அறமும் தரமும் அற்ற ஆய்வுகள் – பாரதிபாலன்,  தினமணி

அறமும் தரமும் அற்ற ஆய்வுகள் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆசிரியராகப் பணி வாய்ப்பினைப் பெற வேண்டும் என்றால் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் (UGC) விதிமுறைகளின்படி ஒருவர் முதுநிலைப் பட்டப் படிப்பில் 55% மதிப்பெண்களுடன் தேசிய அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வில் (NET அல்லது SLET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்றிருந்தால் இத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும் இத்துடன் ஆசிரியர் தேர்வு வாரியம் அல்லது பல்கலைக்கழகங்கள் நுழைவுத் தேர்வு நடத்தினால் அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது விதி. நவம்பர் 2018…

அகநானூற்றில்  ஊர்கள் : 6/7- தி. இராதா

(அகநானூற்றில் ஊர்கள் 5/7 இன் தொடர்ச்சி)     அகநானூற்றில்  ஊர்கள்  – 6/7     நீடூர்                 எவ்வி என்று குறுநில மன்னனின் ஊர். குறிதப்பாத வாட்படையை உடையவன். யாழ் ஒலிக்கும் தெருக்களையுடைய நீடூரின் தலைவன் என்பதை,                 “யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன்                 …………..எவ்வி ஏவல் மேவார்”                           (அகநானூறு 260)                 “பொலம்பூண் எவ்வி நிழல் அன்ன”            (அகநானூறு 366)…

குவிகம் இல்லம்: அளவளாவல் – இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன்

கார்த்திகை 23, 2049 ஞாயிறு 09.12.2018 பிற்பகல் 3.30 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இல்லம்: அளவளாவல்  இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன் இதழாளர் இல்லம் அடைய

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சிறுகதைப்போட்டி 2018

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சிறுகதைப்போட்டி 2018    விதிகள்:  1200 சொற்களுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும். ஒருவர் ஒரு சிறுகதை மட்டுமே அனுப்ப வேண்டும். போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் சிறுகதை இதற்கு முன் அச்சிதழிலோ இணையத்தளத்திலோ வெளியாகவில்லை என்றும் போட்டி முடிவுகள் வரும் வரை வெளியீட்டிற்காக எதற்கும் அனுப்பப் போவதில்லை என்றும் உறுதி மொழி அளித்தல் வேண்டும். அனுப்பப்படும் சிறுகதை சொந்தப்படைப்பு என்று மின்னஞ்சல்வழி உறுதிமொழி அனுப்ப வேண்டும். சிறுகதை பாமினி எழுத்துருவில் அல்லது சீருரு (பானிகோடு) எழுத்துருவில் மட்டுமே அனுப்ப வேண்டும்….

புலமைத் தென்றல் பொன்.சுந்தரராசுவிற்குப் பாராட்டு

  கார்த்திகை 23  ஞாயிற்றுக்கிழமை 09.12.2018 மாலை 5.00 பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர், சென்னை ‘இப்படியும் ஒரு பிழைப்பு’ நூல் வெளியீடும் எழுத்தாளர் புலமைத் தென்றல் பொன்.சுந்தரராசுவிற்குப் பாராட்டும் தலைமை: பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்   புலவர் இளஞ்செழியன், தலைவர், உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை

பெண் வன்முறைகள்: அவதூறு எங்ஙனம் கருத்துரிமையாகும்? – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் இலக்கியப் பதிவுகளில் பெண் வன்முறைகள்  கருத்தரங்கம்: அவதூறு கற்பிப்பது எங்ஙனம் கருத்துரிமையாகும்? – ‘நம்ம திருச்சி’ இதழில் இலக்குவனார் திருவள்ளுவன் இலக்குவனார் திருவள்ளுவன்: தமிழ்க்காப்புக்கழகம் என்னும் அமைப்பின் தலைவரும் இலக்குவனார் இலக்கிய இணையத்தின் ஒருங்கிணைப்பாளரும் ‘அகரமுதல’ மின்னிதழ் ஆசிரியருமான இலக்குவனார் திருவள்ளுவன் (தமிழுக்குக்கேடு வரும் பொழுது முதல் எதிர்ப்புக்குரல் எழுப்பும் தமிழறிஞர்) அவரிடம் திருச்சிராப்பள்ளியில் சூசையப்பர் கல்லூரி நடத்த உள்ள கருத்தரங்கம் குறித்து ‘நம்ம திருச்சி’ இதழின் சார்பாகக் கேட்டபோது, இதனைக் கடுமையாக எதிர்த்துப் பின் அவர் கூறிய பதில்கள்… தமிழியல் துறை தமிழ்…

