சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 3/3 அ. அரவரசன்

[சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 2/3 தொடர்ச்சி] சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 3/3 பட்டினப் பாலை எனும் பைந்தமிழ் பனுவலில் காவிரி சிறப்பு பற்றிய பாடிய புலவன் தான் பாடிய பாடலின், ‘‘வசைஇல் புகழ் வயங்கு வெண்மீன். . . . . . . . கொழிக்கும்” என்ற வரிகளில் தற்பாடிய தளி உணவின் புள் என்ற சொல் வானம்பாடியை குறிப்பிட்டுச் சொல்லும் அமுதவரிகள் அஃதாவது கார்முகில்கள் திரண்டு வரும் போது அந்த முகில்கள் முதலில் தள்ளிவிடும் மழைத்தூறல்…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 31-40 – இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 21-30 இன் தொடர்ச்சி)    வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 31-40 (குறள்நெறி) 31. அற வழியில் சிறப்பும் செல்வமும் பெறு! 32. அறத்தை ஆக்கமாகக் கருது! அதனை மறந்து கேடுஉறாதே! 33. இயன்றவழியில் எல்லாம் அறம் செய்க! 34. அறவாழ்விற்கு மனமாசின்றி இரு! 35. அழுக்காறு அகற்றி அறவாழ்வு வாழ்! 36. அவாவினை நீக்கி அறப்பாதையில் செல்! 37. வெகுளியைப் போக்கி அறநெறியில் நில்! 38. இன்னாச்சொல் அகற்றி அறமே போற்று! 39. அறத்தினை அன்றன்றே ஆற்று! 40. …

தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு விருது, திருச்சிராப்பள்ளி

உலகத் தாய் மொழி நாளை முன்னிட்டுத் தமிழகப் பெண்கள் செயற்களமும் தமிழரண் அமைப்பும் மாணவர்கள் ஒருங்கிணைக்கும் தாய்மொழி நாள் உறுதியேற்பு விழா, தமிழ்ச் சான்றோர்கள் படம் பொறித்த வளிஊதி(பலூன்) பறக்கவிடும் நிகழ்வு, தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்களைப்  போற்றிச் சிறப்பு செய்திட சிறப்பாரம் (விருது) வழங்கும் விழா ஆகியன இணைக்கப்பட்டுத் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரி ஏ.வி. அரங்கத்தில் உலகத்தாய்மொழி நாளான 20.02.2019 அன்று நடை பெற்றது.  தமிழகப் பெண்கள் செயற்களத்தின் தலைவர் இசை மொழி இவ்விழாவிற்குத் தலைமை வகித்தார். தமிழரண் மாணவர்கள் தாமரை,…

பதினாறாவது பன்னாட்டு மாநாடு – கருத்தரங்கம் , 2019

வைகாசி 12-14, 2050  / 26.05.2019-28.05.2019 பி,எசு.என்.ஏ. பொறியியல் தொழில் நுட்பக்கல்லூரி திண்டுக்கல்   வளர்தமிழ் ஆய்வு மன்றம், திண்டுக்கல் மகா கணேச தமிழ் வித்தியா சாலைப் பள்ளி, மலேசியா உலகத் தமிழ்க்காப்பிய ஆராய்ச்சி நிறுவனம், மலேசியா இணையத் தோழி, இந்தியா பதினாறாவது பன்னாட்டு மாநாடு – கருத்தரங்கம் , 2019 அறிவிப்பு மடல் கருப்பொருள் தமிழ்மொழியின் பன்முகத்தன்மை துணைக் கருப்பொருள் தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், இலக்கணம், மொழியியல், தத்துவம், வரலாறு, கலை/நுண்கலை, கல்வி/ கற்றல் கற்பித்தல், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மை,…

அளவளாவல் – மொழிபெயர்ப்பு விருதாளர் சங்கரநாராயணன்

மாசி 26, 2050 ஞாயிறு   10.03.2019 மாலை 4.00 குவிகம் இல்லம், ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இலக்கிய வாசல் அளவளாவல் – தமிழக அரசின் மொழிபெயர்ப்பு விருதாளர் சங்கரநாராயணன் தொடர்பிற்கு  சுந்தரராசன் 94425 25191

திருக்குறளை இழிவுபடுத்திய நாகசாமி நியமனத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்

மாசி 25, 2050 சனி  09.03.2019 காலை 10.30 வள்ளுவர் கோட்டம் அருகில் சென்னை திராவிட இயக்கத் தமிழர் பேரவை

பகுத்தறிவாளர் பேரவைக் கூட்டம், பம்மல்

மாசி 26, 2050 ஞாயிற்றுக்கிழமை 10.3.2019 மாலை 6.30 மணி   இடம்: ஈசுவரன் நகர் பொதுநலச் சங்க கட்டடம், மோசசு சாலை, ஈசுவரன் நகர், பம்மல், சென்னை  வரவேற்புரை: பொன்.இராமசந்திரன் தலைமை:  வை.பார்த்திபன்  சிறப்புரை: புலவர் சி.முத்தையா – 10 விழுக்காடு பொருளாதார ஒதுக்கீடு கூடாது ஏன்? சூர்யா  – தலைப்பு: தற்கால அறிவியலாளர்களும் – மூடநம்பிக்கைகளும் நன்றியுரை: பொன்.செல்வராசன்

