அமைச்சர் இராசேந்திர பாலாசியின்பதவி பறிக்கப்பட வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அமைச்சர் இராசேந்திர பாலாசியின் பதவி பறிக்கப்பட வேண்டும்! மத்திய அரசின் / மத்திய அரசு நிறுவனங்கள், வங்கிகளின் தமிழக வேலை வாய்ப்புகளில் 90 விழுக்காட்டினர் பிற மாநிலத்தவராகவே இருக்கின்றனர். இதனால் தமிழக இளைஞர்களின் நிகழ்காலமே இருண்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களிலும் தமிழர்கள் வேலை வாய்ப்புகள் வினாக்குறியாகி வருகிறது. எனவே, சித்திரை 20, 2050 – 2019 மே 3 – காலை 8 மணி முதல் சமூகவலைத்தளப் பரப்புரை இயக்கம் என்னும் அமைப்பு #தமிழக-வேலை-தமிழருக்கே என்னும் குறிச்சொற்களைப் பயன்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியது….

கமல் சொன்னதற்குக் காரணம் பா.ச.க.தான்! – இலக்குவனார் திருவள்ளுவன்

கமல் சொன்னதற்குக் காரணம் பா.ச.க.தான்!  குற்றவாளி ஒருவரை அவரது மதம், சாதி, கட்சி, நாடு, ஊர், இனம், அமைப்பு சார்ந்து குற்றவாளியாகத் திரிப்பது தவறு. ஆனால், பல நேரங்களில் அவ்வாறுதான் செய்திகள் வருகின்றன. இந்த ஊர்க்காரர் கைது, அல்லது இந்தச் சாதிக்காரர் செய்த கொலை இந்த மதத்துக்காரர் செய்த குண்டு வெடிப்பு என்பன போன்ற செய்திகளைப் பார்க்கிறோம். தனி மனிதத் தவறுகளைப் பொதுமை ஆக்குவது தவறாகும். ஆனால், அதே நேரம், ஒரு மதம் சார்ந்த அல்லது கோட்பாடு சார்ந்த குழு அல்லது அமைப்பு தங்களின்…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 101-110 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 91-100 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 101-110 (குறள்நெறி) (பயனும் நன்மையும் நல்கும்) இன்சொல் கூறு! எக்காலமும் இன்பம் தரும் இன்சொல் பேசு! இன்சொல் இனிமை தருகையில் வன்சொல் பயன்படுத்தாதே!  (பழமிருக்கக், காய் உண்டல் போன்று,) இன்சொல் இருக்க, இன்னாத கூறாதே!  (வையகமும் வானகமும் ஈடாகா வண்ணம்) உதவாதவர்க்கும்  உதவி செய்!  உற்றநேரத்தில் உதவு!   பயன்கருதாமல் உதவி செய்! (பயன்தெரிவார்க்குப் பனையளவாகும் வண்ணம்) திணையளவு செயலேனும் செய்!   உதவப்பட்டோரின் எண்ணத்திற்கேற்ப உதவியை மதிப்பிடு! தூயவர் உறவை மறக்காதே!…

வெருளி அறிவியல் – 5 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி அறிவியல் 4 இன் தொடர்ச்சி) வெருளி அறிவியல்  –  5 7. அணுஆயுத வெருளி-Nucleomituphobia அணுஆயுதங்கள் மீதான அளவுகடந்த பேரச்சம் அணுஆயுத வெருளி. அணுஆயுதக்கருவிகள் இல்லாவிட்டாலும் இருந்து பயன்படுத்தப்படாமல் இருந்தாலும், அவை பயன்படுத்தப்பட்டுப் பேரழிவுகள் ஏற்படும் என்று கருதுவதால் உருவாகும் அச்சம் அணுஆயுத வெருளி. அமெரிக்கத் தலைவர்களுக்கு ஈராக்கு மீது ஏற்பட்டஅச்சம் இத்தகையதுதான். என்றாலும் அணுஆயுதக் கருவிகள்  இல்லை என்றறிந்த பொழுதும் இருப்பதாகப் பிறரை அச்சுறுத்தி அந்நாட்டை அழிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டது. போர் முழக்கங்களும் அமைதியின்மையும் வல்லரசு ஆசையும் நிறைந்த உலகில்…

பள்ளிக் கல்வித் துறை தவணை முறையில் தமிழை அழிக்கிறது – இலக்குவனார் திருவள்ளுவன், மாலைமுரசு

