எடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்

எடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும்!    கருநாடக முதல்வர் எடியூரப்பா  நாளை (19.05.2018) மாலை 4.00மணிக்கு நம்பிக்கை  வாக்கு கோர வேண்டும் என்ற நலல தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவிததுள்ளனர்.  உச்ச மன்ற நீதிபதிகள் ஏ,கே.சிருகிரி(AK Sikri  ),  சரத்து அரவிந்து  போபுதே (SA Bobde )  அசோக்கு பூசன்( Ashok Bhushan) ஆளுநர் பதவிக்கு மதிப்பளித்து அதே நேரம் மக்களாட்சி மாண்பு காக்கப்படவேண்டும் எனச் சரியாகத் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.   யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத பொழுது…

தமிழீழப் படுகொலை  : உலகம் வருந்தவும் இல்லை!  திருந்தவும் இல்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழீழப் படுகொலை  : உலகம் வருந்தவும் இல்லை!  திருந்தவும் இல்லை!   ‘’யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’’,  ‘’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ ஆகிய தமிழ் நெறிகள் உலகெங்கும் பரப்பப்படவில்லை. இதனால், இனம், சமயம்(மதம்) முதலானவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்பெற்று உலகெங்கும் படுகொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இத்ததகைய படுகொலைகளிலிருந்து மீண்டவர்களும் இத்தகைய படுகொலைகளுக்குத் துணை நிற்கின்றனர். உலக நாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய உலக அமைப்பு எதுவும் உருவாகவில்லை. இருக்கின்ற உலக அமைப்புகள் வல்லமையாளர்கள் கைப்பிடிகளில் உள்ளன. எனவே அவர்கள் ஆட்டுவிப்பிற்கேற்ப ஆடுகின்றன. எனவே, மனிதப் படுகொலைகளுக்கு எதிரான…

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விருதினைப் பெற்ற சிங்களர் !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விருதினைப் பெற்ற சிங்களர் ! முனைவர் செனிவிரத்னா அவர்களை சிங்களர்தம் பகுத்தறிவின் குரலாகப் போற்றுகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.  சிங்களர் ஒருவர் உட்பட நான்கு பெருமக்களுக்கு பெருமைசால் உயரிய விருதுகளை வழங்கி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மாண்பேற்றியுள்ளது. சா.சே.வே.செல்வநாயகம் நினைவு விருது, மாமனிதர் துணைவேந்தர் அழகையா துரைராசா நினைவு விருது, அதிபர் நெல்சன் மண்டேலா நினைவு விருது, தமிழ்த் தேசிய இளைஞர் புலமைப்பரிசில் என ஆண்டுதோறும் நான்கு விருதுகளை வழங்கி மாண்பேற்றி வருகின்றது. அந்தவகையில்…

தமிழ் அருச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு

தமிழ் அருச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு   செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் திஇநி பல்கலைக்கழகத் தமிழ் பேராயமும் இணைந்து நடத்தும், தமிழ் அருட்சுனைஞர் பட்டயப் படிப்பின் ஏழு குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. இதுவரை சற்றேறக்குறைய 700 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர். தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு (DIPLOMA IN TAMIL ARUTSUNAIGNAR) 8-ஆம் ஆண்டு (2018-2019) மாணவர் குழாமிற்கு (Batch) சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. சூன்…

சுனில் கில்நானியும்  நானும் – சிறப்புரை : சா கந்தசாமி

 விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 36 சுனில் கில்நானியும்  நானும்       (‘இந்தியா என்கிற கருத்தாக்கம்’ என்ற புத்தக ஆசிரியர்)   சிறப்புரை:சா கந்தசாமி சாகித்திய அக்காதெமி விருதுபெற்ற எழுத்தாளர். புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என்று பல தளங்களில் இயங்குபவர். வைகாசி 05, 2049 /   19.05.2018 (சனிக்கிழமை) மாலை 6.00 மணி திருஇராம் குழுமஅலுவலகம்                மூகாம்பிகை வளாகம்                             சி பி  இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே  ஆறாவது தளம்,      மயிலாப்பூர்      சென்னை 600 004   அனைவரும் வருக! அன்புடன்…

பொய்களையே முதலீடு செய்யும் பாசகவின் வெற்றி மாயை! – இலக்குவனார் திருவள்ளுவன்

பொய்களையே முதலீடு செய்யும் பாசகவின் வெற்றி மாயை!  பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்களை  நாம் பார்த்திருக்கிறோம்.  அந்த நிலையையும் தாண்டி எப்பொழுதும் பொய்களையே முதலீடுகளாகக் கொண்டு பொய்வணிகம் புரிந்து மக்களை ஏமாற்றிப் பயனைடந்து வரும் கட்சி ஒன்று உண்டென்றால் அது பாசக ஒன்றுதான்.   அண்மையில் (மே 2018) நடந்துமுடிந்த கருநாடகாவின் சட்டமன்றத் தேர்தலிலும் நாம் இதனைக் கண்கூடாகக் காண முடிகிறது. பாசக பல தோல்விகளைச் சந்தித்தும் மாபெரும் வெற்றியாகப் பொய்ப் பரப்புரை மேற்கொள்கிறது. அதன் ஆதரவுக் கட்சிகளும் நடுநிலையாகத்   தெரிவிப்பதுபோல் நடித்து  நரேந்திர(மோடி)யின்…

பொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு!

பொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு!   காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை! இந்திய அரசின் நீர்வளத்துறை இன்று (14.05.2018) உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ள காவிரி வரைவுச் செயல்திட்டம் – தன்னாட்சி அதிகாரமற்ற ஒரு பொம்மை பொறியமைவாகவே உள்ளது. “காவிரித் தண்ணீர் மேலாண்மை செயல்திட்டம் – 2018” (Cauvery Water Management Scheme 2018) என்ற பெயரில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த வரைவுத் திட்டத்தின் பிரிவு – 9, செயல்திட்டத்தின் (ஆணையத்தின்) அதிகாரங்கள், செயல்பாடுகள், கடமைகள் பற்றி குறிப்பிடுகின்றன. அதில்,…

தமிழீழம் – பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் அரங்கம்

தமிழர் தலைவிதி தமிழர் கையில் : பேர்லினில இடம்பெற்ற பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் அரங்கம் !    பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் மக்கள் அரங்கம் செருமன் தலைநகர் பேர்லினில் இடம்பெற்றது. இலங்கைத்தீவின் தேசிய இனச் சிக்கலுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஈழத் தாயகப்பகுதிகளிலும், ஈழத்தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொதுவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்ற அரசியல் நிலைப்பாட்டுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில் பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் செயற்பட்டு வருகின்றது. கனாடாவில் இடம்பெற்றிருந்த மக்கள் அரங்கத்தின் தொடர்சியாகத் தற்போது செருமனியில் இடம்பெற்றுள்ளது. செருமன்…

புதுவையில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-3

புதுவையில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-3 புதுவைத் தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம் புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம் பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் ஆற்றி வருகிறார். சித்திரை 30, 2049  / 13.5.2018 அதன் மூன்றாவது சொற்பொழிவில் இராவணகாவியத்தின் இரண்டாம் காண்டத்தில் அமைந்துள்ள படலங்களின் பொருள்பற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார்.  புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவர் மு.ந.நடராசன் தலைமை தாங்கினார்.  புதுவைத் திராவிடர் கழகத்தலைவர் சிவ. வீரமணி தொடர்சொற்பொழிவைத் தொடங்கி வைத்தார்.செயற்குழு உறுப்பினர் நெ.நடராசன்…

குவிகம் இல்லம் – அளவளாவல்: திருமதி தாரிணி கோமல்

குவிகம் இல்லம் – அளவளாவல் சித்திரை 30, 2049 – ஞாயிற்றுக் கிழமை – மே 13, 2018 காலை 11.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை திருமதி தாரிணி கோமல் (நாடக த் தயாரிப்பாளர், இயக்குநர்) அவர்களுடன் அளவளாவல் வெண்பூங்கா அடுக்ககம், தியாகராயர்நகர், சென்னை 17  

தமிழ்ப்பேராய விருதுகள் 2018

தமிழ்ப்பேராய விருதுகள் 2018     திரு இராமசாமி நினைவு அறிவியல்-தொழில் நுட்பக் கல்விநிறுவனத்தின் தமிழ்ப்பேராயம் 2018 விருதுகளுக்கான பரிந்துரைகள் குறித்த அறிவிப்பு மடல் படவடிவில்  உள்ளது. காண்க.

கனிவில்லாத இந்திய அரசும் துணிவில்லாத தமிழக அரசும் – இலக்குவனார் திருவள்ளுவன்

கனிவில்லாத இந்திய அரசும் துணிவில்லாத தமிழக அரசும்   மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருப்பது இயற்கைதான். ஆனால், தமிழக அரசினருக்கு இந்த அளவு பயம் இருப்பது நாட்டு மக்களுக்கு அல்லவா தீமையாய் முடிகிறது? தீமையின் உச்சக்கட்டம்தான் தேசியத்தகுதி நுழைவுத் தேர்வு -NEET – மூலம் மாணவர் சேர்க்க நடை  பெற இசைந்தது.  கல்வித்துறை என்பது மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட பொழுதே தீமைகள் உலா வரத்  தொடங்கின. இப்பொழுது கல்வித்துறை முழுமையும் மத்தியப் பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இனிமேல்…