மன்பதை நூல் மருத்துவர் க.ப.அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்

மன்பதை நூல் மருத்துவர் க.ப.அறவாணன் தமிழர்க்கு எழுச்சி ஊட்டும் வகையில் பேசியும் எழுதியும் வந்தாலும் மன்பதை நோக்கில் தான் காணும் குறைகளையும் வெளிப்படுத்தி வருபவரே மனோமணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் அறிஞர் க.ப.அறவாணன். நூலாசிரியர், இதழாசிரியர், கதை எழுத்தாளர், பதிப்பாசிரியர் என்ற முறையில் தமிழுக்கு அணிசெய்யும் வகையில் தொண்டாற்றி வருபவர். திருவாரூர் (தஞ்சாவூர்) மாவட்டம் கடலங்குடியில் ஆவணி 24, 1972 / 8.9.1941 அன்று பழனியப்ப(பிள்ளை)-தங்கபாப்பு இணையரின் திருமகனாகப் பிறந்தார். இவர் மனைவி தமிழறிஞர் முனைவர் தாயம்மாள் அறவாணன் தமிழ்நூல் படைப்பாளர். மகன் அறிவாளன்,…

அகநானூற்றில்  ஊர்கள் : 5/7 – தி. இராதா

(அகநானூற்றில் ஊர்கள் 4/7 இன் தொடர்ச்சி) அகநானூற்றில்  ஊர்கள் : 5/7 கானல்அம்பெருந்துறை                 தித்தன் வெளியன் என்ற அரசன் ஆண்டது இவ்வூராகும். இஃது அழகிய கடற்கரைச் சோலையையுடைய பெருந்துறை என்னும் பட்டினத்துக்கு உரியது. பிண்டன் நன்னனை வென்று வாகை சூடிய இடமாக திகழ்வதனை,                 “……..தித்தன் வெளியன்                 இரங்கு நீர்ப் பரப்பின் கானல்அம் பெருந்துறை” (அகநானூறு152, 210, 280, 300) என்ற அடிகள் மூலம் அறியலாகிறது.   குடந்தை                 வெல்லும் வேலையுடைய வெற்றி பொருந்திய சோழ மன்னரின் குடந்தை என்பதை,…

அ.அ.மணவாளன்: தமிழை உயர்த்திய அறிஞருக்கு அஞ்சலி! – இரவிக்குமார்

அ.அ.மணவாளன்: தமிழை உயர்த்திய அறிஞருக்கு அஞ்சலி! தமிழறிஞர் அ.அ.மணவாளன் (ஆவணி 21, 1936 / 06.09.1935 – கார்த்திகை 14, 2049 / 30.11.2018)  தமிழறிஞரும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் மேனாள் தலைவரும் (1989-1996) சரசுவதி சம்மான் விருது பெற்றவருமான பேராசிரியர் அ.அ.மணவாளன் நேற்று (கார்த்திகை 14, 2049 / நவம்பர் 30) மறைந்தார். அண்மைக் காலமாக உடல் நலிவுற்று மருத்துவம் பெற்று வந்த அவர் பண்டுவம் பலனளிக்காமல் 30.11.2018 அன்று இரவு 8 மணிக்குக் காலமானார். அவருக்குத்  திருமதி சரசுவதி என்ற மனைவியும்,…

வேலைநிறுத்தக் காலத்தில் புயல் பாதித்த பகுதிகளில் தொண்டாற்றுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

வேலைநிறுத்தக் காலத்தில் புயல் பாதித்த பகுதிகளில் தொண்டாற்றுக! ஆசிரிய அமைப்புகள்-அரசு ஊழியர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில்  04.12.2018 முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். அரசுடன் நடந்த பேச்சில் முடிவு எட்டாததால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் புயல் பாதித்த பகுதிகளிலும் வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கடுமையான புயல் சேதத்தால் பல மாவட்டங்களில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமையால், எவ்வித வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபடாமல், மக்கள்பணியைத் தொடர்ந்து ஆற்ற வேண்டும் என வேண்டியுள்ளார். நாம் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் சரியா, தவறா…

கனடாக் காவியம் – நூல் வெளியீடு

கார்த்திகை 23, 2049 / 09.12.2018 பிற்பகல் 2.00 சுகார்பரோ SCARBOROUGH கனடாக் காவியம் – நூல் வெளியீடு நூலாசிரியர்: தீவகம் வே.இராசலிங்கம்