பள்ளிக் கல்வித் துறை தவணை முறையில் தமிழை அழிக்கிறது தமிழ் அறிஞர்கள் கண்டனம் சென்னை, மே 11 பள்ளிக் கல்வித் துறை தவணை முறையில் தமிழை அழிக்கிறது என்று தமிழ் அறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்க்காப்புக் கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாணாக்கர்களுக்குத் தரமான தமிழறிவை ஊட்டித் தமிழ்ப்பற்றை வளர்க்க வேண்டியது கல்வித்துறையின் கடமை. ஆனால் தமிழ்நாட்டிலுள்ள கல்வித்துறையோ தமிழைத் தவணை முறையில் அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு மேனிலைப்பள்ளிகளில் – 11, 12 ஆம் வகுப்புகளில்…

நல்ல நண்பர்கள் தேவை! – யாழ் பாவாணன்

நல்ல நண்பர்கள் தேவை! நண்பர்கள் எம்மை நாடி வரலாம்.நண்பர்களைத் தேடி நாம் போகலாம்.“ஆயிரம் நண்பர்களை இணைத்தாலும் கூடஓர் எதிரியைக் கூட ஏற்படுத்தி விடாதே!” எனப்பாவரசர் கண்ணதாசன் சொல்லிவைத்தார்!நண்பர்களை அணைக்கத் தான்நானும் விரும்புகின்றேன்.நண்பர்கள் எதிரியாவதைக் கண்டதும்நானும் ஒதுங்குகின்றேன்.எதிர்ப்பட்ட எதிரியும் நண்பராகலாம்எச்சரிக்கையாகப் பழகுகின்றேன்.நண்பர்களே வேண்டாமெனநானும் ஒதுங்கவில்லை – இத்தால்*நண்பர்கள் தேவையெனக் காத்திருக்கிறேன்.நண்பர்களால் வானுயரப் புகழீட்டியநண்பர்களால் தான் உணர்ந்தேன்நண்பர்கள் எனக்குத் தேவை என்றே!நண்பர்கள் இல்லையென்றால் – தனக்குஉளநோய் தான் வந்திருக்குமெனநண்பர்கள் சொல்லித் தான் அறிந்தேன்நண்பர்கள் கூட நல்மருந்தென்றே!என்னை நண்பர் ஆக்குங்கள்…என்னை எதிரி ஆக்காதீர்கள்…நான் எதிரியாவதை விடநல்ல நண்பராகவே இருந்துவிடுகிறேன்!நல்ல…

தந்தை பெரியார் சிந்தனைகள்- 2. முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 1 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் – 2 (2) நான் நெருக்கமாகப் பழகினவரையில் என் அறிமுகம் இது: கல்லூரியில் படித்த காலத்தில் (1934-39) அவருடைய சொற்பொழிவைக் கேட்டேன்[குறிப்பு 2]; குடியரசு, விடுதலை இதழ்களில் வந்த அவருடைய கட்டுரைகளைப் படித்து அநுபவித்தேன்; நேரில் பேசினது இல்லை. துறையூரில் என் முயற்சியால் தொடங்கப்பெற்ற உயர்நிலைப் பள்ளியில் முதல் தலைமையாசிரியராக இருந்த காலத்தில் அவரிடம் நெருங்கிப் பழகினேன்[குறிப்பு 3]. தேவாங்கர் தெருமக்கள் எல்லாம் சுயமரியாதைச் கட்சியினர்; அவர்களில் முக்கியமானவர் அரங்கசாமி(செட்டியார்); அவர் வீட்டில்தான் ஐயா அவர்கள் தங்குவதுண்டு. ஆண்டிற்கு ஆறு,…

சாகித்ய அகாதெமி விருதாளர் தோப்பில் முகமது மீரான் காலமானார்!

தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழி எழுத்தாளர்  தோப்பில் முகமது மீரான்(75) நெல்லையில் இன்று காலை காலமானார்.  முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டினம் ஊரில் பிறந்தவர். இவர் மனைவியின் பெயர் சலீலா மீரான். இவர் 5 புதினங்களையும் 6 சிறுகதைத் தொகுப்புகளையும் சில மொழிபெயர்ப்புகளையும் எழுதி வெளிட்டுள்ளார்.  1997இல்  சாய்வு நாற்காலி என்னும் புதினத்திற்குத் தமிழுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பெற்றது. கன்னியாகுமரியில் இருந்து நெல்லைக்கு மாறிக் கடந்த சில மாதங்களாக வசித்து வந்தார். இவர் உடல்நலக்குறைவு காரணமாகக் கடந்த சில நாள்களாக…

