சாதிப்பட்டத் துறப்பிற்கு வழிகாட்டிய முன்னோடி இராமச்சந்திரனார் – இலக்குவனார் திருவள்ளுவன்

சாதிப்பட்டத் துறப்பிற்கு வழிகாட்டிய முன்னோடி    ஒவ்வொருவரும் தத்தம் பெயர்களுக்குப் பின்னால் சாதிப் பெயர்களைப் பெருமையாக இணைத்துக் கொள்ளும் அவலமான வழக்கம் இந்தியாவில் உள்ளது. இத்தகைய போக்கு தமிழ்நாட்டை விடப் பிற மாநிலங்களில் பெரும்பான்மை இருப்பதையும் நாம் காணலாம். சான்றாக இராய், இராவ், எக்டே, ஐயர், கோசு, கௌடா, கௌர், சட்டர்சி, சர்மா, சிங், சோனி, சௌத்திரி, திரிவேதி, தேசாய், நம்பியார், நாயர், நாயுடு, பட், பட்டேல், மிசுரா, முகர்சி, மேனன், வர்மா, என ஆயிரக்கணக்கிலான சாதி ஒட்டுகளைக் கூறலாம்.  பிற மாநிலங்களின் தலைவர்கள்…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 42, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 42 நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 408) நல்லவர் அடையும் வறுமையினும் துன்பம் தருவது கல்லாதவரிடம் சேரும் செல்வம் என்கிறார் திருவள்ளுவர். கல்லாதவரிடம் சேரும் செல்வம் அரசிற்குப் பாரமே என்கின்றனர் அரசியலறிஞர்கள். கல்லாதாரிடம் சேரும் செல்வத்தைக் குறிப்பிடுவதால் நல்லார்…

இலக்கிய அமுதம் – கவிஞர் சுரதாவின் எழுத்துகள்: திரு அமுதோன்

ஆவணி 29, 2050 ஞாயிறு 15.09.2019 மாலை 5.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர் நகர், சென்னை 600 017 கவிஞர் சுரதாவின் எழுத்துகள்: சிறப்புரை: திரு அமுதோன்

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 41, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 41 (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)   நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை அற்று (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 407) நுட்பமும் சிறப்பும் மிக்க கல்வி இல்லாதவன் அழகு, மண்ணால் அழகாகச் செய்யப்பெற்ற பொம்மையைப் போன்றதே என்கிறார் திருவள்ளுவர். “அழகு என்பது ஒயிலான முகமல்ல. ஒயிலான அறிவே” என்றும் “கல்லாதவன்…

நாலடி இன்பம் 6 – காலத்தினால் செய்த உதவி! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நாலடி இன்பம் 6 – காலத்தினால் செய்த உதவி! என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால் பின்னாவ தென்று பிடித்திரா – முன்னே கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம் தொடுத்தாறு செல்லும் சுரம் பொருள்: ஏதேனும் ஒரு பொருள் கிடைத்தால் பின்னர் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என இறுகப் பிடித்துக்கொண்டு இராதே. அதை முன்னதாகவே அறவழியில் செலவிடு. அப்போதுதான் எமன் அழைத்துச் செல்லும் துன்ப வழியில் இருந்து தப்பி நல்லுலகு அடைவாய். சொல் விளக்கம்: என் ஆனும் = யாதாகிலும்; ஒன்று = ஒருபொருள்; தம்…

தந்தை பெரியார் 141ஆவது பிறந்தநாள் விழா – குன்னூர்

ஆவணி 31, 2050 செவ்வாய்கிழமை 17.9.2019 தந்தை பெரியார் 141ஆவது பிறந்தநாள் விழா, குன்னூர் காலை 11 மணி – அரசு இலாலி மருத்துவமனை நோயாளிகளுக்கு (100 பேர்) பயனாடை, பல்துலக்கி, பற்பசை வழங்கல் காலை 11 30 மணி – இலாலி மருத்துவமனையிலிருந்து குன்னூர் பேருந்து நிலையம் வரை ‘பிறந்தநாள் விழா ஊர்வலம்’ தலைமை: இராமசாமி (நகரச் செயலாளர், திமுக)பேருந்து நிலையத்தில் கொடி ஏற்றுதல்: வேணு கோபால் (மாவட்டத் தலைவர்) தந்தைபெரியார் படத்திறப்பு: அ.கருணாகரன் (கோவை மண்டலத் தலைவர்) நண்பகல் 12.30 மணி –…

