செல்வி நிலா தங்கவேலு – அரங்கேற்றம்

ஆடி 25,2050 சனி 10.08.2019 மாலை 5.00இராணி சீதை மண்டபம், அண்ணா மேம்பாலம் அருகில், சென்னை உரொண்டோ நடன ஆசிரியை திருமதி வசந்தா தானியல் அவர்களின் மாணவியும் திரு திருமதி மணிவண்ணன் – தேவி இருவரதும் அருமை மகளும் திரு திருமதி தங்கவேலு – சரோசினி அவர்களின் செல்லப் பேத்தியுமான செல்வி நிலா தங்கவேலுவின் நாட்டிய அரங்கேற்றம்

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 17 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 17 அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா மானம் உடையது அரசு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்:இறைமாட்சி, குறள் எண்: 383)   அறநெறியில் தவறாமல், அறம் அல்லாதவற்றை நீக்கி, வீரத்தில் குறைபடாமல், மானம் உடையவனே சிறந்த அரசன் என்கிறார் திருவள்ளுவர். ஆட்சியாளர்கள், அதிகாரம் குவிந்துள்ளதால் அறநெறியில் இருந்து விலகி வாழக்கூடாது என்கிறார். தமிழ்நெறி என்பது அரசும் அறநெறியில் நடக்க வேண்டும் என்பதே. சங்கப்புலவர்களும் இதையே வலியுறுத்துகின்றனர். அறம் நனி சிறக்க; அல்லது கெடுக! எனப் புலவர் ஓரம்போகியார் (ஐங்குறுநூறு 7) கூறுகிறார்….

சி.எம் (எ) கேப்மாரி படக்குழுவினரைக் கைது செய்க! -இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

சி.எம் (எ) கேப்மாரி படக்குழுவினரைக் கைது செய்க! ‘சி.எம் (எ) கேப்மாரி’ என்னும் படத்தை உருவாக்கி வரும் படக்குழுவினரைக் கைது செய்ய வேண்டும். கேப்மாரி என்பது குற்றத் தொழிலில் – பெரும்பாலும் கொள்ளைத் தொழிலில் – ஈடுபடும் – தெலுங்கு, கன்னடம் பேசும் கூட்டத்தாரைக் குறிக்கும் சொல். அந்தப் பெயரில் படம் எடுத்தவர்கள் அதன் பெயரை இப்பொழுது ‘சி.எம் (எ) கேப்மாரி’ என மாற்றியுள்ளனர். சி.எம். என்பது கேப்மாரியின் சுருக்கெழுத்துகளாம். அப்படியானால் கே.எம். என்றுதான் குறிப்பிட வேண்டும். பெயர்க்காரணம் என்னவாக இருந்தாலும் சி.எம். என்பது…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 16 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்  16  தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலன்ஆள் பவர்க்கு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்:இறைமாட்சி, குறள் எண்: 383)  ஆளும் தலைவருக்குக் காலந்தாழ்த்தாத தன்மையும் கல்வியுடைமையும் துணிவுடைமையும் நீங்காமல் இருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். தூங்காமை என்றால் உறங்காமை என்னும் பொருள் பின்னர் ஏற்பட்டது. காலந்தாழ்த்தாமை என்றுதான் பொருள். “தூங்காதே…

குவிகம் இல்லம் – அளவளாவல்

ஆடி 26, 2050 / 11.08.2019 மாலை 5.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம்,24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர்,சென்னை 600 017 அளவளாவல்திரு ஆர்.வி.இராசன்இலக்கிய ஆர்வலர், விளம்பரத்துறை ஆர்வலர்

கனடா வாழ் ஏழாலை வடக்கு உறவுகளின் ஒன்றுகூடல்!

எதிர்வரும்ஆடி 25, 2050 / 10.08.2019 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பின்னிரவு வரை மிலிக்கென் பூங்காவில் (5555 Steels Ave.East) கனடா வாழ் ஏழாலை வடக்கு உறவுகளின் ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது. அனைத்து உறவுகளையும், சிற்றூர் நலன்விரும்பிகளையும் தவறாது இவ் ஒன்றுகூடலில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுக்கிறோம். தொடர்புகளுக்கு: 416-876-3349 ஏழாலை வடக்குக் கிராம அபிவிருத்தியகம்  

