மொழிபெயர்ப்பு அறிஞர் பாவலர் தங்கப்பா மறைவு

மொழிபெயர்ப்பு அறிஞர் பாவலர் தங்கப்பா மறைவு [மாசி 25, 1965 / 08.03.1934  – மாசி 17, 2049 / 31.05.2018] மொழி பெயர்ப்பிலும்  மொழி ஆக்கத்திலும் வல்லவரான தமிழறிஞர் ம.இலெ.தங்கப்பா இன்று (மே 31,2018)வைகறைக்கு முன்னரே –  நேற்று  இரவு 01.30 மணிக்கு – இயற்கை எய்தினார். நலக்குறைவால் சில நாள் முன்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் நேற்று  முதல் நாள் வீடு திரும்பினார்.  ஆனால்,  மூச்சுத் திணறலால்  காலமானார்.   ‘வானகம்,  எண் 7, 11 ஆவது குறுக்குத் தெரு,  ஒளவை நகர், புதுச்சேரி-…

பள்ளிகளைக் காப்பாற்ற தாய்த்தமிழ்ப்பள்ளி வாரியம் –  நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்

பள்ளிகளைக் காப்பாற்ற தாய்த்தமிழ்ப்பள்ளி வாரியம் தமிழ்நாட்டில் 1951  இல் 20.80 % மக்கள்  படிப்பறிவோராக இருந்தனர். ஆண்களில்  31.70 % மக்களும்  பெண்களில் 10.10 % மக்களும்தான்  படிப்பறிவு பெற்றவர்கள். இத்தொகை 1961 இல்  ஆண்களில் 51.59% ,  பெண்களில் 21.06%  ஆகவும் மொத்தத்தில்  36.39% ஆகவும் உயர்ந்தது. 1971 இல் படிப்பறிவு உடையோர் மேலும் உயரந்தனர். ஆண்கள் 59.54%    பெண்கள் 30.92%     மொத்தம் 45.40% என இருந்தது. 2011 இல் தமிழ்நாட்டில் படிப்பறிவோர் விகிதம்  ஆண்கள் 86.81%  பெண்கள் 73.86% ஆகும். எல்லாக்…

செம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகம் மூடலுக்குப் பாராட்டு! உறுதியாய் நிற்க வேண்டுகோள்!

செம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகம் மூடலுக்குப் பாராட்டு! உறுதியாய் நிற்க வேண்டுகோள்!  பதின்மூவருக்குக் குறையாத உயிர்ப்பலிக்கும் நூற்றுக்கணக்கானவர்களின் படுகாயங்களுக்கும் பிறகு தமிழ்நாடு முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி செம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகத்தை மூட ஆணை பிறப்பித்துள்ளார்.  சுற்றுச்சூழல் வனத்துறை அரசாணை (பல்வகை) எண் 72 நாள் வைகாசி 14, 2049 /  மே 28, 2048 இனபடி அரசு இதனை நிலையாக மூட ஆணை பிறப்பித்துள்ளது.  துணை முதல்வர்  பன்னீர் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் செயக்குமார், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் இராசு, ஆதி திராவிடர்…

புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-4

புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-4 புதுவை-தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம், புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம் பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் அவர்களைக் கொண்டு  ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. அதன் நான்காவது சொற்பொழிவில் இராவண காவியத்தின் காட்சிப்படலம், கைகோட்படலம், திருமணப்படலம் ஆகிய படலங்களின் பொருள் பற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார். புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவர் மு.ந.நடராசன் தலைமை தாங்கினார். புதுவைத் திராவிடர் கழகத்தலைவர் சிவ. வீரமணி தொடர்சொற்பொழிவைத் தொடங்கி வைத்தார்.பகுத்தறிவாளர் கழகச்செயலர்  நெ.நடராசன் வரவேற்றுப்…

காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் -பெ. மணியரசன்

காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் உச்ச நீதிமன்றம் 18.5.2018 அன்று இறுதி செய்த காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருபெரும் ஊனங்கள்  இருக்கின்றன. ஒன்று, கருநாடக அணைகளின் மதகுகளைத் திறந்து மூடும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மட்டுமே உண்டு என்று நேரடியாகக்கூறப்படாதது. கருநாடக அணைகளின் மதகுகளைத் திறந்து விடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகப் பாசனத்துறையினர்க்கு ஆணை இட்டுத்தான்செயல் படுத்த முடியும் என்ற நிலை இருந்தால், கர்நாடக அரசு அவ்வாறு தன் அதிகாரிகளும் ஊழியர்களுக்கும் திறக்கக் கூடாது என்று ஆணைஇட்டால், நிலைமை என்னவாகும்? ஏனெனில் ஏற்கெனவே பலமுறை தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடும்படி உச்சநீதிமன்றம் ஆணை இட்டும் அதைச் செயல்படுத்த முடியாதுஎன்று வெளிப்படையாகக் கர்நாடக அரசு மறுத்து வந்துள்ளது. கடந்த 2016 இல் 10,000 கன அடி, 6,000 கன அடி, 2000 கன அடி  தண்ணீர் திறந்து விடுமாறு பலமுறை உச்சநீதிமன்றத் தீபக் மிசுரா ஆயம் கட்டளை இட்டும் தண்ணீர் திறந்து விட மறுத்து விட்டது கருநாடக அரசு. அது மட்டுமின்றிக், கருநாடகச் சட்டப்பேரவையைக் கூட்டித் தண்ணீர் திறந்து விட முடியாதுஎன்று ஒருமனமாகத் தீர்மானம் நிறைவேற்றியது கருநாடக அரசு. உச்சநீதிமன்றக் கட்டளையை மீறியதற்காக கருநாடக அரசின் மீது உச்சநீதி மன்றமோ அல்லது இந்திய அரசோ ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு பாதிக்கப்பட்டதுதான் மிச்சம்! இரண்டாவது ஊனம், ஏதாவதொரு மாநிலம் மாற்றுக் கருத்து கூறினால் காவிரி மேலாண்மை ஆணையத்தில் வாக்களிக்கும் உரிமையுள்ள ஒன்பதுஉறுப்பினர்களின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துப்படி முடிவெடுக்க வேண்டும் என்று இருப்பதாகும். ஆணையத்தின் தலைவர் மற்றும்நான்கு உறுப்பினர்கள் –ஆக மொத்தம் ஐந்து பேர் நடுவண் அரசின் அதிகாரிகள்; நடுவண் அரசால் அமர்த்தப்படுவோர் ஆவர். தமிழ்நாடு முதலான நான்கு மாநிலங்களுக்கும் தலைக்கு ஒருவர் வீதம் நான்கு பேர். இதில் கருநாடக உறுப்பினர் மாற்றுக் கருத்து தெரிவித்து, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடமறுத்தால், நடுவண் அரசின் ஐந்து உறுப்பினர்கள்நடுவண் அரசின் வழிகாட்டுதல் படி நடந்து கொள்வார்கள். காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு 1991 – இல் வழங்கப்பட்டதிலிருந்து, இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு செயல்படுத்துமாறு  2013 – இல் உச்சநீதிமன்றம் ஆணையிட்டதிலிருந்து இதுவரை எந்தத் தீர்ப்பையும் செயல்படுத்த மறுத்து வருகிறது  இந்திய அரசு. காங்கிரசு அரசாக இருந்தாலும் பாசக அரசாக இருந்தாலும் நடுவண் அரசின் நிலைபாடு எப்போதும்தமிழ்நாட்டிற்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதுதான். இனி அந்தப் பாகுபாடு தொடராது என்பதற்கு என்ன உறுதி? கருநாடக உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு சாதகமாக இந்திய அரசு அதிகாரிகள் நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. இந்த இருபெரும் ஊனங்கள் புதிய காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருக்கின்றன. இவற்றைச் சரி செய்வது எப்படி? இந்த ஊனங்களால் பாதிப்புவராது என்று நேரடியாகத் தெளிவாக உறுதி கூற நரேந்திர(மோடி) அரசு தயாரா? உச்சநீதிமன்றம் அப்போது தலையிட்டுச் சரிசெய்யுமா? கடந்த காலஅனுபவங்கள், “இல்லை” என்ற விடையைத்தான் தருகின்றன. இவற்றுக்கப்பால், 16.2.2018 அன்று தீபக் மிசுரா ஆயம் அறிவித்த காவிரித் தீர்ப்பு, இந்திய அரசமைப்புச் சட்டவிதிகளுக்கு முரணானது. 1956 ஆம்ஆண்டின் தண்ணீர்த் தகராறு சட்டத்திற்கு எதிரானது. அத்துடன் அத்தீர்ப்பு மரபுவழித் தண்ணீர் உரிமை (Riparian Right) என்ற அடிப்படை உரிமையைத் தகர்த்து விட்டது. தேவைக் கேற்ற தண்ணீர் பகிர்வு (Equitable Share) கோட்பாட்டைத் திணித்துள்ளது. வேளாண்மைக்கு நிகராகத் தொழில்துறைக்குத் தண்ணீர் அளிக்கும் கோட்பாட்டைப் புகுத்தியுள்ளது. இந்த அநியாயங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரை மிக மோசமாகக் குறைத்துவிட்டது  உச்ச நீதிமன்றம். எனவே இதைச் சரி செய்ய காவிரி வழக்கிற்கு உச்சநீதிமன்றத்தில் ஏழு நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்பு ஆயம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான வழக்கைத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுக்க வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முல்லைப் பெரியாறு வழக்கு, உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கும் நிலையில்  அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றப்பட்ட முன் எடுத்துக்காட்டையும் சுட்டிக் காட்டி வருகிறது. மேற்கண்ட எச்சரிக்கைகளுடன் – விழிப்புணர்வுடன் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது பற்றி தமிழர்கள் கவனமாக இருக்கவேண்டும். – பெ. மணியரசன் ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக்குழு ========================== செய்தித் தொடர்பகம், காவிரி உரிமை மீட்புக் குழு ========================== பேச: 76670 77075, 94432 74002 ========================== Fb.com/KaveriUrimai #SaveMotherCauvery…

