விருட்சம் இலக்கியச் சந்திப்பு 52

ஐப்பசி 30, 2050 / சனி / 16.11.2019 / மாலை 6.00 தலைப்பு: நாகலட்சுமி சண்முகம் மொழிபெயர்ப்பில் இயூவால் நோஃகா அராரி(yuval noah harari)யின் மாந்தர் (sapiens) சிறப்புரை :   எழுத்தாளர் சா கந்தசாமி (சாகித்திய அக்காதெமி விருதாளர்) ஆறாவது தளம் , மூகாம்பிகை வளாகம்,      சி பி இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே,   மயிலாப்பூர்      சென்னை 600 004 வரவேற்பில் மகிழும் அழகியசிங்கர் 9444113205

இலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்

கார்த்திகை 01, 2050 / 17.11.2019 முற்பகல் 11.00 குவிகம் இல்லம், 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,,24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை சிறப்புரை: என் எழுத்தும் நானும்: திருவாட்டி தேவி நாச்சியப்பன் தொடர்பிற்கு:  அ.இராமச்சந்திரன் 044 24918096, எசு.கிருபானந்தன் 9791069435

திருவள்ளுவரை மதச்சிறையில் தள்ளாதீர்! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரை மதச்சிறையில் தள்ளாதீர்! “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு“ என்கிறார் பாரதியார். “வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” என்கிறார் பாரதிதாசன். ஆனால், இன்றைக்கு வையகப் புகழுக்குக் காரணமான வள்ளுவரை இழிவுபடுத்திச் சிலர் தமிழ்நாட்டை நாணிக் குனிய வைக்கின்றனர். திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீசுவதாலோ சாதி, சமய அடையாளங்களை அவர் மீது திணிப்பதாலோ களங்கம் திருவள்ளுவருக்கு இல்லை. ஈனச் செயல் புரிவோருக்குத்தான் இழிபிறவியர் என்ற களங்கம். ஆதலின் அத்தகையோர் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் திருந்தாவிட்டால் இத்தகையோரை…

மின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்

பேரா.சி.இலக்குவனாரின்  110ஆவது பெருமங்கலத்தை முன்னிட்டு மின் ஆய்விதழ் ‘செந்தமிழியல்’ வெளியீடு எதிர்வரும் கார்த்திகை 01, 2050 / 17.11.2019 தமிழ்மொழி மீட்புப் போராளி  செந்தமிழ்க் காவலர்  பேராசிரியர் சி.இலக்குவனார் ஐயா அவர்களின் 110ஆவது பிறந்தநாளாகும். இவர் தமிழறிஞர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர். மொழியியல், இலக்கணம், தொல்காப்பிய ஆராய்ச்சி, திருக்குறளாராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு பொருள்களில் நிறைய நூல்கள் இயற்றியுள்ளார். ஐயாவின் பிறந்தநாள் முன்னிட்டு உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் ‘செந்தமிழியல்’ எனும் பன்னாட்டுத் தரப்பாட்டு வரிசை எண்ணிற்கு இணங்க மின்னிதழ்…

விக்கிப்பீடியாக் கட்டுரைப் போட்டி : தொடர்தொகுப்பு நிகழ்வு

ஐப்பசி 24, 2050  ஞாயிறு   நவம்பர் 10,  2019 நேரம் – காலை 10.00 – மாலை 5.00  (இதற்கிடையே வரலாம்) இடம்:  பயிலகம், மென்பொருள் பயிற்சி நிறுவனம், 7, விசயா நகர் முதல் முதன்மைச் சாலை, பூங்காவுக்கு எதிரில், வேளச்சேரி, சென்னை 600042   நிகழ்ச்சி நிரல்: போட்டி அறிமுகம்  போட்டி தொடர்பான வழிகாட்டல் கொடுத்துள்ள தலைப்பில் கட்டுரை உருவாக்கம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு தமிழ்க் களஞ்சியத்தை வெற்றி பெற வைக்கவேண்டுமா? இப்போதே முன்பதிவு செய்யுங்கள். https://forms.gle/RyAg2S5TmxC4ZfPW8 வலைப்பதிவு: https://tamilwikipedia.blogspot.com/2019/10/project-tiger-writing-contest.html புள்ளிவிவரம்: https://tools.wmflabs.org/neechal/tigerarticle.html

அளவளாவல்: ஐந்து கதைகள்

ஐப்பசி 24, 2050  ஞாயிறு   நவம்பர் 10,  2019 மாலை 5.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 அளவளாவல்: ஐந்து கதைகள் இணைதல் மண்ணின் ஓசை மணல்குடம் மீட்சி சிறைப்பட்டவன் திறனாய்வாளர் ஐவர் கிரிசா பாசுகர் சாய் சுந்தரி நாராயணன் ந.பானுமதி இலதா இரகநாதன் சங்கர் தெலுங்கில் வெளிவந்த ‘விமுக்தா’ நூலிற்கும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பான ‘மீட்சி ‘நூலிற்கும் 2015 ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.

தமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

தமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப் பொருட்படுத்தாதவர்களால்தான் தமிழ், மக்கள் பயன்பாட்டில் இருந்து குறைந்து வந்தது. இப்பொழுது விரைவாகவே குறைகிறது. பிற மொழிச் சொற்களைக் கலந்ததால்தான் நாவலந்தீவு முழுவதும் இருந்த தமிழ் இன்றைக்குத் தமிழ்நாட்டில் அங்கும் இங்குமாகப் பயன்படுத்தப்படும் சிறுமை நிலைக்கு வந்து விட்டது. பிறமொழிச் சொற்களின் ஒலிப்பிற்காகப் பிற மொழி எழுத்தொலிகளைத் தமிழ் நெடுங்கணக்கில் புகுத்தியதால்தான் தமிழில் இருந்து புதுப் புது மொழிகள் தோன்றும் நிலை வந்தது. இந்நிலையின் வீச்சைத் தடுத்துக் காப்பாற்றி வருபவர்களில் தனித்தமிழ்க்கடல்…

குவிகம் இல்லம் – அளவளாவல் : ஏ.பாசுகர்

ஐப்பசி 17, 2050 ஞாயிறு 03.11.2019 மாலை 5.00 மணி குவிகம் இல்லம் 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை அளவளாவல் : பரிக்குசா, யவனிகா நாடகக் குழுக்களிலும் படைப்பு வட்டத்திலும் குறிப்பிடத்தகுந்த பங்காற்றி வரும் திரு ஏ.பாசுகர்