செம்மொழி விருது – தமிழ்ப்புலமையாளர்களைத் தேர்ந்தெடுக்கத் தமிழறிவு தேவையில்லையா? – இலக்குவனார் திருவள்ளுவன்

செம்மொழி விருது – தமிழ்ப்புலமையாளர்களைத் தேர்ந்தெடுக்கத் தமிழறிவு தேவையில்லையா? தமிழ் தொடர்பான துறைகள், பதவிகள், அமைப்புகள், குழுக்கள் ஆகியவற்றின் பொறுப்பிற்கான முதல் தகுதி தமிழறிவு இல்லாதவராக இருக்க வேண்டும். தமிழராக இல்லாமல் இருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும். இதுதான் தமிழ்நாட்டின் எழுதப்படாத விதி. இந்திய அளவிலும் மத்திய அரசு இந்த விதியைக் கடைப்பிடிக்கத் தவறுவதில்லை. எனவே, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பெறும்  தமிழ்ப்புலமையாளர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் உள்ள உறுப்பினர்கள் குறித்து நாம் ஒன்றும் கூறுவதற்கில்லை. இக்குழுவில் 4 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். எப்படியோ…

‘வள்ளுவரின் ஆரியச் சிந்தனை ஓட்டம்’ என்னும் திரிபு வாதத்திற்கு எதிர்ப்பு

பங்குனி 08, 2050 வெள்ளி மார்ச்சு 22, 2019 மாலை 6.00 அன்னை மணியம்மையார் மன்றம்,     பெரியார் திடல், சென்னை 600 007 ‘வள்ளுவரின் ஆரியச் சிந்தனை ஓட்டம்’ என்னும் திரிபு வாதத்திற்கு எதிர்ப்பு தலைவர்: முனைவர் பொற்கோ பெரியார் நூலக  வாசகர் வட்டம் (குறிப்பு : நிகழ்ச்சித் தலைப்பு வள்ளுவரின் வடமொழிச் சிந்தனை யோட்ட எதிர்ப்பு என உள்ளது. அப்படியானால் வள்ளுவருக்கு ஆரியச்சிந்தனை ஓட்டம் இருப்பதாதகவும் அதை எதிர்ப்பதாகவும் இதன் மூலம் திருவள்ளுவரை எதிர்ப்பதாகவும்  பொருள் ஆகிறது. இது நிகழ்ச்சி உணர்விற்கு எதிரானது…

திருக்குறள் சுட்டும் தீமைகள் – பேரரசி முத்துக்குமார்

திருக்குறள் சுட்டும் தீமைகள்   முன்னுரை      உலகப் பொதுமறையான திருக்குறள் ஏறத்தாழ 2000 வருடங்களுக்கு முன்பு தெய்வப் புலவரான திருவள்ளுவரால் எழுதப்பட்டது என்பது தமிழர்களான நமக்குத் தெரியும். அதே திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அவ்வதிகாரங்களில் மொத்தம் 3 அதிகாரங்கள் தீமையான குற்றச் செயல்கள் ஒட்டி எழுதப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கட்டுரையில் அந்த 3 அதிகாரங்களில் உள்ள சில திருக்குறள்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில் சில எடுத்துக்காட்டுகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ளன. குற்றச் செயல்களை விளக்கும் அதிகாரங்கள் 1.குற்றம் கடிதல் (44) 2.கூடா நட்பு…

இடைத்தேர்தல்களில் பதவி பறிக்கப்பட்டவர்களுக்கே வாக்களியுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

இடைத்தேர்தல்களில் பதவி பறிக்கப்பட்டவர்களுக்கே வாக்களியுங்கள்! இந்தியா மக்களாட்சி நாடு என்று சொல்லப்பட்டாலும் மத்திய மாநில அரசுகளே மக்கள் நாயகத்திற்கு எதிராகச் செயல்படுவதுதான் வழக்கமாக உள்ளது. தேர்தல் மூலம்தான் மக்கள் நாயகமே நிலை நாட்டப்படுகிறது. ஆனால் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையமே மக்களாட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் நடந்து கொள்வதில்லை. ஆளும் தலைமையின் தாளத்திற்கேற்ப ஆணையம் ஆடுவதால் மக்களாட்சியும் சிதைக்கப்படுகிறது. பல நல்ல தீர்ப்புகளை வழங்கும் நீதி மன்றங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உண்மையான ஆட்சிதான் அரசை வழி நடத்திச் செல்ல வேண்டும் என்று எண்ணுவதில்லை. இவ்வாறான…

