சார்சாவில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி

சார்சாவில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி   சார்சா இனிய திசைகள் வாசகர் வட்டத்தின் சார்பில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் திருச்சி சாதிக்கு அலி தலைமை வகித்தார். ’என்னைத் தேடி’ என்ற சிறுகதை நூலை இனிய திசைகள் ஆசிரியர் பேராசிரியர் சே.மு.முகமதலி வெளியிட முதல் படியைச் சாதிக்கு அலி பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் இந்த நூலை நசீமா இரசாக்கு திறம்பட வடிவமைத்துள்ளார். அவர், “தியான வாழ்வின் மூலம் வாழ்வில் வசந்தத்தைக்…

புயல் துயர மறுவாழ்வு – மத்திய அரசைக் கண்டிப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

புயல் துயர மறுவாழ்வு – மத்திய அரசைக் கண்டிப்போம்! அண்மையில் ஏற்பட்ட கடும்புயலால் உயிரிழந்த, உடைமைகள் இழந்த, துயருள் மூழ்கிய, வாழ்விழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நம் ஆறுதல்களைத் தெரிவிக்கிறோம். பெரும்புயல் பாதிப்புகளைச் சரி செய்யவும் மறுவாழ்வு உதவிகளை வழங்கவும் பாடுபடும் அரசு ஊழியர்கள், அரசு சார் அமைப்புகளின் ஊழியர்கள், தொண்டு அமைப்புகள், கட்சியினர், இயக்கத்தினர், கலைத்துறையினர், தன்னார்வலர்கள் எனப் பலதரப்பட்டாருக்கும் நம் பாராட்டுதல்களையும் தெரிவிக்கிறோம். தமிழக அரசு தன்னால் இயன்றதைச் செய்துள்ளதாகக் கருதி அதனையும் பாராட்டுகிறோம். சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். எனவே, எதிர்பார்ப்பிற்கேற்ற போதிய…

அகநானூற்றில்  ஊர்கள்: 4/7  – தி. இராதா

(அகநானூற்றில் ஊர்கள் 3/7 இன் தொடர்ச்சி   அகநானூற்றில்  ஊர்கள் -4/7   ஊனூர்   ஊனூர், தழும்பன் என்ற குறுநில மன்னன் ஆண்ட ஊர் ஆகும். இவ்வூர் மருங்கூர் பட்டினத்திற்கு அருகில் உள்ளது. முழங்கும் கடல் அலைகள் காலைப்பொழுது கரைவந்து மோதும் நெல்வளம் மிக்க ஊர். காதல் பறவையான மகன்றில் பறவைகள் வாழுமிடமாக ஊனூர் திகழ்கின்றது என்பதனை, “பழம்பல் நெல்லின் ஊனூர் ஆங்கன்”                     (அகநானூறு 220) மன்னன் பெருங்கொடை வழங்கும் சிறப்பினை உடையவன் என்பதை, “……..தழும்பன்                  கடிமதில் வரைப்பின் ஊனூர் உம்பர்”                     (அகநானூறு…

இலக்கியச் சிந்தனை நிகழ்வு    582 / குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 44

  கார்த்திகை 08, 2049  சனி 24.11.2018 மாலை 6.00  சீனிவாச காந்தி நிலையம், அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை, சென்னை 600018  இலக்கியச் சிந்தனை நிகழ்வு    582  குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 44 ஓவியக்கலைஞன் அமுதோன் பன்முகக்கலைஞன் சுரேசு சீனு  

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை இலக்கியச் சொற்பொழிவு

  பேரன்புடையீர், வணக்கம். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை மாதந்தோறும் நடத்தும்  இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டம்,  இம்மாதம்  கார்த்திகை 09, 2049  ஞாயிற்றுக்கிழமை 25-11.2018 அன்று கிழக்கு நேரம்  இரவு 9:00 மணி  முதல் 10:00 மணிவரை  பல்வழி அழைப்பு வாயிலாக நடக்கவுள்ளது. இம்மாத  இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டத்தில்   ‘இராசராச சோழன் – வரலாறும்,பண்பாடும்’  என்ற  தலைப்பில் சொற்பொழிவாற்ற இருக்கின்றார்  சிறப்புப் பேச்சாளர், பேராசிரியர் பா. இறையரசன் [தமிழ்ப் பேராசிரியர்(ஓய்வு)].  இந்த இலக்கியக்கூட்டத்தில்  நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு  இலக்கிய இன்பம் பெற  அன்புடன் அழைக்கின்றோம்.

