மலேசிய ஆசிரியர்களுக்கான சிறுகதைப் போட்டி – யாழ் பதிப்பகம்

மலேசியக் கல்விப் பரப்பில் மாணவர்களுக்கான பல்வேறு பயிற்சி நூல்களைப் பதிப்பித்து வருவதோடு அரசாங்கத்  தேர்வுகள் தொடர்பான பயிலரங்குகளையும் நடத்திவரும் ‘யாழ் பதிப்பகம்’ 2018 ஆண்டுக்கான சிறப்புத் திட்டமாக இந்நாட்டில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தமிழ்ச் சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்த உள்ளது. இப்போட்டியில் மலேசியத் தமிழ்/தேசிய/இடைநிலைப்பள்ளிகளில்  தற்சமயம் பணிபுரியும் எல்லா ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம். ஆசிரியர் பயிற்சிக் கழகங்களிலும் உயர்கல்விக் கூடங்களிலும் பயிலும் பயிற்சி ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம். பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கலந்து கொள்ள முடியாது. அதேபோல இதுவரை தனித்த சிறுகதை தொகுப்பு…

சேக்கிழார் 26 ஆம் ஆண்டு விழா, சென்னை

 ஆடி 10-13, 2049 வியாழன்-ஞாயிறு சூலை 26-29, 2018 சேக்கிழார் ஆராய்ச்சி மையம் திரு இராமச்சந்திரா மருத்துவம் – ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தெய்வச் சேக்கிழார் 26 ஆம் ஆண்டு விழா  

தனித்தமிழ் இயக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டி

பரிசு உரூ 1000.00 கதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஆவணி 04, 2049 /20.8.2018 கதைகள் சேரவேண்டிய முகவரி: முனைவர் க.தமிழமல்லன், தலைவர் தனித்தமிழ் இயக்கம், 66,மாரியம்மன்கோவில் தெரு, தட்டாஞ்சாவடி,புதுச்சேரி–9   போட்டிக்கான நெறிமுறைகள்: நான்கு பக்கங்கள் அளவில் மிகாத குமுகாயக் கதைகளை 2 படிகள் மட்டும் அனுப்புக. 2.தாளின் ஒரு பக்கம் மட்டும் எழுதுதல் வேண்டும்.தாளின் பின்பக்கத்திலோ முன்பக்கத்திலோ பெயரோ முகவரியோ முத்திரையோ இருக்கக் கூடாது. 3.கதையின் மேல் தனித்தாளில் எழுதியவர் பெயரையும் கதையின் பெயரையும் இணைத்து அனுப்புக. 4.ஆங்கிலம்,வடமொழிமுதலிய பிறமொழிச்…

அனைத்துலக 16ஆவது சைவத்தமிழ் மாநாடு, தஞ்சாவூர்

  ஆடி 05, 2049 சனி 21.07.2018 முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை அனைத்துலக 16ஆவது சைவத்தமிழ் மாநாடு, தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக இலக்கியத்துறை மொரிசியசு மாணிக்கவாசகர் திருக்கூட்டம் திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம்

வைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்

 வைத்தீசுவரனும் நானும் சிறப்புரை: முனைவர்  கவிஞர் தமிழ் மணவாளன்   ஆடி 05, 2049 சனி சூலை 21, 2018 மாலை 6.00 சிரீராம் குழும அலுவலகம் மூகாம்பிகை வளாகம் (4 பெண்கள் தேசிகர் தெரு) ஆறாவது தளம் மயிலாப்பூர் சென்னை 600 004  (சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே) அன்புடன் அழகியசிங்கர் 9444113205 விருட்சம் இலக்கியச் சந்திப்பு

நடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா

  கனடா, நடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் இந்த  வருட (2018) கோடைக்கால ஒன்று கூடல் எதிர்வரும் ஆடித்திங்கள் 12 ஆம் நாள்யூலை மாதம் 28 ஆம் தேதி சனிக்கிழமை மிலிக்கன் பூங்காவில் (5555 Steeles Ave. E) நடைபெறவுள்ளது.   நிகழ்வு : முற்பகல் 10.00 மணி.  தொடர்புகளுக்கு : பிரபா –  416-402-1372, இரகு –  647-299-7443.    காங்கேசன்துறை நடேசுவராக் கல்லூரியின் பழைய மாணவர்கள்,  நலன்விரும்பிகள்  அனைவரையும் தவறாது இவ் ஒன்றுகூடலில் கலந்து கொள்ளுமாறு பழைய மாணவர் சங்கம்…

புதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா

ஆடி 05, 2049 சனி சூலை 21, 2018 முற்பகல் 10.00 சாவகச்சேரி, ஈழம் புதிய சுதந்திரன் இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா

மரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா

ஆடி 14, 2049 திங்கள் சூலை 30, 2018 மாலை 6.00 தி.என்.இராசரத்தினரம் கலையரங்கம், சென்னை 600 028 நன்னன்குடி நடத்தும் நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா மரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா

செயலலிதாவைவிடத் திறனாளரான எடப்பாடியார் ! – இலக்குவனார் திருவள்ளுவன்

செயலலிதாவைவிடத் திறனாளரான எடப்பாடியார் !    சட்டப்பேரவை விதி எண்110இன் கீழ் அறிவிப்புகள் வெளியிடல், தான் செல்லும் இடங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள். கட்சிப் பொறுப்பாளர்கள், தொண்டர்கள்  அணிவகுத்துச் சிறப்பிக்கச் செய்தல், சென்னையிலிருந்தபடியே காணொளிக் காட்சிகள் மூலம் பல திறப்பு விழாக்களை நடத்துதல்  போன்றவற்றின் மூலம் தன்னைச் செயலலிதாவிற்கு இணையாகவும் சில  நேர்வுகளில் அவரை விட உயர்வாகவும் தன்னைக் காட்டிக் கொள்கிறார் இன்றைய முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமி. உண்மையில் இவையெல்லாம் அவருக்குத் தேவையே இல்லை. செயலலிதாவைவிடத் திறம்படவே அவர் செயல்படுகிறார்….

தமிழ்முறை குடமுழுக்கு… தடைபோடும் அதிகாரிகள்! – இளைய விகடன்

பிற கருவூலம் – இளைய விகடன் (சூனியர் விகடன்)   தமிழ்முறை குடமுழுக்கு… தடைபோடும் அதிகாரிகள்!  துரை.வேம்பையன்  இராசமுருகன்   ‘‘இதுவரை இரண்டு கோயில்களில் தமிழ்முறைப்படி தேவாரம், திருவாசகம் பாடிக் குடமுழுக்கு செய்துள்ளோம். ஏற்கெனவே தமிழ்முறைப்படி குடமுழுக்கு செய்த சிவன் கோயிலுக்கு, இப்போதும் தமிழ் முறைப்படி குடமுழுக்கு செய்ய விரும்பும் எங்களின் முயற்சிக்கு இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள்’’ என்று குமுறுகிறார்கள் திருமக்கூடலூர் மக்கள்.   கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் உள்ளது திருமக்கூடலூர். இந்த ஊர் மக்கள், கோயில் குடமுழுக்கு,…