பள்ளிகளை ஆரியமயமாக்குவதைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! – கி. வேங்கடராமன்

ஓகக் கல்வி(யோகா) என்ற பெயரால் பள்ளிகளை ஆரியமயமாக்குவதைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வேங்கடராமன் அறிக்கை! கல்வியாளர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட பா.ச.க. அரசின் ‘தேசியக் கல்விக் கொள்கை’யின் பரிந்துரைகளைத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முந்திக் கொண்டு ஒவ்வொன்றாகச் செயல்படுத்தி வருகிறது. ஐந்தாம் வகுப்பு – எட்டாம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு, மாணவர்கள் குறைவாக உள்ள தொடக்கப் பள்ளிகளை மூடுவது, ஒரு மேனிலைப் பள்ளிக்கு அருகில் சில அயிரைப்பேரடி(கிலோ மீட்டர்கள்) தொலைவு வரையிலுள்ள தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளி…

உலகத் தமிழ் நாள், கட்டுரைப் போட்டி, 30 பரிசுகள்

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.(திருவள்ளுவர், திருக்குறள் 666) உலகத் தமிழ் நாள் கட்டுரைப் போட்டி 30 பரிசுகள் தமிழ்க்காப்புக்கழகம் தமிழ்நாடு-புதுவை தமிழ் அமைப்புகளுடன் இணைந்து கார்த்திகை 01 / நவம்பர் 17 அன்று சென்னையில் உலகத் தமிழ் நாள் கொண்டாட உள்ளது. அதை முன்னிட்டுக் கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்த உள்ளனர். விவரம் வருமாறு: தலைப்பு:  உயர்தனிச்செந்தமிழ் மொழியை உலகெங்கும் பரப்புவோம்! தமிழ்நாட்டில் தமிழ் கல்விமொழி, ஆட்சி மொழி,அலுவலக மொழி, வழிபாட்டு மொழி, இசை மொழி, அன்றாடப் பயன்பாட்டு மொழி…

இலக்கியச் சிந்தனை நிகழ்வு 591 + குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 55

ஐப்பசி 12, 2050 செவ்வாய்க் கிழமை 29.10.2019 – மாலை 6 மணி குவிகம் இல்லம் 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை-17 இலக்கியச் சிந்தனை நிகழ்வு 591 “தொண்டரடிப்பொடி ஆழ்வார்” சிறப்புரை :-திரு தேவராச சுவாமிகள் குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 55 கலந்துரையாடல் எழுத்தாளர் உசா சுப்பிரமணியன் அவர்களுடன்

திரும்பி வந்த கார்த்திகை நாளே தீபாவளி ! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திரும்பி வந்த கார்த்திகை நாளே தீபாவளி ! அறிவுக்குப் பொருந்தாக் கதையாக இருப்பினும் தீபாவளியைக் கொண்டாடுவோர் இருக்கின்றனர். அதே நேரம், தீபாவளியை எளிமையாகக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்துவோரும் தீபாவளியைக் கொண்டாடாதவர்களும் உள்ளனர். விசய நகரப் பேரரசான இந்துப் பேரரசு தமிழ்நாட்டில் கி.பி. 15ஆம் நூற்றாண்டு நுழைந்தது. அப்பொழுது முதல்தான் தீபாவளி இங்கே கொண்டாடப்படுகிறது. அவ்வாறு தமிழகத்திற்கு இறக்குமதியான ஒரு பண்டிகைதான் தீபாவளி. நேரடியாகப் புகாமல் இருக்கின்ற விழாவை மாற்றி அமைக்கும் வகையில் புகுந்துள்ளது. பரதகண்டம் முழுவதும் இருந்த கார்த்திகை நாளே தீபாவளியாக மாறியுள்ளது….

பயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

பயிர்அறிவியல் சொல் வளம்   தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை உணர்த்துவதாக உள்ளன. சொற்களே அறிவியலை உணர்த்துகின்றன என்றால் அறிவியல் துறையில்  நம் முன்னைப் பழந்தமிழர் மிகச் சிறந்து இருந்திருக்க வேண்டும் அல்லவா? நாம் மீண்டும் அறிவியலில் சிறந்து விளங்கப் பழந்தமிழ் அறிவியல் வளங்களை அறிந்து புதியன படைக்க வேண்டும். இங்கே நாம் பயிர் அறிவியல் சொற்கள் சிலவற்றைப் பார்ப்போம்.   பயிர் வகைகளை வகைப்படுத்திப் பெயர்கள் சூட்டியுள்ளமையே மிகச் சிறந்த அறிவியல் வளத்திற்கு நாம் உரியவர்கள் என்பதை எடுத்து இயம்புகின்றது….

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, ஈரோடு 2020

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, ஈரோடு 2020 1330 திருக்குறளையும் மலையிலே கல்வெட்டில் பதித்துக் குறள் மலையை உருவாக்க, குறள் மலைச் சங்கமும்,   ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியும்  இணைந்து நடத்தும் மாபெரும் அனைத்துலகத் திருக்குறள் மாநாடு. மாநாடு நடைபெறும் நாள் : மார்கழி 20 & 21-தி.பி.2050; 3.1. 2020 & 4.1. 2020. மாநாடு நடைபெறும் இடம் : வேளாளர் மகளிர் கல்லூரி, திண்டல், ஈரோடு. மாநாடு முடிந்தவுடன் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை குரல் மலையைப் பார்வையிட அனைவரும் அழைத்துச் செல்லப்படுவார்கள். மாநாட்டின்…

சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா? – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா? போர்க்காலத்தின் பொழுது இரு படைத்தரப்பிற்கும் இடையில் நடுநிலையாகச் செயல்பட்டு இரு தரப்பிற்கும் உணவு, மருந்து, பிற உதவிகள் வழங்குவதை இன்றைக்குச் செஞ்சிலுவைச் சங்கத்தினர் செய்கின்றனர். ஆனால்,  இப்பணிகளை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் வேந்தர்கள் ஆற்றி வந்துள்ளனர். அதற்கு ஒரு சான்றுதான் சேரலாதன், ஐவருக்கும் நூற்றுவருக்கும் இடையே நிகழ்ந்த போர் ஒன்றில்  இரு தரப்பாருக்கும் பெருஞ்சோறு வழங்கிய நிகழ்வு.  இதில் குறிப்பிடும் ஐவரும் நூற்றுவரும் பஞ்ச பாண்டவரும் கெளரவர் நூறு பேருமா? அல்லது வேறு மன்னர்களைக் குறிக்கினறதா?…

ஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வேங்கடராமன் அறிக்கை! இராசீவ்காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் சிறையாளிகளாக 28 ஆண்டுகளைக் கடந்தும் சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயசு, செயக்குமார், அருப்புக்கோட்டை இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டுமென்ற தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவைத் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்து ஏற்க மறுப்பதாகச் செய்திகள் வருகின்றன. எழுத்து வடிவில் இல்லையென்றாலும், வாய் மொழியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் புரோகித்து தன்னுடைய இந்த முடிவைத் தெரிவித்து விட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன….

விருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்

ஐப்பசி 02, 2050 சனிக்கிழமை 19.10.2019 சிரீராம் குழும அலுவலகம், மூகாம்பிகை வளாகம் (4 பெண்கள் தேசிகர் தெரு) ஆறாவது தளம், மயிலாப்பூர் சென்னை 600 004 , (சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே) சிறப்புரை : வ.உ.சி.யும் நானும் இரெங்கையா முருகன் நூலகர் – பண்பாட்டு ஆய்வாளர் அன்புடன் வரவேற்கும் அழகிய சிங்கர் 9444113205