கலைஞர் செம்மொழி விருதுகள் வழங்குவதே கலைஞருக்கு உண்மையான அஞ்சலி! – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைஞர் செம்மொழி விருதுகள் வழங்குவதே கலைஞருக்கு உண்மையான அஞ்சலி! தமிழுக்குரிய தொன்மையான செம்மொழித் தன்மையை மத்திய அரசை ஏற்கச் செய்ததில் கலைஞர் கருணாநிதிக்கு முதன்மைப் பங்குண்டு. தமிழறிஞர்களின் வேண்டுகோளுக்கிணங்கச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் அமைய அவரே காரணமாக இருந்தார். இந்நிறுவனம் வளரவும் தமிழ் மேம்படவும் கனவு கண்டார்.  எனவே தனிப்பட்ட முறையில் சொந்தப்பணம் உரூ 1 கோடி வழங்கிச் செம்மொழித் தமிழ் அறக்கட்டளையை வழங்கினார். இத்தொகை தரும் வட்டியிலிருந்து ஒவ்வோராண்டும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கவும் ஏற்பாடு செய்யப்பெற்றது….

ச.ம.உ. பதினெண்மர் வழக்கு: மாற்றத்திற்குரியனவே தீர்ப்புகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

ச.ம.உ. பதினெண்மர் வழக்கு: மாற்றத்திற்குரியனவே தீர்ப்புகள்! கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு.(திருவள்ளுவர், திருக்குறள் 578)  தீர்ப்பு என்பது வழக்கின் தன்மையைமட்டும் கருதி வழங்கப்படுவதில்லை. நேர்வுகளுக்கேற்ப, வழக்காளிகளின் செல்வாக்கு, வழக்கின் பரபரப்புத் தன்மை, நீதிபதியின் பார்வை, வழக்குரைஞர்களின் வாதத்திறமை, வழக்கு நீட்டித்து ஆனால் சட்டென்று உடனே தீர்ப்பு சொல்ல வேண்டிய காலச்சூழல், அரசியல் மேலாதிக்கம் முதலியவற்றின் அடிப்படையிலேயே பல தீர்ப்புகள் அமைகின்றன. பணிச்சுமைகளில், வழக்குரைஞர் அல்லது வேறு யாராலோ தெரிவித்துத் தட்டச்சிடப்படுவதே தீர்ப்பாக வந்துள்ளதாகவும் சில சமயங்களில் கூறியுள்ளனர். சில நல்ல தீர்ப்புகளுக்கு…

மழலையர்க்குத் திருக்குறள்வழியில் பெயர் சூட்டல்

வள்ளுவத்தை வாழ வைப்போம்! வாருங்கள்! உலகத்திருக்குறள் மையம் மழலையர்க்குத் திருக்குறள்வழியில் பெயர் சூட்டல்   ஐப்பசி 10, 2049 சனிக்கிழமை 27.10.2018 காலை 10.00 வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை பெயர் சூட்டுநர்: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் க.தமிழ்ச்செல்வன் முனைவர் இரா.மதிவாணன் இலக்குவனார் திருவள்ளுவன்   திருக்குறள் எழுச்சி மாநாடு – கால்கோள் விழா நண்பகல் 12.00 சிறப்புரை: திருக்குறள்தூயர் கு.மோகன்ராசு

காகம்  பறந்தது – சந்தானம் சுதாகர்

காகம்  பறந்தது – சந்தானம் சுதாகர்   கடன் கேட்பவர் கண்ணில் பட்டதும் உடன் நடைமாற்றும் ஓட்டம் எடுக்கும் பொருள் பார்த்துப் பொருந்தும் உறவுபோல் இருள்நிறம் இருக்கும் எண்ணம் பொன்னிறம் கொண்ட இனத்துடன் கூடியுண்ணும் காகம் என்றும் மதில்மேல் எனக்காக நிற்கும் இன்று பறந்தது என்வரவு பார்த்தே! சந்தானம் சுதாகர்  

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – கவிஞர் நகுலன்

வைகாசி 09,2049/ வெள்ளிக்கிழமை / 26.10.2018 மாலை 6.30 பாரதிய வித்தியா பவன், சென்னை கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு சிறப்புரை: ‘கவிஞர் நகுலன்’ குறித்த இதழாளர் கடற்கரை  மத்தவிலாச அங்கதம்  முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : பேராசிரியர் காவியா சண்முகசுந்தரம் அவர்கள்  இலக்கிய வீதி அன்னம் விருது பெறுநர் :  கவிஞர் யாழினி முனுசாமி  தகுதியுரை : திரு துரை இலட்சுமிபதி  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் ப. சரவணன்   தங்கள் வருகையால் நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்….

பிரித்தானியா தமிழர் பேரவையின் தேர்தல் – 2018 – 2019

 பிரித்தானியா தமிழர் பேரவையின் உள்ளூர் கட்டமைப்புகளுக்கான தேர்தல் – 2018 – 2019.  பிரித்தானியா தமிழர் பேரவையின் 2018 – 2019க்குரிய உள்ளூர் கட்டமைப்புகளுக்கான தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.தமிழ் மக்களுக்கான நீதிக்கும் நிலையான தீர்வுக்குமான அடிப்படைவழியை வகுத்து 2006இல் இருந்து பிரித்தானியா தமிழர் பேரவையினர் தமதுஅரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் முதன்மைப்பகுதியாகப் பல உள்ளூர் கட்டமைப்புக்களை உருவாக்கி அப்பகுதிகளில் வாழும் தமிழ் மக்களையும் உள்வாங்கி  மக்கள்நாயக முறையில் தமிழர்களின் அரசியல் போராட்டத்தினைப் புலம்பெயர்தேசத்தில் முன்னெடுத்து வருகின்றனர். கடந்த காலங்களில் இலங்கை அரசின் தமிழர்களுக்கெதிரான…

