எங்களுக்காக உழைப்பார் உண்டோ!? – இலக்குவனார் திருவள்ளுவன்

எங்களுக்காக உழைப்பார் உண்டோ!? உழைத்தோம் உழுதோம் உணவின்றி வாடுகிறோம்   உழைத்தோம் நெய்தோம் துணியின்றி ஏங்குகிறோம்   உழைத்தோம் கட்டினோம் வீடுஇன்றி அலைகிறோம்   உழைத்தோம் பிறருண்ண பிறருடுக்க பிறர்வசிக்க   எங்களுக்கு எல்லாம் கிடைக்க உழைப்பார் உண்டோ!? இலக்குவனார் திருவள்ளுவன்

தனித்தனிப் பரப்புரைகளைத் தடை செய்து வேலூரில் தேர்தலை நடத்துக! – இலக்குவனார் திருவள்ளுவன்

தனித்தனிப் பரப்புரைகளைத் தடை செய்து வேலூரில் தேர்தலை நடத்துக!  வேலூரில் மட்டும்தான் வாக்கு வணிகம் நடைபெற்றதுபோல் தேர்தல் ஆணையம் அங்கே தேர்தலை நிறுத்தி விட்டது. வாக்கு வணிகம் நடைபெறாத தொகுதி என்று ஒன்றைச் சொல்ல முடியுமா? அல்லது வாக்கு வணிகர்கள் தேர்தலில் பஙகேற்கா வண்ணம் தேர்தல் ஆணையம்தான் எங்காவது நடவடிக்கை எடுத்துள்ளதா? ஒன்றும் இல்லை. அவ்வாறிருக்க, வேட்பாளர்களின் செல்வமும் உழைப்பும் மக்களின் வரிப்பணமும் நேரமும் வீணடிக்கப்படும் வகையில் தேர்தலை நிறுத்தியது ஏன்? வேலூரில்  தேர்தலை நிறுத்தியதற்கு எல்லாக் கட்சியினரும் தமிழக அரசும் எதிர்ப்பு காடடியுள்ளனர்….

வெருளி அறிவியல் – 2 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி அறிவியல் 1 இன் தொடர்ச்சி) வெருளி அறிவியல்  –  2 (Science of fear or Phobia) (அச்ச நோய் வகைகள் எனப்படும் வெருளி வகைகள்) ஒரேவகை வெருளி ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களாலும் குறிப்பிடப்படுகின்றது. ஒரே நேரத்தில் வெவ்வேறு சூழலில் வெவ்வேறு வல்லுநர்கள் ஆராய்வதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவற்றை எல்லாம் ஒரே வகையாகக் குறித்துள்ளேன். நான் இதற்கு முன்பு வெருளி வகைகளைக் குறிப்பிட்டுப் பட்டியல் அளித்துள்ளேன். எனினும் இப் பொழுது அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றில் சேர்த்து மாற்றியுள்ளேன். ஆங்கிலத்தில், மருத்துவர்கள்…

தந்தை பெரியார் சிந்தனைகள்- முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. அ.பெருமாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 26.2.2001 முற்பகல் ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’  பேராசிரியர் முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்) தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம் சென்னைப் பல்கலைக் கழகம் தந்தை பெரியார் சிந்தனைகள் தலைவர் அவர்களே!அறிஞர் பெருமக்களே!மாணக்கச் செல்வங்களே! முனைவர் சி. அ.பெருமாள் அறக்கட்டளைச் சொற்பொழிவுத் திட்டத்தில் உங்கள் முன் நிற்கின்றேன். முனைவர் இரா. தாண்டவனிடமிருந்து அழைப்பு வந்ததும் எதைப்பற்றிப் பேச வேண்டும் என்பதுபற்றிச் சிந்தித்தேன். முடிவாக ‘தந்தை பெரியார் சிந்தனைகள்’ என்பதுபற்றிப் பேசலாம் என உறுதி கொண்டேன். என்…

சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 2/3 முனைவர் இரா.வேல்முருகன்

(சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் –  ஓர் ஆய்வு 1/3 இன் தொடர்ச்சி) சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் –  ஓர் ஆய்வு 2/3 [அண்மையில் மறைந்த பேராசிரியர் முனைவர் இரா.வேல்முருகன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது.  திருநெல்வேலி மதுரை  திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி, வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், இலக்குவனார் இலக்கிய இணையம்  இணைந்து திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில்  மாசி 12,13,14 தி.பி 2045 (பிப் 24,25,26.2014) ஆகிய  நாள்களில் நடத்திய இலக்குவனார் முப்பெருவிழாவில், முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப்  பணிகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் அளிக்கப் பெற்ற…

தமிழர் வாழ்வுக்கு ஊன்றுகோல் பாரதிதாசன் – கவிஞர் நாகூர் காதர் ஒலி

தமிழர் வாழ்வுக்கு ஊன்றுகோல் பாரதிதாசன் மூவேந்தன் வளர்த்த முதிர்கனித் தமிழை உண்டு நாவேந்தன் தானாகி நாளெல்லாம் பாட்டெழுதி காவேந்தன் மணமாகி கவிதைகள் பலப்பாடி பாவேந்தன் எனப் பேர்பெற்ற பாரதிதாசன்   புதுவையில் உதித்த புதியதோர் விடியல் பூந்தமிழுக்குக் கிடைத்த பொற்குவிப் புதையல் எதுகையில் மோனையில் இசையிடும் தென்றல் ஏழ்மையில் திகந்த தூய்மையின் திங்கள்   சித்திரை மாதத்தில் ஊறும் கனலூற்று செந்தமிழ்ச் சொல்லாய் சீறும் அனல்காற்று முத்திரைப் பதித்த கதிரின் ஒளிக்கீற்று முற்போக்குச் சிந்தையில் வேதியல் வீச்சு   வாத்தியார் பணியில் வாழ்வேணி ஏறியவன்…

தன்னேரிலாத தமிழ் – பாரதிதாசன்

தன்னேரிலாத தமிழ் தன்னேரிலாத தமிழ் அன்னையே-உனை வாழ்த்தினேன் இன்னல் தவிர்த்தாள் என்னையே         தன்னேரிலாத….. முன்னைத் தோன்றிய மக்கள் முதன்முதல் பேசிய மொழியே! மொழியே! மொழியே!, எனவே வாழ்த்தும்,                                   தன்னேரிலாத….. தென்னவன் சேரன் சோழன் செம்மையிலே வளர்த்த திருவே! திருவே, திருவே புகழ் மிகுந்த மன்னும் குமரிமுதல் பனிமலை மட்டும் வாழ்ந்த வாழ்வே! வாழ்வே வாழ்வே எனவே வாழ்த்தும்,                                தன்னேரிலாத….. ஆரியர் எதிர்ப்புக்கும் அசையாமல் வாழும் எங்கள் அன்பே! அன்பே,அன்பே புகழ் மிகுந்த சீர்பெறு முத்தமிழே தெவிட்டாத புத்தமிழ்தே செல்வி! செல்வி, செல்வி…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 91-100 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 81-90 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் (குறள்நெறி) 91. விண்ணகத்தாரின் விருந்தினன் ஆக, வந்த விருந்தினரை அனுப்பிப் புது விருந்தினரை எதிர்பார்! 92. அளவிடற்கரிய பெருமை அடைய, விருந்தோம்பு! 93. விருந்தினரைப் பேணாது ஈட்டிய பொருளை இழந்து வருந்தாதே! 94. விருந்தினரைப் பேணா மடமையால், செல்வமிருந்தும் வறுமை யாளனாகாதே! 95. மாறுபட்டுப் பார்த்து விருந்தினரை வாட விடாதே! 96. வஞ்சனையற்ற இன்சொல் கூறி அறவாணனாக விளங்கு! 97. மனமுவந்து கொடுப்பதைவிட மேலான முகமலர்ச்சியாய் இரு! 98. அனைவரிடமும் இன்சொல் கூறித்…

கவிஞர் மு.முருகேசுக்கு ‘அன்னம் விருது’

