பிள்ளைச் செல்வங்கள் நன்னெறியில் நடை பெற வாய்ப்பு! திருக்குறளைக் கற்பித்துப் பணப் பரிசும் தருகிறார்கள்!

இயங்கு தமிழ் வழங்கும் திருக்குறள் கற்றால் …. மொத்தம் நூறாயிரம் உரூபாய் பரிசு திருக்குறள் வகுப்பில் சேர்ந்து திருக்குறள் பயின்று தேர்ச்சி பெற்றால் முதல் பரிசு உரூ.25,000 பயிற்சிக்காலம் சூன் 08 முதல் திசம்பர் 2019 முடிய வகுப்பு மையங்கள் மயிலாப்பூர், க.க.நகர், புது வண்ணை, மேடவாக்கம் (பள்ளியின் பெயர்கள் தொடர்பு கொள்வோருக்குத் தெரிவிக்கப்படும்) தொடர்பிற்கு: 98405 79871, 98400 03360, 99404 92064

இலக்கு பத்தாம் ஆண்டு நிறைவு

வணக்கம். வைகாசி 08, 2050 புதன்கிழமை  22.05.2019 – மாலை 06.30 மணி பாரதிய வித்தியா பவனில் “சிலம்பைத் தொடுவோம் – சிலம்பொலியைத் தொடர்வோம்” என்கிற நிகழ்வை இலக்கு அமைப்பும்,  கிருட்டிணா இனிப்புகள் நிறுவனமும்  இணைந்து நடத்த இருக்கின்றன. மதிப்புமிகு சிலம்பொலி ஐயாவின் நினைவைப் போற்றவும், இளைய சிலம்பொலிகளை வாழ்த்தி வழி நடத்தவும், தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்   வரவேற்பு  : இளைய சிலம்பொலி  ப. யாழினி தொடக்கம்  : திரு ம.  முரளி முன்னிலை : முனைவர் மணிமேகலை புட்பராசு நாயக…

தமிழைத் துரத்தும் பள்ளிக்கல்வித்துறை – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழைத் துரத்தும் பள்ளிக்கல்வித்துறை மாணாக்கர்களின் தமிழ் அறிவிற்கு வேராகவும் விழுதாகவும் இருக்க வேண்டிய பள்ளிக்கல்வித்துறை, மாணாக்கர்களிடம் இருந்து தமிழை விலக்கிக் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் புதிய திட்டம் என்ற பெயரில் தமிழை அப்புறப்படுத்துவதையே பள்ளிக்கல்வித்துறை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. ‘மொழி வாழ்த்து’ என்ற தலைப்பில் மாணாக்கர்களுக்குத் தமிழ் மொழி வாழ்த்துப் பாடல் இடம் பெறும். இப்பாடலால் தமிழ் உணர்வு பெற்றோர் மிகுதி. இப்பகுதியை நீக்குவதாகக் கூறிய பொழுது எதிர்த்ததற்கு மறுத்தார்கள். ஆனால், இறைவாழ்த்து, மொழி வாழ்த்து, நாட்டு வாழ்த்து என்று இருந்த பகுதிகளைப் பொதுவாக வாழ்த்து…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 111-120 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 101-110 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 111-120 (குறள்நெறி) துன்பத்துள் துணையாவோர் நட்பை இழக்காதே! கண்ணீர் துடைத்தவர் நட்பைக் காலமெல்லாம் போற்றுக!  நன்றி மறக்காதே! நன்றல்லதை அன்றே மற! பிறர் செய்யும் துன்பத்தை (அவர் முன்பு செய்த நன்மையை நினைத்து)  மறந்து போ! எந்நன்றி கொன்றாலும் செய்ந்நன்றி கொல்லாதே! நடுவுநிலைமையை அனைவரிடமும் காட்டு! நடுவுநிலை உணர்வுடன் செல்வம் ஈட்டு! நடுவுநிலையின்றி வருவது ஆக்கமாயினும் அன்றே ஒழி!  விட்டுச் செல்லும் பெயர் மூலம் தக்கவன் எனக் காட்டு! நடுவுநிலை தவறாத நெஞ்சத்தை…

எழுவர் விடுதலையில் திருநாவுக்கரசர்களுக்கு வாய்ப்பூட்டு போடுக! -இலக்குவனார் திருவள்ளுவன், தினசரி

எழுவர் விடுதலையில் திருநாவுக்கரசர்களுக்கு வாய்ப்பூட்டு போடுக! உலகிலேயே மிகவும் கொடுமையானதாகச் சட்டப்படி விடுதலை செய்யப்பட வேண்டிய எழுவரைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதைக் கூறலாம். இதனால், இவர்களும் இவர்களின் குடும்பத்தினரும் துயரங்களில் உள்ளனர். எழுவர் தொடர்பில், சட்டம் பயின்ற மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்த, சட்டப்பேரவைத் துணைத்தலைவராக இருந்த திருநாவுக்கரசர் கொலையில் ஈடுபட்டவர்கள் மீது கருணை காட்டுவது ஏற்புடையதல்ல என்று உளறியிருக்கிறார். நல்லவர்களுக்குக் கருணை காட்ட என்ன தேவை உள்ளது? குற்றம் புரிந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும்தானே கருணை காட்ட வேண்டும். ஆளுநருக்கு இது தொடர்பில் யாரும் அழுத்தம் கொடுக்கக்…

