படைப்பிற்குப் பொருள் தரும் பாரதிபாலன் கதைகள் – சா.கந்தசாமி

சொல்லப்படும் வாழ்க்கையோடு இணைந்து போகும் மொழி இலக்கியத்தில் ஏற்படுகின்ற மாறுதல்களை பத்துப்பத்து ஆண்டுகளாகப் பிரித்து, பகுத்துச் சொல்வது ஒரு மரபாக இருக்கிறது. அஃது இலக்கியத்தில் ஏற்பட்டு இருக்கிற மாறுதல், புதிய போக்கு, சிந்தனை என்பது சமூகத்தில் ஏற்பட்ட அளவிற்கு இருக்கிறதா என்பதைத் தீர்மானிப்பது வேறு. சில நேரங்களில் இந்தக் கணிப்பு இலக்கியத்தரம் என்பதை விட்டு விட்டு சமூகக் காரணிகளை மட்டும் கணக்கெடுத்துச் சொல்வதாக அமைந்து விடுவதும் உண்டு. மேலும் சமூக மாறுதல், படைப்பு இலக்கியத்திற்குள் அதிகமாக வராமல் இருக்கிறது என்பதைச் சொல்வது மாதிரியும் இருப்பது…

இலக்கியத் தேடல், பாரீசு

ஆவணி 29, 2050 / ஞாயிறு / 15.09.2019 மாலை 5.00 அண்ணாமலைப்பல்கலைக்கழகம் 70, பிலிப்பு தெ கிரார்டு தெரு,  75018 பாரீசு [Annamalai University 70 Rue Phillipe de Girard, 75018 PARIS] இலக்கியத் தேடலின் 13 ஆம் கூட்டம் உரையாளர்:  வழ.அ.குணசேகரன்

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 38 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)  38 கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும் கொள்ளார் அறிவுடை யார். (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 404) கல்லாதவரின் மதிநலம் மிகச் சிறப்பாக இருந்தாலும் கற்றவர் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்கிறார் திருவள்ளுவர். நாட்டை வழிநடத்துவதற்குப் படிக்காதவனின் பட்டறிவு பயனுள்ளதாக இருந்தாலும் கற்றவர்கள் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்கின்றனர் அரசியலறிஞர்கள்….

புதிய கல்விக் கொள்கை – ஒரு பார்வை பக்தவத்சலம் நினைவுக் கருத்தரங்கம்

ஆவணி 28, 2050 சனி  14.09.2019 காலை 9.00 மணி முதல் நண்பகல் 1.00 மணிவரை   செஞ்சிலுவைச் சங்கம் மாண்டியத்து சாலை, எழும்பூர், சென்னை 600 008 வழ.பி.வி.பக்தவத்சலம் 12 ஆம் ஆண்டு நினைவுக் கருத்தரங்கம்

குவிகம் இல்லம் – அளவளாவல் : திரு மந்திரமூர்த்தி அழகு

ஆவணி 22, 2050 ஞாயிறு  08.09.2019 மாலை 5.00 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,  24, தணிகாசலம் சாலை,  தியாகராயர்நகர், சென்னை அளவளாவல் : திரு மந்திரமூர்த்தி அழகு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர் நிலம் பிறர் பிடியில்!

 முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 71 வீதமான நிலங்கள் இன்று படையினர், வனவளத் திணைக்களம் , வனஉயிரிகள் திணைக்களம் , தொல்லியல் திணைக்களங்களின் பிடியில் உள்ளன யாழ்ப்பாணம் – செப்.03, 2019 முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நிலங்கள் மாவட்ட நிருவாகத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத காரணத்தினாலேயே எந்தவொரு வளர்ச்சிப்பணியினையும் முன்கொண்டு செல்ல முடியவில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. சாந்தி சிறீகாந்தராயா தெரிவித்தார். “மாவட்டத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 71 வீதமான நிலங்கள் இன்று படையினர் வனவளத் திணைக்களம், வனஉயிரிகள்…

சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே! 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்.

சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே! 3/3 மேலும் அவர், மறைமலையடிகள் தமிழ் நான்மறை குறித்து விளக்கியதை, “வேதம் என்னும் சொல்லும் தமிழ்ச்சொல்லே. இதற்கு ‘வே’ என்பது முதனிலை. ‘வேய்தல்’ என்னும் சொல்போல பல சொற்கள் இம்முதனிலையில் பல்கின. ‘வேய்தல்’ என்றால் மூடிமறைத்தல் என்ற கருத்து. இது போன்றே வே+அம் இடையில் த் எழுத்துப்பேறு கொண்டு ‘வேதம்’ என்று ஆகி மறைபொருளைக் கொண்டது’ என்னும் பொருளைத் தந்தது. நன்னெறிகளை அறிவுறுத்தியதால் அஃதொரு அறிவு நூல். இருக்கு வேதத்தில் ஒரிடத்தில்…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 37 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)   37 கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லாது இருக்கப் பெறின் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 403) கற்றவர் முன்னிலையில் பேசாமல் இருப்பின் கற்காதவரும் மிகவும் நல்லவரே என்கிறார் திருவள்ளுவர். கல்வியறிவற்றவன் இன்று கேட்கும் வினாவிற்கான விடையைக் கற்றறிந்தவர் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டனர் என்கிறார் அரசியல்வாதியான…

நாலடி இன்பம்-4. மன்னர்களே கவனியுங்கள்!- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நாலடி இன்பம்-4. மன்னர்களே கவனியுங்கள்!   யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச் சேனைத் தலைவராய்ச் சென்றோரும் – ஏனை வினைஉலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட மனையாளை மாற்றார் கொள. பொருள்: யானையின் கழுத்து அழகுபட ஒளிவிட்டு விளங்கும்படி, வெண்கொற்றக் குடை நிழலில் பல படைகளுக்குத் தலைவராய் வெற்றி உலாச் சென்ற அரசர்களும் மற்றதீவினை கெடுக்க, அதன் காரணமாகக் தாம் திருமணம் செய்துகொண்ட மனைவியைப் பகைவர்கள் கவர்ந்து கொள்ளும்படி முன் பெருமித நிலைக்கு மாறான வறுமையாளராகி நிலைகுலைவர். சொல் விளக்கம்: யானை=யானையினது; எருத்தம்=பிடரியில்; பொலிய= ஒளிவிட,…

சிலம்பொலி செல்லப்பனாரின் 92 ஆவது பிறந்த நாள் விழா

புரட்டாசி 09, 2050 / 26.09.2019 வியாழன் மாலை 5.00 இராணி சீதை அரங்கம், அண்ணா சாலை, சென்னை 600 006 அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் சிலம்பொலி செல்லப்பனார் சிலப்பதிகார அறக்கட்டளை இணைந்து நடத்தும் சிலம்பொலி செல்லப்பனாரின் 92 ஆவது பிறந்த நாள் விழா சிலம்பொலி செல்லப்பனார் விருது வழங்கல்

‘திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்’ நூல் வெளியீடு

  ஆவணி 23, 2050 திங்கட்கிழமை 09.09.2019 மாலை 6.00 மணி அன்பகம் அண்ணா மன்றம், தேனாம்பேட்டை பேராசிரியர் மு.பி.பா.வின் ‘திராவிடம் வளர்த்த தமிழ்’  நூல் வெளியீட்டு விழா

புதுமை இலக்கியத் தென்றல் – 799ஆம் நிகழ்ச்சி

ஆவணி 23, 2050 திங்கட்கிழமை 09.09.2019 மாலை 6.30 மணி  அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர் புதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி தொடக்கவுரை: தெ.பொ.இளங்கோவன் சிறப்புரை: தொல்காப்பியப் புலவர் வெற்றியழகன்:   கல்வி