கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா

செங்கற்பட்டில் கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா    செங்கற்பட்டு புதிய பேருந்து நிலையம் புது நிருமலா விழா அரங்கில் கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.    இவ்விழாவிற்குத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவர் சேம்சு தலைமை தாங்கினார். பெருமன்றத்தின் காஞ்சி மாவட்டத் தலைவர் ஓவியக்கவி நா.வீரமணி முன்னிலை வகித்தார்.  கவிஞர் சீனி.சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்றார்.     சா.கா.பாரதிராசா எழுதிய ‘சருகின் சத்தம்’ நூலை மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், பட்டிமன்றப் பேச்சாளருமான கவிஞர்…

நவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

நவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்! உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமிழ் நாள் கொண்டாடத் தமிழக அரசு உலகத் தமிழ்நாளை அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனைப்பற்றித் தெரிவிக்கும் முன்னர் ‘இந்தி நாள்’ குறித்து அறிந்து கொள்வோம்! ஒவ்வோர் ஆண்டும் செப்.14 இந்தி நாளாகக் கொண்டாடப்படுகிறது. “இந்திய அரசு இந்தியை அலுவல் மொழியாக, 1949 ஆம் ஆண்டு செப். 14 அன்று ஏற்றது. அதற்காக,  இந்தியை அலுவல் மொழியாக நடைமுறைப்படுத்துவதை ஊக்கப்படுத்துவதற்காக இந்நாள்” என அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் ஆட்சி மொழித் துறை…

ஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

ஆள்வோர் ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி முழு வலிமை கொண்ட வலிமையான ஆட்சியாளராக இருந்தாலும் ஆன்றோர் கூறும் அறிவுரைகளை அல்லது கசப்பான இடித்துரைகளைக் கேட்டு ஆளவேண்டும் என்பதே தமிழர் நெறி. பழந்தமிழ்நாட்டில் இருந்தது குடி தழுவிய கோனாட்சி. அஃதாவது மக்கள் நலம் நாடும் மன்னராட்சி. மன்னர் ஆட்சி புரிந்தாலும் இன்றைய மக்களாட்சியைவிடச் சிறப்பான மக்கள் நலம் நாடும் ஆட்சியே அப்பொழுது நடந்துள்ளது. “தான் வலிமையானவன் அல்லது அதிகாரம் முழுமையும் கொண்டவன் எனக் கருதித் தனக்குக் கூறப்படும் அறிவுரைகளை ஒதுக்குபவன் நல்லாட்சி…

உலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை

திருக்குறள் உலக நூல் – மாநாட்டுக் கால்கோள் விழா நூல்கள் வெளியீட்டு விழா விருதுகள் வழங்கும் விழா நிறுவனர் திருக்குறள் முனைவர் சாந்திமோகனராசு அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை நாள் புரட்டாசி 25, 20501 சனி 12.10.2019 காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

குவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்

புரட்டாசி 26, 2050 ஞாயிறு 13.10.2019 மாலை 5.00 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்

கீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்

கீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன் கீழடியைச் சிறப்பிப்பதாகக் கருதித் தமிழின் தொன்மையைக் குறைத்துக்காட்டக் கூடாது என்றும் தமிழின் தொன்மைச் சிறப்பை வெளியே கொணரத் ‘தமிழ் நில அகழாய்வு ஆணையம்’ அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கீழடி குறித்து ‘வணக்கம் தமிழன்’ என்னும் ‘தமிழன் தொலைக்காட்சி ‘நிகழ்ச்சியில் நெறியாளர் பாண்டியனுடன் உரையாடுகையில் இலக்குவனார் திருவள்ளுவன் தெரிவித்த கருத்துகளுக்கான காணுரை இணைப்பு

குவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு

வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் குவைத்தில் வெளியீடு புரட்டாசி 17, 2050 / 04.010.2019. மாலை ‘கல்தா’ திரைப்படப் பாடலின் இசை வெளியீடு மிகச் சிறப்பாக அரங்கம் நிறைந்த குவைத்து வாழ் தமிழர்களின் முன்னிலையில் பல ஆடல் பாடல் நிகழ்ச்சிகளோடு நடந்தேறியது. இத்திரைப் படத்தின் இயக்குநர் திரு. அரி உத்திரா, ஏற்கெனவே தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும் எனும் இரண்டு சமூகப் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகனாகச் சிவநிசாந்து, கதாநாயகியாக அயிரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தக் கல்தா திரைப்படத்தின் “கண்ணான கண்ணுக்குள்ள”…

நாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்!- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்! கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப் பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் – மணங்கொண்டீண்டு உண்டுண்டுண் டென்னும் உணர்வினால் சாற்றுமே டொண்டொண்டொ டென்னும் பறை. (நாலடியார் பாடல் 25) பொருள்: உறவினர் கூட்டமாகக் கூடிநின்று கூவி அழ, பிணத்தைத் தூக்கிக்கொண்டு சுடுகாட்டில் இடுபவரைப் பார்த்தும், திருமணம் செய்துகொண்டு, இவ்வுலகில் உறுமுயதய் ‘இன்பம் உண்டு, இன்பம் உண்டு’ என்று மயங்குபவனுக்கு, ‘டொண் டொண் டொண்’ என ஒலிக்கும் சாப்பறையானது, இவ்வுலக வாழ்க்கையில் இத்தகைய இன்பம் இல்லை (யாக்கை நிலையில்லை)…

கலைமகள் ஒளவையார் திருவிழா, திருவையாறு

புரட்டாசி 20, 2050 / 07.10.2019 திங்கள் காலை 9.00 முதல் இரவு 8.00 ஒளவைக் கோட்டம், திருவையாறு ஒளவையின் மின் எழில் திருத்தேர் உலா காந்தியடிகள் கவிதாஞ்சலி, நூல் வெளியீட்டு விழா, தலைமை அமைச்சர், அமைச்சர்கள் பொறுப்பேற்கும் விழா, ஒளவை விருது வழங்கு விழா, நாட்டுப்புற ஆடற்கலை

ஆர்சாவில் தமிழக இளைஞருக்கு விருது

ஆர்சாவில் தமிழக இளைஞர் சே.ஆசிக்கு அகமது விருது பெற்றார்! ஆர்சா இந்தியச் சங்கத்தில் நடந்த ஓணம் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணத்தைச் சேர்ந்த இளைஞர் சே.ஆசிக்கு அகமது பொது நலச் சேவைக்கான விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். சே.ஆசிக்கு அகமது திருச்சி சமால் முகம்மது கல்லூரியில் இளநிலை வேதியியல் பட்டம் பயின்றவர். தற்போது சார்சாவில் உள்ள குவைத்து மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது பணியின் ஒரு பகுதியாக எதிர்பாராத நிலையில் மரணமடைபவர்களின் குடும்பத்தினருடன் இணைந்து பணியாற்றி சார்சாவில் நல்லடக்கம் செய்யவோ சொந்த…

கீழடி உரை: திரு இலக்குவனார் திருவள்ளுவன், ஒளிபரப்பு 7/10 இல் காலை 9.00-9.30

புரட்டாசி 19, 2050 / 7.10.2019 காலை 9.00-9.30 கீழடி குறித்து உரை: திரு இலக்குவனார் திருவள்ளுவன்  நெறியாளர் திரு பாண்டியன் தமிழன் குரல் நிகழ்ச்சி தமிழன் தொலைக்காட்சி

இலக்கிய அமுதம் : கோமல் சுவாமிநாதன் – இந்திரன்

புரட்டாசி 19, 2050 / ஞாயிறு / 6.10.2019  மாலை 5.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர் நகர், சென்னை 600 017 இலக்கிய அமுதம் – கோமல் சுவாமிநாதனும் அவரது சுபமங்களாவும் : இலக்கியத் திறனாய்வாளர் இந்திரன்