சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரியில் தமிழ்த்துறை மாணவியர் படைப்பு வெளியீட்டு விழா

சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரியில் தமிழ்த்துறை மாணவியர் படைப்பு வெளியீட்டு விழா சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரியில் தமிழ்த்துறை மாணவியரின் பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில், ‘பொழில்’ என்ற சிற்றிதழும், ‘மாணவமணி’ என்ற செய்தித்தாளும் வெளியிடப்பட்டன. விழாவில் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர்  செல்வி வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் பத்மாவதி ‘பொழில்’ என்ற சிற்றிதழை வெளியிட்டு மாணவியர் படைப்புகளைப் பாராட்டி, மேன்மேலும் தங்கள் படைப்புத்திறன்களை வெளிப்படுத்திட வாழ்த்துக்களைக் கூறினார். மாணவியர் காலத்தால் அழியாத பதிவுகளைத் தருதல் வேண்டும் என்றும், சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கானப் படைப்புகளைப் படைத்திட வேண்டுமென்றும்…

பெரியார் நூலக வாசகர் வட்டம் 2343ஆம் நிகழ்வு

மாசி 09, 2050 / வியாழக்கிழமை / மாசி 09, 2050 / வியாழக்கிழமை / 21.2.2019 மாலை 6.30 மணி அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை பெரியார் நூலக வாசகர் வட்டம்  2343ஆம் நிகழ்வு சொற்பொழிவாளர்: வழக்குரைஞர் க.அன்பழகன்  பொருள்: ‘ மைய அரசின் கைப்பாவையாக நீதித்துறை’

அறிஞர் அண்ணா நினைவுக் கவியரங்கம், சென்னை

மாசி 06, 2050 / திங்கட் கிழமை / 18.02.2019 மாலை 6.30 மணி அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 772ஆம் நிகழ்வு அறிஞர் அண்ணா நினைவுக் கவியரங்கம் நிகழ்ச்சித் தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி கவியரங்கத் தொடக்கவுரை: கவிஞர் தஞ்சை கூத்தரசன் கவியரங்கத் தலைமை: கவிஞர் முனைவர் வேணு குணசேகரன் (நிறுவனர், எழில்கலை மன்றம்) கவி பாடுவோர் மற்றும் தலைப்பு: கவிஞர் வா.மு.சே.திருவள்ளுவர் – அண்ணா ஒரு மாமேதை. கவிஞர் கா.முருகையன் –…

குவிகம் அளவளாவல் – நாடகாசிரியர் செ.இரகுநாதன்

மாசி 05, 2050 / ஞாயிறு / 17.02.2019 / மாலை 4.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம்,24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர்,சென்னை 600 017

சிவகங்கை இராசமுத்துராமலிங்கம் உடற்கொடை

தம் 93 ஆம் அகவையில், தை 23, 2050 / பிப்.06,2019 அன்று இயற்கை எய்திய (தன்மானப் போராளி வழக்குரைஞர் சு.இரா.இராமச்சந்திரனாரின் இளைய மகன்) சிவகங்கை இராசமுத்துராமலிங்கம் உடல் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்கப் பெற்றது. சென்னையிலிருந்து சிவகங்கைக்கு அரசு மருத்துவக் கல்லூரி வேலை நேரத்திற்குள் செல்ல இயலாது என்பதை உணர்ந்ததால் விண்ணப்பப் படிவம் அளித்தல், ஒப்புகை பெறல் முதலான முன் ஏற்பாடுகளைச் செய்து முடித்தோம். இதற்கு எம்ஞ்சியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மரு.சுதா சேசையன், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.வெண்ணிலா,…

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 46

மாசி04, 2050 சனிக்கிழமை 16.02.2019 மாலை 6.00 சிரீராம்குழுமஅலுவலகம் மூகாம்பிகைவளாகம் (4, பெண்கள்தேசிகர்தெரு) ஆறாவது தளம்மயிலாப்பூர்சென்னை 600 004(சிபி.இராமசாமிதெருவில் உள்ள பாலம் கீழே) எழுத்தாளர் ஆதவனும் நானும் – ஆர்.வெங்கடேசு

