குவிகம் இல்லம்: அளவளாவல்: கிரிசா இராகவன்

   மார்கழி 08, 2049 / திசம்பர் 23, 2018 பிற்பகல் 3.30 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017   குவிகம் இல்லம்: அளவளாவல்   கிரிசா இராகவன் தொடர்பிற்கு: 9791069435. 8939604745  

பிரபஞ்சன் காலமானார்

எழுத்தாளரும் திறனாய்வாளரும் விருதாளருமான பிரபஞ்சன் இன்று(மார்கழி 08, 2049 / திசம்பர் 21, 2018) காலமானார்.   எழுத்தாளர் பிரபஞ்சன் சித்திரை 15, 1976 / ஏப்பிரல் 27, 1945 ஆம் நாளன்று  புதுச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். கரந்தைக் கல்லூரியில் தமிழ் வித்துவான் பெற்றவர் இவர். தஞ்சாவூரில் ஆசிரியராகத் தனது பணி வாழ்க்கையைத் தொடங்கியவர், அதன் பின்னர் இதழுலகில் நுழைந்தார். குமுதம், ஆனந்த விகடன், குங்குமம் ஆகிய வார இதழ்களில் பணிபுரிந்தார். இவரது ‘என்ன உலகமடா’ என்னும் முதல் சிறுகதை…

பேரிடர்க்கால மறுவாழ்வு: நிலையான அமைப்பு தேவை – இலக்குவனார் திருவள்ளுவன்  

பேரிடர்க்கால மறுவாழ்வு: நிலையான அமைப்பு தேவை தமிழ் நாட்டின் கடேலார மாவட்டங்களில் கசா(கஜா) புயல் கடுமையாக வீசி மக்களின் வாழ்க்கையை நிலைகுலையச் செய்துவிட்டது. சரியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து, பாதிப்பைக் குறைத்துள்ளதாகவும் முழு வீச்சில் மறுவாழ்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அரசு கூறி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஓரளவு பாராட்டினாலும், உரிய மறுவாழ்வுப் பணிகள் நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. பேரிடர்கள் என்பது இன்று நேற்று வருவன அல்ல. காலந்தோறும் ஏற்படும் இயற்கை நிகழ்வுகள்தான். இடர்கள் வரும்பொழுது எவ்வெவ்வாறு தடுக்க வேண்டும், அவற்றிலிருந்து எவ்வாறு…

சமக்கிருதத்திற்கும் தாய்மொழி தமிழ்தான்! – அமைதி ஆனந்தம் மடல்

சமக்கிருதத்திற்கும் தாய்மொழி தமிழ்தான்! வல்லுநர் குழு அமைக்க வேண்டுகோள்.  ஆ. இரா.அமைதி ஆனந்தம் ஆவணிப்பூர் இராமசாமி <aa384485@gmail.com பெறுநர் இந்தியத் தலைமை அமைச்சர், இந்திய அரசு. படி : இந்தியக் குடியரசுத் தலைவர், இந்திய அரசு. இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர், இந்திய அரசு. இந்திய அமைச்சர், மனித வள மேம்பாடு, இந்திய அரசு. இந்திய அமைச்சர்,  அறிவியல், தொழில்நுட்பம், இந்திய அரசு. இந்திய அமைச்சர், தகவல் தொழில்நுட்பம், இந்திய அரசு. முதலமைச்சர்கள், இந்தியா. ஐயா, உளறல் அல்ல; உண்மை; உண்மையைத் தவிர வேறில்லை;…

இனமானப் பேராசிரியர் வாழியவே!

இனமானப் பேராசிரியர் வாழியவே!   பெரியார் நெறியில் பிறழாப் பெற்றியர் அண்ணா  வழியில் அயரா உழைப்பினர் கலைஞர்  போற்றிய புலமைச் சிறப்பினர் திராவிடர் இயக்கத் திலகமாய் விளங்கி அராவிடம் அனைய ஆரியம் கடிவோர் உலைவிலா உழைப்பால் ஊக்க ஊற்று மலையினும் திண்ணிய நிலையினர் துலைநாப் போன்ற நடுநிலை நெஞ்சினர் வாய்மை வகுத்த வள்ளுவம் போற்றித் தூய்மை  துணிவு நேர்மை  துலங்கித் தமிழினம் தழைத்திடத் தளரா(து) உழைத்திடும் பேராசிரியப் பெருந்தகை வாழ்க! உறவெலாம்  சிறக்க  கிளைஞர் தழைக்க குடிவழி  ஓங்குக    உயர்வுடன்  பொலிக நலமிகு வாழ்வும்…