மொழிப்போர் ஈகி திருப்பூர் பெரியசாமிக்கு உதவுங்கள்! – பெ. மணியரசன்

நோயில் துன்புறும் மொழிப்போர் ஈகி திருப்பூர் பெரியசாமி அவர்களுக்கு உதவுங்கள்!தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள் அன்பார்ந்த தமிழ்ப் பெருமக்களே !  மொழிப்போர் ஈகியர்,  திருப்பூர் ப. பெரியசாமி அவர்களைத் தமிழ் உணர்வாளர்கள் நன்கு அறிவர்.  1965 இல் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் திருப்பூரில் கலந்து கொண்டு போராடியவர் திரு. பெரியசாமி அவர்கள். அப்போது அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் கிளைச்  செயலாளராக இருந்தார். இப்போது அவருக்கு அகவை 83. இந்தித் திணிப்பை எதிர்த்து அவர் ஏற்றிய கருப்புக் கொடியை இறக்கச் சொல்லி காவல் துறை பெரியசாமிக்குக் கட்டளையிட்டது. கருப்புக் கொடியை இறக்க மறுத்துவிட்டார் பெரியசாமி. 1965 – இந்தி எதிர்ப்புப் போர் என்பது, தமிழர் வரலாற்றில் மிகப்பெரிய உரிமைப் போராட்ட நிகழ்வாகும். திருப்பூரில் ஏராளமானவர்களைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். அதேபோல், குமாரபாளையம் – பொள்ளாச்சி ஆகிய இடங்களிலும்இந்தியை எதிர்த்த தமிழர்களை சுட்டுக் கொன்று அவர்தம் பிணங்களைச் சரக்குந்தில் ஏற்றிச் சென்று காவல்துறையினர் எரித்தனர். தமிழ்நாடு முழுவதும் முந்நூறு பேருக்கு மேல் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும், கொல்லப்பட்டவர்களின் உண்மையானஎண்ணிக்கையை அரசு வெளியிடவில்லை என்றும்…

நினைவேந்தல் நாளில் கறுப்புப்பட்டி அணிவோம்! மரம் நாட்டுவோம்! –வி.உருத்திரகுமாரன்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம்! ஆளுக்கொரு மரம் நாட்டுவோம்! – தலைமையர் வி.உருத்திரகுமாரன் பெரும் இனவழிப்பொன்றின் ஊடாகத் தமிழர் தேசத்தை வன் கவர்வு செய்த, மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் கூட்டுப்பெருந்துயரின் நாளாகிய தமிழீத் தேசியத் துக்க நாளில், இரண்டு செயற்பாடுகளைத் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு  நிகழ்த்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தப் பத்து ஆண்டுகளிலும் தமிழ்…

யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் ஐ.நா.வே தலையிடு! – நா.க.த.அ.

யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் ஐ.நாவின் தலையீட்டைக்கோரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இலங்கை அரசின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில், ஐ.நா மனித உரிமை அவையின் கண்காணிப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் கோரியுள்ளார்.  இது தொடர்பில் ஐ.நா மனித உரிமை அவை ஆணையாளர் மிசெல் பசேலே அம்மையார்(Michelle Bachelet) அவர்களுக்கு எழுதியுள்ள மடலில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை நீக்குவதாக இலங்கை அரசாங்கம் பல தடவைகள் ஐ.நாவுக்கும் அனைத்துலகக் குமுகாயத்திற்கும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அதற்கு மாறாகக் கைது செய்யப்பட்டுள்ள யாழ்ப்…

வெருளி அறிவியல் – 4 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி அறிவியல் 3 இன் தொடர்ச்சி) வெருளி அறிவியல்  –  4   அகவை வெருளி – senecophobia அகவை(வயது) கூடுவது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அகவை வெருளி.   ஆண்டு ஒன்று போனால் வயது ஒன்று போகும் என்பது இயற்கை. எனினும் சிலருக்கு அகவை கூடுவது தோற்றத்தில் முதுமையைக் காட்டும் எனக் கவலை தருவதாக அமைகிறது. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அகவை கூடினால் வாய்ப்பு குறையும் என்ற அச்சம் வரும். இவற்றால் இத்தகையோர் அகவை கூடுவது குறித்த தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.பெண்களுக்கு அகவை கூடுவது…