விருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50

நிகழ்வு 50 காவேரியிலிருந்து கங்கை வரை – மிதிகைப் (மோட்டார் சைக்கிள்) பயணப் பட்டறிவுகள் சிறப்புரை :   பிரபு ,  மயிலாடுதுறை      மூகாம்பிகை வளாகம்     சி.பி. இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே     ஆறாவது தளம்      மயிலாப்பூர்      சென்னை 600 004 புரட்டாசி 04, 2050  / 21.09.2019  (சனிக்கிழமை)நேரம்  மாலை 6.00 மணி அன்புடன் வரவேற்கும் அழகிய சிங்கர் 9444113205

தென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

தென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர்    கடந்த இரு நூற்றாண்டுகளில் வாழ்ந்த புலவர்கள் பலரும் பழமைக்குப் பாலமாகத் திகழ்ந்து அளப்பரும்  தமிழ்த்தொண்டாற்றி யுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்களவர், சைவச் சித்தாந்தப் பெரும்புலவர், வைதிக சைவச் சித்தாந்தச் சண்ட மாருதம், பரசமயக்கோளரி என்று பல  பட்டங்கள் பெற்ற சோமசுந்தர(நாயக)ர் ஆவார்.   சோமசுந்தர(நாயக)ர், இராமலிங்க நாயகர் – அம்மணி அம்மையார் ஆகிய இல்லற இணையரின் மூத்தமகனாக ஆவணி 02, 1877 / ஆகத்து 16, 1846 அன்று சென்னையில் பிறந்தவர். இவரி்ன் தந்தை சைவ நெறியினராகவும் தாய் வைணவராகவும் விளங்கினர். தந்தையார் தம் மனைவியின் விருப்பத்திற்கிணங்க அனைவருக்கும் வைணவப் பெயர்களையே சூட்டியுள்ளார். தம்பியர் திருவேங்கடசாமி(நாயகர்), நாதமுனி(நாயகர்), வரதராச(நாயக)ர், தங்கை தாயாரம்மை…

நாலடி இன்பம் 8 – இளமை என்னும் பலியாடு!, இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நாலடி இன்பம் 8 – இளமை என்னும் பலியாடு! வெறியயர் வெங் களத்து வேல்மகன் பாணி முறியார் நறுங் கண்ணி முன்னர்த் தயங்க, மறிகுளகு உண்டன்ன மன்னா மகிழ்ச்சி யறிவுடை யாளர்க ணில் பொருள்: பலிபீடத்தின் அருகில் உள்ள ஆடு தன்னை வெட்டிக் கொல்லப் போகிறார்கள் என உணராமல் எதிரில் உள்ள பூமாலையில் கட்டப்பட்டுள்ள இலைதழைகளை உண்கிறது. இதைப்போன்று நிலையற்ற இளமை இன்பத்தில் மகிழ்தல் நல்லறிவுடையாளர்களிடம் இல்லை. சொல் விளக்கம்: வெறி=வெறியாடுதலை; அயர்=செய்கின்ற; வெம்=கொடிய; களத்து=பலிக்களத்தில்; வேல்மகன்=பூசாரி; பாணி=கையில், முறி=தளிர்; ஆர்= நிறைந்த; நறும்=மணக்கும்;…

தமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார்! நாம் போற்றும் எந்தத் தலைவராயினும் அவரிடையே குறைகள் இல்லாமல் இல்லை. வாழும் தலைவர்களாயின் குறைகளைத் திருத்த முற்படலாம். ஆனால் வாழ்ந்து மறைந்த தலைவர்களிடையே  உள்ள குறைகளை மட்டும் பட்டியலிட்டுப் பயனில்லை. அவர்கள் ஆற்றிய நல்ல செயல்களைமட்டும் போற்ற வேண்டும்.  குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் (திருவள்ளுவர்,திருக்குறள் 504) என்பதற்கேற்ப, நாம் நடுநிலையுடன் ஆராய்ந்து மிகுதியான நற்குணங்கள், நற்செய்கள், நல்லுரைகள் முதலியவை அடிப்படையிலேயே போற்ற வேண்டும். இப்படிச்சொல்வதால் அவர்களது தவறுகளை ஏற்கவேண்டும் எனப் பொருள்…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 43, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)  43 மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு  (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 409) செல்வம், செல்வாக்குடன் மேலான நிலையில் பிறந்திருந்தாலும் கல்வியறிவில்லாதவர் அவர்களைவிடக் கீழான நிலையில் பிறந்த கற்றவர்க்கு ஈடாகமாட்டார் என்கிறார் திருவள்ளுவர். “அனைத்திலர் பாடு” என்றால் “அவ்வளவு பெருமை இல்லாதவர்”  என்று பொருள்….

பேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…! இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

பேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…!  கட்சி உறுப்பினர்களைக் குடும்ப உறுப்பினர்கள்போல் நடத்திய மாபெரும் தலைவர் பேரறிஞர் அண்ணா. அண்ணாதுரை என்னும் அவரின் பெயரின் சுருக்கம்போல் அண்ணா என்பது திகழலாம். ஆனால், உண்மையில் கோடிக்கணக்கான தம்பியர் அவரைப் பாசமுடன் அழைத்த சொல்லே அண்ணா என்பது. தம்பிக்கு என மடல் எழுதி விழிப்புணர்வு ஊட்டிமையால் வயது வேறுபாடின்றி அனைவருக்குமே அவர் அண்ணா ஆனார். எனவேதான் அவர் மறைவின் பொழுது  திரண்டிருந்த மக்கள் கூட்டம் உலகிலேய மிகுதியான இறுதி அஞ்சலி எனக் கின்னசு உலக ஆவணப்பதிவு அறிவித்தது. தமிழ்…

நாலடி இன்பம் – 7: நரை முன் நல்லறிவு! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர் குழவி யிடத்தே துறந்தார்; – புரைதீரா மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி இன்னாங் கெழுந்திருப் பார். பொருள்: முடி நரைத்து மூப்பு வரும் என்று இளமைப்பருவத்தில் கேடானவற்றைத் கைவிட்டவர்கள் நல்லறிவாளர்கள். குற்றம் நீங்காத நிலையில்லா இளமைப் பருவத்தில் மகிழ்ந்திருப்பவர்கள், முதுமையில் துன்பத்துடன் ஊன்றுகோல் ஊன்றி நிற்பார்கள். சொல் விளக்கம்: நரை = மூப்பின் அடையாளமான வெண்முடி; வரும் என்று =வருமென்று; எண்ணி = நினைத்து; நல் = நல்ல; அறிவாளர் = அறிவுடையவர்கள்; குழவியிடத்தே = இளமைப் பருவத்தில்;…

பெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல! இலக்குவனார் திருவள்ளுவன்

பெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல! மதுரை மாநகரில் உள்ள பெரியார் பேருந்து நிலையத்தை மேம்படுத்திச் சிறப்பாக  மாற்றி அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. புதிய கட்டுமானத்திற்கான வரைபடம் 20.1.2019 அன்று  வெளி யிடப்பட்டது. மீனாட்சியம்மன் கோவில் கோபுர வடிவத்தில் வரைபடம் வெளி வந்ததால் கடும் எதிர்ப்பு வந்ததாகவும் அவ்வாறு இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.  ஆனால், அண்மையில் மதுரையில் உள்ளாட்சித் துறை அமைச்சர்  வேலுமணி, கோபுரம் வடிவிலான  வரைபட அடிப்படையிலேயே மதுரை பெரியார் பேருந்து நிலைய முகப்பு அமையும்…

‘உயிர்ச்சுழி’யின் இரண்டாம் பதிப்புரை : இப்போதும்… ஈரவாடை….. : பாரதிபாலன்

‘உயிர்ச்சுழி’யின் இரண்டாம் பதிப்புரை  : இப்போதும்… ஈரவாடை…..                  பதினெட்டு வருடங்களுக்குப் பின்பு, ‘உயிர்ச்சுழி’  இரண்டாம் பதிப்பு வெளிவருகிறது. முதல் பதிப்பினைச் சந்தியா பதிப்பகம் வெளியிட்டது. முதல் பதிப்பில் தேவைக்கு ஏற்பச் சில படிகள் மறுஅச்சு செய்து வெளியிடப்பட்டாலும் முறையான இரண்டாம் பதிப்பாக இதைக் கொள்ளலாம்! ஆம்! பதினெட்டு வருடங்கள் என்பது மிகப் பெரிய கால இடைவெளிதான்!                 இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை மீண்டும் வாசிக்கின்ற போது, ஒரு பழைய ஒளிப் படத்தினைக் காண்பது போன்ற பரவசமும், அது உண்டாக்கும் ஏக்கமும் தான்…

மனமொழியும், கலைத்தன்மையும் கொண்ட பாரதிபாலன் கதைகள் – வல்லிக்கண்ணன்

மனமொழியும், கலைத்தன்மையும் கொண்ட பாரதிபாலன் கதைகள் வல்லிக்கண்ணன்                 சிறுகதைகள் விதம் விதமாக எழுதப்படுகின்றன. கதைகள் எழுதுகிறவர்கள் மனிதர்களையும், அவர்களது இயல்புகளையும், அவர்களுடைய வாழ்க்கை மற்றும் செயல் விசித்திரங்களையும் அடிப்படையாகக் கொண்டே சொற்சித்திரம் தீட்டுகிறார்கள். இவற்றில் ஒரு சிலருடைய கதைகள் மட்டுமே தனித்தன்மையும், குறிப்பிடத் தகுந்த சிறப்புகளும் கொண்டதாக அமைகின்றன.                 வாழ்க்கையையும் மனிதர்களையும்பற்றிய தனித்த நோக்கு, வாழ்க்கையும் சூழ்நிலையும் பட்டறிவுகளும், மனசில் ஏற்படுத்துகின்ற சலனங்களும் பதிவுகளும், வாழ்க்கை, மனிதர்கள் இயற்கைச் சூழ்நிலைகள் மரங்கள், மிருகங்கள், பறவைகள் முதலிய அனைத்திலும் ஒருவர் கொள்கிற பற்றுதலும்…