இலக்கிய அமுதம் : கு.அழகிரிசாமியின் படைப்புகள்

சித்திரை 28, 2050 – சனி – 11.05.2019 மாலை 5.30 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 இலக்கிய அமுதம் : கதைப்பேரரசர் கு.அழகிரிசாமியின் படைப்புகள் தலைமை : திரு இராய செல்லப்பா சிறப்புரை:  திரு கடற்கரை மத்தவிலாசம் அங்கதம் ஏ.இராமச்சந்திரன்    – ஏ. சாரங்கராசன் தங்கள் வரவை அன்புடன் எதிர்நோக்கும்  தொடர்பிற்கு : சுந்தரராசன் 9442525191 இல்லம் அடைய

காஞ்சி மணிமொழியார் 120ஆவது பிறந்த நாள் விழா

சித்திரை 26,2050 வியாழன் 09.05.2019 மாலை 5 மணி அன்னை மணியம்மையார் அரங்கம் பெரியார் திடல்,வேப்பேரி, சென்னை – 600 007. காஞ்சி மணிமொழியார் 120ஆவது பிறந்த நாள் விழா  தலைமை: தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி (தலைவர் – திராவிடர் கழகம்)  தமிழ்த் தாய் வாழ்த்து : திருக்குறள் இசைமாமணி சொ.பத்மநாபன் வரவேற்புரை : புலவர் ஆசி.திருமாலடிமை உரை நிகழ்த்துவோர்: நாடாளுமன்ற உறுப்பினர் தி. கோ. சீ. இளங்கோவன் (தலைமைக் கழகச் செய்தித் தொடர்பாளர், திமுக) சட்டமன்ற உறுப்பினர் செ.அன்பழகன் (சென்னை மேற்கு…

இலக்குவனார் ஆராய்ச்சி நூலகம் – நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை

தமிழ்ப்போராளி பேராசிரியர் இலக்குவனார் வாழ்ந்த இல்லத்தை நினைவில்லம் – தமிழ் ஆராய்ச்சி மாணவர்கள் படிப்பகம் ஆக உருவாக்க நடவடிக்கை எடுப்போம்!- நாம் தமிழர் கட்சியின் திருப்பரங்குன்றம் தொகுதித் தேர்தல் அறிக்கை 

பாவலர் தமிழேந்தி விடைபெற்றார்!

பாவலர் தமிழேந்தி விடைபெற்றார்! அடுத்தடுத்து இப்படியா ? ‘சிந்தனையாளன்‘ இதழைப் பார்த்தவுடன்அதன் இறுதிப்பக்கத்தை ஆவலுடன்தேடுவோர் மிகுதி. இதழ்தோறும் இறுதிப்பக்கத்தில் இடம்பெற்றிருப்பதுபாவலர் தமிழேந்தியின் பாடல். ” நடப்பு அரசியலை வெளிப்படையாகப்பாடுவோர் அருகிவிட்ட தமிழ் இலக்கியச் சூழலில் தமிழேந்தி மட்டுமேஅந்தத் தனித்தன்மையைக் காப்பாற்றிவருகிறார் ”  என்று பாவலர் அறிவுமதி வியந்து பேசுவது வழக்கம். ‘சிந்தனையாளன்’ இறுதிப் பக்கக் கவிதையாக இனித் தமிழேந்தி வரமாட்டார்.அரசியல் கவிதை அற்றுப்போகாமல்காப்பாற்றிய பாவலர் தமிழேந்தியின்பயணம் நின்றுவிட்டது. தமிழின விடியலுக்கான எல்லாப் போராட்டங்களிலும் மார்க்சியப் பெரியாரியப்பொதுவுடைமைக் கட்சி சார்பில் எழுச்சிமுழக்கமிடும் போராளித் தமிழேந்திகுரலை இனிக் கேட்க வாய்ப்பில்லை!…

மக்களாட்சியைக் காத்திடத் தேர்தல் ஆணையத்தைக் கலைத்திடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

மக்களாட்சியைக் காத்திடத் தேர்தல் ஆணையத்தைக் கலைத்திடுக!   தேர்தலை நடத்துவதற்கு ஒரு நடுநிலை அமைப்பு தேவை என்பதால்தான் தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக உருவாக்கப்பட்டது.  மக்களின் அடிப்படை உரிமைகளுள் முதன்மையானது தம்மை ஆளும் மக்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமையைப் பயன்படுத்துவது. அதற்கான வாய்ப்பைக்கூடத் தராத செயல்பாட்டுக் குறைவான தேர்தல் ஆணையம் இருந்து என்ன பயன்?  தேர்தலின் பொழுது வாக்காளர் விழிப்புணர்வுப் பரப்புரைகள் நடத்துகின்றனர். உண்மையில் விழிப்புணர்வு வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்குத் தேவை. நமக்கு 100விழுக்காடு வாக்குப்பதிவிற்காகப் பரப்புரை தேவையில்லை. 100 விழுக்காடு வாக்காளர் பதிவு விழிப்புணர்வுதான்…

