புதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்

புதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் ஆவணி 16, 2050  திங்கள் கிழமை 02.09.2019 மாலை  5.45மணி   பெரியார்  திடல், சென்னை 600007 தொடக்கவுரை: கவிஞர் தஞ்சை கூத்தரசன்               தி.மு.க. மாநில இலக்கிய அணிப் புரவலர் நினைவுரை: அரிமா முனைவர்  த.கு.திவாகரன்

சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே! 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே! 2/3 குற்றமற்ற அறவழிப்பட்டட வேதம் எனக் கூறுவது ஏன்? ஆரிய வேதம் அறிமுகமான காலக்கட்டம் அது. தமிழ் வேதங்கள் அறநெறிகளை மட்டுமே உணர்த்துவன. ஆரிய வேதங்கள் அவ்வாறல்ல. சான்றாக அதர்வண வேதம் நல்ல மந்திரங்களை உடையதாக இல்லை என்று கருதுவதைக் குறிக்கலாம்.  “அதர்வம், வேள்வி முதலிய ஒழுக்கம் கூறாது பெரும்பான்மையும் உயிர்கட்கு ஆக்கமேயன்றிக் கேடும் சூழும் மந்திரங்களும் பயிறலின்” என நச்சினார்க்கினியர் (தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்திணை யியல், நூற்பா 20, உரை)…

நாலடி இன்பம் 3 : தேர்தல் நேரத்துப் பெருஞ்செல்வம்? – இலக்குவனார் திருவள்ளுவன்: மின்னம்பலம்

நாலடி இன்பம் 3 : தேர்தல் நேரத்துப் பெருஞ்செல்வம்? துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்  பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க ; அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும். பொருள்: குற்றமில்லாப் பெருஞ்செல்வம் பெற்றால் ஏர் ஓட்டி பெற்ற உணவைப் பலருடனும் பகுத்துண்க. ஏனெனில் செல்வம் வண்டிச்சக்கரம் போல் மேல் கீழாகமாறி மாறி உருளும். சொல் விளக்கம்: துகள் தீர்=குற்றமற்ற; பெரும்=பேரளவு சொத்து; தோன்றியக்கால்=தோன்றினால் (அஃதாவது தோன்றாமலும் இருக்கலாம்); தொட்டு=அது முதல்;பகடு = எருது; நடந்த=உழுத; கூழ்= உணவை, பல்லாரோடு= பற்பலருடன்;…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 36, – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)  36 கல்லாதான் சொல் காமுறுதல் முலைஇரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றற்று. (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 402) கல்லாதவன் சொல்ல விரும்புதல் கொங்கை இரண்டும் இல்லாதவள் பெண்மையை விரும்புவதுபோன்றது என்கிறார் திருவள்ளுவர். கற்றவர்கள் தங்கள் பேச்சால் பிறரைக் கவர்ந்து சிறப்பு எய்துகின்றனர். தங்கள் உரைகளால் புகழுறுகின்றனர். இதனைப் பார்த்துக்…

சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே! 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன் : தினச்செய்தி

சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே! 1/3 தமிழில் தமிழர்களால் படைக்கப்பட்ட தமிழ் மறை நூல்கள் தொல்காப்பியர் காலத்திற்கு முற்பட்டே இருந்துள்ளன. அதுபோல் தமிழர்களால் தமிழில் படைக்கப்பட்ட தமிழ் வேதங்களும் ஆரிய வேதங்களுக்கு முன்னரே தமிழில் இருந்துள்ளன. சங்க இலக்கியங்கள் இவற்றைக் குறிப்பிட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கு வந்த ஆரியர் தமிழில் சிறப்பாக உள்ள மாந்தரையும் நூல்களையும் பிறவற்றையும் குறிக்கும் தமிழ்ச்சொற்களைத் தாங்கள் உள்வாங்கிக் கொண்டு தமதுபோல் பயன்படுத்தினர். தமிழின் முந்தைய வரலாற்று நூல்கள் கடல்கோள்பட்டும் பிற வகைகளிலும் அழிந்தமையால் தமிழ்…

