நரேந்திர(மோடி)க்குப் பாராட்டுகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

நரேந்திர(மோடி)க்குப் பாராட்டுகள்! எண்ணிய இலக்கை அடைந்து வெற்றி காண வாழ்த்த வேண்டும். இலக்கை அடைந்து விட்டார் என்றால்  – வெற்றி கண்டுவிட்டார் என்றால்  – பாராட்ட வேண்டும். அந்த வகையில் இரண்டாம் முறையாகத் தலைமை யமைச்சர் பொறுப்பேற்கும் வகையில் வெற்றி கண்டுள்ள நரேந்திர(மோடி)க்குப் பாராட்டுகள்! இலக்கு மட்டுமல்ல, இலக்கை அடையும் வழியும் நேர்மையானதாக – அறவழிப்பட்டதாக – இருக்க வேண்டும் என்பது தமிழர் நெறி. “எந்த வழியில் சென்றேனும் இலக்கை அடை” என்பது ஆரிய நெறி. இன்றைய தேர்தல் நெறி என்பது இரண்டாம் வகையைச்…

விடுதலை இதழின் 85 ஆம் ஆண்டு விழா, வாசகர் மாநாடு, விருது விழா, சென்னை

வைகாசி 18, 2050 சனி  01.06.2019 மாலை 4.00 பட்டிமன்றம் தொடக்கவுரை:  வழ.அ.அருள்மொழி நடுவர் : பேரா.சுப.வீரபாண்டியன் வாசகர் சந்திப்பு கலந்துரையாடல்: திராவிட இயக்க இதழியல் க.திருநாவுக்கரசு கோவி.இலெனின் அ.குமரசேன் ஆளூர் சா நவாசு இரா.விசயசங்கர் விருது பெறுநர்: பொத்தனூர் க.சண்முகம் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் முகம் மாமணி  பாராட்டுரை :  மானமிகு கி.வீரமணி வாழ்த்துரை : தா.பாண்டியன் அ.இராமசாமி அ.மா.சாமி 

வெருளி அறிவியல் – 9 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி அறிவியல் 8 இன் தொடர்ச்சி) வெருளி அறிவியல்  –  9 27. அறிவுவெருளி-Epistemophobia/Gnosiophobia அறிவு தொடர்பில் எழும் தேவையற்ற மிகையான பேரச்சமே அறிவுவெருளி. சிலருக்குப் புதியதாக எதைக் கற்க / அறிய வேண்டுமென்றாலும் பேரச்சம் வரும். சிலருக்குக் குறிப்பிட்ட ஒன்றைக் கற்க அல்லது அறிய மட்டும் பேரச்சம் வரும். பள்ளிக்கூடம் செல்ல பிள்ளைகள் அடம்பிடித்து மறுப்பதும் அறிவு வெருளிதான். பலர் படிப்படியாக இதிலிருந்து விடுபட்டு விடுகின்றனர். சிலர் இதிலிருந்து விடுபடாமல் முழுமையான அறிவு வெருளிக்கு ஆட்பட்டுவிடுகின்றனர். gnos  / epistemo ஆகிய கிரேக்கச்சொற்களின்…

வெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக! – இலக்குவனார் திருவள்ளுவன்

வெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக! உலகெங்கும் உள்ள சட்டத்தின் ஆட்சியில் தண்டனை பெற்றவர்களைத் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே விடுதலை செய்வதும் ஒரு பகுதியாகும். அண்மையில் இலங்கையில் ‘புத்தபூர்ணிமா’ எனப்படும் வைகாசி விசாகச் சிறப்பு நாளில் 762 தண்டனைவாசிகளை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது ஓர் எடுத்துக்காட்டாகும். இதை எல்லாம் அறியாமல் அடிக்கடிச் சிலர் “கொலையாளிகளை விடுதலை செய்யலாமா” என்கின்றனர். எழுவர் விடுதலைக்கு நீதிமன்றம் குறுக்கே நிற்கவில்லை.   ஏனெனில் தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்வதில் அது தலையிடாது.  அவ்வாறிருக்க ஆளுநர் தமிழக அரசின் முடிவுகளுக்கு எதிராகவும் நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு…

இலக்கியச் சிந்தனை நிகழ்வு 586 / குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 50

வைகாசி 11, 2050  சனி   25.05.2019  மாலை  06.00 மணி  சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச்     சிந்தனை 586 சொல்லின் செல்வர் இரா.பி.சேது(ப்பிள்ளை) – புதுவை இராமசாமி குவிகம் இலக்கிய வாசல் 50 ஆவது நிகழ்விற்கான முன்னோட்டம்  

‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு – முடியரசன்

வைகாசி 10, 2050 வெள்ளிக்கிழமை 24.05.2019    மாலை  06.30 மணி பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர்   நிகழ்வு முன்னிலை : இலக்கியவீதி இனியவன்  அவர்கள் தலைமை : தமிழாகரர் தெ. முருகசாமி அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர்  சென்னிமலை தண்டபாணி சிறப்புரை  :  ‘கவிஞர் முடியரசன்’ –  வழக்கறிஞர் அருள்மொழி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  கவிஞர் மலர்மகன் தகுதியுரை: செல்வி ப. யாழினி  இலக்கியவீதி, பாரதிய வித்தியா பவன், கிருட்டிணா இனிப்பகம்…