புதுவைத் தமிழ்ச்சங்கப் பொன்விழா, தமிழ் மாநாடு 2019

மாசி 3-5, 2050  / பிப்பிரவரி 15-17 மாநாட்டுப்பேரணி கண்கவர் கலை விழா மண்ணிசை அரங்கம் பட்டி மன்றம் ஆடலரங்கம் மகளிர் அரங்கம் கவியரங்கம் இன்னிசை யரங்கம் பாராட்டரங்கம்

கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் உலகத் தாய்மொழி நாள்

கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் உலகத் தாய்மொழி நாள் கருத்தரங்கம் மாசி 07, 2050 செவ்வாய் 19.02.2019 மாலை 6.00

வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 4/4 :: இலக்குவனார் திருவள்ளுவன்

வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 4/4  தமிழறிஞர் சே.எம்.நல்லசாமி (பிள்ளை) தமிழறிஞர் சே.எம்.நல்லசாமி(பிள்ளை) குறித்த பேரா.சே.சி. கண்ணப்பனார் கட்டுரை  8 ஆவதாக இடம் பெற்றுள்ளது. 150 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இவர் 20 ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றியிருந்தாலும் வாணாள் முழுவதும் தமிழ் ஆர்வலராகத் திகழ்ந்தார்; தமிழறிஞரான இவர் அறிஞர் போப்பு அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்; சமய இலக்கியங்களையும் திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, மாக்சு முல்லர் முதலான பன்னாட்டு அறிஞர்களின் பாராட்டுகளைப் பெற்றவர் என இவரின் சிறப்புகளைக் கட்டுரையாளர் தெரிவிக்கிறார். இவரின் திருக்குறள் பணிகளை…

திராவிட மொழிகளின் தாய்! – வைகைச்செல்வன்

திராவிட மொழிகளின் தாய்! மனிதகுல நாகரிகத்தை முன்னெடுத்துச் செல்வதில், மகத்தான பங்களிப்பைச் செய்தவை மொழிகள்தாம். நாடோடித் திரிதல், வேட்டையாடுதல், கால்நடை மேய்த்தல், கடல்மேல் சேர்தல், உழவு செய்தல் இந்த ஐந்து படிநிலைகளில் மனித நாகரிகம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடையத் தொடங்கியது. காட்டுமிராண்டிகளின் கூடாரமாகக் காட்சியளித்த மனித இனம், வேட்டையாடுதலின் மூலம் ஒரு வேட்டைச் சமூகத்தையே தன் இதயத்தில் தாங்கி நகர்ந்தது. அதன் முன்னர் நாடோடியாகத் திரிந்து பல்வேறு கால தட்பவெப்ப நிலைகளில் தன் உடல் தாங்க, மனம் ஏங்கப் புதியவற்றை கற்றுக் கொண்டது.  பின்பு…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 1-10 இலக்குவனார் திருவள்ளுவன்

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 1-10 (குறள்நெறி) எழுத்துக்கு அகரமும் புவிக்குப் பகலவனும் முதல் என அறி! கற்றதன் பயனாக அறிவர்வழி நட! நெடுங்காலம் வாழ மாண்புடையோர் வழி நட! துன்பம் இல்லாதுபோக விருப்பு வெறுப்பிலார் வழிநில்! இருவினை சேராதிருக்கப் புகழுடையார் வழி நில்! நீடு வாழ மெய்யொழுக்கர் வழி நில்! மனக்கவலையை மாற்ற உவமையில்லார் வழிநில்! துன்பக்கடல் நீந்த அறவர்வழி நில்! தலையால் நற்குணத்தானை வணங்கு! அறியாமைக் கடலை நீந்த, ஆளுமையுடையவர் வழி நில்! (தொடரும்) -இலக்குவனார் திருவள்ளுவன் வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்…