எங்கு மறைந்தீர்? ஏன் பிரிந்தீர்? – மறைமலை இலக்குவனார்

எங்கு மறைந்தீர்? ஏன் பிரிந்தீர்?   பைந்தமிழின் பலதுறையும் ஆய்ந்தறிந்த அறிஞரே! கண்ணீரைப் பெருக்கிக் கலங்கிக் கரைந்து சிந்தை எல்லாம் நைந்திடவே எம்மைநீர் பிரிந்ததுவும்  முறையா? சொல்லாண்டு பொருளாண்டு எழிலார்ந்த காப்பியத்தின் சுவையாண்டு  திறனாய்ந்து நூல்பலவும் தந்தீரே! பல்லாண்டு பல்லாண்டு பாடவொரு வழியின்றி நில்லாமை நெறியெமக்குச் சொல்லாமல் சொன்னீரே! நவையெதுவும் இரா மோகன் புகழ்கொண்ட பேராசான்   முகம்கண்டு மகிழ்ந்திடவே வழியினிமேல் இல்லையா? கூற்றுவன் தொல்லையா? நவையற்ற நறுந்தமிழால் நலம்விளைக்கப் பல்காலும் திறனாய்வுத் துறைமேவித் தரமான நூலியற்றி அறிவார்ந்த பொருள்பலவும் செறிவாகப் புலப்படுத்தும் அரியகலை…

முனைவர் இரா.மோகன் பிரியா விடை பெற்றார்!

முனைவர் இரா.மோகன்பிரியா விடை பெற்றார்! எழுத்தாளர், சொற்பொழிவாளர், பட்டிமன்றப் பேச்சாளர், கவிஞர், தமிழ்த் தேனீ பேராசிரியர் முனைவர் இரா.மோகன் இன்று(வைகாசி 29,2050 / 12.06.2019)  காலை மாரடைப்பால் மரணமுற்றார். நேற்று நெஞ்சகநோய்ப் பாதிப்பால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் இன்று திரும்பவில்லை.  ஆய்வு மாணாக்கர்களுக்கு வழிகாட்டியாகவும் நூல்களுக்கு அணிந்துரை, திறனாய்வு, மதிப்புரை வழங்கிப் படைப்பாளர்களை ஊக்கப்படுத்துபவராகவும் நகைச்சுவை மன்றத்தில் பங்கேற்று நகைச்சுவை வாணர்களின் ஊக்குநராகவும் புன்னகையுடனும் பண்புடனும் அனைவருடனும் பழகும் தோழராகவும் சிறந்து விளங்கிய முனைவர் இரா.மோகன் தமிலுகில் இருந்து பிரியா விடை பெற்றார். செளராட்டிரக்…