பேச்சு மொழியாக ஆங்கிலம் கற்றல்: வழக்கும்தேவையும் – வெற்றிச்செழியன்

பேச்சு மொழியாக ஆங்கிலம் கற்றல் – வழக்கும் தேவையும்    பேச்சு/உரையாடல் மொழியாக ஆங்கிலம் (Spoken English) கற்றுத்தர வேண்டும் எனத் தமிழக அரசுக்கு ஆணையிடக் கோரி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.அப்பாவு உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்துள்ளார். நீதிமன்றமும் தமிழ்நாட்டு அரசின் கருத்தைக் கேட்டுள்ளது.    பலநிலைப்பட்ட தமிழ்நாட்டு மக்களும் மாணவர்களின் எதிர்காலம்பற்றி அக்கறையோடு செயல்படுகிற மதிப்புமிக்க பலரும் ஆர்வத்துடன் இந்த வழக்கின் போக்கைக் கவனிக்கின்றனர். பலரின் உள்ளக் கிடக்கை இந்த வழக்கு எனலாம்.    இந்த வழக்கு, இதில் நீதிமன்றத்தின் அணுகுமுறை, மக்களின்…

மலர்மாமணி, புலவரேறு பெ.அ. இளஞ்செழியன் – இலக்குவனார் திருவள்ளுவன்

மலர்மாமணி, புலவரேறு பெ.அ. இளஞ்செழியன்  எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது தால்மியாபுரம் பெயர் மாற்ற எதிர்ப்பான கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்றுத் தண்டவாளத்தில் அமர்ந்தவர்; கோடை விடுமுறைகளில் கலைஞர் கருணாநிதியின் நச்சுக் கோப்பை, தூக்கு மேடை போன்ற சீர்திருத்த நாடகங்களை இயக்கியும், கதைத்தலைவன் வேடங்களில் நடித்தும், விழிப்புணர்வுப் பரப்புரையில் ஈடுபட்டவர்; பள்ளி இறுதி வகுப்பு பயிலும் பொழுது தேவிகுளம், பீர்மேடு கேரளத்தோடு இணைக்கப்பட்டதை எதிர்த்துத் தமிழகத்தில்  நடந்த வேலை நிறுத்தத்தில் பள்ளி மாணாக்கர்களையும் பங்கேற்கச் செய்தவர்; மாணவப் பருவத்திலேயே தமிழ்க்காப்புப் பாதையில் நடைபோட்ட அவர்தாம் புலவர்…

குவிகம் இல்லம், புத்தகப் பரிமாற்றம்

கார்த்திகை 02, 2049 / நவ.18,2018 மாலை 3.30 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இல்லம், புத்தகப் பரிமாற்றம்

கருஞ்சட்டைப்பதிப்பகம் தொடக்க விழா, 4 நூல்கள் வெளியீட்டு விழா

கார்த்திகை 01, 2049 சனி  17.11.2018 மாலை 6.00 இந்திய அலுவலர் சங்கம், இராயப்பேட்டை, சென்னை 14 திராவிடத் தமிழர் அறக்கட்டளையின் கருஞ்சட்டைப்பதிப்பகம் தொடக்க விழா 4 நூல்கள் வெளியீட்டு விழா அன்புடன் சுப.வீரபாண்டியன் ‘பெல்’ இராசன்

வேங்கை நங்கூரத்தின் யூன் குறிப்புகள் – புத்தகத்திறனாய்வு

கார்த்திகை 01, 2049 சனி 17.11.2018 மாலை 6.00 தே.ப.ச. (இக்சா) மையம், எழும்பூர், சென்னை எழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய வேங்கை நங்கூரத்தின் யூன் குறிப்புகள் புத்தகத்திறனாய்வு திறனாய்வாளர்:  ப.திருமாவேலன் அன்புடன் கூர் இலக்கிய வட்டம்

கதைகளின் வழியாக நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும்

கதைகளின் வழியாகக் குழந்தைகளின் மனத்தில்     நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும் செங்கற்பட்டு.நவம்.13, இளையோர் கூரறிவினர்(little jacky) பதின் மேனிலைப்பள்ளியில் குழந்தைகள் நாள் விழாவையொட்டி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. பள்ளியில் படிக்கிற காலத்திலேயே கதைகளின் வழியாகக் குழந்தைகளின் மனத்தில் நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும் என்று  தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர்  முனைவர் மு.இராசேந்திரன், இ.ஆ.ப. பேசினார்.   செங்கற்பட்டு இளையோர் கூரறிவினர்(little jacky) கல்விக் குழுமத் தலைவர் ஞா.சாசுவா சாம் தானி இவ்விழாவிற்குத்  தலைமையேற்றார். பள்ளி ஆசிரியர் ம.இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.   கவிஞர் மு.முருகேசு எழுதிய…

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 44

    கார்த்திகை 01, 2049, நவம்பர் 17, 2018 சிரீராம் குழும அலுவலகம்  மூகாம்பிகை வளாகம் (4, பெண்கள் தேசிகர் தெரு) ஆறாவது தளம் மயிலாப்பூர் சென்னை 600 004  (சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே) விருட்சம் இலக்கியச் சந்திப்பு 44 தலைப்பு:  கவிதைப் படிமமும் அழகியலும்  சிறப்புரை:  மரு. வேணு வேட்(ட)ராயன்

தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்

தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன்   மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் உலகில் பெண்பாற்புலவர்கள் இருந்துள்ளனர். சங்கக்காலத்தில் 57 பெண்கள் புலமையில் சிறந்து நாடுபோற்ற வாழ்ந்துள்ளனர். அவ்வழிவழி மரபில் தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் புலமையாளராகத் திகழ்பவர் முனைவர் தாயம்மாள் அறவாணன். பிறப்பும் தொடக்கக் கல்வியும்   குமரி மாவட்டம் சுசீந்திரம் பக்கத்தில் மயிலாடி என்னும் ஊர் உள்ளது. அதன் அண்மையில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சேந்தன்புதூர் என்ற ஊரில்  வைகாசி 10, 1975 / 23-5-1944இல் தாயம்மாள் பிறந்தார்.   சித்தாந்த ஆசான், வித்துவான் திரு….

புதியதோர் தமிழுலகம் புவியில் தோன்றும்! – மு.பொன்னவைக்கோ

புதியதோர் தமிழுலகம் புவியில் தோன்றும்!    கி.மு.வில் ஆயிரத்து ஐந்நூறாம் ஆண்டதனில் சேமம் நாடியிங்கு நாடோடிக் கூட்டமொன்று மலைமொழிப் பேச்சுடனே நிலைதேடி வந்தார்கள் ஆரியராய் இம்மண்ணில் அடிவைத்த அந்நியர்கள். செந்தமிழ்ச் சீருடைய  சிறப்புமிகுப் பைந்தமிழன் இந்தியத் திருமண்ணில்  எங்கும் குடியிருந்தான் வந்தாரை வரவேற்கும் வாசமிகு  தமிழனவன் தந்தான் தனதுரிமை தடம்தேடி வந்தோர்க்கு. அந்நியனாய் வந்தவனும் ஆளத்தொடங்கி இங்கு அழித்திட்டான் தமிழ்ப்பண்பை அவன்வகுத்த குலப்பிரிவால். ஆரியரும்  தமிழருடன்  அருகிப் பழகியதால் அன்றாட வாழ்விலவர் ஆதிக்கம் பெருகிற்று. ஆரியரின்  ஆட்சிக்கு ஆட்பட்டான்  தமிழ்மகனும். ஆரியர்க்கோ தேவையவர் ஆட்சிக்கு…

மருத்துவம்: தொழிலல்ல, தொண்டு! –  தி.வே.விசயலட்சுமி

மருத்துவம்: தொழிலல்ல, தொண்டு! முன்பெல்லாம் மக்கள் இயற்கையோடு இணைந்து, இயற்கை உணவை உண்டு வாழ்ந்தனர். காய்ச்சல், வயிற்றுவலி போன்ற பிணிகட்கு நாட்டு மருந்தையே நாடினர் நகர்ப்புறங்களிலோ குடும்ப மருத்துவர் மட்டுமே மருத்துவச் சிகிச்சை அளிப்பர். நீரிழிவு, இதய நோய், புற்று நோய்த்தாக்கம் சிற்றூர்களில் அறவே இல்லை. நகரத்தில் ஆயிரத்தில் ஒருவர்க்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்ட நிலையிருந்தது. இக்காலத்தில், துரித உணவு முறை, அவசர கதியில் செல்லும் வாழ்க்கைமுறை, உணவில் கலப்படம், உடல் உழைப்பின்மை, சுற்றுச் சூழலால் ஏற்படும் மாசு இவற்றால் பிணி பல்கிப் பெருகி…

குறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா?

குறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா? கலி.பூங்குன்றன் மனுதருமத்தின் சாரம் திருக்குறள் (Tirukkural an Abridgement of Sastras) என்று பார்ப்பன நாகசாமியால் எழுதப்பட்ட ஆங்கில நூலுக்கான மறுப்புக் கூட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவருக்கே உரித்தான முறையில் ‘நச்சு நச்சு’ என்று கொடுத்தார் சாட்டையடி! வரவேற்புரையாற்றிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் குறிப்பிட்ட ஒரு தகவலைத் தெடர்ந்து நாகசாமியை எம்ஞ்சியார் மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் என்றார். திராவிடர் கழகத் துணைத் தலைவர்…

அகநானூற்றில்  ஊர்கள் 3/7 – தி. இராதா

(அகநானூற்றில் ஊர்கள் 2/7 இன் தொடர்ச்சி அகநானூற்றில்  ஊர்கள் -3/7  ஆலங்கானம் (தலையாலங்கானம்)    ஆலங்கானம் என்பது தலையாலங்காடு என்று வழங்கப்படுகிறது. தொண்டை நாட்டிலுள்ள இவ்வூர் தேவாரப்பாடல் பெற்ற தலமாகத் திகழ்கின்றது. பாண்டிய நெடுஞ்செழியனின் பகைவரான நெடுநில மன்னனான சேரர், சோழர் இருவரும் குறுநில மன்னரான நிதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் ஆகிய ஐவரையும் போரில் வென்றதால் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று சிறப்பிக்கப்பட்டான்.                 “……கொடித் தேர்ச் செழியன்                 ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப                 சேரல், செம்பியன்,…