இ.ஆ.ப., இ.கா.ப.  தேர்வில் சமூக நீதிக்கு எதிரான புதிய விதிமுறைகள்: மத்திய அரசுக்குத் தாலின் கண்டனம்

இ.ஆ.ப., இ.கா.ப.  தேர்வில் சமூக நீதிக்கு எதிரான புதிய விதிமுறைகள்: மத்திய அரசுக்குத் தாலின் கண்டனம் சென்னை: குடிமைப்பணித் தேர்வு முறையில் மத்திய அரசு புகுத்த உள்ள புதிய முறைக்குத் தாலின் பின்வருமாறு கண்டனம் தெரிவித்துள்ளார். “இ.ஆ.ப. முதலான அகில இந்தியப் பணிகளுக்கு இதுவரை ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம்(யூபிஎஸ்சி) முதல்நிலை, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வை நடத்தித் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. அதில், மிகச்சிறந்த மதிப்பெண்கள் வாங்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட,  பழங்குடியினச் சமுதாயங்களைச் சார்ந்த இளைஞர்கள் ஏன் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற முடியாமல்…

மக்கள் நாயகம் கொல்லப்பட்டது!  மக்களும் கொல்லப்பட்டனர்! –  இலக்குவனார் திருவள்ளுவன்

மக்கள் நாயகம் கொல்லப்பட்டது!  மக்களும் கொல்லப்பட்டனர்! தொடங்கியது நரேந்திர(மோடி) அரசு! முடித்தது எடப்பாடி பழனிச்சாமி அரசு!     வேதாந்த வள வரையறு நிறுவனம் (Vedanta Resources plc,)என்பது உலக அளவில் சுரங்கத் தொழிலிலும் மாழை (உலோக)வணிகத்திலும் ஈடுபட்டு வரும் நிறுவனமாகும்.   இதன் சார்பு அமைப்பாகத் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் ஊரில் சுடெருலைட்டு தொழிலகம் (Sterlite Industries)  என்னும் செம்பு உருட்டாலை அமைக்கப்பட்டது. இந்தியத் தேசியப்பேராயத்தின் நரசிம்ம(ராவு) ஆட்சியில் ஒப்புதல் பெறப்பட்ட இத்தொழிலகத்திற்கு 1993 இல் அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கே செம்புக்கம்பி,…