இலக்கிய வீதி அமைப்பின் சார்பில் கவிஞர் மு.முருகேசுக்கு ‘அன்னம் விருது’    வழங்கப் பெற்றது.        இலக்கிய வீதி, பாரதிய வித்தியா பவன், கிருட்டிணா இனிப்பகம் இணைந்துநடத்தும் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வில், தமிழில் கவிதைத் தளத்தில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுவரும்  கவிஞர் மு.முருகேசுக்கு  ‘அன்னம் விருது’ சென்னையில்நடைபெற்ற விழாவில் வழங்கப்பெற்றது. 42-க்கும் மேற்பட்ட கதை, கவிதை,  கட்டுரை, சிறுவர் இலக்கியம், திறனாய்வு நூல்களை எழுதியுள்ள இவர், தனது நூல்களுக்காக 25-க்கும் மேற்பட்ட பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். இவரை மேலும் சிறப்பிக்கும் வகையில்…

இலங்கைத் தமிழ் நிலப் பகுதிகளில் வெடிகுண்டுகள் மூலம் படுகொலைகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

இலங்கைத் தமிழ் நிலப் பகுதிகளில் வெடிகுண்டுகள் மூலம் படுகொலைகள்! உயிர்ப்பு நாளன்று (21.04.2019) காலை 8.30 மணி முதல் 9.15மணிக்குள்ளாக, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்க் கொழும்பு தேவாலயம், சாங்குரிலா நட்சத்திர விடுதி, கிங்சுபரி நட்சத்திர விடுதி, சின்னமான் பெரு நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு தேவாலயம் ஆகிய ஆறு இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. தொடர்ந்து  நண்பகல் இரண்டு மணியளவில், தெஃகிவலாவிலும், கொழும்பு  தெமடகொட பகுதியிலும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. 3 நாளுக்குப் பின்னர் இலங்கை கம்பஃகாவில் நீதிமன்றம் அருகே மீண்டும்…

வெருளி அறிவியல் – 1 : இலக்குவனார் திருவள்ளுவன்

வெருளி அறிவியல்  –  1 (Science of fear or Phobia) (அச்ச நோய் வகைகள் எனப்படும் வெருளி வகைகள்) (http://thiru-science.blogspot.com/2012/08/blog-post.html விரிவு)  முன்னுரை  ஒன்றைப் பற்றிய அச்சத்தினால் ஏற்படும் அச்ச நோய் பல வகைப்படும். ஒன்றின் மீதான கடும் அச்சம், அல்லது விருப்பமின்மை, அல்லது வெறுப்பு, ‘போபியா(phobia)’ எனப்படுகிறது. ஒருவர் மீது, அல்லது ஒரு சூழல் பற்றி, அல்லது ஓர் அமைப்பு மீது, அல்லது அமைப்பினர், நாட்டினர், அவர்கள் தொடர்பானவை என்பனவற்றின் மீது, அல்லது இவை போன்றவற்றின்மீது, எவ்வகைப் பேரிடருக்கும் வாய்ப்பு இல்லாத…

தமிழ்வழிக் கல்வி இயக்கம் நடத்தும் பாவேந்தர் விழா – பாவரங்கம், கருத்தரங்கம்

வைகாசி 14, 2050 சனி 27.04.2019 மாலை 04.30. முத்தமிழ் மன்றம், கோயில் பதாகை, ஆவடி, சென்னை-62  தலைமை:  த.மணிசேரன் பங்கேற்பு: தொடக்கவுரை: அ.சி.சின்னப்பத்தமிழர்  முழக்கம் எழுப்பல்  – தமிழ்நேயன் சிறப்புரைகள்: பாவேந்தரும் தமிழும் – மறை தி.தாயுமானவன் வ.சுப.மாணிக்கனார் – செந்தமிழ்வாணன் பெரியாரும் திருக்குறளும் – வாலாசா  வல்லவன் பரிமேலழகர் முதல் நாகசாமி வரை  – இலக்குவனார் திருவள்ளுவன் கருத்துரை – அன்பு, சோம.பொன்னுச்சாமி, க.ச.கலையரசன், சேகர், ச.அழகுஒளி 

1 2 5