அதிமுக-வைச் சிதைக்கிறாரா திவாகரன்? – இலக்குவனார் திருவள்ளுவன்

அதிமுக–வைச் சிதைக்கிறாரா திவாகரன்?   திவாகரன் மீது தினகரனுக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் உள்ள சினம்  சரிதான் என்று தோன்றுகிறது.   நேற்று வெளியான 2.5.18 நாளிட்ட  இளைய விகடனாகிய சூனியர் விகடனில் திவாகரன் தெரிவித்த கருத்துகள் வந்துள்ளன. அதைப் படித்ததும் திவாகரன் மனம் கலங்கிய நிலையில் உள்ளாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.  நாம் எதிர்பார்த்தது நடக்காத போது அல்லது நம் நம்பிக்கை பொய்க்கும்போது இத்தகைய மனநிலை ஏற்படுவது இயற்கைதான்.  ஆனால், இந்த நிலைக்குக் காரணம் அவர்தான் என்பதை அவரது வாக்குமூலமே உறுதிப்படுத்துகிறது.   பொதுவாகத்,  தினகரன்…

குவிகம் இலக்கிய இல்லம் – அளவளாவல்

  சித்திரை 16, 2049 – ஞாயிறு – ஏப்பிரல் 19, 2018 வெண்பூங்கா அடுக்ககம், தியாகராயர்நகர், சென்னை இதழாளர் மொழி பெயர்ப்பாளர் திரு இராசேசு சுப்பிரமணியன் அவர்களுடன் அளவளாவல்

9ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரல்! -பிரித்தன்

  9ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரல்! இன அழிப்புக்கு பொறுப்புக் கோரல்! இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் பல்லாயிரம் வருடங்கள் வாழ்ந்து வரும் தமிழ் இனத்தின் தொன்மையும் செழுமையும் நிறைந்த வரலாறு, பண்பாடு, வாழ்வியல் பதிவுகளைச் சிதைத்து அழித்து எம் மக்களின் நிகழ்கால எதிர்கால அரசியல். சமூக, பொருளாதார, பண்பாட்டுக் கூட்டு விருப்பத் தெரிவுகளை அழித்தொழித்துத் தமிழ் மக்கள் ஒரு தேசமாக ஒன்றாக வாழ்வதை மறுதலித்துக் கடந்த கால அழிவுகளிலிருந்து என்றுமே மீண்டெழ முடியாத பலவீனமான சமூகமாக கையறு நிலையில்…

உலகக் கவிதைப் போட்டி – காலநீட்டிப்பு அறிவிப்பு

உலகக் கவிதைப் போட்டி – காலநீட்டிப்பு அறிவிப்பு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சார்பாக நடைபெறும் உலகக் கவிதைப் போட்டிக்கு படைப்பாளர்களின் அன்பு வேண்டுதலுக்கு இணங்க வைகாசி 13, 2049  27 மே 2018  வரை படைப்பாளர்கள் கவிதை அனுப்பக் கால நீட்டிப்பு செய்யப்பெறுகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத் தமிழியல்துறையும், திருமூர்த்திமலை தென்கயிலைத் தமிழ்ச் சங்கமும் இணைந்து உலகத் தமிழ்க் கவிதைப் போட்டியை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆனி/ஆடிததிங்களில் – யூலை- 2018 இல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பள்ளி, கல்லூரியில் பயிலும்…

11 ச.ம.உ. வழக்கில் தீர்ப்பு:  இதற்குத்தானா இத்தனைக் காலம் நீதிபதிகளே! – இலக்குவனார் திருவள்ளுவன்

11 ச.ம.உ. வழக்கில் தீர்ப்பு:  இதற்குத்தானா இத்தனைக் காலம் நீதிபதிகளே!  தமிழ்நாட்டிற்கான சென்னை உயர்நீதிமன்றம் நேற்று(27.04.2018) இரு வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கிப் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ஒன்று, சட்டமன்றத்தில்  மேனாள் முதல்வர் செயலலிதா படத்தை வைக்கும் பேரவைத் தலைவரின் முடிவில் தலையிட முடியாது என்பது.  நீதிமன்றத்தின்படி குற்றவாளியாக அவர் இருந்தாலும் முதல்வராகச் செயல்பட்டவர் என்ற முறையில் அவர் படம் இருந்து விட்டுப் போகட்டும் ஆனால், இவ்வழக்கு  தொடுத்த பொழுதே இவ்வழக்கு உயர்நீதிமன்ற வரம்பிற்குள் வராது என மறுத்து வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கலாமே! மற்றொன்று தமிழகத் தலைவிதியை…

இணையவழித் திருத்தப் பயிற்சிக்கு அழைப்பு – சென்னை

அனைவருக்கும் வணக்கம். கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு (FSFTN), தமிழ் விக்கிபீடியாவின் வேங்கைத் திட்டம் கட்டுரைப்போட்டி 2017 – 2018 இன் பகுதியாக, ஒரு நாள் தொகுதொடர் (Editathon) நிகழ்வு நடத்த தீர்மானித்துள்ளது.  இதன் மூலமாகக் கல்லூரி மாணவர்கள், த,.தொ.(ஐ.டி) ஊழியர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தின் கீழ்த் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளைத் தமிழில் உருவாக்கவும், மேம்படுத்தவும், அறிவுசார் படைப்புகள் தன் மொழியில் இருக்க வேண்டியதன் முதன்மைத்துவத்தையும் சார்ந்து விவாதங்கள், உரைகள் நிகழ்த்தவும் முயல்கிறது. இந்த முயற்சிக்கு ஆதரவு அளித்துத், தங்கள் கருத்துகளை வழங்கி உதவ வேண்டுகிறோம். நிகழ்வு விவரங்கள்…