இலக்கியச் சிந்தனை நிகழ்வு    580 / குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 43

ஐப்பசி 10, 2049   சனிக்கிழமை 27-10-2018 மாலை 6 மணி சீனிவாச காந்தி நிலையம், அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச் சிந்தனை நிகழ்வு    580 ‘பசும்பொன் என்னும் தெய்வமகன் ‘ சிறப்புரை:  புதுவை  திரு  இராமசாமி  . . . . தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 43 சமகாலக் கதைகள்      – பதிப்பாளரின் பார்வையில்  சிறப்புரை: திரு . சீவ.கரிகாலன்   அரங்கம் அடைய    

விருட்சம்  நண்பர்கள் இணைந்து நடத்தும் ஐந்தாவது கூட்டம்

ஐப்பசி 08, 2049  / 25-10-2018 வியாழக்கிழமை மாலை5.45 மணி கிளை நூலகம், 7,  இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு,   சாபர்கான் பேட்டை, சென்னை விருட்சம்  நண்பர்கள் இணைந்து நடத்தும் ஐந்தாவது கூட்டம் சங்க இலக்கியம் – ஓர் அறிமுகம் தொடர் உரை :- முனைவர் வ வே சு நண்பர்கள் வட்டம் தொடர்புக்கு : அழகியசிங்கர் தொலைபேசி எண் : 9444113205 நூலகம் அடைய  

கூத்துப்பட்டறை ந.முத்துசாமி காலமானார்.

கூத்துப்பட்டறை ந.முத்துசாமி காலமானார். (வைகாசி 12, தி.பி. 1967/ 25.05.1936 – ஐப்பசி 07,  தி.பி. 2049  / 24.10.2018)   தஞ்சை மாவட்டம் புஞ்சை என்னும் சிற்றூரில் பிறந்து கலைப்பணிகளால்  புகழ் பெற்ற கூத்துப்பட்டறை நிறுவனர், ந,முத்துசாமி உடல்நலக்குறைவால் இன்று (24.10.2018) காலமானார். சிறுகதை எழுத்தாளராக இருந்த இவர் 1968 இல் நாடக வளர்ச்சிக்கு எனத் தன் வாழ்வை  ஒப்படைத்தார். ‘கூத்துப்பட்டறை‘ என்னும் கலைவளர்  அமைப்பு 1977ஆம் ஆண்டு இவரால் தொடங்கப்பட்டது.  இந்திய அரசின் பண்பாட்டுத்துறை அமைச்சகம், ஐ.நா.வின் கல்விஅறிவியல்-பண்பாட்டு(UNESCO) அமைப்பு, ஃபோர்டு…

மாற்றம் விரைவில் உண்டாகும் – மு. பொன்னவைக்கோ

மாற்றம் விரைவில் உண்டாகும்   தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு அவனே மாந்தன் முதலேடு அளித்தான் உலகப் பண்பாடு ஒன்றே குலமெனும் உயர்வோடு உரைத்தான் தெய்வம் ஒன்றென்று யாதும் ஊரே என்றுரைத்தான் யாவரும் கேளிர் என்றழைத்தான் அறமே வாழ்வின் நெறியென்றான் அருளே பொருளின் முதலென்றான் அன்பின் வழியது உலகென்றான் ஆசைப் பெருகின் அழிவென்றான் ஒழுக்க வாழ்வே உயர்வென்றான் அழுக்கா றின்றி வாழென்றான் ஒன்று பட்டால் வாழ்வென்றான் ஒற்றுமை இன்றேல் தாழ்வென்றான் பணிதல் யார்க்கும் நன்றென்றான் பகையே வாழ்வின் இருளென்றான் சினமே உயிர்க்குப்…

கணியம் கட்டின்மை நாள் (Software Freedom Day) 2018, தாம்பரம்

உங்கள் கணிணியில் உள்ள கணியன்கள்(மென்பொருட்கள்) உங்களுடையவைதானா? கணியன்(மென்பொருட்)களை ஏன் பகிர வேண்டும்? உங்கள் கணிணிகளில் சிதைப்பியை(virus) நிலையாக ஒழிக்கலாமா? இலவசமாக, முழு உரிமைகளுடன் பல்லாயிரம் கணியன்(மென்பொருட்)கள் கிடைப்பது தெரியுமா? அறிவோம் வாருங்கள். கணியம் கட்டின்மை நாள் வைகாசி 10, 2049 / 27.10.2018 காலை 9.30 முதல் மாலை 4.30 வரை மெசு (MES) 1 ஆவது குறுக்குத் தெரு, கார்லி பள்ளி அருகில், கிழக்கு தாம்பரம், சென்னை – 600059 நிகழ்ச்சி நிரல் 10.00 – 11.00 – கட்டற்ற கணியன் –…

குவிகம் இல்லத்தின் புத்தகக் கொலு, சென்னை

ஐப்பசி 02-04, 2049 / 19-21.2018 வெள்ளி மாலை 5.00 மணி முதல் சனி, ஞாயிறு காலை 11.00 முதல் இரவு 7.00 வரை ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017   குவிகம் இல்லத்தின் புத்தகக் கொலு, சென்னை   இல்லம் அடைய   தொடர்பிற்கு 9791069435