அகநானூற்றில்  ஊர்கள் :7/7 – தி. இராதா

(அகநானூற்றில் ஊர்கள் 6/7 இன் தொடர்ச்சி   அகநானூற்றில்  ஊர்கள் -7/7   வல்லம்     மழைபோல் செரியும் அம்பனையும், மேகம் போன்ற தோற்கிடுகினையும் உடைய சோழரது அரண் கொண்டது வல்லம் எனும் ஊராகும்.                 “……………..சோழர்                 வில்ஈண்டு குறும்பின் வல்லத்துப் புரமிளை” (அகநானூறு 336)                 “நெடுங்கதி நெல்லின் வல்லம்”                                      (அகநானூறு  356) நெல்வளம் மிக்க ஊர் வல்லம் என்பதை மேற்கண்ட அடிகள் விளக்குகின்றன. வாகை       வாகை மரம் நிற்றலால் வாகைப் பெருந்துறை எனப்பட்டது. வாகைப்போர்…

முன்னோர்கள்: இலக்குவனார், தமிழன் தொலைக்காட்சி

பேரா.சி.இலக்குவனார் குறித்த இலக்குவனார் திருவள்ளுவன் செவ்வி  தமிழன் தொலைக்காட்சி முன்னோர்கள் வரிசையில் நாள்  கார்த்திகை 26, 2049 / 12.12.2018    

குவிகம் இல்லம்: அளவளாவல்  நாணா (எ) நாராயணன்

மார்கழி 01, 2049 ஞாயிறு 16.12.2018 காலை 11.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இல்லம்: அளவளாவல்  நாணா (எ) நாராயணன் ஓவியர், எழுத்துரு உருவாக்குநர் தொடர்பிற்கு: 9791069435. 8939604745

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 45 – நாடக அமைப்பாளர் இரகுநாதன்

 கார்த்திகை 29, 2049, திசம்பர் 15, 2018 மாலை 6.00 சிரீராம் குழும அலுவலகம்  மூகாம்பிகை வளாகம் (4, பெண்கள் தேசிகர் தெரு) ஆறாவது தளம் மயிலாப்பூர் சென்னை 600 004 (சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே) விருட்சம் இலக்கியச் சந்திப்பு 45   தலைப்பு:   எழுத்தாளர் சுசாதாவும் நானும்  சிறப்புரை:  எழுத்தாளர், நாடக அமைப்பாளர் இரகுநாதன் அன்புடன் அழகியசிங்கர் 9444113205 அரங்கம் அடைய

மெய்யெழுத் தறிவாய் ! – மு.பொன்னவைக்கோ

    மெய்யெழுத் தறிவாய் !   க்ங்ச் ஞ் என்று கொஞ்சு ட்ண்த் ந் என்று முந்து ப்ம்ய் ர் என்று வென்று ல்வ்ழ் ள் என்று துள்ளு ற்ன் ற்ன் என்று சொல்லு மொத்தம் பதி னெட்டு மெய்க ளென்று கொள்ளு முனைவர் மு.பொன்னவைக்கோ    

அகரமெய் அறிவாய்! – மு.பொன்னவைக்கோ

  அகரமெய் அறிவாய்!     க ங ச ஞ சொல்லட்டுமா? கல்விக் கற்கச் செல்லட்டுமா? ட ண த ந சொல்லட்டுமா? தமிழைக் கற்றுக் கொள்ளட்டுமா? ப ம ய ர சொல்லட்டுமா? பண்பைப் பெற்று வெல்லட்டுமா? ல வ ழ ள சொல்லட்டுமா? வாழ்வில் வெற்றிக் கொள்ளட்டுமா? ற ன  ற ன சொல்லட்டுமா? மானாய்த் துள்ளிச் செல்லட்டுமா?   முனைவர் மு.பொன்னவைக்கோ

கைலாசத்தின் சிந்து இளவரசி – முன்னுரை

கைலாசத்தின் சிந்து இளவரசி – முன்னுரை    முனைவர் கைலாசம் ‘சிந்து இளவரசி’ என்ற அதிஅற்புதமான சிறிய  வரலாற்றுப் புதினத்தில் பாண்டிய நாட்டையும். சிந்துப் பேரரசையும் இணைத்துஅவற்றிலிருக்கும் ஒற்றுமைகளை அருமையாக குறிப்பிட்டுள்ளார்.   இந்தப் புதினத்தில் குறிப்பிட்டவை ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு எழுதப்பட்டிருக்கிறது என்பதிலும், அவை தொல்பொருள் ஆராய்ச்சிக்கு உதவும்என்பதிலும் எந்த  ஐயமும் இல்லை.  ‘திராவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே’ என்ற கருத்தினைத் தெரிவித்தவர்கள் தேவநேயப் பாவாணரும் மற்ற மதிப்புக்குரிய தமிழறிஞர்களும். அவர்கள் சொன்னது உண்மையாகவே இருக்க வேண்டும். இந்தக் கருத்தினை மனத்தில்…