நாலடி இன்பம்! -15 ஒரு பறை: ஈர் இசை! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நாலடி இன்பம்! -15 ஒரு பறை: ஈர் இசை! மன்றம் கறங்க மணப்பறை யாயின அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் – பின்றை யொலித்தலு முண்டாமென் றுய்ந்துபோ மாறே வலிக்குமாம் மாண்டார் மனம். (நாலடியார் பாடல் 23) பொருள்: திருமண மன்றத்தில் முழங்கிய மணப்பறைகளே அன்றைக்கே மணமக்களில் ஒருவருக்குப் பிணப்பறையாய் ஒலிக்கவும் கூடும். இதனை உணர்ந்த பெரியோர்கள் மனம் தீமைகளில் இருந்து பிழைத்துப்போகும் வழியை எண்ணும். சொல் விளக்கம்: மன்றம்=பொதுவெளியில் அல்லது அவையில்; கறங்க=முழங்க; மணப்பறை ஆயின= மணக்கோலத்திற்கான பறைகள்; அன்று=அன்றைக்கே; அவர்க்கு=அம்மணமக்களுக்கு; ஆங்கே= அவ்விடத்திலேயே,…

தற்பாலுறவு இன அழிப்பிற்குத் திறவுகோல் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

தற்பாலுறவு இன அழிப்பிற்குத் திறவுகோல் நல்லொழுக்க உறவு என்பது ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே இருவரின் விருப்பத்தால் ஏற்படும் காதல் உறவுதான். மாறான உறவுகளைச் சில நாடுகளில் சட்டம் ஏற்றுக் கொண்டாலும் அந்த வரிசையில் இந்தியாவும் இடம் பெற்றாலும் இல்லறம் போற்றும் நம் நாட்டில் இது நல்லறமல்ல! ஆணுக்கும் ஆணுக்குமிடையே அல்லது பெண்ணும் பெண்ணுக்குமிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு அடிப்படையிலான உறவு ஓரினச்சேர்க்கை, தற்பால்சேர்க்கை, தன்பாலினப்புணர்ச்சி, ஒரு பாலீர்ப்பு, சமப்பாலுறவு, தன் பாலீர்ப்பு (Homosexuality) எனப் பலவகையாகக் குறிக்கப் பெறுகிறது. தம் பாலினத்தைச் சேர்ந்தவர்களைக் காமுறுதல்,…

வெகுளி கணமேயும் காத்தல் அரிது – யாருக்கு? – இலக்குவனார் திருவள்ளுவன்

வெகுளி கணமேயும் காத்தல் அரிது – யாருக்கு? – இலக்குவனார் திருவள்ளுவன் 0000000000000000000000000000000000000000000000000000000000000000 மூன்றாவது  அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, புது தில்லி புரட்டாசி  06-07, 2050 *** 23-24.09.2019 0000000000000000000000000000000000000000000000000000000000000000 மூன்றாவது உலகத்திருக்குறள் மாநாட்டின் மையப்பொருள் உலக அமைதியும் நல்லிணக்கமும் என உள்ளது. இவ்விலக்கை எட்டுவதற்கான அடிப்படையாக இருப்பது சினம் தவிர்த்தல் என்பதாகும். எனவே, சினத்துடன் தொடர்புடைய ஒரு தலைப்பில் கட்டுரை அளிக்கின்றேன். தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் பலராவர். சிற்சில இடங்களில் அல்லது பல இடங்களில் திருவள்ளுவர்  கருத்திற்கு மாறான உரையை…