உலகத் தமிழ் எழுச்சி மாநாடு, சென்னை

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் அனைத்துத் தமிழ்க் கூட்டமைப்பு நடத்தும் உலகத் தமிழ் எழுச்சி மாநாடு சித்திரை 30, 2049 – ஞாயிற்றுக்கிழமை – 13.05.2018 பெரியார் திடல், சென்னை 600 007 பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மாநாட்டுப் பொறுப்பாண்மையர்

மூன்றாவது ஐரோப்பியத் தமிழ்  ஆய்வியல் மாநாடு, பாரிசு

  மூன்றாவது ஐரோப்பியத் தமிழ்  ஆய்வியல் மாநாடு பாரிசு   ஆவணி 23 &  24, 2049  சனி 08 ஞாயிறு & 09 செட்டம்பர் 2018     – சங்க இலக்கியக் கட்டமைப்பும் கருத்து வெளிப்பாட்டு உத்திகளும் – சுவாமி விபுலாநந்தரின் தமிழாய்வுப் பணிகள்   அன்புசால் தமிழுறவுகளே ! பாரிசு மாநகரில் ஆவணி 23 &  24, 2049 சனி08 ஞாயிறு 09 செப்டெம்பர் 2018 களில் நடைபெறவிருக்கும் மூன்றாவது ஐரோப்பியத் தமிழாய்வியல் மாநாட்டுக்கு அறிஞர்களிடமிருந்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. தரமான கட்டுரைகள் மாநாட்டு மலரில் இடம்பெறும். பாமினி அல்லது ஒருங்குகுறியில்(யுனிக்கோடில்) ஆறு பக்கங்களுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும். கட்டுரைகள் அனுப்பிவைக்க வேண்டிய இறுதி…

கல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல்!  – தங்க. சங்கரபாண்டியன்

கல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல்!      ‘கல்விப் பெருவள்ளல்’, ‘புதுக்கோட்டை அண்ணல்’ என்றெல்லாம் புகழப்படும் பு.அ. சுப்பிரமணியனார், ஐயாக்கண்ணு – மாணிக்கத்தம்மாள் இணையருக்கு ஐப்பசி 07, 1929   – 22.10.1898-ஆம் ஆண்டு பிறந்தவர். தந்தையார் மறைவினால் கல்லூரியில் படித்து வந்த அண்ணலாரின் படிப்பு பாதியில் தடைபட்டது. அதனால் இவர் கல்விச் செல்வத்தை அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கிலும், கல்விச் செல்வம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டும் எனும் பேரவாவிலும், 1924-ஆம் ஆண்டு ‘கல்வி வளர்ச்சிக் கழகம்‘ ஒன்றைத் தொடங்கினார்.  …

விடுதலைச்சிறுத்தைக் கட்சி சார்பில் அறுவருக்கு விருதுகள்

விடுதலைச்சிறுத்தைக் கட்சி சார்பில் அறுவருக்கு விருதுகள் பினராயி விசயன், திருநாவுக்கரசர் முதலானோருக்கு விருதுகள் அறிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை விட்டிருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத்து பிறை, செம்மொழி ஞாயிறு ஆகிய ஆறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமூகநீதிக்கும், தமிழ் மொழி மேம்பாட்டுக்கும் பாடுபடுகிற சான்றோரைச் சிறப்பிக்கும் விதமாக இந்த விருதுகளை…

மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் – முன்னுரை

மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் முன்னுரை பக்தி இலக்கியக் காலக் கட்டத்தைத் தமிழின் மறுமலர்ச்சிக் காலம் என்பர். அதன் பின்னர் ஏற்பட்ட அயலவர் படையெடுப்பாலும், ஆரியப்பண்பாட்டு மொழியான சமசுகிருதக் கலப்பாலும் தமிழின்நிலை தாழ்வுற்றது. மீண்டும் இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தமிழை மீட்டுருவாக்கும் பணியினைப் புலிப்பாய்ச்சலோடு தொடங்கியவர்கள் தமிழறிஞர்களே ஆவர். பிரித்தானியர் ஆட்சியில் நான்கு தேசிய இனத்தவரின் நிலமாக சென்னை மாகாணம் இருந்தது. அதில் ஒன்றான தமிழ்த் தேசிய இனம் மட்டுந்தான் ஆரியப் பண்பாட்டு மொழியான சமசுகிருதத்தையும், இந்தியையும் எதிர்த்துப் போரிட்டது. இதை முன் நின்று தொடங்கி வைத்த…

குவிகம் ஆண்டுவிழா

குவிகம் ஆண்டுவிழா கவிஞர் வைத்தீசுவரனின் ‘சில கட்டுரைகள் – ஒரு  நேர்காணல்’ புத்தக வெளியீடு மின்னூலகம் தொடக்கம் கவிதை வாசித்தல் கதை சொல்லல் சித்திரை 23, 2049 ஞாயிறு மே 6, 2018 மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை

வணிக நோக்கிலான கருத்தரங்கங்களும் மோசடிப்பேர்வழிகளும் – இலக்குவனார் திருவள்ளுவன்

வணிக நோக்கிலான கருத்தரங்கங்களும் மோசடிப்பேர்வழிகளும்   கருத்தரங்கங்கள் கருத்துப் பரவலுக்கும் புத்தறிவிற்கும் மனமகிழ்ச்சிக்கும் படைப்புப் பெருக்கத்திற்கும் வழி வகுப்பன. ஆனால், இப்பொழுதெல்லாம் கருத்தரங்கம் என்றாலே அச்சம்தான் வருகின்றது.   சிலர் தங்களுக்கு வேண்டிய பேச்சாளர்களை முடிவெடுத்துக் கொண்டு கருத்தரங்கம் என அறிவிப்பார்கள். அக்கூட்டத்தில் யாரும் கேள்வியும் கேட்கக்கூடாது என்பார்கள். சொற்பொழிவாக இருந்தாலும்  1 மணி நேரம்  பேசினால் 10 மணிக்கூறாவது கலந்துரையாடல் இடம் பெற வேண்டும் என்பார் நாவரசர் அறிஞர் ஒளவை நடராசன். ஆனால், இவர்கள் தாங்கள் மட்டும் பேசிக்கொண்டு கருத்தரங்கம் என்பர்.  குறிப்பிட்ட…

கவிதை அரங்கேற்ற அழைப்பிதழ்

  அன்புடையீர், வணக்கம். முடிவுநாள்: சித்திரை 22, 2049 –  05.05.2018  உலகத் தமிழ்ச் சங்கத்தின் கவிதை அரங்கேற்ற அழைப்பிதழ்    வெளிநாட்டுப் பங்கேற்பாளர்களுக்கு வசதியாக இதோ ஒரு மின்வரி: gangadharan.kk2012@gmail.com   நன்றி. அன்புடன், தில்லை சிதம்பர(ப்பிள்ளை) ஆசிரியர் மின்மினி @mail: minmini.ch@gmail.com  @mail: minmini.nz@gmail.com @mail: au.minmini@gmail.com பேசி : WWWPhone: +41 43 526 70 24 (மீள் அழைப்பு-Call Back)