கருத்துக் கதிர்கள் 14-15: இலக்குவனார் திருவள்ளுவன் [14. தண்ணீர்ப் பஞ்சமா? அப்படி என்றால் என்ன? 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]

கருத்துக் கதிர்கள் 14-15 [14. தண்ணீர்ப் பஞ்சமா? அப்படி என்றால் என்ன? 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்] தண்ணீர்ப் பஞ்சமா? அப்படி என்றால் என்ன?  “தமிழ்நாட்டில் தண்ணீர்ப்பஞ்சம் ஏற்பட்டுள்ளது போன்ற மாயையை ஏற்படுத்த வேண்டா” என மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டியுள்ளார். அவர் சொல்வது உணமைதான். அதுபோல் தண்ணீர்ப்பஞ்சம் என்பது இல்லை என மாண்புமிகு அமைச்சர் வேலுமணி பேசியுள்ளார். ஒரு முறை போதிய அளவு தண்ணீர் இருப்பதாகவும் மின்தடையால் உரிய நேரத்தில் கொண்டு சேர்க்க இயலவில்லை என்றும் பேசியுள்ளார். இதன்…

உலகத் திருக்குறள் பேரவை, நயம்பாடி (இரெ.) ஐம்பெரு விழா

ஆனி 08, 2050 / ஞாயிறு / 23.06.2019 திருவள்ளுவர் சிலை திறப்பு விழா பாராட்டு விழா விருது வழங்கல் விழா நூல் வெளியீட்டு விழா பரிசளிப்பு விழா 39 ஆம் ஆண்டுஐம்பெரு விழா அழைத்து மகிழ்வோர் முனைவர் நயம்பு அறிவுடைநம்பி, தலைவர் புலவர் செ.பாபு, செயலாளர், நல்லாசிரியர் பு.புருடோத்தமன், பொருளாளர் திருக்குறள் புரவலர்கள் ஊர்ப் பொதுமக்கள் உலகத் திருக்குறள் பேரவையினர், நயம்பாடி (இரெ.)

குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 50

ஆனி 08, 2050 / ஞாயிறு / 23.06.2019 மாலை 6.00 காணறி நூல் அரண்மனை /  டிசுகவரி புக் பேலசு 6, மகாவீர் வளாகம்,முதல் தளம், முனுசாமி சாலை,  க.க. நகர். சென்னை – 78. புத்தக வெளியீடு – ஒரு கோப்பை சூரியன் (காலவன் கவிதைகள்)  

ச.மெய்யப்பனார் பிறந்தநாள் விழா – மெய்யப்பன் அறக்கட்டளை பரிசு வழங்கு விழா

ஆனி 06, 2050 வெள்ளி 21.06.2019 மாலை 6.00 இரசியப் பண்பாட்டு அரங்கம், கத்தூரிரங்கன் சாலை சென்னை மணிவாசகர் பதிப்பக நிறுவனர் பதிப்புச் செம்மல் முனைவர் ச.மெய்யப்பனார் 87 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மெய்யப்பன் அறக்கட்டளையின் சிறந்த தமிழறிஞர் விருது சிறந்த நூல்களுக்கான நூலாசிரியர் விருது சிறந்த பதிப்பக விருது நூல் வெளியீடு விருது வழங்குநர் : தோழர் இரா.நல்லகண்ணு அன்புடன் ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம் தலைவர், மெய்யப்பன் அறக்கட்டளை இராம.குருமூர்த்தி மேலாளர், மணிவாசகர் பதிப்பகம்    

சமுகநீதிக் காவலர் வி.பி.சிங்கு 88ஆவது பிறந்த நாள் – சமுகநீதி காப்போம் பொதுக்கூட்டம், சென்னை

ஆனி 10, 2050 / செவ்வாய்க்கிழமை / 25.6.2019 மாலை 6 மணி இடம்: தாணா தெரு, புரசைவாக்கம், சென்னை சமுகநீதிக் காவலர் வி.பி.சிங்கு 88ஆவது பிறந்த நாள்  சமுகநீதி காப்போம் பொதுக்கூட்டம் தலைமை: சு.குமாரதேவன் (வடசென்ன மாவட்டத் தலைவர்) வரவேற்புரை: தே.செ.கோபால் (சென்னை மண்டலச் செயலாளர்) முன்னிலை: தி.இரா.இரத்தினசாமி (சென்னை மண்டலத் தலைவர்), வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்), தி.செ.கணேசன் (வடசென்னை மாவட்டச் செயலாளர்), தங்க.தனலட்சுமி (சென்னை மண்டல மகளிரணித் தலைவர்) சிறப்புரை: தமிழர் தலைவர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) பேராசிரியர் க.பொன்முடி (மேனாள்…

விடுதலை வாசகர் வட்டம், மதுரை – சொற்பொழிவு-77

ஆனி 07, 2050 / சனிக்கிழமை / 22.6.2019 மாலை 6 மணி இடம்: செய்தியாளர்கள் அரங்கம், எம்ஞ்சியார் பேருந்து நிலையம் எதிரில், (மாட்டுத்தாவணி), மதுரை  விடுதலை வாசகர் வட்டம், மதுரை – சொற்பொழிவு-77  தலைமை: பொ.நடராசன் (நீதிபதி பணி நிறைவு, விடுதலை வாசகர் வட்டம்) முன்னிலை: முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்),  சரவணன் (தலைவர், மதுரை மாநகர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம்), அ.மன்னர்மன்னன் (தலைவர், மதுரை புறநகர் மாவட்டப்  பகுத்தறிவாளர் கழகம்) வரவேற்புரை: ச.பால்ராசு (செயலாளர், விடுதலை வாசகர் வட்டம்)…

