ஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று! –  இலக்குவனார் திருவள்ளுவன்

ஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று!   தொண்டர்களை அரவணைத்துச் செல்வதிலும் திட்டமிட்டுச் செயலாற்றுவதிலும் வல்லவர் அழகிரி. எனினும் ஒரு பகுதியில் பெறும் சிறப்பைவிட மாநில அளவில் பெறும் சிறப்பு வலிமையானது. எனவேதான், தென்மண்டலப் பொறுப்பாளரான இவரை விட மாநிலப் பொறுப்புகளில் உள்ள தாலின் வலிமையாளராக உள்ளார்.  தலைவரை இழந்த திமுகவில் யார் பெரியவர் என்னும் போட்டியில் இறங்குவது கட்சி ஒற்றுமைக்கும் குடும்பஒற்றுமைக்கும் நல்லதல்ல.   அழகிரி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூட்டம் வரலாம். என்றாலும் அவரது அதிரடியான அறிவிப்புகள் ஊடகத்திற்குத் தீனியாக அமையுமே தவிர, அவரது…

வித்தியா சுப்பிரமணியத்தின் ‘உப்புக்கணக்கு’ புத்தக வெளியீடு

  ஆடி 30, 2049  /  15.08.2018 காலை 11.00 விருட்சம் வெளியீடு குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம் 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 வித்தியா சுப்பிரமணியத்தின் ‘உப்புக்கணக்கு’ புத்தக வெளியீடு அழகியசிங்கர் – தொலைபேசி எண் : 9444113205  

திருக்குறள் வாழ்வியலுரை – முன் வெளியீட்டுத் திட்டம்

புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரனாரின் திருக்குறள் வாழ்வியல் விளக்கவுரை  முன் வெளியீட்டுத் திட்டம்   – முனைவர் அ.ஆறுமுகம் பாவேந்தர் பதிப்பகம் திருமழபாடி பேசி 9884265973;  9443949807  

எழுவரை விடுதலை செய்தபின்னர் பாசக அமைச்சர்கள் தமிழ்நாடு வரட்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்

உச்சநீதிமன்றக் கருத்திற்கு இணங்க எழுவரை விடுதலை செய்தபின்னர் பாசக அமைச்சர்கள் தமிழ்நாடு வரட்டும்        இராசீவு கொலைவழக்கில் சிக்க வைக்கப்படடவர்களுக்குத் தண்ட னையே வழங்கியிருக்கக்கூடாது.   வழங்கிய பின்னரும் வழக்கு தொடர்பானவர்கள் முறையற்ற வழியில் இவர்கள் தண்டிக்கப்படடதைத் தெரிவித்த பின்னராவது எழுவரையும் விடுதலை செய்திருக்க வேண்டும். விடுதலைக்கான பல வாய்ப்புகள் வந்தபின்னரும் மத்தியஅரசு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறது.   இராசீவு கொலை வழக்கில் சிக்கிய அப்பாவிகள் எழுவரையும் விடுதலை செய்வது மோசமான எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும் அவர்கள் செய்தது ஒப்புமைப்படுத்த முடியாத…

அண்ணாவின் அருகே தம்பியின் துயிற் பேழை – காரணர்களுக்கு நன்றி. : இலக்குவனார் திருவள்ளுவன்

அண்ணாவின் அருகே தம்பியின் துயிற் பேழை – காரணர்களுக்கு நன்றி.   இந்திய நாட்டின் மூத்த தலைவரும் தி.மு.க.வின் தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி நோய்வாய்ப்பட்டு மரண வாயிலை நெருங்கும் பொழுதே குடும்பத்தினர் அடக்கம் செய்யும் இடம்பற்றி முடிவெடுத்துள்ளனர். எனவேதான் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திரர்(மோடி) அவரைப் பார்க்க வரும்பொழுதே சென்னைக் கடற்கரையில் அறிஞர் அண்ணா நல்லடக்க இடத்தருகே இடம் ஒதுக்க ஏற்பாடு செய்து தருமாறு வேண்டியுள்ளனர். பின்னர் தமிழக முதல்வரை மூத்த தி.மு.க.தலைவர்களும் குடும்பத்தினரும் சந்தித்து விண்ணப்பம் கொடுத்து இடம் ஒதுக்க வேண்டியுள்ளனர்.  …

ஓயா உழைப்பாளி, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி இயக்கத்திற்கு ஓய்வு கொடுத்துள்ளார்.