ஓ.பன்னீர்செல்வம், நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரம்!   – குவியாடி

பிற கருவூலம் அனலும் புனலும் : ஓ.பன்னீர்செல்வம், நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரம்!   குவியாடி உரிமைக் குரல் கொடுத்துப் பெயர் பெறுவோர் உலகில் உண்டு. அடிமையாய் அடங்கிப் பெயர் பெறுவோர் தமிழ்நாட்டில் உள்ளனர். அடிமைத் தனத்தின் அடையாளம்தான் போலிப் பணிவு! மூன்று முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், இந்தப் போலி பணிவுக்கு உதாரணமாக பார்க்கப்படுகிறார். தன்னைத்தானே கீழிறக்கிக் கொள்வதை உணராமல் தற்காப்பு என எண்ணிச் சில முத்துகளை உதிர்த்து வருகிறார் அவர்! 30 ஆண்டுகளாகச் சசிகலா, செயலலிதாவை ஆட்டி வைத்ததாகக் கூறி வருகிறார்…

அகற்ற வேண்டியது அதிமுக அரசையா? எடப்பாடியார் ஆட்சியையா?   – குவியாடி

பிற கருவூலம்   அனலும் புனலும் : அகற்ற வேண்டியது அதிமுக அரசையா? எடப்பாடியார் ஆட்சியையா?   குவியாடி முந்தைய திமுக ஆட்சியின்பொழுது (2006-2011) அதனைச் சிறுபான்மைஅரசு என்றே எப்பொழுதும் செயலலிதா கூறிவந்தார். சட்டமன்றத் திமுக உறுப்பினர்கள் அடிப்படையில் அப்பொழுது திமுக அரசு பெரும்பான்மை பெற்றிருக்கவில்லை. ஆனால், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அடிப்படையில் – காங்கிரசு கூட்டணியால் – அது பெரும்பான்மை அரசாகத்தான் செயல்பட்டுவந்தது. இப்பொழுதோ சட்டமன்ற உறுப்பினர்கள் அடிப்படையில் மட்டுமல்ல, சொந்தக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு அடிப்படையில்கூடப் பெரும்பான்மை இழந்து அல்லாடுகிறது அதிமுக!…

தமிழ் வளர்த்த சான்றோர் விழா 2018, சிட்டினி

    சித்திரை 15, 2049  –  28.04.2018 மாலை 4,30 முதல் இரவு 9.30 வரை அருள்மிகு துருக்கை அம்மன் கோயில் வளாகம் பகரர் பூங்கா, சிட்டினி  (Regents Park, Sydney) தமிழ் வளர்த்த சான்றோர் விழா 2018, சிட்டினி சிட்டினித்  தமிழ் இலக்கியக் கலை மன்றம் ஆத்திரேலியத் தமிழ்ச்சங்கம் ஓபன் தமிழர் கழகம்   பெருமைக்குரிய சான்றோர்கள் சி.வை.தாமோதரம்(பிள்ளை) கவிஞர் கண்ணதாசன்  

கருத்தில் வாழும் கவிஞர்கள்- கவிஞர் பிரமிள்

கருத்தில் வாழும் கவிஞர்கள்- கவிஞர் பிரமிள்   வணக்கம்.  சித்திரை 14, 2049 வெள்ளிக்கிழமை  27.04.2018 மாலை 06.30 மணிக்கு மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் ,  இலக்கியவீதி  அமைப்பும், திரு கிருட்டிணா இனிப்பகமும்  இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வில் கவிஞர்  பிரமிள் பற்றிய  நிகழ்வுக்கு உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம் .   முன்னிலை ; இலக்கியவீதி இனியவன் தலைமை : கவிஞர் அழகிய சிங்கர் அன்னம்  விருது பெறுபவர் : கவிஞர்  சிரீநேசன் கவிஞர் பிரமிள்பற்றிச்  சிறப்புரை …

திருக்குறள் திருவிழா, திருச்சிராப்பள்ளி

திருக்குறள் திருவிழா, திருச்சிராப்பள்ளி திருக்குறள்திருமூலநாதன் அறக்கட்டளை 21 ஆம் ஆண்டு மாநில அளவிலான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி சேவாசங்கம் மேனிலைப்பள்ளி, திருச்சிராப்பள்ளி சித்திரை 18, 2049, செவ்வாய், மே 01,2018 பூவை பி.தயாபரன் thirumulanathan@gmail.com www.sites.google.com/site/thirumoolanathand

ஒளவை தி.க.சண்முகம் பெருமங்கலம் 106, சென்னை

ஒளவை தி.க.சண்முகம் பெருமங்கலம் 106, சென்னை சங்கரதாசு சுவாமிகள் நினைவு மன்றம் சித்திரை 13, 2049 வியாழன் ஏப்பிரல் 26, 2018 மாலை 5.30 இடம் – இராகசுதா அரங்கம், மயிலாப்பூர், சென்னை 600 004 கலை மேதை விருதுகள், தமிழ்ச் சான்றோர் விருதுகள், சுவாமிகள் நினைவு சிறப்பு விருதுகள்,  நூற்றாண்டு நினைவு விருதுகள் வழங்கல்