புதுமை இலக்கியத் தென்றல் 788ஆம் நிகழ்ச்சி

பங்குனி 18, 2050 திங்கட்கிழமை 1.4.2019  மாலை 6.30 மணி இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர், சென்னை புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 788ஆம் நிகழ்ச்சி தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி தொடக்கவுரை: அமுதரசன் சிறப்புரை: சரவணா இராசேந்திரன் தலைப்பு: தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் முனைவர் க.தமிழமல்லன்! வாகை மாலை அணிவிப்பீர்!

புதுச்சேரி மாநிலத்தில் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் மொத்தம் 8 பேர் போட்டி இடுகின்றனர். அவர்களுள் கால்பந்து சின்னத்தில் தனியராக முனைவர் க.தமிழமல்லன் போட்டியிடுகிறார். அவரது தேர்தல் அறிக்கை வருமாறு: அனைவரும் வாழ்க! அனைவரும் உயர்க!       முனைவர் க.தமிழமல்லன் சிறந்த வேட்பாளர்! முனைவர் க.தமிழமல்லன் தமிழ்ஆசிரியர் (ஓ) , பாவலர், இதழ்ஆசிரியர், தனித்தமிழ்இயக்கத் தலைவர். அவர் ஒழுக்கம் உடையவர். நேர்மையானவர். துாய்மையானவர். முனைவர் க.தமிழமல்லன்! சிறந்த அறிஞர், உயர்கல்வி கற்றவர், பல நுால்களை இயற்றியவர். வெல்லும் துாயதமிழ் என்னும் மாத இதழை 26 ஆண்டுகளாக…

இலக்கியச் சிந்தனை 585 + குவிகம் இலக்கிய வாசல் 48

பங்குனி 16, 2050 சனி 30.03.2019  மாலை 6.00  சீனிவாச காந்தி நிலையம், அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச் சிந்தனை நிகழ்வு 585 இராமாயணத்தில் ஒரு நெருடல் சிறப்புரை: அம்பத்தூர் திரு தேவராச சாமிகள்  குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 48 கவிதை கடந்து வந்த பாதை சிறப்புரை: கவிஞர் நீரை அத்திப்பூ

சிவகங்கை அரசு மருத்துவமனையின் பெயரில் இராமச்சந்திரானர் பெயரை நீக்கியது ஏன்? யார்? – இலக்குவனார் திருவள்ளுவன்

சிவகங்கை அரசு மருத்துவமனையின் பெயரில் இராமச்சந்திரானர் பெயரை நீக்கியது ஏன்? யார்? தமிழ்நாட்டு மக்கள் சாதிப்பட்டங்ளைத் துறப்பதற்கு முன்னோடியாய் விளங்கிய சீர்திருத்தச் செம்மல் சிவகங்கை இராமச்சந்திரனார். பகுத்தறிவு இயக்கத் தலைவர், கல்விப் புரவலர், மது ஒழிப்பைப் பரப்பிய அறவாணர், தமிழ் வளர்த்த தகைமையாளர் எனப் பல சிறப்புகள் கொண்டவர் அவர். அவரது பெயர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்குச் சூட்டப்பட்டது. ஆனால் அப்பெயர் தந்திரமாக  அகற்றப்பட்டுள்ளது. அவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அருந்தலைவர். 21.12.1991 இல் மதுரையில் தி.மு.க.வின் பவளவிழா மாநாட்டு அரங்கத்திற்குச் சிவகங்கை இராமச்சந்திரனார் பெயர்…

தமிழ்மொழி விழா 2019 – தமிழ்ச்சான்றோர் புகழ் போற்றும் தமிழவேள் முப்பெரு விழா

 தமிழ்மொழி விழா 2019 – தமிழவேள் நற்பணி மன்றம் ஏற்பாட்டில் சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவில் தமிழ்ச்சான்றோர் புகழ் போற்றும் தமிழவேள் முப்பெரு விழா பங்குனி 17, 2050 ஞாயிறு 31.3.2019  காலை 10.00 முதல்  11.30 மணி வரை இந்திய மரபுடைமை நிலையம் (சிற்றிந்தியா) சிங்கப்பூர் தலைமை: பேராசிரியர் சுப.திண்ணப்பன் முன்னிலை: இராசுகுமார் சந்திரா (தலைவர் – சிற்றிந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கம்) சிறப்பு விருந்தினர்: இரா.தினகரன் (நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர்) நினைவுரை: சிங்கப்பூரின் முதல் தமிழர் முன்னோடி  நாராயண(ப் பிள்ளை): அருண் வாசுதேவு…

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான வேட்புமனு பதிவு தொடங்கியது : சித்திரை 14/ஏப்பிரல் 27இல் தேர்தல்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான வேட்புமனு பதிவு தொடங்கியது : சித்திரை 14/ஏப்பிரல் 27இல் தேர்தல் ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்கும் போராடிவருகின்ற மக்களாட்சி வடிவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இருக்கின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாம் தவணைக் காலத்துக்கான வேட்புமனு பதிவு மார்ச்சு 10ஆம் நாளன்று தொடங்கியது. எதிர்வரும் 20ஆம் நாள் நள்ளிரவு வரை வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட இருக்கின்றன. எதிர்வரும் தேர்தல் ஏப்பிரல் 27ஆம் நாள் தேர்தல் புலம்பெயர் நாடுகளில் இடம்பெற இருக்கின்றது. தேர்தல் நடைமுறை விதிகள் , வேட்புமனுக்கள்,பிற விவரங்கள்…

