரிசு வழங்கல் பொழிவுகள் பட்டிமன்றம் விருதுகள் வழங்கல் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கம் சென்னை 600006

காலத்தின் குறள் பெரியார் :1 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

காலத்தின் குறள் பெரியார் :1  அதிகாரம் 1.நூன்முகம்.   அறிவுறச் செய்தார் பெரியார் அவரைச் செறிவுற ஏற்கும் உலகு. அறிவாசான் சொல்லை அழகுக் குறளில் அறிவிக்கா விட்டால் தவறு. வள்ளுவன் வாய்ச்சொல்லை எண்ணித் துணிந்தேன்நான் தெள்ளுதமிழ் செப்பும் குறள். உள்ளத்தில் உள்ளார் பெரியார் அவரை உலகுக்(கு) உரைக்கும் குறள். உள்ளவரை நல்லமுறை தந்தவரைக் கூறத்தான் வள்ளுவரைப் பின்தொடர்ந் தேன். குறள்வெண்பா கற்றேன் பெரியார் முழக்கக் குரலென்பாக் கூறிநிற் கும். முடியா(து) எனவொரு சொல்லை நினையேல் முடியும் பெரியாரைப் பற்று. பெரியார் நெறியைக் குறள்வழித் தேர…

இரீயூனியன் பெருமக்களுக்குப் பாராட்டுவிழா – சென்னை

  மார்கழி 24, 2048 திங்கள்  08.01.2018 அறிஞர் அண்ணா பொதுநல மன்றம், ஆர்க்காட்டுச்சாலை,  வடபழனி பன்னாட்டுத்தமிழுறவு மன்றம் சார்பில் அருட்திரு இயோ.நீலமேகம் தலைமையில் வந்துள்ள இரீயூனியன் பெருமக்களுக்குப் பாராட்டுவிழா

உலகத்திருக்குறள் பேரவை, காஞ்சிபுரம் , பரிசுப்போட்டிகள்

  தை 22, 2049 ஞாயிறு 04.02.2018 வள்ளுவர் குருகுலம் மேனிலைப்பள்ளி, தாம்பரம், சென்னை 600 045 உலகத்திருக்குறள் பேரவை, காஞ்சிபுரம் பத்தாம் ஆண்டுவிழா பரிசுப்போட்டிகள் அறிவிப்பு தொடர்பாளர் திரு பால.சீனிவாசன், வழக்குரைஞர் பேசி 93805 81129 கவிஞர் புதுகை வெற்றிவேலன் தலைவர், உலக்திருக்குறள் பேரவை, காஞ்சிபுரமாவட்டம் பேசி 94445 21773 விசய் மா.இராமமூர்த்தி செயலர், உலக்திருக்குறள் பேரவை, காஞ்சிபுரமாவட்டம்

அகல் விளக்கு – மு.வரதராசனார். 2 .  

(அகல் விளக்கு – மு.வரதராசனார் 1 – தொடர்ச்சி) அகல் விளக்கு – 2 அத்தியாயம் 1 பாலாற்றங்கரையில் நானும் சந்திரனும் கைகோத்து உலாவிய நாட்கள் எங்கள் வாழ்க்கையிலேயே பொன்னான நாட்கள். நானும் அவனும் ஒரே வயது உள்ளவர்கள்; ஒரே உயரம் உள்ளவர்கள். அந்த வயதில் எடுத்த நிழற் படத்தைப் பார்த்தால் நான் கொஞ்சம் தசைப்பற்று உள்ளவனாக இருந்தது தெரிகிறது. சந்திரன் அப்படி இல்லை, இளங்கன்று போல் இருந்தான். கொழு கொழு என்றும் இல்லாமல் எலும்பும் தோலுமாக இல்லாமல், அளவான வளர்ச்சியோடு இருந்தான். அப்படி…

திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 2

(திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 1 தொடர்ச்சி) திருவள்ளுவர்  2. தெய்வப் பாவலராக வள்ளுவரைச் சங்கப் பழம்புலவர்கள் கூறுவதால். அவர் தமக்கு வள்ளுவர் நீண்டகாலத்துக்கு முற்பட்டவராகவும். அவரறநூலின் இறவாச்சிறப்பு அங்கீகரிக்கப்படுதற்குப் போதிய அவகாசம் அக்குறளுக்கும் அதனடிகளைப் பாராட்டி எடுத்தாளும் சங்கப்பனுவல்களுக்கும் இடையே ஏற்பட்டிருக்கவும் வேண்டும். இது சம்பந்தமாய்த் திருக்குறளடிகளைச் சிந்திக்கச் செய்யும் சில சங்கச் செய்யுட்டொடர்களை ஈண்டுக் குறிப்போம் :- இடுக்கண்கால் கொன்றிட விழு மடுத்தூன்றும் நல்லா ளிலாத குடி. (1030) தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன ஓங்குகுல நையவத னுட்பிறந்த…

சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 2

(சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 1. தொடர்ச்சி) சங்ககாலச் சான்றோர்கள்   2  1. கபிலர்  ஈராயிரம் ஆண்டுகட்குமுன் நம் தாயகமாம் தமிழகம் இயற்கை வளனும் செயற்கைத் திறனும் நிறைந்து, அறிவும் ஆண்மையும் அருளும் பொருளும் நிறைந்த இன்பத் திருநாடாய்க் காட்சியளித்தது. கலை வளமிக்க புலவர் கவித்திறத்தாலும், கொடை வளமிக்க புரவலர் கருணைத் திறத்தாலும், வேலெதிர் வரினும் அஞ்சி இமையாத விழிகள் படைத்த வீரர் நெஞ்சுரத்தாலும், ‘மக்களின் உயிர் நான்,’ என உணரும் உணர்வு சிறிதும் குறையாது குடி தழீஇக் கோலோச்சிய கோவேந்தரின் நெறி…

எங்கே போகிறோம்?  – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 2.

(எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1. தொடர்ச்சி) எங்கே போகிறோம்? 2. 1. விடுதலைநாள் விழாச் சிந்தனைகள்   எங்கே போகிறோம்?  விடுதலை நாளன்று நம்முடைய மதுரை வானொலி நிலையம் இந்த வினாவை நம்மை நோக்கிக் கேட்கிறது. இல்லை இல்லை! இந்த நாட்டு மக்களை நோக்கிக் கேட்கிறது. ஏன்? எங்கே போகவேண்டும் என்று சொல்லாமல், வழி காட்டாமல், எங்கே போகிறோம் என்று கேட்பதற்குக் காரணமென்ன? குற்றங்கள் தெரிந்தால் குணங்களை வளர்த்துக் கொள்ள முடியும். குறைகள் தெரிந்தால் நிறைகளை வளர்த்துக் கொள்ள முடியும்….

தமிழ் வளர்கிறது! 13-15 : நாரா.நாச்சியப்பன்

(தமிழ் வளர்கிறது! 10-12 : நாரா.நாச்சியப்பன் தொடர்ச்சி)   தமிழ் வளர்கிறது! 13-15    செந்தமிழில் மறுமலர்ச்சி சேர்ப்ப தற்கே சிறுகதைகள் புதுக்கவிதை வசனப் பாட்டு விந்தையுற எழுதுகிறோம் என்று சொல்லி விளையாடும் எழுத்தாளர் கூட்ட மொன்றாம் ! அந்தநாள் ஆபாசக் கதையை யெல்லாம் அச்சாக்கி மலிவான விலைக்கு விற்றுச் செந்தமிழைப் பரப்புவதாய்ப் பசப்பு கின்ற சிறுவணிகர் கூட்டந்தான்  மற்றென் றாகும்! (13)   இலக்கியத்தைத் தெருவெல்லாம் பரப்ப வென்றே எழுந்ததோர் இயக்கமெனில், தெருவின் பேச்சை இலக்கியமாய்த் தொகுத்தெழுதிப் பெருக்கு தற்கும் எதிரியென ஒரியக்கம் இருக்கக்…

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 2.

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் : இராகவ(ஐயங்கா)ர் – 1. தொடர்ச்சி) நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் 2  முன்னுரை ஒல்காப்பெருமைத் தொல்காப்பியனார், மரபியலில், ‘மாவு மாக்களு மையறி வினவே.’ ‘மக்கள் தாமே யாற்றி வுயிரே.’ என்பனவற்றால், மானிடரை மாக்கள், மக்கள் என இருதிறத்தினராகப் பகுத்தோதினார். மாக்கள் எனப்படுவார், ஐம்பொறியுணர்வுமட்டிற் பெற்று மனவுணர்ச்சி யிலராயினாரெனவும், மக்கள் எனப்படுவார், ஐம்பொறி யுணர்வேயன்றி மனமென்பதோ ரறிவும் உடையரயினர் எனவுங் கூறுவர். இது மானிடரை அறிவுவேற்றுமைபற்றிப் பகுத்த பகுப்பாகும். இனி, அவயவவெற்றுமைபற்றி, மானிடர், ஆண் பெண் என இருதிறத்தின ராவர். ஆணியல்பு…

வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 7.

(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 6. தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல்  (வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.)                  சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும்; மகளிர்                   நிறைகாக்கும் காப்பே தலை    (57)              மகளிர் சிறை காக்கும்=மகளிரைச் சிறையில் வைத்துக் காப்பாற்றும். காப்பு=காவல். எவன் செய்யும்=என்ன செய்யும்? நிறைகாக்கும்=மகளிர் தமது உள்ளத்தை அறத்தின் கண் நிறுத்தும் தன்மையால், காக்கும்=காப்பாற்றும். காப்பே= காவலே, தலை=தலையானது.                 உலகெங்கணும் ஆண் பெண் உறவு…

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  10 –  சி.இலக்குவனார்

[இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  09  தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  10  சிறுமியர் தினைப்புனங் காத்தலும் ஆடவர் வேட்டையாடுதலும் உணவைத்தரும் பொழுதுபோக்காக ஆயின. தினைப்புனம் காக்கும் இளமகளிரை வேட்டையாடும் ஆடவர் கண்டு காதலிப்பதும், பின்னர்ப் பல்வகை நிகழ்ச்சிகளால் காதல் கடிமணத்தில் நிறைவேறுவதும் குறிஞ்சி நிலத்திற்குரிய சிறப்பு நிகழ்ச்சிகளாக இலக்கியங்களில்இடம் பெற்றன. மருத நிலத்தில் வாழ்ந்தோர் கடவுளை வேந்தன் என்று கூறி வழிபட்டனர். வேந்தன் என்றால் விருப்பத்திற்குரியவன் என்று பொருள். `வெம்’ என்ற அடியிலிருந்து தோன்றிய சொல்லாகும்….