நாலடி இன்பம் – 14: சூரியன் சொல்லும் செய்தி! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நாலடி இன்பம் – 14: சூரியன் சொல்லும் செய்தி! வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம் வீழ்நாள் படாஅ தெழுதலால் – வாழ்நா ளுலவாமுனொப்புர வாற்றுமின் யாரு நிலவார் நிலமிசை மேல். (நாலடியார் பாடல் 22) பொருள்: வாழும் காலத்தை அளக்கும் கருவியாக விளங்கும் சூரியன், நாள் தவறாமல் தோன்றுவதால், ஆயுள் முடியும் முன்னர், பிறருக்கு உதவி செய்யுங்கள். யாருமே உலகில் சாகாமல் நிலைத்து இருக்க மாட்டார்கள். சொற்பொருள்: [வாழ்நாட்கு அலகுஆ வயங்கொளி மண்டிலம் வீழ்நாள் படாஅது எழுதலால் – வாழ்நாள் உலவாமுன் ஒப்புர வாற்றுமின்; யாரும்…

குறள் மாநாடு இரண்டாம் நாள் அமர்வு

புது தில்லியில் மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு, புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019 ஆகிய நாள் நடைபெற்றன. தொடக்கத்தில் திருக்குறள் தொண்டு மையத்தின் திருக்குறள் முற்றோதல் நடைபெற்றது. இரண்டாம் நாள் நடைபெற்ற அமர்வின் ஒளிப்படங்கள். படங்களைப் பெரிதாகக் காண அவற்றை அழுத்தவும்.

குறள் மாநாடு – வடபுல நாட்டிய நிகழ்ச்சி

புது தில்லியில் மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு, புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019 ஆகிய நாள் நடைபெற்றன. முதல் நாள் நிறைவாகப் புது தில்லியில் உள்ள நாட்டியக் குழு ஒன்றின் நாட்டிய நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. படங்களைப் பெரிதாகக் காண அழுத்திப் பார்க்கவும்.

மூன்றாவது திருக்குறள் மாநாடு – முதல் நாள் அமர்வுகள்

புது தில்லியில் புரட்டாசி 06-07, 2050 ***  23-24.09.2019 நாள்களில் நடைபெற்ற மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாட்டின் முதல்நாள் அமர்வு – ஒளிப்படங்கள் படங்களை அழுத்தினால் பெரிதாகக் காணலாம்.

மூன்றாவது திருக்குறள் மாநாட்டின் தொடக்க விழா ஒளிப்படங்கள்

புது தில்லியில் புரட்டாசி 06-07, 2050 ***  23-24.09.2019 ஆகிய நாள்களில் மூன்றாவது உலகத்திருக்குறள் மாநாடு நடைபெற்றது.  முதல்நாள் காலையில் சிறுமியரின் திருக்குறள் இசை நிகழ்ச்சிக்கும் மங்கல இசைக்கும் பின்னர் விழா தொடங்கியது. படங்களைப் பெரிதாகக் காண அழுத்திப் பார்க்கவும்.

தில்லியில் தமிழகச் சிறுமியர் குரலில் குறள்

புது தில்லியில் புரட்டாசி 06-07, 2050 ***  23-24.09.2019 ஆகிய நாள்களில் மூன்றாவது உலகத்திருக்குறள் மாநாடு நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சியாகத் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் திருக்குறள் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் திரு சங்கரராமன் சேலம், கிருட்டிணகிரி, தருமபுரி முதலான வெவ்வேறு மாவட்டச் சிறுமியர் முப்பத்தறுவருக்குப் பயிற்சி அளித்து அழைத்து வந்திருந்தார். ஓரிடத்தில் பயிற்சி பெற்றாலே ஒன்றுபோல் பாடுவது அரிதான ஒன்றாகும். ஆனால், கணிணி மூலம் பயிற்சி அளித்தும் அனைவரும் ஒன்றுபோல் சிறப்பாகத் திருக்குறள் இசை நிகழ்ச்சியை அளித்தனர். திருக்குறள்…

திருக்குறள் மாநாட்டுக்குத் தமிழக அரசு உதவியா?- தமிழறிஞர்கள் ஓசனை!

திருக்குறள் மாநாட்டுக்குத் தமிழக அரசு உதவியா?- தமிழறிஞர்கள் ஓசனை! தில்லியில் கடந்த 23,24 ஆம் நாள்களில் மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய, தமிழ் ஆட்சி மொழி பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராசன் நிறைவு விழாவிலும் தன்னார்வத்துடன் பங்கேற்றார். அப்போது அவர் “பிரான்சில் 06., 07.08.2020 இல் நடைபெற உள்ள திருக்குறள் மாநாட்டிற்கு அரசு நிதி யுதவி செய்யும். இந்த மாநாடு முடிந்து விட்டாலும் சிறிய அளவு உதவியேனும் செய்வோம். அமெரிக்காவில் நடைபெற்ற உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு…

திருக்குறளைப் போற்றுவோர் தமிழையும் போற்றுக! இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருக்குறளைப் போற்றுவோர் தமிழையும் போற்றுக! தமிழைப் போற்றாமல் திருக்குறளையோ பிற இலக்கியங்களையோ போற்றிப் பயனில்லை. இங்கே கூறப்படுவது அனைத்து விழா ஏற்பாட்டாளருக்கும் பொதுவானது. இருப்பினும் திருக்குறள் மாநாட்டை அளவீடாகக் கொண்டு பார்ப்போம். கருத்தரங்கத்தில் தமிழ் தொலைக்கப்படுவதைக் காணும் பொழுது இரத்தக் கொதிப்பு வருகிறதே! ஆகச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இவ்வமைப்பினர் நடத்தும் அழைப்பிதழ் பதாகைகள் முதலான எவற்றிலும் தமிழ் இல்லை. தமிழ் நூல் குறித்த தமிழர் நடத்தும் மாநாடுகளில் அல்லது கருத்தரங்கங்களில் தமிழ் இல்லை என்பது தலைக்குனிவு அல்லவா?    புது தில்லியில் அதே…

தமிழ்த்தேசியமும் தந்தை பெரியாரும் : ப.திருமாவேலன்

தமிழ்த்தேசியமும் தந்தை பெரியாரும் தமிழ்நாட்டில் பொருளற்று, இன்னும் சொன்னால், அதனுடைய உண்மையான சித்தாந்தங்களை உணராமல், அதற்கான எந்த அருப்பணிப்பு உணர்வும் இல்லாமல், அதற்கான தத்துவார்த்த பின்புலங்கள் எதுவும் தெரியாமல், பல்வேறு சிந்தனையற்ற மனிதர் களின் கையில் சிக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு வார்த்தை இருக்குமானால், அதற்குப் பெயர்தான் தமிழ்த் தேசியம். தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை: தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை திராவிட இயக்கம் என்கின்ற சொல்லுக்குள் இருக்கிறது. தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை தந்தை பெரியார் என் கின்ற வார்த்தைக்குள் இருக்கிறது; அவருடைய வாழ்க்…

1 2 6