தந்தை பெரியார் 141ஆவது – அறிஞர் அண்ணா 111ஆவது பிறந்தநாள் விழா

ஆவணி 28, 2050 சனிக்கிழமை 14.9.2019தஞ்சாவூர்: மாலை 5.00 – 8.30 மணி  பெசண்ட்டு அரங்கம், தஞ்சாவூர் தந்தை பெரியார் 141ஆவது – அறிஞர் அண்ணா 111ஆவது பிறந்தநாள் விழா – செட்டம்பர் 21, 22 அமெரிக்காவில் நடைபெறும் பெரியார் பன்னாட்டு மாநாட்டில் பங்குபெறும் வழக்குரைஞர் சி.அமர்சிங்கு, அ.கலைச்செல்வி, மா.அழகிரிசாமி ஆகியோருக்குப் பாராட்டுவிழா வரவேற்புரை: பா.நரேந்திரன் (தஞ்சை மாநகரத் தலைவர்)தலைமை: வெ.செயராமன் (தஞ்சை மண்டலத் தலைவர்)முன்னிலை: இரா.செயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்),இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), மு.ஐயனார் (தஞ்சை மண்டலச் செயலாளர்),அ.அருணகிரி (தஞ்சை…

பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2372ஆம் நிகழ்வு

ஆவணி 26, 2050 வியாழக்கிழமை 12.9.2019 மாலை 6.30 மணி பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2372ஆம் நிகழ்வு இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னைசொற்பொழிவாளர்: வழக்குரைஞர் க.அன்பழகன் பொருள்: “சம்மு – காசுமீர் – இலடாக்கு வரலாறு – சிக்கல்கள் – உண்மை நிலை”

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 40 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)  40 உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களர்அனையர் கல்லா தவர் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 406) கல்லாதவர் ஏதோ இருக்கின்றார் என்று சொல்லும் நிலையில் யாருக்கும் பயன்படாத களர்நிலம்போல் இருப்பர் என்கிறார் திருவள்ளுவர். ‘விடுதலையின் மறைபொருள் மக்களைக் கற்றவாராக்குவது; கொடுங்கோன்மையின் மறைபொருள் அவர்களை அறியாமையிலேயே வைத்திருப்பது” என்கிறார்…

மேதகு தமிழிசைக்குப் பாராட்டும் வாழ்த்தும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

மேதகு மரு.தமிழிசை செளந்தரராசனுக்குப் பாராட்டும் வாழ்த்தும் வேண்டுகோளும்! தம் திறமையாலும் உழைப்பாலும் பல படிநிலைகளில் முன்னேறி ஆளுநர் நிலைக்கு வந்துள்ளமைக்குத் தமிழிசைக்கு நம் பாராட்டுகள்! மேலும் பல சிறப்புகள் எய்தி முன்னேற வாழ்த்துகள்! கட்சிச் சார்பற்ற முறையில் அனைத்துத் தரப்பாரின் வாழ்த்துகளைப் பெற்ற ஒரே தலைவராக இவர்தான் இருப்பார் என்பதில் ஐயமில்லை. பா.ச.க.வை வேண்டாதாரும் இவர் ஆளுநர் பதவியில் அமர்ந்ததற்கு மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றனர். தான் மக்கள் மன்றத்திற்குச் செலல வேண்டும் என நீண்ட காலமாக விரும்புவதாகவும் அந்த வாய்ப்பைத் தருமாறும் அண்மைய நாடாளுமன்றத் தேர்தலில்…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 39 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 39 கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 405) கல்லாத ஒருவனின் பெருமை அவன் கற்றவர்முன் பேசும்பொழுது மறைந்து விடும் என்கிறார் திருவள்ளுவர். ‘தகைமை’ என்பதற்கு மதிப்பு, பெருமை, தன்னைப் பெருமையாக எண்ணிக் கொள்ளும் மனப்பான்மை எனப் பல பொருள்கள்…

நாலடி இன்பம் 5 : அறம் அவசரம் – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நாலடி இன்பம் 5 : அறம் அவசரம் நின்றன நின்றன நில்லா எனவுணர்ந் தொன்றின ஒன்றின வல்லே செயின்செய்க; சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன் வந்தது வந்தது கூற்று. பொருள்: உடம்போடு கூடிவாழுமாறு ஏற்பட்ட வாழும் நாட்கள் செல்கின்றன செல்கின்றன; கூற்றுவன் சினந்து விரைந்து வருகின்றான் வருகின்றான்; ஆதலால், நின்றன நின்றன – நிலைபெற்றன நிலைபெற்றனவென்று நினைத்துக்கொள்ளப்பட்ட செல்வப் பொருள்கள், நிலைபெறா என்று உணர்ந்து இசைவான அறச்செயல்களைச் செய்யக் கருதினால் உடன்விரைந்து செய்க. சொல் விளக்கம்: வாழ்நாள் காலத்தில் ஒவ்வொரு நாளும் குறைந்து போய்க்…