திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை : சிறப்புப் பொதுக்கூட்டம்

மாசி 21, 2050   செவ்வாய்   5.3.2019 மாலை 6.30 – 8.30 மணி இடம்:  நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம், பெரியார்திடல், சென்னை-7திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை (DRAVIDIAN MANIFESTO) சிறப்புப் பொதுக்கூட்டம் தலைமை: கலி.பூங்குன்றன் வரவேற்புரை: வழக்குரைஞர் அருள்மொழி சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேராசிரியர் சுப.வீரபாண்டியன் – திராவிடர் கழகம்

அளவளாவல் – திரு சி.எசு.நடராசன்

மாசி 19, 2050  ஞாயிற்றுக்கிழமை 3.3.2019  மாலை 4.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம்,வெண்பூங்கா அடுக்ககம்,    24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 அளவளாவல் – திரு சி.எசு.நடராசன், தேசியச் சொற்கள்(National Words ) நூலாசிரியர்

தருமபுரி மண்டலத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

மாசி 18, 2050  சனிக்கிழமை 2.3.2019 மாலை 3 மணி இடம்: பெரியார் மன்றம், தருமபுரி தருமபுரி மண்டலத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் அமைப்பு: தருமபுரி, திருப்பத்தூர், ஒசூர், கிருட்டிணகிரி தலைமை: வீ.சிவாசி (தருமபுரி மண்டலத் தலைவர்) வரவேற்புரை: கோ.திராவிடமணி (தருமபுரி மண்டலச் செயலாளர்) முன்னிலை: இளையமாதன் (மாவட்டத் தலைவர், தருமபுரி), அகிலா எழிலரசன் (மாவட்டத் தலைவர் திருப்பத்தூர்), பெ.மதிமணியன் (மாவட்டத் தலைவர், கிருட்டிணகிரி), சு.வனவேந்தன் (மாவட்டத் தலைவர், ஒசூர்) தொடக்க உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) சிறப்புரை:…

பெருமா அம்மா அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல்

மாசி 18, 2050  சனிக்கிழமை 2.3.2019 காலை 11 மணி இடம்: பெருமா அம்மாள் இல்லம், மாரவாடி பெருமா அம்மா அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல் தலைமை: ஊமை.செயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்) படத்தைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) முன்னிலை: இளையமாதன் (மாவட்ட தலைவர், தருமபுரி), வீ.சிவாசி (மண்டலத் தலைவர், தருமபுரி), கோ.திராவிடமணி (மண்டலச் செயலாளர்) நினைவேந்தல் உரை: வ.முல்லைவேந்தன் (மேனாள் அமைச்சர், திமுக),  தடங்கம் பெ.சுப்பிரமணி (மாவட்ட செயலாளர், திமுக), உரத்தநாடு இரா.குணசேகரன்…

சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 1/3 அ. அரவரசன்

சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 1/3 மாந்த இனத்தின் வாழ்வியல் கூறுகளில் வனவியல் எவ்வாறு ஒன்றியும் இணைந்தும் ஊடுருவியும் உள்ளது என்பதை சங்கத் தமிழ் இலக்கியம் எவ்வகையில் எடுத்துரைக்கின்றது என்பதை பேராழியின் துளி நீரைச் சுவைத்துப் பார்க்கும் நோக்கில் நவில்வதே இக்கட்டுரை. மனித இனம் முதலில் தோன்றிய பகுதி கடல்கொண்ட தமிழகத்தின் தென்பகுதி என்றும் அதன் பெயர் ‘இலெமூரியா’ என்றும் அதன் வரலாற்றை நுணுகி ஆராய்ந்து வரையறுத்த வரலாற்று ஆய்வறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் லெமூரியா என்பது ‘இலெமூர்’ என்ற குரங்கின் பெயர்தான்…

படை வீரர்கள் மரணமும் கட்சி அரசியலும் – இலக்குவனார் திருவள்ளுவன்

படை வீரர்கள் மரணமும் கட்சி அரசியலும் படையில் சேருபவர்கள் தாய் மண்ணைக் காதலிப்பதுடன் இறப்பையும் காதலிக்கிறார்கள். எனவே, போரில் இறப்பு நேரும் என்பதை எதிர்பார்த்து வீர மரணத்தை எதிர்நோக்கியே இருக்கிறார்கள். ஆனால், இப்பொழுது நடைபெற்ற  புல்வாலா தாக்குதல் போர்ச்சூழலில் நிகழவில்லை; எதிரி நாட்டுடனான  போரின் பொழுது கொல்லப்படவில்லை. எதிரிநாட்டுடன் இணக்கமாக உள்ள    தீவிரவாதிகள் மேற்காண்ட தாக்குதல் இது. எனவே, இது கடுமையான கண்டனத்திற்கு உரியது. சம்மு காசுமீர் மாநிலத்தில்  புல்வாமா மாவட்டத்தில் இரத்னிபோரா பகுதியில் மத்திய ஆயுதப்படைக் காவலர்கள்(சிஆர்பிஎப்) வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த…

பல விரிவுகளுக்கு வழிவகுக்கும் செந்தில் நாராயணனின் ‘தொல்காப்பிய உரைகள்’ – முனைவர் பா. இரா. சுப்பிரமணியன்

