‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?’: நூல் அறிமுக விழா, மதுரை

சித்திரை 12, 2050, வியாழன்,  25.04.2019, மாலை 6.00 மணி  விக்டோரியா எட்வர்டு மன்றம் (தொடரி நிலையம் அருகில்), மதுரை ‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?’ நூல் அறிமுக விழா தலைமை: முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (அமைப்பு செயலாளர்) வரவேற்பு: சுப.முருகானந்தம் (மாவட்ட துணைச் செயலாளர்) முன்னிலை: தே.எடிசன்ராசா (தென்மாவட்டப் பரப்புரைக் குழுத் தலைவர்) சே.முனியசாமி (மாவட்டத் தலைவர்) அ.முருகானந்தம் (மாவட்டச் செயலாளர்) தொடக்க உரை: முனைவர் நம்.சீனிவாசன் (தமிழ்த்துறை தலைவர், மன்னர் கல்லூரி) நூல் அறிமுகம்:…

குவிகம் இல்லம்: அளவளாவல்: சி.ஆர்.ஈசுவரன்

சித்திரை 08, 2050 ஞாயிறு 21.04.2019 மாலை 5.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இல்லம்: அளவளாவல்:சி.ஆர்.ஈசுவரன்,தொலைக்காட்சி/குறும்பட / நாடக ஆசிரியர் தொடர்பிற்கு: சுந்தரராசன் 94425 25191

10 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல், பிரித்தானியா

10 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல், பிரித்தானியா  வைகாசி 04, 2050 சனி மே 18, 2019  ஆண்டுகள் பல கடந்தும் நீதிக்காகவும், விடுதலை வேட்கையோடு எம் மண்ணின்  விடுதலைக்காகவும் இறுதிப்போரில் வதைக்கப்பட்ட, கொல்லப்பட்ட எம் உறவுகளுக்காகவும் இலண்டன் மாநகரில் அணி திரள்வோம் வாரீர்! நிகழ்வு தொடர்பான மேலதிகத் தகவல்கள் பின்னர்அறியத்தரப்படும் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம். தொடர்புகளுக்கு: சங்கீத்து பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF) 02088080465, 07814486087, 07734397383, 07943100035, 07508365678, 07974726095, 07769770710, 07888 709739 https://www.facebook.com/303646176403023/posts/

கவிஞர் வித்யாசாகருக்கு ‘அறிஞர்அம்பேத்கர் சுடர் விருது’

கவிஞர்  வித்யாசாகருக்கு  ‘அறிஞர்அம்பேத்கர் சுடர் விருது’  ‘குவைத்து, தாய்மண் கலை இலக்கியப் பேரவை’  கடந்தவாரம் ஞாயிற்றுக் கிழமை  மாலை மிகச் சிறப்பாக அறிஞர் அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்தது. அறிஞர்கள் பலரும், அனைத்துக் குவைத்து தமிழ் மன்றங்களின் தலைவர்களும் நிருவாகிகளும், பொறியாளர்கள் பலருமென ஒருங்கிணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்களோடு தொண்டர்களாகச் சேர்ந்து பிற கட்சிகள் எனும் பாகுபாடின்றி அனைத்துக் கட்சியினரும் ஒன்றுகூடி ஒத்துமையாய் “குவைத்து, தாய்மண் கலை இலக்கியப் பேரவையின்” பேரன்பில் இணைந்து சிறப்பாக இவ்விழாவை ” குவைத்தின் மிர்காப்பு நகரில் கொண்டாடியது. தாய்த்தமிழகத்தில் வருடந்தோறும் கலைப் பணி மற்றும் சமூகப் பணியாற்றும் சிறந்த ஒரு மனிதநேயரைத் தேர்ந்தெடுத்து ‘விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் தனது திருக்கரங்களால் வருடந்தோறும் …

சிலம்பொலி செல்லப்பனார்க்குப் பாவலர்களின் புகழ்வணக்கம்

சிலம்பொலி செல்லப்பனார்க்குப் பாவலர்களின் புகழ்வணக்கம் இலக்கிய அமைப்புகளின் சார்பில் சித்திரை முதல் நாள், 14/4/19 அன்று மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் சிறப்பாக நடந்தது. அன்று ஞாயிறு என்பதாலும் சித்திரை முதல் நாள் என்பதனாலும் நிலவிய நிகழ்ச்சி நெருக்கடிகளைப் புறந்தள்ளி நல்ல கூட்டம் கூடியது. வேறொரு நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டிய கவிஞர் மு.மேத்தா இந் நிகழ்வைக் கேள்விப்பட்டு சிலம்பொலியார்க்குப் புகழவணக்கம் செலுத்த வந்தது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் மின்னூர் சீனிவாசன், வேணு குணசேகரன், ஏர்வாடி இராதாகிருட்டிணன், அமுதா பாலகிருட்டிணன், இரவி தமிழ்வாணன்,பெரு.மதியழகன், தமிழமுதன், தமிழ்முதல்வன், முனைவர்…

பிரித்தானியாவில் பூபதித் தாயின் 31ஆம் ஆண்டு நினைவு நாள்

  பிரித்தானியாவில் பூபதித் தாயின் 31ஆம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும் சித்திரை 7, 2050 சனி 20.04.2019 மாலை 6.00 இலண்டன் சித்திரை 8, 2050 ஞாயிறு 21.04.2019 மாலை 5.00 இலெசிசுடர் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, பிரித்தானியா