வெருளி அறிவியல் – 7 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி அறிவியல் 6 இன் தொடர்ச்சி) வெருளி அறிவியல்  –  7 18. அயலிந்தியர் வெருளி-Mikatikoindicaphobia  அயல்நாட்டில் வாழும் இந்தியர்கள் (NRI) தொடர்பில் ஏற்படும் தேவையற்ற அச்சம் அயலுறை இந்தியர்கள் வெருளி. சுருக்கமாக அயலிந்தியர் வெருளி எனலாம். வெளிநாட்டிலிருந்து செல்வம் திரட்டி வந்து, இங்கே நம் தொழிலைச் சிதைப்பார்கள், செல்வத்தைத் தேய்ப்பாரகள், செல்வாக்கை ஒடுக்குவார்கள், வளர்ச்சியை அழிப்பார்கள் என்றெலலாம் தேவையற்ற கவலையும் அளவு கடந்த வெறுப்பும் கொள்வர். Indica என்பது இலத்தீனிலும் கிரேக்கத்திலும் இந்தியாவைக் குறிப்பிடும் சொல். 00 19. அரசியலர் வெருளி-Politicophobia/ civiliphobia…

உலக வரலாற்றில் நீங்காக் கறை படிந்த வாரம் – இனப்படுகொலைகளில் இறந்தவர்களுக்கான நினைவேந்தல்! – இலக்குவனார் திருவள்ளுவன்

உலக வரலாற்றில் நீங்காக் கறை படிந்த வாரம்! இனப்படுகொலைகளில் இறந்தவர்களுக்கான  நினைவேந்தல்! மே 18 ஆம் நாளும் இவ்வாரமும் மனித நேயர்களால் மறக்க முடியாத துயர நாள்! தாய் மண்ணில் உரிமையுடன் வாழ எண்ணியவர்களுக்கு ஆளும் கொடுங்கோல் அரசும் அதற்குத் துணை நின்ற பன்னாட்டுக் கொடுங்கோன்மை ஆட்சியாளர்களும் கொடுமையான முறையில் மரணத்தைப் பரிசாகத் தந்த வாரம்! 1,70,000 ஈழத் தமிழர்கள் உயிரிழப்பு, பல்லாயிரவர்கள் உடலுறுப்பு இழப்பு, உடைமைகள் இழப்பு, இருக்க இடமோ உண்ண உணவோ இன்றித் துன்பக்கடலில் மூழ்கடிப்பு! இக்கொடுமைகள் அந்த வாரத்துடன் நிற்கவில்லை. தொடர்ந்து…

‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல் திறனாய்வு – பேரா.சுப.வீ.

அன்புடையீர்,                                                                      வணக்கம்.  எங்கள் பேரவையின் சார்பில், வரும்  வைகாசி 05, 2050 ஞாயிற்றுக் கிழமை (19.05.2019) மாலை 6.30 மணிக்குச், சென்னை, இராயப்பேட்டை, இலாயிட்சு சாலை,  இந்திய அலுவலர் சங்கம் (Indian Officers’Association)கலையரங்கில், பேரறிஞர் அண்ணா பற்றிய ‘மாபெரும் தமிழ்க்  கனவு’  என்னும் நூல்  திறனாய்வு அரங்கம்  நடைபெற உள்ளது. திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் தலைமையில், பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன்  நூலைத் திறனாய்வு செய்கின்றார். அன்புடன்,  துரை.செ.கண்ணன் ஊடகத்துறைப் பொறுப்பாளர் திராவிட இயக்கத் தமிழர் பேரவை  

மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு, புது தில்லி

புரட்டாசி 06-07, 2050 ***  23-24.09.2019 பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர்கள்: இயக்குநர், ஆசியவியல் நிறுவனம்   [ Dr.G.John Samuel,Founder Director and SecretaryINSTITUTE OF ASIAN STUDIES] சோழிங்கநல்லூர் (அஞ்சல்), செம்மஞ்சேரி, சென்னை – 600 119 மின்னஞ்சல்:    info@instituteofasianstudies.com தொலைபேசி:   24500831, 24501851 , பேசி:           9840526834 இணையத்தளம்:  www.instituteofasianstudies.com    பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் தலைவர், பன்னாட்டுத் திருக்குறள் நிறுவம், மொரிசியசு   முனைவர் மு.இராசாராம் இ.ஆ.ப. தலைவர், பன்னாட்டு அமைதிக்கான திருக்குறள் நிறுவம் சென்னை

அளவளாவல் : உமா இராசு

வைகாசி 05, 2050 / 19.05.2019 மாலை 5.300 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 அளவளாவல்: திருமதி உமா இராசு

வெருளி அறிவியல் – 6 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி அறிவியல் 5 இன் தொடர்ச்சி) வெருளி அறிவியல்  –  6 12. அம்மண வெருளி Dishabiliophobia/Gymnophobia /Nudophobia அம்மணம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அம்மண வெருளி. அம்மணமாக இருப்பது அல்லது தன்னுடைய அம்மண நிலையைப் பிறர் பார்ப்பது பிறரின் அம்மண நிலையைப் பார்ப்பது தொடர்பான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் கொண்டிருப்பர். gymnos என்னும் கிரேக்கச் சொல்லிற்கு  உடுப்பற்ற எனப் பொருள். (gymnasion என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உடற்பயிற்சிக்கான இடம் எனப் பொருள். gymnasein என்றால் உடையின்றிப் பயிற்சி எனப் பொருள்.) ஆடையிலி வெருளி(Dishabiliophobia),…