தேர்தல் ஆணையத்தின் கொடுங்கோன்மை!- இலக்குவனார் திருவள்ளுவன்

தேர்தல் ஆணையத்தின் கொடுங்கோன்மை! தேர்தல் ஆணையத்தின் அறமுறையற்ற செயல்பாடுகளைக் கொடுங்கோலாட்சியின் செயல்பாடுகளுடன்தான் ஒப்பிட முடியும். மக்களாட்சியின் அடையாளமாகத் திகழ்வது தேர்தல். தேர்தலில் போட்டியிடுவோருக்குரிய மக்களாட்சிக் கடமைகளை ஆற்ற உதவ வேண்டியது தேர்தல் ஆணையத்தின் அடிப்படைப் பணி. ஆனால் கட்சிகளுக்கேற்றவாறு மாறுபட்ட அளவுகோல்களைக் கொண்டு சூழ்நிலைகளை ஆராய்ந்து தனக்குரிய கடமையிலிருந்து தவறுவதே தேர்தல் ஆணையத்தின் பணியாக உள்ளது. நடுநிலையாளர் என்ன சொல்லுவார்கள் என்ற அச்சம் இன்றித் துணிந்து தவறுகளைச் செய்கிறார்கள் என்றால் இதனை எங்ஙனம் செங்கோன்மையாகக் கூற முடியும்? ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளுக்கு ஓர்…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 51-60: இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 41-50 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் (குறள்நெறி) 51. தவமிருப்போரின் பணியினும் சிறந்த இல்லறத்தானாக விளங்கு! 52. பழிக்காகா இல்வாழ்வை மேற்கோள்! 53. வானவர்க்கு ஒப்பாக, வாழ்வாங்கு வாழ்! 54. மனைக்குத் தக்க மாண்பு கொண்டுவளத்திற்கேற்ப நட! .  55. பிற மாட்சியைவிடச் சிறந்த மனைமாட்சியுடன் திகழ்!. 56. இல்லாதது ஒன்றுமில்லை என ஆக்கும் பெருமைமிகு துணைவராக இரு! 57. நின்னிலும் பெருமை யாதுமில்லை எனக் கலங்கா கற்பு நிலையில் வாழ்! 58. பெய்யெனப் பெய்யும் மழை போன்று துணைவர்…

10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2019

அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் (IATR) 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ [32 ஆம் பேரவைத்தமிழ் விழா,  சிகாகோ தமிழ்ச்சங்கப் பொன்விழா] ஆனி – 19-22, தி.பி. 2050 / புதன் – ஞாயிறு / சூலை 4 – 7, 2019 மையக் கருத்து:  கீழடி நம் தாய்மடி விவரங்களுக்கு :  icsts10.org   / www.iatrnew.org  / iatr2019@fetna.org

வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும்! – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இலங்கை இனப்படுகொலைக் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் ! – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தல் கொழும்பு, மார்ச்சு 23  இலங்கை இனப்படுகொலைக் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று அந்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. முன்னதாக, இலங்கையில் இறுதிப் போரின்போது நிகழ்ந்த இனப்படுகொலைக் குற்றங்கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணையை மேற்கொள்ள அந்நாட்டு அரசுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இரண்டு ஆண்டுகள் காலக்கெடு அளித்தது. இதற்கு அடுத்த நாளிலேயே தமிழ்த்…

நல்லறிவுக்கூடம் விருது வழங்கும் விழா

நாள் : பங்குனி 14, 2050 வியாழன்  28-3-2019  மாலை 6 மணி இடம் : பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர் நல்லறிவுக்கூடம் விருது வழங்கும் விழா  நூல் : தமிழ் இலக்கியத்தில் உவமைகள் இரண்டு தொகுதி ஆசிரியர் : பெரும்புலவர் க.அ. இராமசாமி நிகழ்ச்சி நிரல் இறைவணக்கம் வரவேற்புரை நிரலுரையாளர் : கலைமாமணி திரு. காத்தாடி இராமமூர்த்தி தலைமை – நூல் வெளியீடு – விருது வழங்கல்:   முனைவர் ஒளவை நடராசன் மேனாள் துணை வேந்தர் நூல் பெறுபவர் :…

திருக்குறளுக்குக் களங்கம் கற்பித்த நாகசாமிக்குக் கண்டனக் கூட்டம்

பங்குனி 10, 2050  ஞாயிற்றுக்கிழமை 24.3.2019  மாலை 5.30 மணி இடம்: அறிஞர் அண்ணா பொதுநல மன்றம் (ஆர்க்காட்டுச் சாலை சரவணபவன் எதிரில், வடபழனி, சென்னை) பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், அனைத்துத் திருக்குறள் பேரவை, தமிழ் இலக்கிய அமைப்புகள் இணைந்து – நடத்தும் – திருக்குறளுக்குக் களங்கம் கற்பித்த நாகசாமிக்குக் கண்டனக் கூட்டம் திருக்குறள் வணக்கம்: குறளிசைச் செல்வர் சொ.பத்மநாபன்  தொடக்கவுரை: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் (தமிழ் எழுத்தாளர் கழகம்)  அறிமுகவுரை: கவிச்சிங்கம் கண்மதியன் (பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்)  தலைமை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (உலக அமைப்பாளர்,…

1 2 5