ஆளுநர் ஆட்சியில் நக்கீரன் கோபால் கைதும் விடுதலையும் – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆளுநர் ஆட்சியில் நக்கீரன் கோபால் கைதும் விடுதலையும்  நக்கீரன் இதழாசிரியர் நக்கீரன் கோபால், நேற்று(9.10.2018) விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்; சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்; பிற்பகல் எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்து, பேரா.நிருமலாதேவி தொடர்பான கட்டுரைகள் தொடர்ந்து நக்கீரன் இதழில் வருவதாகவும் இவை ஆளுநரை மிரட்டுதல், ஆளுநரைப் பணிசெய்ய விடாமல் தடுத்தல் ஆகியன தொடர்பான குற்றப்பிரிவு 124.அ இன்கீழ் வருவதாகவும் காவல் துறையினர் குற்றம் சுமத்தி வழக்கு தொடுத்திருந்தனர். ஆனால் இதை உசாவிய எழும்பூர் 3…

சென்னை விமானநிலையத்தில் நக்கீரன் கோபால் கைது!

சென்னை விமானநிலையத்தில் நக்கீரன் கோபால் கைது! சென்னை விமான நிலையத்தில் நக்கீரன்  புலனாய்வு இதழாசிரியரும், மூத்த இதழளருமான  நக்கீரன் கோபால் எந்த ஆவணங்களும் இன்றிக் காவல் துறையினரால் தளையிடப்பட்டுள்ளார். தமிழக ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த  முறையீட்டின் அடிப்படையில் சென்னை விமானநிலையத்திலிருந்து புனே செல்லவிருந்த ஆசிரியர் நக்கீரன் கோபால் அடையாறு சரகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார் என நக்கீரன் இதழ் கூறுகிறது. நக்கீரன் இதழில் பேராசிரியை நிர்மலாதேவி தொடர்பான கட்டுரை வெளியானதை அடுத்து ஆளுநர் மாளிகையிலிருந்து  முறையீடு அளித்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. முதலில் அடையாறு…

குவிகம் இல்லம் – அளவளாவல்: ஏ.ஏ.எச்.கே.கோரி

 அட்டோபர் 21, 2049 ஞாயிறு 7.10.2018 மாலை 4.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 திரு ஏ.ஏ.எச்.கே.கோரி – இன்றும் மயக்கும் அன்றைய திரைப்படப்பாடல்கள்   இல்லம் அடைய

சமூகநீதித் தமிழ்த் தேசம்! – கால் நூற்றாண்டு நிறைவு விழா

புரட்டாசி 20, 2049, சனிக்கிழமை, 06.10.2018,  மாலை 5.00 காரணீசுவரர் கோவில் தேரடித் தெரு, சைதாப்பேட்டை சமூகநீதித் தமிழ்த் தேசம்! தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் வெள்ளி விழா திலீபன் நினைவேந்தல்  கூவம் அடையாறு ஆற்றோர மண்ணின் மக்களை வெளியேற்றாதே!  கண்ணகி நகர் – பெரும்பாக்கத்தில் அடைத்துள்ள மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்து!  மனிதர் மலத்தை மனிதர் அள்ளும் இழிவை ஒழி! துப்புரவுப் பணிக்கு எந்திரப் பொறிகளைப் பயன்படுத்து!  பொது (‘நீட்டு’ ) த் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் விலக்குக் கொடு! இந்திய உயர்கல்வி…

மொழிக்கொலைப் போலிக் கவிஞர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்  – இலக்குவனார் திருவள்ளுவன்

மொழிக்கொலைப் போலிக் கவிஞர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்  ஒரு மொழியின் தூய்மையையும் தனித்தன்மையையும் சிதைத்தும் அயற்சொல் கலந்தும் பேசும் பொழுதும் எழுதும் பொழுதும் மொழி அழிகின்றது. ஒரு மொழி அழியும் பொழுது அம்மொழி பேசும் இனமும் அழிகின்றது. எனவே மொழிக் கொலை புரியும் படைப்பாளிகள், பேச்சாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இங்கே தலைப்பில் கவிஞர்கள் எனக் குறிப்பிட்டாலும் மொழிக்கொலைகாரர்கள் அனைவருமே தண்டிக்கப்பட வேண்டியவர்களே!  கவிஞர்களைக் குறிப்பிட்டதன் காரணம்  ‘சர்க்கார்’ என்னும் திரைப்படப் பாடல்களில் வேண்டுமென்றே மொழிக்கொலை புரிந்த கவிஞர் ஒருவரைக் குறிப்பிட்டுத்தான். ‘சிமிட்டாங்காரன்’ என்னும் தலைப்பில் சொல்லப்படும்…

புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-10

புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-10 புதுவை, தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம், புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம்பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் அவர்களைக் கொண்டு  ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. அதன் பத்தாவது சொற்பொழிவில் இராவணகாவியத்தின் மிதியடிபெற்றுமீள்படலம், தமிழகம் புகுபடலம் ஆகியவைபற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார். புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. செயலாளர் நெ.நடராசன் வரவேற்றுப் பேசினார். தலைவர் மு.ந.நடராசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், புதுவைத் திராவிடர் கழகத்தலைவர் சிவ. வீரமணி அறிஞர் அண்ணாவின் படத்தைத்…

துபாயில் உணவின்றித் தவித்து வரும் தமிழகத் தொழிலாளர்கள்

துபாயில் உணவின்றித் தவித்து வரும் தமிழகத் தொழிலாளர்கள்  ஏறத்தாழ நூறாயிரம் உரூபாய் வரை பணத்தை முகவர்களிடம் செலுத்தி துபாயில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்குப் பின்வருவோர் வந்தனர். மாரிமுத்து த/பெ காத்தமுத்து – பட்டுக்கோட்டை அருகில் உள்ள புதுப்பட்டிணம் ஆதம் பாவா த/பெ கிருது ஒலி – திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுரண்டை இருவரும் தாங்கள் பார்த்து வந்த நிறுவனத்தில் சம்பளம் சரிவர வழங்காததால் அந்த நிறுவனத்தை விட்டு வெளியில் வந்து விட்டனர். தற்போது தங்க இடமும், உணவும் இல்லாமல்  அல்லல்பட்டு வருகின்றனர்.  இதனால்…