இராகுல் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் தோற்கடிக்கப்பட வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

இராகுல் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் தோற்கடிக்கப்பட வேண்டும்!  பேச்சுமுறை, அணுகு முறை, பெரும் மாற்றத்திற்கான பயணம், கலந்துரையாடல்கள், செய்தியாளர் கூட்டம் முதலான பலவற்றில் இராகுலின் பங்கு சிறப்பாகவே உள்ளது. நரேந்திர(மோடியை) – அவரின் பா.ச.க. கட்சியைத் – தோற்கடிப்பதற்கு ஏற்றவராகவே அவர் திகழ்கிறார். மதவெறி பிடித்த, பொய்யிலே புரளும் பா.ச.க.வைத் தோற்கடிக்க மாநில முதன்மைக்கட்சிகள் ஒன்று சேரவில்லை.  இந்தச் சூழலில் பா.ச.க. ஆட்சியை அகற்ற இராகுல் ஏற்றவராகவே உள்ளார். எனவே, அவர் தேர்தலில் போட்டியிடுவதும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் இடம்பெறுவதும் தேவையாக உள்ளது. அதே நேரம்…

அளவளாவல் – மரபுக்கவிஞர் தில்லை வேந்தன்

குவிகம் இல்லம், ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017பங்குனி 03, 2050 ஞாயிறு 17.03.2019 மாலை 4.00 மரபுக்கவிதைகள் பற்றிய அளவளாவல்:மரபுக்கவிஞர் தில்லை வேந்தன் தொடர்பிற்கு: சுந்தரராசன் 94425 25191

இலக்குவனார் அரசுகளுக்கும் கட்சிகளுக்கும் கூறும் அறிவுரைகள் : இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்குவனார் அரசுகளுக்கும் கட்சிகளுக்கும் கூறும் அறிவுரைகள்   தமிழ்ப்போராளி பேராசிரியர் இலக்குவனார் தமிழைக்காக்கவும் பரப்பவும் பல வகைகளில் போராடித் தம் வாழ்க்கையைச் செலவிட்டவர். அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டியும் தட்டிக் கேட்டும் செயல்பட்டதுடன் அரசிற்குத் தமிழ் வாழவும் தமிழர் வாழவும் மக்களாட்சி நிலைக்கவும் அறிவுரைகளை வழங்கியுள்ளார்; வேண்டுகோள்கள் விடுத்துள்ளார். தம் கட்டுரைகள், நூல்கள், சொற்பொழிவுகள் இதழ்கள் மூலம் அவ்வப்பொழுது தக்க நெறியுரைகளைத் துணிந்து வழங்குவதில் முதலாமவராகத் திகழ்ந்துள்ளார். அவர் கூறும் அறிவுரைகள் அரசுகளுக்கு மட்டுமல்ல. அரசை நடத்தும் கட்சிகளுக்கும் அரசாள எண்ணும் கட்சிகளுக்கும்தான்.   பேரா.இலக்குவனாரின்…

ஐ! ஐ! ஐ! தேர்தல் வந்தாயிற்று – நன்னாடன்

ஐ! ஐ! ஐ! தேர்தல் வந்தாயிற்று! அறமும் பிறவும் இனிமேல் அழகாய்க் கழுவேறும் கொள்கையை விளக்க சிறு குறு கூட்டம் ஆர்ப்பரிக்கும் சகலமானவருக்கும் சாராய விருந்து நிறைவேறும் சாதியும் சடங்கும் சிறிது காலம் முன்னிலை பெறும் பெயர் சூட்டலும் பிள்ளை கொஞ்சலும் பித்தமாக்கும் காணும் போதெல்லாம் கனிவான விசாரிப்பு கடமையாகும் மாவட்டம் வட்டம் ஒன்றியங்களைச் சந்திப்பது இயல்பாகும் மந்திரிக்கு நாமே மகத்துவ மூலிகையாய்க் காட்சியளிப்போம் தேர்தல் சந்தை முடியும் வரை விலையுள்ள பொருளாய் நாளும் வலம் வருவோம் திருவிழாவிற்குப் பின்னே மழிக்கப்பட்ட தலையாய் மாறிவிடுவோம்….

