வெருளி அறிவியல் 31 – 33 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி அறிவியல்  முந்தைய பகுதி தொடர்ச்சி) வெருளி அறிவியல் 31 – 33   31.ஆடை வெருளி – Vestiphobia ஆடை குறித்த அளவுகடந்த பேரச்சம் ஆடை வெருளி. குழந்தைப்பருவத்தில் உடை உடுத்துவது குறித்த எரிச்சல் விருப்பமின்மை முதலியன வளர்ந்து இத்தகைய பேரச்சத்தை உருவாக்குவதும் உண்டு. படைத்துறை முதலான சீருடைத் துறைகளில் பணியாற்றுவோருக்கு ஆடை வெருளி உள்ளது. தாய் அல்லது தந்தைக்கு ஆடை வெருளி இருந்தால் பிள்ளைகளுக்கும் வர வாய்ப்பு உள்ளதாகக் கூறுகின்றனர். புதுவகை ஆடைகளைக் கண்டு எரிச்சலுற்று ஆடை வெருளிக்கு ஆளாவோரும் உள்ளனர். vestis…

தேசியக் கல்வித் திட்டம் 2019 – புதிய கல்லறையில் பழைய பெட்டி : இலக்குவனார் திருவள்ளுவன்

தேசியக் கல்வித் திட்டம் 2019 – புதிய கல்லறையில் பழைய பெட்டி மனிதனை மனிதனாக வாழச் செய்வது கல்வி. கல்வி அவரவர் பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்ப அமைந்தால்தான் கல்வியில் சிறந்து சிறந்த மனிதனாக வாழ முடியும். இந்தியா பல தேசிய இன வழி மாநிலங்கள் இணைந்த ஆட்சிப் பரப்பாக உள்ளது. எனவே, கல்வியும் தேசிய இனங்களுக்கேற்ப மாறி அமையும். ஆனால், ஒரே நாடு, ஒரே மொழி என்ற சட்டத்திற்குள் கல்வியை மாற்ற முயலும் பொழுது கல்வி முறை சீரழிகிறது. மனிதக் குலமும் நலங்குன்றுகிறது. மத்திய…