இலக்கியச் சிந்தனை 576 ஆவது நிகழ்வு மற்றும் குவிகம் இலக்கியவாசல் 38 ஆவது நிகழ்வு

இலக்கியச் சிந்தனை 576 ஆவது நிகழ்வு மற்றும் குவிகம் இலக்கியவாசல் 38 ஆவது நிகழ்வு ‘மாறி வரும் சிறுகதைக் களம்’ சிறப்புரை :- திருமதி காந்தலட்சுமி சந்திரமௌலி வைகாசி 12, 2049 சனிக்கிழமை 26-05-2018 மாலை 6.00 மணி சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை அரங்கம் அடைய   உரையாளர் பற்றி:- தமிழிலும் ஆங்கிலத்திலும் 5 புதினங்கள், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ள எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடக வடிவமைப்பவர், மொழி பெயர்ப்பாளர், தொலைக் காட்சிக்காகவும், வானொலிக்காகவும் ஏராளமான…

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு: ‘கவியரசர் கண்ணதாசன்’

இலக்கியவீதி பாரதிய வித்தியா பவன் கிருட்டிணா இனிப்பகம் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு: ‘கவியரசர் கண்ணதாசன்’ வைகாசி 11, 2049 வெள்ளிக்கிழமை 25.05.2018 மாலை 6.30  மணி பாரதிய வித்தியா பவன், மயிலாப்பூர், சென்னை 600 004 முன்னிலை : இலக்கியவீதி இனியவன்  தலைமை : இயக்குநர் எசு.பி. முத்துராமன்  அன்னம்  விருது பெறுபவர் : ஓவியக்கவிஞர் அமுதபாரதி  சிறப்புரை  :  இலக்கியச்சுடர் த. இராமலிங்கம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் ப. சரவணன் தகுதியுரை : செல்வி ப. யாழினி உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன்  இலக்கியவீதி இனியவன்

கவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு

கவிஞர் மு.முருகேசு எழுதிய கட்டுரை நூலுக்குச் சிறந்த வாழ்வியல் நூலுக்கான முதல் பரிசு     வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு  ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு எழுதிய ’இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?’ எனும் நூலுக்கு, கவிதை உறவு வழங்கும் ’மனிதநேயம் மற்றும் வாழ்வியல் நூலுக்கான முதல் பரிசு’ கிடைத்துள்ளது.      கடந்த 46 ஆண்டுகளாகச் சென்னையிலிருந்து வெளிவரும் ‘கவிதை உறவு’ சார்பில், 15 ஆண்டுகளாகத்  தமிழில் வெளியாகும் சிறந்த படைப்பிலக்கிய நூல்களுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கின்றனர்.     2017- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா…

குவிகம் இல்லம் – அளவளாவல் முனைவர் வ.வே.சு. உடன்

குவிகம் இல்லம் – அளவளாவல்   வைகாசி 06, 2049 ஞாயிறு மே 20   நண்பகல் 11.00 – 1.00 ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை முனைவர் வ.வே.சு. (மேனாள் முதல்வர், விவேகானந்தா கல்லூரி) அவர்களுடன் அளவளாவல்   அனைவரையும் வரவேற்கும் சுந்தரராசன்:  9442525191 கிருபா நந்தன்: 8939604745 அரங்கம் அடைய

கருதியது நடந்தது:  எடியூரப்பா விலகல்! – இலக்குவனார் திருவள்ளுவன்

கருநாடகாவில் கருதியது நடந்தது:  எடியூரப்பா விலகல்!    15 நாள் கால வாய்ப்பில் ச.ம.உ.களை வாங்கி ஆட்சியைச் சிக்கலின்றி அமைக்கலாம் எனப் பாசக திட்டமிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் 24 மணி நேர வாய்ப்பே அளித்தமையால் பேர வணிகத்திற்கு வாய்ப்பில்லாமல் போனது. இச்சூழலை எதிர்பார்த்தே எடியூரப்பா விலக  வேண்டும் என நேற்று குறிப்பிட்டிருந்தோம்,( எடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும். )   மோசமான தோல்வியை வெளிப்படுத்துவதை விட விலகுவதே மேல் எனக் குறுக்கு வழியில் கருநாடகாவின் முதல்வராகப் பொறுப்பேற்ற…