கவிஞர் மு.முருகேசுக்கு மீரா விருது

கவிஞர் மு.முருகேசுக்குக் கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டது பரமக்குடி அரசு கலைக்கல்லூரியும் ‘வளரி’ கவிதை இதழும் இணைந்து நடத்திய கவிப்பேராசான் மீரா விழாவில், தமிழில் குறும்பா(ஐக்கூ) கவிதைகள் குறித்த தொடர் செயல்பாடுகளுக்காகக் கவிஞர் மு.முருகேசுக்குக் கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக மானாமதுரையிலிருந்து வெளிவரும் ‘வளரி’ கவிதை இதழ் சார்பில், தமிழ்ப் படைப்புவெளியில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைச்செய்துவரும் படைப்பாளிகளுக்கு கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டு வருகிறது.கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சப்பானிய ஐக்கூ வடிவக் கவிதைகளைத் தமிழில் பரவலாக அறிமுகம் செய்ததோடு, இளைய…

உ.வே.சா. உலகத் தமிழர் விருது

உ.வே.சா. உலகத் தமிழர் விருது சிங்கப்பூர் முசுதபா தமிழ் அறக்கட்டளை வழங்கும் உ.வே.சா. உலகத் தமிழர் விருதும், உரூ. ஓர் இலட்சம் பரிசுத் தொகையும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.இம்முறை ‘சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடு‘ எனும் தலைப்பு வழங்கப்படுகிறது.இத்தலைப்பில் சிறந்த ஆய்வுரையை 150 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி பொதிக்கோப்பு(PDF) வடிவ ஆவணமாக suriyaudayam@gmail.com  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 31.8.2019சிறந்த ஆய்வுரைக்கான தெரிவு அறிவிப்பு: 02.1.2020கவிக்கோ மன்றத்தில் விருது வழங்கும் நாள்: 22.2.2020

தெற்கெல்லையில் ஒரு தமிழினப் போராளி மணி நூல் வெளியீட்டு விழா

பங்குனி 03, 2050 ஞாயிறு மார்ச்சு 17, 2019 காலை 9.30 மணி நிகழ்விடம் : இளைஞர் விடுதி, இந்திரா நகர், சென்னை நூல் வெளியீடு:  பழ.நெடுமாறன் படத்திறப்பு: கி.வேங்கடராமன் சிறப்புரை: பெ.மணியரசன் நாஞ்சில் நாடன் ஏற்புரை:  முனைவர் பி.(இ)யோகீசுவரன்   அழைக்கும் அரசி பதிப்பகம்

இலக்குவனார் இலக்கியப் பேரவையின் ஈறாண்டு விழாவும் விருது வழங்கு விழாவும்

பங்குனி 03, 2050 ஞாயிறு மார்ச்சு 17, 2019 மாலை 5.30 திருமால் திருமண மண்டபம், அம்பத்தூர், சென்னை 53 நூல் வெளியீடும் விருது வழங்கலும்: தோழர் இரா.நல்லகண்ணு விருது பெறுநர்: தொல்காப்பியர் விருது: முனைவர் இரா.இராசேந்திரன் (தேவிரா) திருவள்ளுவர் விருது: முனைவர் இ.எலியாசு இலக்குவனார் விருது: முனைவர் க.மலர்விழி கவிஞர் செம்பை சேவியர், ஒருங்கிணைப்பாளர் புவலர் உ.தேவதாசு, செயலர் இலக்குவனார் இலக்கியப் பேரவை