கருத்தில் வாழும் கவிஞர் கந்தர்வன்

சித்திரை 13, 2050 வெள்ளி 26.04.2019 மாலை 6.30 பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம் கீழ மாடவீதி, மயிலாப்பூர்,சென்னை 600 004.   கருத்தில் வாழும் கவிஞர்கள் நிகழ்வு 16 அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் மு.முருகேசு முன்னிலை:  இலக்கிய வீதி இனியவன் தலைமை: வழக்குரைஞர் சிகரம் ச.செந்தில்நாதன் சிறப்புரை: கவிஞர் தங்கம் மூர்த்தி பாரதிய வித்தியாபவன், மயிலாப்பூர்  இலக்கியவீதி  அமைப்பு  திரு கிருட்டிணா இனிப்பகம்  

கி.பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு 2019 முடிவுகள்

காக்கைச் சிறகினிலே இலக்கிய மாத இதழ்க் குழுமத்தினால் முன்னெடுக்கப்பட்ட நான்காவது ஆண்டு கி.பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு 2019 (வள்ளுவராண்டு 2050)  முடிவுகள் முதலாவது பரிசு :  ‘பொறி’  : த. இராசராசேசுவரி (குப்பிழான் -இலங்கை) – 10000 உரூ.  சான்றிதழ்.  இரண்டாவது பரிசு :  ‘மறந்திட்டமா” : வி. நிசாந்தன் (இலங்கை) – 7500 உரூ.  சான்றிதழ்.  மூன்றாவது பரிசு : ‘புலம்பெயர் பறவைகள்’ : கேசாயினி எட்மண்டு  (மட்டக்களப்பு – இலங்கை) – 5000 உரூ.  சான்றிதழ்.    நடுவர் பரிசு…

காணாமல் போவர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

காணாமல் போவர்!     நேற்றுவரை வந்தவர்கள் நாளை காணாமல் போவர்   விரல் மை காயும் முன்னர் மாயமாய் மறைவர்   மறந்து போய் நன்றி சொல்ல வரலாம் சிலர்   தவறாமல் பலர் தொகுதிப் பக்கம் காணாமல் போவர்   நம் நாட்டுத் தேர்தலின் சிறப்பு இதுதான்   இருந்தாலும் நாம் தவறாமல் வாக்களிப்போம்!   இலக்குவனார் திருவள்ளுவன்

வியர்வையே! – இலக்குவனார் திருவள்ளுவன்

வியர்வையே! வியர்வையே வியர்வையே உனக்கிது முறையோ அயர்விலா துழைப்போன்உடலில்  பிறப்பாய் உள்ளத்தில் சிறிதும் நன்றியை எண்ணாய் கள்ளமாய் ஏய்ப்போன் பேழையைச் சேர்வாய் காலமும் மாறும் கோலமும் மாறும் ஞாலமும் நம்மை வளமாய்க் காணும் நாளும் உழைப்போம் மேலும் உயர்வோம் வாழும் உலகில் வளத்தைக் காண்போம் என்பன நினைக்கும் ஏழையை ஏய்ப்பாய் உண்பதைப் பறிப்பாய் உடுப்பதைக் களைவாய் வியர்வை என்னும விலையை வினவும் அயர்வை அறியா முதலையை வளர்ப்பாய் கொழுக்கக் கொழுக்கச் செழித்திடச் செய்வாய் கருவைத்  தந்தோன் கருகிச் சாகிட உருவைக்காணான் பெருகி உயர்ந்திட உதவும்…

வாக்களிக்கும் கடமை யாற்றுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

வாக்களிக்கும் கடமை யாற்றுங்கள்! சித்திரை 05, 2050 வியாழன் 18.04.2019 வாக்குப்பதிவு நாளன்று நாம் அனைவரும் தவறாமல் ஆற்ற வேண்டிய கடமை மறவாமல் வாக்களிப்பதே! வேறு என்ன பணிகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு நாம் வாக்களிக்க வேண்டும். நாம் வாக்களித்து நாட்டின் போக்கு மாறப்போகிறதா? என அலட்சியமாக இல்லாமல் ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றது என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும்.  வன்னியர் வாக்கு அன்னியர்க் கில்லை  அன்னியர் வாக்கு வன்னியர்க் கில்லை நாடார் வாக்கு போடார் பிறர்க்கு செட்டியார் வாக்கு கிட்டிடா பிறர்க்கு  தேவர்…

இராகுல் வெற்றி பெறட்டும்! தமிழ்நாட்டில் காங்.தோற்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

இராகுல் வெற்றி பெறட்டும்!  தமிழ்நாட்டில் காங்.தோற்கட்டும்! கட்சி முறையில் இன்றித் தனிப்பட்ட முறையில் பார்த்தால் இராகுலிடம் தற்சார்புச் சிந்தனையும் மனத்தில் சரி என்று பட்டதை ஆற்றும் துணிவும் உள்ளமை புரிகிறது. கலைஞர் கருணாநிதியிடம் ஒத்துப்போகாத அவர், தாலினுடன் இணைந்து செயலாற்றுவதும் அவரது தற்சார்பின் விளைவே ஆகும். பேராயக்(காங்.)கட்சியும் அடிப்படையில்   பா.ச.க.போன்றதே. எனவேதான் இராகுல் தன்னை வெளிப்படையாகச் சாதியைக் குறிப்பிட்டும் மதத்தைக் குறிப்பிட்டும் அடையாளம் காட்டிக் கொள்கிறார். பசுக்கள் காப்பகம் குறித்த அவர் கருத்தும் அத்தகையதே. கல்வி மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டும் என்கிறவர் உயர்…