பல விரிவுகளுக்கு வழிவகுக்கும் செந்தில் நாராயணனின் ‘தொல்காப்பிய உரைகள்’ முனைவர் பா. இரா. சுப்பிரமணியன் அணிந்துரை முனைவர் அ.செந்தில்நாராயணன் சென்னைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்மொழித் துறையில் முனைவர்ப்பட்ட ஆய்வாளராக இருந்தபோதும், பின்னர் எங்கள் மொழி அறக்கட்டளையின் தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதித் திட்டத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியபோதும் தமிழ் இலக்கண ஆய்வில் அவர் காட்டிய ஆரவாரம் இல்லாத ஆர்வத்தின் அழுத்தத்தை உணர்ந்திருக்கிறேன். அழுத்தம் இல்லாத ஆர்வம் நீர்க்குமிழிபோல் கண நேரத்தில் காணாமல்போய்விடக் கூடியது. செந்தில் நாராயணனின் நிலைத்த, அழுத்தமான ஆர்வத்தின் வெளிப்பாடாகத்தான் தொல்காப்பிய உரைகள் என்னும்…

நரேந்திரரின் பாக்கித்தான் மொழி பேசுநரைக் கண்டிக்கும் பேச்சு நாட்டைப் பாழ்படுத்தும்! இலக்குவனார் திருவள்ளுவன்

 நரேந்திரரின் பாக்கித்தான் மொழி பேசுநரைக் கண்டிக்கும் பேச்சு நாட்டைப் பாழ்படுத்தும்!  இரு நாள் முன்னர், இராசசுதான் மாநிலத்தில் தோங்கு (Tonk ) தொகுதியில் தேர்தல் பரப்புரையில் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர(மோடி) கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது அவர், இந்தியாவில் இருந்து கொண்டு சிலர் பாக்கித்தான் மொழியில் பேசுவதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்செய்தியை எல்லா ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. ஆனால் இப்பேச்சின் தீய நோக்கத்தை யாரும் கண்டிக்க வில்லை. பாக்கித்தானில் பாக்கித்தான் மொழி என ஒன்றும் கிடையாது. அங்கே உள்ள பல மொழிகளில் பஞ்சாபி, பசுதூ(Pashto), சிந்தி, சராய்கி(Saraiki), உருது,…

கவனயீர்ப்புப் போராட்டம்

கவனயீர்ப்புப் போராட்டம் மாசி 11, 2050 திங்கள் 25.02.2019 முற்பகல் 10மணி -நண்பகல் 12மணி 10, தெளனிங்கு தெரு எதிரில்/OPPOSITE 10 DOWNING STREET, இலண்டன் / LONDON, SW1  [அருகிலுள்ள தொடருந்து நிலையம்:  Westminster] தாயகத்தில் நடைபெறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார், உறவினர்கள், பொதுமக்களால் நடத்தப்படும் கவனயீர்ப்புப்  போராட்டத்திற்கு பிரித்தானியத்  தமிழர் பேரவை முழு ஆதரவு வழங்குகிறது. மேலும், இப்போராட்டத்தில் தாயகத்திலும் புலம்பெயர் நாட்டிலும் பொதுமக்கள் அனைவரையும் மிக எழுச்சியுடன் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். பிரித்தானியத் தமிழர் பேரவை

தமிழின அழிப்பைத் தமிழீழத் தேசம் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை! – உருத்திரகுமாரன்

தமிழின அழிப்பைத் தமிழீழத் தேசம் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை! – உருத்திரகுமாரன்  இலங்கை அரசின் தமிழின அழிப்பைத்  தமிழீழத்  தேசம் வரலாற்றில் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை. சிங்களத்தின் இனஅழிப்பே தமிழீழத் தாயகம் உருவாகக் காரணமாக இருந்தது என்பதனை வரலாறு பதிவு செய்யும் போது இனஅழிப்பில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் அமைதியாக உறங்குவார்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.  கடந்த பெப்பிரவரி மாதம் 15ஆம் நாள் வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் நடந்த ஒரு பொதுக்கூட்டமொன்றில், அங்குக் கூடியிருந்த தமிழ் மக்களை நோக்கித்…

சிக்காகோ: உள்ளூர் உரையரங்கமா? உலகத்தமிழ் மாநாடா? – இலக்குவனார் திருவள்ளுவன்

சிக்காகோ: உள்ளூர் உரையரங்கமா?உலகத்தமிழ் மாநாடா? 10 ஆவது உலகத்  தமிழ் ஆராய்ச்சி மாநாடும்  32ஆவது பேரவை-சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழாவும் வருகின்ற ஆனி – 19-22, தி.பி. 2050 / சூலை 2019 – 4 முதல் 7 ஆம் நாள்களில் அமெரிக்கா(சிக்காகோ)வில் நடக்க இருக்கிறது.  கருத்தரங்க அமைப்பாளர்கள் இது குறித்த அறிவிப்பைப் பரவலாக விளம்பரப்படுத்தி யுள்ளனர். பெதுவாக, ‘அகரமுதல’ இதழில் எக்கருத்தரங்கம் அல்லது மாநாடு குறித்துச் செய்தி வெளியிட்டாலும் நானும் அதன் பொறுப்பாளர்களில் ஒருவன் எனத் தவறாகக் கருதி விளக்கங்கள், விவரங்கள் கேட்பவர்…

1 2 5