ஊட்டல் விரும்புவரோ? -முனைவர் க.தமிழமல்லன்

ஊட்டல் விரும்புவரோ? இடுப்பொடியத் துணிதுவைத்தால் இடைமுரிந்து போகுமென்றே எளிதாகச் சலவைசெய்ய எந்திரங்கள் வாங்கிவிட்டார்! அடுப்பருகில் நின்றுபுகை அணைக்காமல் ஆக்குதற்கும் ஆவியினைப் பெற்றுவிட்டார்! அப்புகையைப் போக்குதற்கும் அடுப்பின்மேல் புகைபோக்கி அமைத்துவிட்டார், போதாவா? அம்மியிலே அரைக்காமல் கலக்கிகளை வாங்கிவந்தார்! கடுப்பின்றிக் கைகால்கள் வலிக்காமல் மாவரைப்பார்! கண்ணான தாய்மார்கள் கசங்காத உடையோடு! என்றாலும் கறிச்சோற்றை இளம்பெண்கள் ஆக்குங்கால், என்றேனும் மீக்குழம்பைச் செய்யுங்கால், உப்புகாரம், நன்றாகச் சேர்வதில்லை! நாவிற்கே ஏமாற்றம்! நாவினிக்க உணவகத்தின் சுவையென்றும் வாராது! மென்றுமென்று தின்றாலும் சுவைமேன்மை இல்லையடா ! மெல்லமெல்லக் கிழமைக்கோர் நாள்ஆக்கும் பணிவிடுத்தார்! மெல்லியர்கள்…

பொங்கல், புத்தாண்டு வாழ்த்து – மு.பொன்னவைக்கோ

பொங்கல் புத்தாண்டு வாழ்த்து பூத்தது புத்தாண்டு பொங்கல் திருநாளில் போயிற்று ஓராண்டு                                         பொன்னான வாழ்நாளில் சென்ற ஓராண்டில் செய்தோமா நற்பணிகள் என்றே சிந்திப்போம் ஏற்போம் தவறுகளை இன்றிந்த புத்தாண்டில் ஏற்றமுடன் நற்பணிகள் சாதிக்கச் சிந்திப்போம் சாதனைகள் செய்திடுவோம் பொங்கல் திருநாளில் அகமெனும் பானையில் அன்பெனும் நீரூற்றி அறிவெனும் அரிசியிட்டு பாசமெனும் பாலூற்றி நேசக் கரங்களினால் நேர்மை நெருப்பேற்றி தீந்தமிழ்த் தேனூற்றி தித்திக்கும் பொங்கலிட்டு ஒற்றுமை உணர்வுபொங்க உற்ற உறவினராய் நற்றமிழ்ப் பற்றோடு பொங்கலோ பொங்கலெனப் பொங்கலிட்டு வாழியவே! முனைவர் பொறி.மு.பொன்னவைக்கோ

பொங்குக புதுமை! -அறிஞர் அண்ணா

பொங்குக புதுமை! ஞாயிறன்று பொங்கல்! அதனைத் தமிழர் திருநாளெனக் கொண்டு போற்றி வாழுபவர். தமிழரெல்லோருக்கும் நாம் பொங்கல் வாழ்த்து அனுப்பக் கடமைப்பட்டுள்ளோம். அனுப்புகிறோம் அன்புடன். தமிழர வாழ்வே, நம் வாழ்வு எனக் கொண்டு பணியாற்றி, தமிழ் வாழத் தமிழர் வாழ்வர், தமிழர் வாழத் தமிழ்நாடு தழைக்கும் எனக்கூறி அதற்கெனப் பாடுபடும் நாம் தமிழரின் திருநாளன்று நமது அன்பு மொழியைத் தமிழர் இல்லந்தோறும் அனுப்பி, தமிழர் உள்ளமெல்லாம் செல்லச் செய்ய அவாவுறுகிறோம். தமிழரின் களிப்பைக் கண்ணாரக் கண்டார், காண வேண்டிய காட்சியைக் கண்டு தீர்ந்துவிட்டது என்ற…

திருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு

திருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு தை 02, 2050/16.01.2019 , தை 05, 2050 /19.01.2019 வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை திருக்குறள் முற்றோதல் திருவள்ளுவர் சிலைக்கு மாலையிடல் 10 நூல்கள் வெளியீடு நூல்கள் அறிமுகம் ஆய்வுரைகள் விருதுகள் வழங்கல் திருக்குறள் சான்றோர்கள் படத்திறப்பு திருக்குறள் கவனக அரங்கேற்றம் திருக்குறள் மாமணி விருதுப்போட்டி பங்கேற்போர் – அமைப்பாளர் பேரா.முனைவர் கு.மோகன்ராசு, பேரா.முனவர் பா.வளன்அரசு, தமிழ்த்திரு இலக்குவனார் திருவள்ளுவர், முனைவர் அரங்க.இராமலிங்கம், முனைவர் ஒப்பிலா மதிவாணன், கவிமாமணி குமரிச்செழியன், புலவர் பொறி.மு,வேங்கடேசன்,…

