சிலம்பொலி சு.செல்லப்பனார் புகழ் போற்றி

சித்திரை 01, 2050 ஞாயிறு  14.04.2019 மாலை 5.00 கவிக்கோ மன்றம் எண் 6, இரண்டாவது முதன்மைச் சாலை  ந.மே.அ. குடியிருப்பு(சி.ஐ.டி. காலனி) மயிலாப்பூர், சென்னை 600004 யாவரும்கவிவழங்கலாம்! புகழ்மலர்சூட்டலாம்! ஒருங்கிணைப்பாளர்கள்:  முனைவர் மறைமலை இலக்குவனார் –  94454 07120 சிலம்பு நம்பி இளவரச அமிழ்தன் – 98410 64941

தமிழர் தேசிய முன்னணியின் தமிழ்வழிக் கல்வி வற்புறுத்தல் கூட்டம், பம்மல்

பங்குனி 24, 2050 ஞாயிறு 07.04.2019 மாலை 4.00 – இரவு 8.00 அன்சாரி மாளிகை, பம்மல் முதன்மைச்சாலை, பம்மல் சென்னை 75 தமிழ்வழியில் படித்தவனுக்கு வேலை கொடு! தமிழ்வழியில் கல்வி கொடு! தமிழர் தேசிய முன்னணியின் 6ஆவது மாநாடு கா.பா.பன்னீர்செல்வம், தலைவர் முனைவர் இளமாறன் –  தணிகை மைந்தன் – புலவர் இளஞ்செழியன் – அறிஞர் அரு.கோ – சிவ.செந்தமிழ்வாணன் – பட்டுக்கோட்டை  சி.இராமசாமி – சுந்ரமூர்த்தி – தஞ்சை பனசை அரங்கன் – மறை தி.தாயுமானவன் – இலக்குவனார் திருவள்ளுவன் – அ.பத்மநாபன் – புலவர் வெற்றிச்செழியன் – கரு .அண்ணாமலை – திருத்தணிப்புலவர் குறளன்பன் – ஆவடி நாகராசன் –…

சங்கத்தமிழ் என்று பெயர் சூட்டலாம்! தமிழ்நாட்டில் ஓடும் வண்டிக்கு எதற்குச் சமக்கிருதப்பெயர்? தமிழ் அறிஞர் எதிர்ப்பு

சங்கத்தமிழ் என்று பெயர் சூட்டலாம்! தமிழ்நாட்டில் ஓடும் வண்டிக்கு எதற்குச் சமக்கிருதப்பெயர்? தமிழ் அறிஞர் எதிர்ப்பு   சென்னை, ஏப்,6- தமிழ்நாட்டில் ஓடும் தொடரிக்கு(இரயிலுக்கு)ச்சமக்கிருதப் பெயர் வைப்பது ஏன் என்று இலக்குவனார் திருவள்ளுவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:-   அண்மையில், சென்னைக்கும் மதுரைக்கும் இடையில் மிகுவிரைவுத் தொடரியை இயக்கியுள்ளனர். தமிழ்நாட்டில் ஓடும் இந்த வண்டியின் பெயரில் தமிழ் இல்லை. அதன் பெயர் ‘சென்னை -மதுரை தேசசு சிறப்பு இரயில்’ என்பதாகும்.  பொதுவாகத் தமிழார்வம் மிக்கத் தொடர் வண்டித்துறை அதிகாரிகள் பொறுப்பில்…

சிலம்பு ஒலிப்பு நின்றது! சிலம்பொலி செல்லப்பன் இயற்கை எய்தினார்!

மூத்த தமிழறிஞர், சிலம்பொலி செல்லப்பன், இவர் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் மருததுவம் பெற்று வந்தார். இன்று (பங்குனி 23, 2050 சனி ஏப்பிரல் 06.2019) காலை 6.30 மணிக்குச் சென்னையில் காலமானார். இவரது உடல்  பதப்படுத்தப்பட்டு நண்பகல் கொணரப்படும். நாளை காலை வரை இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பெறும்.நாளை மறுநாள் நாமக்கல் சிவியாம்பாளையத்தில் இறுதி நிகழ்வு நடைபெறும். சிலப்பதிகாரம் என்றதும் நினைவிற்கு வரும் சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் போன்ற மற்றோர் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன். 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிலப்பதிகாரத்தைப் பாரெங்கும் பரப்பிய இலக்கியச் சொற்பொழிவாளர்….

திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் 1/2 – பேரா. வெ.அரங்கராசன்

திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் 1/2 முன்னுரை திருக்குறள் சான்றோர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் உயர் நோக்கில் பேராசிரியர் முனைவர் கு.மோகன்ராசு அவர்கள் அறிஞர்களைக் கொண்டு உரையாற்றச் செய்து அவற்றை நூல் தொகுதிகளாக வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் இன்று நான் திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கின்றேன். திருவள்ளுவர் வழித்தோன்றல்கள் திருவள்ளுவர் பெயரைத் தாங்கித் திருக்குறள் வழியில் வாழும் திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன். இவருடைய பெற்றோர் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்-இ.மலர்க்கொடி இணையர் இவருக்குப் பிறக்கும் பொழுது சூட்டிய பெயரே…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 61-70: இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 51-60 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் (குறள்நெறி)   காதற் துணையை அடைந்து கடவுட் பெருமையை அடை! புகழ்மிகு துணையால் பெருமித நடை கொள்! இல்லறப் பெருமையே பொலிவு! நன்மக்களே அழகு! என உணர்! நன்மக்கட்பேறே சிறந்த பேறு என அறி! எப்பருவத்திலும் துன்பங்கள் நெருங்காவண்ணம் பழியிலா மக்கள் பெறு! நம் மக்கள் நம் செல்வம். அவர் முயற்சியால் அவர் செல்வம் வரும் என அறி! நம் மக்கள் சிறு கையால் தரும் உணவை அமிழ்தினும் இனிதாய்ச் சுவை! மக்களைத்…

செம்மொழி விருதுக் குழுவை நீக்கக் கண்டன ஆர்ப்பாட்டம், சென்னை

சமற்கிருத ஆதிக்கவாதிகளான என். கோபாலசாமியும், இரா. நாகசாமியும் தமிழ்ச் செம்மொழி விருதுக்குழுப் பொறுப்பாளர்களா? செம்மொழி ஆய்வு மையம் தமிழை வளர்க்கவா? தகர்க்கவா? புல்லுருவிகளைப் பொறுப்பிலிருந்து நீக்கு! சென்னையில் நாளை பங்குனி 20, 2050 /03.04.2019) காலை 10.00மணிக்குக் கண்டன ஆர்ப்பாட்டம்! செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் அளிக்கப்படும் தமிழ்ச் செம்மொழி விருதுகளுக்கான தேர்வுக் குழுவில், தமிழ் மொழிக்கு எதிரான புல்லுருவிகளை இந்திய அரசு அமர்த்தியுள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரும், திருப்பதியிலுள்ள இராட்ரீய சமற்கிருத வித்தியா பீடப் பல்கலைக்…

கல்வி உ ரிமையைப் பொதுப்பட்டியலில் இருந்து மீட்க முழக்க நிகழ்வு – ஒளிப்படங்கள்

செ ன்னை வள்ளுவர் கோட்டம் அருகே, பங்குனி 9, சனிக்கிழமை, 23.03.2019 அன்று முற்பகல் தமிழ்க்கல்வி உரிமைகளுக்காக முழக்க நிகழ்வு நடைபெற்றது.  தோழர் அ.சி.சின்னப்பத் தமிழர் தலைமையுரை ஆற்றினார். திரு இலக்குவனார் திருவள்ளுவன் நிறைவுரை ஆற்றினார்.  தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்வேறு அமைப்பினர் உரைகளும் முழக்கங்களும் இடம் பெற்றன. முதல் படத்தைச் சொடுக்கியபின் வரிசையாகப் பிற படங்களைக் காண்க.

இலக்குவனார் இலக்கியப் பேரவை ஈறாண்டு விழாவும் விருது வழங்கு விழாவும்- ஒளிப்படங்கள்

முதல் படத்தைச் சொடுக்கிப் பின் வரிசையாகக் காண்க. இலக்குவனார் இலக்கியப் பேரவையின் ஈறாண்டு விழாவும் விருது வழங்கு விழாவும் பங்குனி 03, 2050 ஞாயிறு மார்ச்சு 17, 2019 மாலை 5.30 மணிக்கு அம்பத்தூர் திருமால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.பேரவைப்பாடகர் குழுவின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. ஒருங்கிணைப்பாளர் கவிஞர் செம்பை சேவியர் தலைமை தாங்கினார். செயலர் வரவேற்புரை யாற்றி இணைப்புரைகள் வழங்கினார். ஈராண்டில் இலக்குவனார் இலக்கியப் பேரவைகவிஞர் செம்பை சேவியரின் பழம்பாடலும் பா உரையும்சே.மில்டனின் மாத்தி யோசி கவிதை நூல் ஆகியவற்றை எளியோர்…