திருக்குறளுக்கு உரை திருக்குறளே! 2/9 – பி.என்.(இ)டயசு

[திருக்குறளுக்கு உரை திருக்குறளே! 1/9 தொடர்ச்சி] திருக்குறளுக்கு உரை திருக்குறளே! 2/9 ஆனால், ‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்          பெய்யெனப் பெய்யும் மழை                                           (குறள்.55) என்னும் குறட்பாவிற்கு திருக்குறள் மக்கள் உரையில் (ஏறத்தாழ பதினாறு) பதிப்புகளில் பாவேந்தரை அடியொற்றி, “மனைவி பயன்மழை போன்றவள்” என்று உரை எழுதியவர், அண்மையில் வரும் பதிப்புகளில், “பத்தினி சொன்னால் மழை பெய்யும்” என்று அறிவியலுக்குப் புறம்பான உரை எழுதித் திருவள்ளுவரைத்  திடுக்கிட  வைப்பார். தீர்வுக்குத் தெய்வப் புலவரை நாடுகிறோம். குறளாசான் எழுத்தாணியால் காமத்துப் பாலில் 1192 -ஆம்…

தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம்

வைகாசி 19, 2050 ஞாயிறு 02.06.2019 மாலை 4.00 இடம் : திருக்குறள் பேரவை 22அ, ஆறாம் முதன்மைச்சாலை, நங்கை நல்லூர், சென்னை 61 கவியரங்கத் தலைமை : திரு சொ.பத்மநாபன் கருத்தரங்கத் தலைமை : திருக்குறள் பா.தாமோதரன் அன்புடன் த.மகாராசன் அமைப்பாளர், 24, கலைமகள் தெரு புழுதிவாக்கம்,சென்னை 600 091 பேசி 044 – 2242 1983 ;  98412 91492

கவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்கு ‘கவிதை உறவு’ வழங்கும் சிறந்த நூலுக்கான முதல் பரிசு

 கவிஞர் மு.முருகேசு எழுதிய ’தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்’ எனும் சிறுவர் கதை நூலுக்கு, ’கவிதை உறவு’ இதழின் சார்பில் சிறந்த சிறுவர் கதை நூலுக்கான முதல் பரிசு வழங்கப்பட்டது. சென்னையிலிருந்து கடந்த 47 ஆண்டுகளாக வெளிவரும் ’கவிதை உறவு’ இதழின் சார்பில் சிறந்த நூல்களுக்குப் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆண்டுதோறும் பரிசுகளை வழங்கி வருகின்றனர்.   2018- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான விருது வழங்கும் விழா சென்னை அண்ணா சாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் கடந்த சனிக்கிழமை மாலை…

‘கவிதை உறவு’ இதழின் 47ஆம் ஆண்டு விழா

கவிதை உறவின் 47ஆம் ஆண்டு விழா சென்னை தேவ நேயப் பாவாணர் நூலக அரங்கில் மிகச்சிறப்பாக நடந்தது. தேசிய மணி இல கணேசன் தலைமையில் ஏர்வாடி இராதாகிருட்டிணனின் இரு நூல்களை சென்னை காவல் துறை இணை ஆணையர் கவிஞர் முனைவர் வடுகம் சிவகுமார், கரூர் வைசிய வங்கி மண்டலத் தலைவர் திரு அன்புராசு ஆகியோர் வெளியிட்டனர். விழா மலரை நீதியரசர் முனைவர் பி சோதிமணி வெளியிட ஆலிம் முகமது சாலிகு அறக்கட்டளைச் செயலர் திரு செகு சமாலுதீன் பெற்றுக்கொண்டார்.பேராசிரியர் முனைவர் இரா மோகன், அமுதசுரபி…

பாசகவின் தேர்தல் கணிப்புச் சாயம் வெளுத்து விட்டது! – இலக்குவனார் திருவள்ளுவன்

பாசகவின் தேர்தல் கணிப்புச் சாயம் வெளுத்து விட்டது! நடந்து முடிந்த  நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கிற்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என ஒரு நாடகம் அரங்கேறியுள்ளது. பா.ச.க வாக்கு எண்ணிக்கையின் பொழுது குறுக்கு வழியில் வெற்றி பெற்றால் அதற்குச் சார்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தீட்டப்பட்ட நாடகம் என இதனைப் பொதுமக்களே கூறுகின்றனர். வாக்கிற்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு குறித்து நாம் பின்வருவனவற்றைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். எந்தெந்த வாக்குச்சாவடிகளில் எவ்வப்பொழுது எத்தனை பேரிடம் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது என்ற விவரம் இல்லை. இதுவரை ஒருவர்கூட…

வெருளி அறிவியல் – 8 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி அறிவியல் 7 இன் தொடர்ச்சி) வெருளி அறிவியல்  –  8  23. அழிவு வெருளி-Atephobia அழிவு பற்றிய இயல்பிற்கு மீறிய பேரச்சம்  அழிவு வெருளி அழி(74), அழிக்குநர்(1), அழிக்கும்(6), அழித்த(8), அழித்தரும்(1), அழித்தலின்(2), அழித்தான்(1), அழித்து(15), அழிதக்கன்று(2), அழிதக்காள்(1), அழிதக(6), அழிதகவு(1), அழிதரு(2), அழிந்த(14), அழிந்தன்று(1), அழிந்தனள்(1), அழிந்து(37), அழிந்தோர்(3), அழிப்ப(3), அழிப்படுத்த(1), அழிபவள் (1), அழிபு(4), அழிய(26), அழியர்(1), அழியல்(2), அழியலன்(1), அழியா(3), அழியாதி(1), அழியாது(1), அழியின்(1), அழியுநர்(1), அழியும்(4), அழிவது(3), அழிவல்(1), அழிவு(14), அழீஇ(1) ஆகிய சொற்கள் அழிவு தொடர்பாகச்…