கண்ணீர்ப் பொங்கல் – கவிஞர் முடியரசன்

 கண்ணீர்ப் பொங்கல்! துளைக்க வரும் துப்பாக்கிக் குண்டு கண்டும்       துணிந்தெதிர்த்தார் அஞ்சவிலை ஈழ நாட்டார் வளைக்கவரும் படைகண்டும் கலங்க வில்லை       வரிப்புலியாய்ப் பாய்ந்தெதிர்த்து வாகை கொண்டார் அழைத்தபடை அரவணைக்கும் என்று நின்றார்;       அமைதியெனும் பெயராலே குண்டு வீசித் தொலைக்கவரும் நிலைகண்டே மயங்கு கின்றார்;       தோழமையே பகையானால் என்ன செய்வார்? சிங்களத்துக் கொடுங்கோலால் அடிமை யாகிச்       சிக்குண்டு நலிந்துருகிப் பின்நி மிர்ந்து வெங்களத்தில் வரும்விடியல் எனநி னைந்து       வேங்கையெனச் சினந்தெழுந்து போர்தொ டுத்தார் தங்குலத்தோர் விழியிழந்தும் உயிரி ழந்தும்       தையலர்தம் கற்பிழந்தும் தயங்கா ராகித் தங்குறிக்கோள்…

தன்மானத் தனித் தமிழனாக விளங்குக! – பெரியார் ஈ.வெ.இராமசாமி

தன்மானத் தனித் தமிழனாக விளங்குக!  “பொங்கல் பண்டிகையினால் நமக்கு, நம் தமிழர் சமுதாயத்துக்கு பொதுவில் ஏற்பட்ட பயன், நம்மவர்கள் ஆரியத்தை வெறுக்கும் உணர்ச்சிக்கு ஆக பொங்கலைப் பயன்படுத்திக் கொண்டதுதான் என்பேன். ஆதலால் பொங்கல் வாழ்த்துக்கு ஆக எனக்கு வாழ்த்து அனுப்பியவர்களுக்கு நன்றி செலுத்துவதோடு, அவர்களுக்கு நான் திருப்பி மறு வாழ்த்துக் கூறுவது என்னவென்றால் பொங்கலின் பயனாய் உங்களுக்கு வாழ்வு (மான வாழ்வு) ஏற்பட்டது குறித்து எல்லையற்ற மகிழ்ச்சி அடைவதோடு, இந்த ஆண்டில் அதாவது அடுத்த பொங்கல் ஆண்டுக்குள் மற்றும் உங்களைப் பிடித்த ஆரியப் பண்டிகை;…

தமிழ் நாட்டில் தமிழர் திருநாளே!- இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் நாட்டில் தமிழர் திருநாளே! திராவிடப் பகுதிகளில் திராவிடர் திருநாளாகக் கொண்டாடுக! பொங்கற் புதுநாளைத் தமிழர் திருநாள் என நாம் வழங்கி வருகிறோம். உலகின் பிற பகுதிகளில் அறுவடைத் திருநாள் கொண்டாடப்பட்டாலும் தமிழ்நாட்டின்  அறுவடைத் திருநாளே பொங்கல் விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுத் தமிழர் திருநாளாக உலகெங்கும் போற்றப்படுகிறது. தமிழர் திருநாளாகக் கொண்டாடி வந்த தமிழன்பர்கள் சிலர் கடந்த சில ஆண்டுகளாகத் திராவிடர் திருநாள் என்று கொண்டாடுகின்றனர். ஆரியத்திற்கு எதிரான குறியீடு திராவிடம் என்று கூறி அதனால் அவ்வாறு அழைப்பதாகக் கூறுகின்றனர். நமது மொழியும் இனமும்…

முனைவர் மு.இராசேந்திரன் இ.ஆ.ப. எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா

மார்கழி 26, 2049 வியாழக்கிழமை 10.01.2019 காலை 10.30 நடேசன் கூட்டுறவு மேலாண்மைப் பயிலகம் 12ஆவது முதன்மைச் சாலை, அண்ணாநகர் முனைவர் மு.இராசேந்திரன் இ.ஆ.ப. எழுதிய செயலே சிறந்த சொல் கோயில் தேசத்தில் வெள்ளையர்கள் யானைகளின் கடைசித் தேசம் ஆகிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா

கி.ஆ.பெ.எழுத்தோவியங்கள் – தொடர் பொழிவுகள் 12

திங்கள்தோறும் இரண்டாம் சனிக்கிழமை, 2019 திருநெல்வேலித்தனித்தமிழ் இலக்கியக்கழகம் தலைவர் : முதுமுனைவர் பா.வளன் அரசு

தமிழில் முதல் சிறுகதை?

தமிழில் முதல் சிறுகதை? தமிழில் முதல் சிறுகதை எது? என்ற தலைப்பில்  முனைவர் ஆர்.எசு.யாக்கோபு(சேக்கபு) ஒரு சிறிய நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இதன் முதல் பதிப்பு 2013இல் வெளியாகியுள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் மேய்ந்தபொழுது, என் பார்வை பதிவான இந்த நூலை வாங்கினேன். தமிழ் இலக்கியவரலாற்றில் வ.வே.சு.(ஐயரின்) ‘குளத்தங்கரை அரசமரம்’ என்ற சிறுகதைதான் முதல் சிறுகதை என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் மகாகவி பாரதிதான் ‘துளசிபாய்’ என்ற முதல் சிறுகதையை எழுதியவர் என ஆய்வாளர்கள் சிலர்…

மு.மு.மேனிலைப்பள்ளி,முன்னாள் மாணவர் மீள்கூடல் விழா

முன்னாள் மாணவர் மீள்கூடல் விழா முத்துத்தேவர் முக்குலத்தோர் மேனிலைப்பள்ளி திருப்பரங்குன்றம் இருப்பு:  திருநகர், மதுரை 625006 முன்னாள் மாணவர் மீள்கூடல் விழா மார்கழி 21, 2049 சனிக்கிழமை 05.01.2019 காலை 7.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை