வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 231-240 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 221-230  தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 231-240 (குறள்நெறி)  (பசி தாங்கும் துறவியைவிட) வலிமையாகத் திகழப் பசியைப் போக்கு! பொருளைச் சேமிக்க, இல்லாதவர் பசி தீர்! பசிப்பிணி அண்டாதிருக்கப் பகுத்துண்! கொடை  இன்பத்தை உணராமல் பொருளைச் சேர்த்து இழக்காதே! இரத்தலைவிட இழிவாகத் தனித்து உண்ணாதே! கொடுக்க முடியாத பொழுது இறப்பதும் இனிமையே என உணர்!  கொடுத்துப் புகழ் பெறுவதே உயிர்க்கு ஆக்கம் என அறி! (அனைவராலும் பேசப்படக்) கொடுத்துப் புகழ் பெறு! உலகில் அழியாத புகழை அடையச் செயல்படு! புகழால்…

வேலூர் தொகுதியில் தோற்கப்போவது யார்? – இலக்குவனார் திருவள்ளுவன்

வேலூர் தொகுதியில் தோற்கப்போவது யார்? வேலூர் நாடாளுமன்றத் தொகுதித் தேர்தல் வரும் ஆடி 20/ 05.04.2019 அன்று நடைபெற உள்ளது. இங்கே முதன்மைப் போட்டி அ.தி.மு.க.விற்கும் தி.மு.க.விற்கும்தான். ஆரணி சொக்கலிங்கம் சண்முகம் ஆகிய ஏ.சி. சண்முகம், தான் தலைவராக இருந்து நடத்தும் புதிய நீதிக்கட்சியின் சார்பில் போட்டியிட்டாலும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவதால் அ.தி.மு.க. வேட்பாளர் என்றே இவரைக் கூறலாம். எம்ஞ்சியார் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம்,  மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி முதலானவற்றின் மூலம் பொதுக்கல்வியும் மருத்துவக் கல்வியும் பரவுவதற்குப் பணியாற்றுகிறார். முதலில் தான்  சேர்ந்திருந்த…

குவிகம் இல்லம் – அளவளாவல்

ஆடி 19, 2050 / 04.08.2019 மாலை வ.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 திருமதி எம்.இராசேசுவரி திரு எசு.வி.இராசகோபாலன்

45ஆம் ஆண்டு கம்பன் விழா, சென்னை

ஆடி 24-26, 2050 – 9-10,08,2019 ஏ.வி.எம்.இராசேசுவரி திருமண மண்டபம் இராதாகிருட்டிணன் சாலை, மயிலாப்பூர் சென்னை 600004 கம்பன் கழகம், சென்னை

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 12 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம் 12 குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு.(திருவள்ளுவர், திருக்குறள் 338) கூட்டிற்கும் அக்கூட்டில் இருந்து அதைத் தனித்துவிட்டுப் பறந்து செல்லும் பறவைக்கும் உள்ள தொடர்புதான் உடலுக்கும் உயிருக்கும் என்கிறார் திருவள்ளுவர். மறுபிறவியில் நம்பிக்கை உள்ள சமயவாதிகள் உடலிலுள்ள உயிர் குறித்து மீண்டும் வேறு உடலில் புகும் என்பதுபோன்ற…

நன்னன்குடி நடத்திய நூல் வெளியீட்டு விழா

நன்னன் குடியின் வெளியீட்டு விழாவும் பரிசளிப்பு விழாவும் நன்னன்குடி நடத்திய நூல் வெளியீட்டு விழா சென்னை தி.என்.இராசரத்தினம் கலையரங்கில் ஆடி 14, 2050 / 30.7.2019 அன்று மாலைநடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திமுக தலைவர் தளபதி மு.க.தாலின் ஆகியோர் பங்கேற்று நூல்களை வெளியிட்டுச் சிறப்பித்தனர் இவ்விழாவிற்கு வந்தவர்களை திருமதி வேண்மாள் கோவிந்தன் வரவேற்றார். மூத்த தமிழறிஞர் புலவர் மா.நன்னனின் ‘அகமும் புறமும்’ என்ற நூல் குறித்து வழக்குரைஞர் த.இராமலிங்கமும், ‘இவர் தாம் பெரியார்’ (வரலாறு -திராவிடர் கழ கத்தின் திருப்புமுனைத் தீர்மானங்கள்…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 11 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம். 11 நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்.( (திருவள்ளுவர், திருக்குறள் 335)    “நாவை அடக்கி விக்கல் எழுந்து இறப்பு நெருங்கும் முன்னே நல்வினைகள் செய்ய வேண்டும்” என்கிறார் திருவள்ளுவர்.    சுருங்கி விரிந்து சீராக இயங்கும் மறுகம்(உதரவிதானம்), சுருக்கதிர்ச்சியால் கீழிறங்கித் தொண்டை வழியாகக் காற்றை உள்ளிழுக்கிறது….