(வைகாசி 21, 1955 / சூன் 03, 1924 –  ஆடி 22,  2049 / ஆகத்து 07, 2018)   தி.மு.க.வரலாற்றின்  பெரும்பகுதியாகவும் தமிழக வரலாற்றின் சிறப்புப் பகுதியாகவும் இந்திய வரலாற்றின் ஒரு பகுதியாகவும் விளங்கும்  ஓயா உழைப்பாளி, முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி எண்ணம், சொல், எழுத்திற்கு ஓய்வுகொடுத்ததுடன் இயக்கத்திற்கும் ஓய்வு கொடுத்துள்ளார்.  அவரது குடும்பத்தினருக்கும் கோடிக்கணக்கான கட்சித் தொண்டர்களுக்கும் அன்பர்களுக்கும்   ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துக் கொள்கிறோம்.  துயரத்தில் பங்கேற்கும் அகரமுதல மின்னிதழ் தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்புகள் தமிழ்க்காப்புக்கழகம்  இலக்குவனார்…

இலக்கணப் பாவலர்கள் குறிப்புத் தொகுப்பு

இலக்கணப் பாவலர்கள் குறிப்புத் தொகுப்பு பாவலர்களுக்கு ஓர் அரிய  வாய்ப்பு இலக்கணத் தோடு பாடல் இயற்றும் பாவலர்கள் குறிப்புத் தொகுப்பு ஒன்றை ‘வெல்லும் தூயதமிழ்’ மாத இதழ் வெளியிடவிருக்கிறது. இத் தொகுப்பில் இடம் பெறப் பின்வரும் விவரங்களை அனுப்புக: பெயர் முகவரி கைப்பேசி தொலைப்பேசி மின்னஞ்சல் வெளியிட்ட நுால்கள் பெற்ற பரிசுகள் பயன்படுத்திய யாப்பு வகை பங்குபெற்ற பாட்டரங்கம் இடம்பெற்றுள்ள கட்செவிக்குழு முகவரி உங்கள் படத்தை இணைத்து அனுப்புங்கள் முகவரி: முனைவர் க.தமிழமல்லன், ஆசிரியர், ‘வெல்லும் தூயதமிழ்’ 66 மா.கோ தெரு தட்டாஞ்சாவடி புதுச்சேரி-605009…

கலைஞர் கருணாநிதியின் சிறப்புகளைக் கூறுவது தவறா? கொடுந்தவறுகளைச் சுட்டிக்காட்டுவது தவறா? – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைஞர் கருணாநிதியின் சிறப்புகளைக் கூறுவது தவறா? கொடுந்தவறுகளைச் சுட்டிக்காட்டுவது தவறா?    உலகில் நிறையில்லாத மனிதனும் இல்லை. குறையில்லாத மனிதனும் இல்லை. நிறையையும் குறையையும் கணக்கிட்டு மிகுதியானவற்றின் அடிப்படையில்தான் ஒருவரை மதிப்பிட இயலும். மிகுதி என்பது எண்ணிக்கை அடிப்படையில் இல்லாமல் தன்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும்.  ஒருவரின் நிறையையோ குறையையோமட்டும் சுட்டிக்காட்டுவதுதான் தவறே தவிர, இரண்டையும் சுட்டிக்காட்டுவது தவறல்ல.  கலைஞர் கருணாநிதி மரணப் படுக்கையில் இருக்கிறார். எனினும் எமனின் அழைப்பை வென்று வாழ்கிறார். அவர் நலன் எய்தி நூறாண்டுக்கு மேலும் வாழ வாழ்த்துவோம்!  …

வருமானவரித்துறையினரைக் கைது செய்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

வருமானவரித்துறையினரைக் கைது செய்க!   வருமானவரித்துறை என்பது ஒரு தண்டத்துறை. அரசிடமிருந்து மாத வருவாய் பெறுபவர்களிடமிருந்து மட்டும் வரிக்கொள்ளை யடிக்கிறதே தவிர உண்மையில் வருமானவரி கட்டாமல் கொள்ளையடிப்போரிடம் மண்டியிடும். இயல்பான சீரான வரி விதிப்பு முறை இருப்பின் வரி ஏய்ப்பு என்பதற்கு வாய்ப்பிருக்காது. தவறான வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்தி அதற்கென ஒரு துறையைச் செயல்படுத்தி மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவது ஏன்?   இத்துறையை மூடிவிட்டு, அவர்களாகவே வருமானவரி செலுத்தும் எளிய முறையை நடைமுறைப்படுத்தினால், கூடுதல் வரி வருவாயும் கிடைக்கும். வருமானவரித்துறை ஊழியர்களுக்கான சம்பளம்,…

திருத்துறைப்பூண்டி இரா.பண்டரிநாதன் நினைவேந்தல்

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தங்கை திருவாட்டி தனபாக்கியம் அம்மையார் – திருமிகு இராமையா இணையர் மகனும் திருத்துறைப்பூண்டிப்பகுதியில் திராவிட இயக்கம் பரவத் தொண்டாற்றியவருமான சட்ட வல்லுநர் – வழக்குரை உதவுநர் திருமிகு இரா.பண்டரிநாதன் ஆடி 09,  2049   சூலை 25,  2018  அன்று காலை இயற்கை எய்தினார். அன்னாரின் திருஉருவப் படத்திறப்பு ஆடி 20,  2049  ஞாயிறு  ஆகத்து 05, 2018 காலை 11.00 மணிக்கு 8 எச்., திருவள்ளுவர் தெரு, திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. ப.பெரியநாயகி * ப.செந்தமிழ்ச்செல்வி ப.மங்கையர்க்கரசி சுரேசு * ப.பாரதி…