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் கருத்தரங்கம், சென்னை

மாசி 26, 2050 ஞாயிற்றுக்கிழமை 10.3.2019  மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை  இடம்: பேரவையின் தலைமை யகம், (புதிய எண். 120,  என்.டி. ஆர். தெரு, (இரண்டாவது மாடி), அரங்கராசபுரம், கோடம்பாக்கம், சென்னை – 24) திராவிட இயக்கத் தமிழர் பேரவையின்  கருத்தரங்கம் வரவேற்புரை: தோழர் சாந்தசீலன் தலைமை: தோழர் மு.மாறன் சிறப்புரை: கோவி.இலெனின் (பொறுப்பாசிரியர், நக்கீரன்)  – கொள்கைசார் இயக்கமும் தேர்தல் சமரசமும் கருத்துரை: தோழர் தமிழ் மறவன் – அன்னை மணியம்மையார், தோழர் மகாலட்சுமி –…

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

எனக்குப் பிடித்த திருக்குறள்!      தமிழ்ச் சமுதாயம் நயத்தக்க நாகரிகம் வேண்டும் சமுதாயம்; “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று “ங” போல் வளைக்கும் சமுதாயம். அதன் ஒப்பற்ற பெருமையைப் பறைசாற்றும் நூற்களுள் மிகச்சிறந்தது தொல்காப்பியம், மற்றும் திருக்குறள் என்பது எனது கருத்து. மனித இனம் படிநிலை வளர்ச்சியில் உருவாகி, உடல் வலுவால் மட்டுமின்றி அறிவு ஆற்றலால் மேம்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் வாழக்கைப் போராட்டத்தின் விளைவாக மிருகங்களிடம் இருந்து மேம்பட்டு, உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் நிலைக்கு மனிதன் உயர்கின்றான். காலப்போராட்டத்தில் கருத்துக்களால்…

சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 2/3: அ. அரவரசன்

[சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை:1/3 தொடர்ச்சி] சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 2/3 மேலும் கலித்தொகை தரும் பாடல் வரிகள் பொதிந்துள்ள பல நூறு பாடல்களின் ஒரு பாடலில் ‘அரக்கு’பற்றிய செய்தி உள்ளது. அரக்கு பற்றிய செய்தியில் மகாபாரதம் தோன்றிய காலத்தில் அரக்குமாளிகை இருந்ததாக வரும் தகவலின் தொன்மை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்திய மண்ணில் உலவி வருகின்றது. எனினும் மனித வாழ்வுக்கு நற்பயன் தரும் பூச்சிகளில் (தேனீ, பட்டுப்பூச்சி போன்றவை) அரக்குப் பூச்சியும் ஒன்று. 1787 இல் சான்கேர் என்ற…

மார்ச்சு 9 – தமிழ்நாடெங்கும் ஏழு தமிழர் விடுதலைக்காக மனிதச் சங்கிலி

மார்ச்சு 9 – தமிழ்நாடெங்கும் ஏழு தமிழர் விடுதலைக்காக மனிதச் சங்கிலி பெருந்திரள் மக்கள் பங்கேற்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வேங்கடராமன் அறிக்கை பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயசு, செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களின் விடுதலைக்குத் தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் இயற்றி அனுப்பி மூன்று மாதங்கள் கடந்த பிறகும் ஆளுநர் அதில் கையெழுத்திடாமல் காலம்கடத்துவது இந்திய அரசின் தமிழினப் பகைப் போக்கின் விளைவே ஆகும்! இந்நிலையில், ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்திப் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்…

திருக்குறளுக்கு உரை திருக்குறளே! – பி.என்.(இ)டயசு

திருக்குறளுக்கு உரை திருக்குறளே! 1/9       பின்பலம் இன்றிக் குறளாசான் தன்பலம்      பின்புலமாய்க் கொள்ளுமென் ஆய்வு முப்பாலுக்கு உரைகள் பல உள. சில உரைகள் நல்ல விளக்கம் தருகின்றன. பல உரைகள் குழப்பம் தருகின்றன. முப்பாலுக்குத் திருவள்ளுவர் உள்ளத்தை எதிரொலிக்கும் பொருள் காண நற்றுணை ஆவது திருவள்ளுவமே என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன்  மேற்கொள்ளப் படுவது  இந்த ஆய்வு. ஃபிரான்சு நாட்டில் அகாதெமி ஃபிரான்செசு என்ற ஓரமைப்பு உள்ளது. அந்த அமைப்பின் அனுமதியின்றி எந்த ஒரு புதுச்சொல்லும் ஃபிரெஞ்சு அகராதியில் நுழைய முடியாது. ஆனால்…