கருத்தில் வாழும் கவிஞர் தாராபாரதி

கார்த்திகை 07, 2049 வெள்ளிக்கிழமை  23.11.2018  மாலை  06.30 மணி  மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன்  கருத்தில் வாழும்கள் தொடர் நிகழ்வு முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : தேசியமணி புதுவை இராமசாமி  அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர் கவிமுகில் கவிஞாயிறு தாராபாரதிபற்றிச்  சிறப்புரை  :  முனைவர் இரா. மோகன்  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் ப. சரவணன் தகுதியுரை: செல்வி ப. யாழினி   உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம்.  மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் இலக்கியவீதி   திரு. கிருட்டிணா இனிப்பகம்  

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018, கனடா

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018, கனடா தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நிகழ்வுகள்: கார்த்திகை 08, 2049 /சனிக்கிழமை / 24.11.2018 பிற்பகல் 5 மணிக்கு (635 MIDDLE FIELD SCARBOROUGH இல் அமைந்துள்ள) ஐயப்பன் ஆலய மண்டபத்தில் மாவீரர் நினைவுகளோடு பைரவி இசையருவியின் எழுச்சி கானங்களும், கலை நிகழ்வுகளும் நடைபெறும். கார்த்திகை 09, 2049 / 25 .11.2018 முதல்  கார்த்திகை 11 / 27.11.2018  வரை, பிற்பகல் 1 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணி வரை (24-5210 FINCH AVE (FINCH & MIDDLE FIELD ) இல் அமைந்துள்ள) நாடு…

மாவீரர் நாள், அமெரிக்கா

  கார்த்திகை 11, 2049 / செவ்வாய்/ 27.11.2018 மாலை 6.05 80-51, 261ஆம் தெரு, கிளென் ஓக்கு, புதிய யார்க்கு – என்.ஒய்.11004 மாவீரர் நாள்   எழுச்சி உரை:  பெ.மணியரசன், தமிழ்த்தேசியப் பேரியக்கம்  நினைவுரை: வி.உருத்திரகுமாரன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பிற்கு:   917 8800 320

பிரதீபா நினைவுக் கூடல்

  கார்த்திகை 07, 2049 / வெள்ளி / 23.11.2018 மாலை 6.00 அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை 600 007 கட்டுரையாளர், நூலாசிரியர், செயற்பாட்டாளர் பிரதீபா நினைவுக் கூடல் நட்பே உறவென வாழ்ந்தவரின் நினைவுகளைப் பகிர வாருங்கள்! கோவி.இலெனின்-தமிழ்நிலா

‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா, இலண்டன்

‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா, இலண்டன் தமிழாய்வு மையத்தின் வெளியீட்டில் உருவான அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை அன்று இலண்டனில்  ஆல்பெருட்டன் குமுகாயப்பள்ளி( Alperton Community school) அரங்கத்தில் சிறப்பாக  நடைபெற்றது. ஊடகவியலாளர் திரு.பிரேம் சிவகுரு தலைமை தாங்கினார். தமிழாய்வு மையத்தின் இயக்குநர்களில் ஒருவரான திரு தி.திபாகரன் நிகழ்ச்சியை நடத்தினார்.  திருமதி.கெளரி பரா, திரு.சிவரதன். திருமதி.வேணி சதீசு, திரு.பாலகிருட்டிணன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். அதனைத்தொடர்ந்து வெளியீட்டு உரையினை நூலகவியலாளர் என்.செல்வராசா நிகழ்த்தி…

புத்தகக் கொடையாளர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் – இலக்குவனார் திருவள்ளுவன்

புத்தகக் கொடையாளர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் இன்றைக்கு நாம் ‘வேட்பாளர்’ போன்ற நல்ல தமிழ்ச்சொற்களைத் தேர்தல் களத்தில் பயன்படுத்துகிறோம். இவற்றை அறிமுகப்படுத்தி இதழ் வழி பரப்பியவர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன். மேடைகளில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா முதலான தலைவர்கள் ஆற்றிய உரைகளைச் சுருக்கெழுத்து அறியாமலேயே சொல் பிறழாமல் எழுதி அச்சில் கொண்டு வந்தவர் கவிக்கொண்டல்.  மூத்த எழுத்தாளர், மூத்த இதழாளர், மூத்த கவிஞர், மூத்த நூலாசிரியர், மூத்த பதிப்பாளர், மூத்த தமிழறிஞர், புத்தகக் கொடையாளர் எனப் பல்வகைப் பெருமைகளுக்கும் உரியவர். பிறப்பு திருத்தங்கூர் மாணிக்கனார்-விருத்தாம்பாள் இணையராக…

தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் – இலக்குவனார் திருவள்ளுவன்

தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார்  பேரா.சி.இலக்குவனார் மாணவப்பருவத்தில் விடுமுறைக்காலங்களில் நண்பர்கள் மூவரை இணைத்துக் கொண்டு ஊர்கள் தோறும் தனித்தமிழ் பொழிவுகள் நடத்தினார்; தமிழின் பெருமை, தமிழ் இலக்கியச் சிறப்பு, அயற் சொற்கள் கலப்பின்றித் தமிழில் எழுதவும் பேசவும் வேண்டியதன் இன்றியமையாமை முதலானவற்றை வலியுறுத்தினார். முத்தமிழ்க்காவலர், செந்தமிழ் மாமணி எனப் போற்றப்படும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் மாணவப் பருவத்தில் இருந்தே தனித்தமிழ்ப் பாவலராகவும் தனித்தமிழ்ச் சொற்பொழிவாளராகவும்  திகழ்ந்து தனித்தமிழ்க் காப்பிற்குத் தொண்டாற்றித் தனித்தமிழ்க் காவலராகப் போற்றப்படுகிறார்.  பள்ளியில் படிக்கும் பொழுது தன்மதிப்பு இயக்கப் பற்றாளரான ஆசிரியர் அறிஞர் சாமி…