(காலத்தின் குறள் பெரியார் : 5 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி) காலத்தின் குறள் பெரியார்   அதிகாரம் 6. கொள்கை   1.அவனவன் நாட்டை அவனவன் ஆள்தல் இவண்நிலை நாட்டல் இலக்கு. 2.பொதுவுரிமை இல்லாப் பொதுவுடைமை வேண்டோம் இதுபெரியார் தந்த அறிவு. 3.கல்வியுடன் வேலை அனைவருக்கும் கிட்டிடத்தான் செல்வோம் பெரியார் வழி. 4.தொழுதுகை ஏந்திடோம் மாற்றான் இடத்தில் உழுதுபிறர்க்(கு) ஈந்திட்ட நாம். 5.சாதிமதம் மூடச் செயல்கள் அறியாமை மோதி யழித்தல் முடிபு. 6.காதல் கலந்திடல் ஆண்பெண்  தனியுரிமை மோதல் தவிர்த்திடு வோம். 7.பெண்ஆண்…