பெரியார் நூலக வாசகர் வட்டம்

ஆனி 05, 2050 / வியாழக்கிழமை / 20.6.2019 மாலை 6.30 மணி  இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை – 7 பெரியார் நூலக வாசகர் வட்டம்   சொற்பொழிவாளர்: எ.டி.அரசு (வானவியலாளர்) பொருள்: நமது அண்டம்

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும், ஒரே மதத்திற்கான பாதை – இலக்குவனார் திருவள்ளுவன்

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும், ஒரே மதத்திற்கான பாதை ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய அனைத்துக் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் கூட்டம் நாளை (ஆனி 04 / சூன் 19) நடை பெறுகிறது. இது பா.ச.க.வின் புதிய திட்டம் அல்ல. அதன் முந்தைய ஆட்சியிலேயே 2021 வரை நடக்க வேண்டிய மாநிலச் சட்டப்பேரவைகளுக்கான தேர்தலை இவ்வாண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைத்து  நடத்த முயன்றது. இப்பொழுது தன் இரண்டாம் ஆட்சிக் காலத்தில் தொடக்கததிலேயே இதற்கான முயற்சியில் இறங்கி…

மதுரையில் வேத பிராமணிய முறையில் தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்துப் போராட்டம்! பெ. மணியரசன் முதலான 200 பேர் கைது!

மதுரையில் வேத பிராமணிய முறையில் தமிழன்னை  சிலை அமைப்பதை  எதிர்த்துப் போராட்டம்!  பெ. மணியரசன் முதலான 200 பேர் கைது! போராட்டத்திற்கு முதல் கட்ட வெற்றி! மதுரையில் தமிழ்ச் சங்க வளாகத்தில் வேதகாலப் பிராமணிய முறைப்படித் தமிழன்னை சிலை அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்ததை எதிர்த்து இன்று(ஆனி 02, 2050 / 17.06.2019) காலை நடைபெற்ற போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தலைமையில் ‘தமிழர் மரபுக்கு எதிரான தமிழன்னை சிலைஎதிர்ப்புக் கூட்டமைப்பு’ சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று காலை பேரணியாக இப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் “தமிழக அரசே தமிழக அரசே!, நீக்கு! நீக்கு!வேதகாலப்பிராமண முறைப்படித் தமிழன்னை சிலைஅமைப்பதை…

கருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே! 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்?]

கருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே! 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்?] திருமாவளவன் விளக்கம் சரிதானே! தீவிரவாதத்திற்கும் பயங்கர வாதத்திற்குமான விளக்கத்தை முனைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளதற்காக அவர் மீது வழக்கு தொடுத்துள்ளதாகச் செய்தி வந்துள்ளது. நான் அரசிலறிவியலைத் துணைப்பாடமாக எடுத்துப் படித்துள்ளேன்.அப்பொழுதிருந்தே தீவிரவாதியையும் பயங்கரவாதிகயையும் ஒன்றுபோல் கூறும் பழக்கம் தவறு என்ற கருத்து உடையவன். சில இடங்களில் இது குறித்துப் பேசியும் எழுதியும் உள்ளேன். இப்பொழுது வி.சி.க.தலைவர் இந்த விளக்கத்தைக் கூறுவது…

முனைவர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

முனைவர் வா.செ. குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முனைவர் வா.செ.குழந்தை சாமி அறக்கட்டளையின் தலைவர் ப. தங்கராசு வெளியிட்டுள்ள அறிக்கை: முனைவர் வா.செ.குழந்தை சாமி அறக்கட்டளை சார்பில் கடந்த 2016 -ஆம் ஆண்டு முதல் முனைவர்  வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்கான விருதுக்குத் தொல்லியல், கல் வெட்டியல், நாணயவியல், அகழாய்வு, பலதொழில் துறைகளில் பயன்படுத்தியுள்ள, ஆனால் அகராதிகளில் இது வரை இடம்பெறாத புதிய சொற்களின் தொகுப்பு, மொழிச் சீர்திருத்தம், சமுதாயச் சீர்திருத்தம்,…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 151-160  தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170 (குறள்நெறி)  நற்குணம் நீங்காமல் காத்திடப் பொறுமையைக் காத்திடு!. பொறுத்தவரைப் பொன்போல் போற்று! ஒறுத்தால் ஒருநாள் இன்பம்; பொறுத்து என்றும் புகழ் பெறு! பிறர் திறனல்ல செய்யினும் நீ அவர்க்கு அறனல்ல செய்யாதே! செருக்கினை வெல்ல பொறு! துறவியினும் தூயராகத் தீச்சொல் தாங்கு! தீச்சொல் பொறு! அழுக்காறு இன்மையை ஒழுக்காறு ஆகக் கொள்! இணையற்று வாழ அழுக்காறு இன்றி இரு! அறன் ஆக்கம்  வேண்டுமெனின், பிறர் ஆக்கம் கண்டு பொறாமைப்படாதே!   (தொடரும்)இலக்குவனார்…