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 15 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்   15 அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற்கு இயல்பு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்:இறைமாட்சி, குறள் எண்: 382)   அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய நான்கு பண்புகளும் குறைவின்றி ஆள்வோரிடம் இருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். நாட்டில் இயற்கைப் பேரிடர், உட்பகையால் எதிர்ப்பு, அயல்நாட்டுப்பகையால் எதிர்ப்பு முதலான நேர்வுகளில்…

காசுமீர்போல் தமிழகத்தைப் பிரிக்கட்டும்! -இலக்குவனார் திருவள்ளுவன்

காசுமீர்போல் தமிழகத்தைப் பிரிக்கட்டும்! பெரிய மாநிலங்களைப் பிரித்து மாநிலங்களின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டிருந்தது மத்திய அரசு. இப்பொழுது மாநிலங்களின் எண்ணிக்கையில் ஒன்றைக் குறைத்துள்ளது. அதே நேரம், ஒன்றியப் பகுதிப் பட்டியலில் இரண்டைச் சேர்த்துள்ளது.  மாநிலங்களைப் பிரிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் இருந்தாலும் அது பிரிக்கப்படும் மாநிலங்களின் கருத்திற்கேற்ப அமைய வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் தீர்மானத்திற்கேற்ப இருக்க வேண்டும். இப்பொழுது (ஆடி 20, 2050 / 05.08.2019) காசுமீர், இலடாக்கு என ஒன்றியப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது அவ்வாறல்ல. காசுமீர்ப் பிரிப்பு ஆணையில் சம்மு காசுமீர் அரசின்…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 14 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம் 14 படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்:இறைமாட்சி, குறள் எண்:381) திருவள்ளுவர் திருக்குறளில் அளித்துள்ள பொருட்பால் முழுமையுமே அரசறிவியலைச் சார்ந்ததுதான். அரசியல் அறிவியல் என்பதைச் சுருக்கி அரசறிவியல் என்பதே சிறப்பாகும். பொருள்நீதி என்றும் ஆட்சியியல் என்றும் சொல்லப்படுவனவும் இதுவே ஆகும்.  சாக்கிரட்டீசு, பிளேட்டோ…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 13 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம் 13 புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு. (திருவள்ளுவர், திருக்குறள் 340) “உடம்பினுள் ஒதுங்கி யிருக்கும் உயிருக்கு நிலையான  இருப்பிடம் அமையவில்லையோ?” என வனவுகிறார் திருவள்ளுவர். தங்குமிடம் நிலையற்றது என்பதன் மூலம் உயிரும் நிலையற்றது என்கிறார் திருவள்ளுவர். “துச்சில் இருந்த உயிர்க்கு” என்பதற்கு நோய்கள்/நோயுயுரிகள் குடிகொண்டுள்ள உடலில் ஓரமாக உள்ள…

‘தருமம்’ தமிழே! -இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

‘தருமம்’ தமிழே! –இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப் பலர் எண்ணுகின்றனர். நான் அண்மையில் பார்த்த காணொளி ஒன்றில், பேரா.சுப.வீரபாண்டியன், தருமமும் அறமும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்கிறார். இதுபோல் தருமமும் அறமும் வெவ்வேறானவை. காலப்போக்கில் இரண்டும் ஒன்று எண்ணம் வளர்ந்து விட்டது. இவற்றைத்தான் இக்கட்டுரையில் நாம் காணப் போகிறோம். ‘தருமம்’ என்னும் சொல்லை ஒலிக்கையில் முதல் எழுத்தை (ந்)த என்பதுபோல் வலிந்து ஒலிப்பதால் இது தமிழ்ச்சொல் அல்ல என்ற எண்ணம் பலருக்கு உள்ளது. தருதல் என்பதன் அடிப்படையில், பயன்கருதாமல் பிறருக்குத்…

சிதைந்து போவதோ செம்மொழி ஆய்வு நிறுவனம்? -கருத்தரங்கம்

‘சிதைந்து போவதோ செம்மொழி ஆய்வு நிறுவனம்?’  என்ற தலைப்பில்   திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் மகளிர் அணி நடத்தும் சிறப்பு கருத்தரங்கம் ஆடி 18, 2050 / 03.08.19 ஞாயிறு மாலை 6 மணிக்கு, சென்னை, இராயப்பேட்டை, ஒளவை சண்முகம் சாலை, இந்திய அலுவலர் சங்க அரங்கத்தில் நடைபெற உள்ளது. விழாவில் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவரும் மாநில மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழி நா.உ., தமிழச்சி தங்கபாண்டியன் நா.உ., சோதிமணி நா.உ., புதிய குரல் ஓவியா ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர்….