தவறுகள் தொடரா வண்ணம் தேர்தல் ஆணையம் திருத்திக் கொள்க! -இலக்குவனார் திருவள்ளுவன்

தவறுகள் தொடரா வண்ணம் தேர்தல் ஆணையம் திருத்திக் கொள்க! எல்லா அமைப்பையும்போல் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் நிறைகளும் உண்டு; குறைகளும் உண்டு. ஆனால், குறைகளற்றுச் செயல்பட்டால்தான் தேர்தல்கள் சிறப்பாக நடைபெறும். எனவே, இதன் குறைகளைப்பற்றிச் சில கூற விரும்புகிறேன். சான்றுக்குச் சில:   புழுதிவாக்கம் வாக்குப்பதிவு மையத்தில் கடந்த தேர்தலில் சில வாக்குப்பதிவு அறைகளின் முன்னர்ப் பந்தல் போடாமல் வெயிலில் வாட விட்டிருந்தனர். இது குறித்து முறையிட்டதும் இங்கெல்லாம் வெயில் வராது என எண்ணிப் போடவில்லை என்ற அதிகாரிகள் சில மணி நேரத்தில் பந்தல்…

பகுத்தறிவுப் பாசறைக் கூட்டம் – 175

சித்திரை 21, 2050 சனிக்கிழமை, 4-5-2019,  மாலை 6 மணி  அம்பேத்கர் திடல், தொடர் வண்டிச் சாலை, கொரட்டூர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 129 ஆம் பிறந்த நாள் விழா!  வரவேற்புரை:  க.இளவரசன் (மாவட்டச் செயலாளர் -தி.க)  தலைமை: இரா.கோபால் (பாசறை ஒருங்கிணைப்பாளர் – தி.மு.க) முன்னிலை: த.வ.இலால்,  இர.விமலன் (பகுதித் துணைச் செ – தி.மு.க) வி.பன்னீர் செல்வம் (அமைப்புச் செயலாளர்) தே.செ. கோபால் (மண்டலச் செயலாளர் ) பா.தென்னரசு (ஆவடி மாவட்டத் தலைவர்)  சிறப்புரை: வழக்குரைஞர் மதிவதனி நன்றியுரை: சி.செ.அறிவுமதி (திராவிட…

வெருளி அறிவியல் – 3 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி அறிவியல் 2 இன் தொடர்ச்சி) வெருளி அறிவியல்  – 3 ‘தெனாலி’ படம் பார்த்தவர்களுக்குப் பின்வரும் பயங்கள்பற்றிய பேச்சு நினைவிருக்கும்: “எனக்கு எல்லாம் பயமயம். … காலால் உதைத்தால் காலில் அடிபடும் என்ற பயம் எனக்கு; கவிதை பயம் எனக்கு; கதை பயம் எனக்கு; பீமனின் கதைக்கும், அனுமனின் கதைக்கும் பயம்; உதைக்கும் பயம்; சிதைக்கும் பயம்; கதவு பயம் எனக்கு; கொஞ்சம் திறந்த கதவும் பயம், முழுதாக மூடின கதவும் பயம், பூட்டு போட்ட கதவென்றாலும் பயம் எனக்கு; காடு பயம்…

குவிகம் இல்லம்: அளவளாவல்: இரா.இராசு

சித்திரை 22, 2050 –ஞாயிறு- 05.05.2019 மாலை 5.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இல்லம்: அளவளாவல்: இரா.இராசு ஆசிரியர், சுற்றுச்சூழல் இலக்கிய ஆர்வலர் தொடர்பிற்கு: சுந்தரராசன்  94425 25191

நான்காவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு, பாரிசு

காலம்: புரட்டாசி 11& 12, 2050 28&29 செட்டம்பர் 2019 சனி, ஞாயிறு நான்காவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு [4ème Colloque Tamoul Européen 4th European Tamil Conference இடம்: 20. Esplanade Nathalie Saurrate Paris 18 Institut International des Etudes Supérieures இற்குப் பிற்புறம்] தமிழ்ப் பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், லாயோலா கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்தும், ரீ.ஆர்.ரீ.தமிழொலி வானொலியின் ஒத்துழைப்புடனும் பன்னாட்டு உயர் கல்வி நிறுவனம் – பாரிசு நடத்தும்,  ‘நான்காவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு’ ஆய்வுப் பொருண்மைகள்: 1. தமிழ் அகராதியியலின் படிநிலை ஆக்கமும் ஆக்கப் பருமமும் (பரிணாமம்‌ மற்றும்‌ பரிமாணம்‌) இன்பத் தமிழும்…

தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் பாவேந்தர் விழா-நிகழ்வுப் படங்கள்

நிகழ்ந்த நாள்: வைகாசி 14, 2050 சனி 27.04.2019 மாலை 04.30  இடம்: முத்தமிழ் மன்றம், கோயில் பதாகை, ஆவடி, சென்னை-62 படங்களைப் பெரிதாகக் காணச் சொடுக்குக.