தமிழ்க்காப்பு உணர்வின் வித்து – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்க்காப்பு உணர்வின் வித்து இலக்குவனார் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் வழியில் தனித்தமிழ் உணர்வை ஊட்டிப் பரப்பிய அறிஞர்கள் பலர் உள்ளனர். ஆசிரியப் பணி மூலமும் இயக்கங்கள் மூலமும் பரப்புரை மூலமும் படைப்புகள் மூலமும் இதழ்கள் மூலமும்  விழாக்கள் மூலமும் போராட்டங்கள் மூலமும் எனப் பலவகைகளில் தனித்தமிழ் பரப்பித் தூய தமிழ்க் காவலராகத் திகழ்ந்தவர் பேராசிரியர் இலக்குவனார்[தோற்றம்:  கார்த்திகை 01,  தி.பி.1940(17.11.1909); மறைவு: ஆவணி 18, தி.பி.2004 (03.09.1973)]  மட்டுமே! அவருக்கு வழங்கிய பட்டங்களும் சிறப்பு அடைமொழிகளும் நூற்றுக்கு மேற்பட்டன.  அவற்றுள், இலக்கணச் செம்மல், சங்கத்தமிழ்…

நாலடி இன்பம்-2 வெறுமனே வைத்திருக்காதே!- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நாலடி இன்பம்-2 வெறுமனே வைத்திருக்காதே! அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் – வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன் றுண்டாக வைக்கற்பாற் றன்று. பொருள்: அறுசுவை உணவை மனைவி அன்புடன் உண்பிக்க, ஒவ்வொரு வகை உணவிலும் மீண்டும் கைப்பிடி அளவேனும் உணவு வேண்டா என்னும் அளவில்சுவையாக நிறைவாக உண்ணும் செல்வரும் வறுமையுற்று ஒரு காலத்தில் இரந்து உண்ண நேரும். எனவே, செல்வத்தை நிலையானதாகக் கருதற்க. சொல் விளக்கம்: அறு சுவை=அறுவகை சுவையாகிய; உண்டி=உணவை; அமர்ந்து=விரும்பி; இல்லாள்=மனைவி; ஊட்ட=ஊட்டிவிட; மறு=மறுக்கப்பட்ட;சிகை=வன்மையான உணவு…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 35, – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப்பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும்      கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)  35 அரங்குஇன்றி வட்டுஆடி அற்றே நிரம்பிய நூல்இன்றிக் கோட்டி கொளல்.  (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 401)  நிறைந்த நூல்களைக் கற்காமல் அவையில் பேசுதல், வட்டாட்டத்திற்குரிய கட்டம் இன்றி வட்டாடுதலைப் போன்றது என்கிறார் திருவள்ளுவர். மக்களாட்சி நல்லது. ஆனால் படிக்காத மன்பதைக்கு அது நல்லதல்ல. ஏனெனில் அதற்கு எவ்வாறு புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாது என்கிறார் தெபாசிசு மிருதா(Debasish Mridha). கல்லாதவர்களை ஆட்சி செய்வது வல்லாண்மையர்க்கு(சர்வாதிகாரிக்கு) எளிது என்கிறார் ஆல்பெர்ட்டோ மங்குவெல்(Alberto Manguel). எனவே எல்லாத்…

பிரித்தானியத் தமிழர் பேரவை- கருத்தரங்கு

ஆவணி 28, 2050 14/09/2019 மாலை 05:00 முதல் இரவு 07:30 மணிவரை மில்டன் கீயின்சு நகர் ( 69 Downs Barn Boulevard, Downs Barn, Milton Keynes, MK14 7NA ) இலங்கைத் தமிழர்களின் அரசியல் சிக்கலின் இக்கால நிலை – கருத்தரங்கம்  இதில் பிரித்தியானியாவிலும் ஏனைய உலக நாடுகளிலும் இலங்கைத் தமிழர்களின் அரசியல் சிக்கலின் இக்கால நிலைபற்றி கலந்துரையாடப்பட இருக்கிறது. அதில் “ஐக்கிய நாடுகள் அவையில் அரசதந்திரர நகர்வுகள்” என்பது முதன்மைக் கருப்பொருளாக இருக்கும். அதனைத் தொடர்ந்து மக்களின் கேள்விக்கான நேரம் கொடுக்கப்படும்.  இறுதியாக…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 34 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப்பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும்      கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)   34 கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:400) ஒருவருக்குக் கேடற்ற சிறந்த செல்வம் கல்வியே ஆகும். கல்வியல்லாத பிற செல்வமல்ல  என்கிறார் திருவள்ளுவர். கல்வியே மிகு உயர் செல்வம்(highest wealth) என்கிறார் இங்கிலாந்து அரசியலறிஞர் ஒருவர். கல்விக்குப் பகைவராலோ, கொள்ளைக்காரர்களாலோ, வெள்ளத்தாலோ இயற்கைப் பேரிடர்களாலோ பகைகொண்ட உறவினராலோ ஆட்சியாளராலோ தீங்கு நேராது. எனவேதான் திருவள்ளுவர் கேடில் விழுச்செல்வம் என்கிறார். பிற பொருள்கள், இவற்றில் ஏதேனும் ஒன்றாலோ பலவாலோ…