திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 33 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப்பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)   33 தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:399) கல்வியின் பயனால் தாமும் உலகும் இன்புறுவது கண்டு  கல்வியாளர்கள் கற்பதை விரும்புவர் என்கிறார் திருவள்ளுவர். ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் இன்பம் தரக்கூடியவற்றைச் செய்ய வேண்டும் என அரசிலறிவியலாளர்கள் கூறுகின்றனர். கற்பதால் தமக்கும் பிறருக்கும் வரும்  இன்பம் கண்டு மேலும் மேலும் அந்த இன்பத்தை விரும்பிக் கற்பர் என்று விளக்குவோர் உள்ளனர். இன்பத்திற்குக் காரணமான கல்வியை விரும்பி மேலும்…

நாலடி இன்பம்- 1 வானவில் அறிவியல்!, -இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நாலடி இன்பம்– 1 வானவில் அறிவியல்! சங்கஇலக்கிய நூல்களிலும் அதற்குப் பிற்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு எனப் பெறும் நீதி நூல்களிலும் நூலாசிரியர்களால் கடவுள் வாழ்த்து பாடப் பெறவில்லை. அவற்றுக்குப் பின்னர்த் தோன்றிய புலவர்கள்தாம் கடவுள்வாழ்த்துப் பாடல்களைப் பாடிச் சேர்த்துள்ளனர். ‘அபியுத்தர்’ அல்லது பதுமனார் இக்கடவுள் வாழ்த்துச் செய்யுளை இயற்றிச் சேர்த்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. வான் இடு வில்லின் வரவு அறியா வாய்மையால், கால் நிலம் தோயாக் கடவுளை யாம் நிலம் சென்னி உற வணங்கிச் சேர்தும்- ‘எம்உள்ளத்து முன்னியவை முடிக!’ என்று. பொருள்: வான்முகிலால் தோன்றும்…

பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம், சென்னை

ஆவணி 16, 2050  திங்கள் கிழமை 02.09.2019 மாலை  5.45மணி   பெரியார்  திடல், சென்னை 600007 தலைமை:   வழக்கறிஞர்   திருமதி. வீரமர்த்தினி                தலைவர், புதுமை இலக்கியத்தென்றல் தொடக்கவுரை: கவிஞர் தஞ்சை கூத்தரசன்               தி.மு.க. மாநில இலக்கிய அணிப் புரவலர் நினைவுரை: அரிமா முனைவர்  த.கு.திவாகரன் நன்றியுரை: சைதை தென்றல்      செந்தமிழ்   அரிமா    புகழ் போற்ற        வருக! புதுமை இலக்கியத் தென்றல்

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 32 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப்பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)  32 ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:398) ஒருமை உணர்வுடன் கற்கும் கல்வி எப்பொழுதும் பாதுகாப்பு தரும் எனத் திருவள்ளுவர் கூறுகிறார். கல்வியின் பயன் ஒருமுறையின்றித் தொடர்ந்து பயன் தரும்; ஆதலின் ஆட்சியாளர்கள் கல்வியில் சிறந்திருக்க வேண்டும் என்பது அரசறிவியல் கருத்து. குறள்நெறிச் செம்மல் பேரா.சி இலக்குவனார், எழுமை=மிகுதி எனப் பொருளைக் கையாண்டு சிறப்பாகவும் சரியாகவும் உரை எழுதியுள்ளார். உரையாசிரியர்கள் சிலர் ஒருமை என்பதற்கு ஒரு பிறப்பு என்றும் எழுமை…

சிங்கப்பூரில் பெரியார் விழா 2019, தமிழ்மொழிப் போட்டிகள்

சிங்கப்பூரில்  பெரியார் விழா 2019,  தமிழ்மொழிப் போட்டிகள் சிங்கப்பூர், ஆக.29  சிங்கப்பூர் பள்ளி மாணவர்களி டையே தமிழ்மொழி மீதான ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் பெரியார் சமூகச் சேவை மன்றத்தின் பெரியார் விழா 2019 தமிழ்மொழிப் போட்டிகள் ஆவணி 07, 2050 /ஆகத்து மாதம் 24ஆம் நாள் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது. இதில் சிங்கப்பூரில் உள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து எண்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டி மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. தொடக்கநிலை (2,3) மாணவர்களுக்குப் பாடல் போட்டியும், தொடக்கநிலை (4,5) மாணவர்களுக்கு ஓவியப் போட்டியும்,…

விருது வழங்கப்படுவதா? வாங்கப்படுவதா? – மறைமலை இலக்குவனார்

விருது வழங்கப்படுவதா? வாங்கப்படுவதா? அண்மையில் தமிழ்த் திரைப்படங்களுக்குத் தேசிய விருதுகள் வழங்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தன. திரையுலகில் இது பெரிய கவலையை ஏற்படுத்தியது.  “தேசிய விருதுகளை விடப் படங்களைப் பார்த்தவரெல்லாம் பாராட்டிப் பேசிய சொற்களே விருதுகள்” எனக் கவிஞர் வைரமுத்து ஆறுதல் வழங்கியுள்ளார். விருது என்பது கலைஞர்களுக்குப் பெரிய ஊக்கத்தையும் மனவெழுச்சியையும் வழங்கும் மாமருந்து எனலாம். அந்த விருதுவுடன் வழங்கும் பதக்கமோ, பணமோ, சான்றிதழோ முதன்மையானதாகக் கருதப்படுவதில்லை. அந்த விருது வழங்கும்  பாராட்டும் அங்கீகாரமுமே கலைஞர்களையும், கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் பெரிதும் ஊக்கப்படுத்தும் உந்து சக்தியாகும்….

இலக்கியச் சிந்தனை 589 & குவிகம் இலக்கிய வாசல் 53

ஆவணி 14, 2050 / சனிக்கிழமை / 31.08.2019 மாலை 6.00       சீனிவாச காந்தி நிலையம். அம்புசம்மாள் தெரு,   ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 இலக்கியச் சிந்தனை – 589 இதழியலில் பாரதியும் கண்ணதாசனும் சிறப்புரை: புதுவை திரு இராமசாமி  குவிகம் இலக்கிய வாசல் 53 எனது எழுத்துலகப் பட்டறிவுகள் உரையாடல்: எழுத்தாளர் கே.சி.சவகர்

நாலடியார் காட்டும் நல்வழித் தொடர்! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நாலடியார் காட்டும் நல்வழித் தொடர்! – முன்னுரை ‘நாலு பேர் நாலு விதமாகப் பேசுவான் அதுதான் வாழ்க்கை’ என்று எல்லாரும் ஒரே மாதிரியாகத்தான் பேசுகிறார்கள். தமிழர்களின் வாழ்வில் நான்கு என்பதற்கு அப்படிப்பட்ட முதன்மையாக இடம் உண்டு. வாழ்க்கையை நகர்த்தும்போதும் நான்கு பேர் உதவி தேவை. வாழ்வை முடித்த பின்னும் நான்கு பேர் உதவி தேவை. வாழ்வை நகர்த்த உதவும் நான்காய், நமக்கு வாய்த்திருக்கிறது நாலடியார். சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நான்கு அடி வெண்பாக்களால் ஆன 400 பாடல்களின் தொகுப்பு நாலடியார் எனப் பெறுகிறது. நாலடி…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 31 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)  31 யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:397) கற்றவனுக்கு எல்லா நாடும் ஊரும் தன் நாடாகவும் ஊராகவும் திகழும். பிறகு ஏன் சாகும்வரை கற்காமல் இருக்கிறான் எனத் திருவள்ளுவர் கேட்கிறார். “கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு” என்கிறார் ஒளவையார்(மூதுரை) கற்றவரை அவர் நாட்டு ஆள்வோரும் சிறப்பிப்பர். அவர் செல்லும் நாடுகளிலும் மதித்துப் போற்றுவர். ஆனால் ஆட்சித் தலைவர்க்கு உள்நாட்டில் இருக்கும் மதிப்பு அயல்நாடுகளில் இருப்பது இல்லை. கற்றவர் எந்த நாட்டிற்குச்…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு நாள் -ஆகத்து 30

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு நாள் -ஆகத்து 30 இனப்படுகொலைப்போர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும், காணாமல்போன தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென்ற நிலையறியாது அவர்களதுஉறவினர்கள் தவிக்கின்றனர். தமிழீழத் தாயகத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்துகாணாமலாக்கப்பட்டவர்களுக்காக 38 அன்னையர்களை போராடும் காலத்தில் இழந்தும் 1000 நாட்களாக இரவு பகலாகப் போராடும் உறவுகள் மாபெரும் எழுச்சிப் பேரணி ஒன்றைத் தமிழர் தாயகப் பகுதியில் 8 மாவட்ட மக்களாகநடத்தவுள்ள நிலையில் இம் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்குஅனைத்துப் புலம் பெயர்ந்த தமிழர்களும் ஆதரவு…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 30 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)  30 தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு.  (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:396) மணற்கேணியில் தோண்டும் அளவிற்கேற்ப நீர் ஊறுவதுபோல் கற்கும் அளவிற்கேற்ப அறிவு சுரக்கும் என்கிறார் திருவள்ளுவர். நீர்நிலை வகைகள் எண்ணற்று உள்ளன. அவற்றுள் நீர் சுரந்து அமையும் நீர்நிலைகளில் முதன்மையாகக் கிணறும் மணற்கேணியும்…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 29 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும்கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும்குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார்.அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)  29  உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லா தவர்  (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:395)    பொருள் உடையவர் முன் இல்லாதவர் பணிந்து நின்று பெறுவதுபோல் கல்வியறிவு உடையவர் முன் பணிந்து கற்க வேண்டும். அவ்வாறு கற்காதவர் இழிந்தவர் என்கிறார் திருவள்ளுவர். கல்வியியல் அரசியலையும் அரசியல் கல்வியியலையும் பாதிக்கின்றன. கற்றவரே முன்னிலையில் இருப்பர் என அரசறிவியலாளர் கூறுகின்றனர். அதுபோல் கல்லாதவரைக் கடையராகத் திருவள்ளுவர் கூறுகிறார். ஏக்கற்று என்றால் ஏக்கமுற்று எனச் சிலர் பொருள் கொள்கின்றனர். ஏக்கறுதல் –…

1 2 6