திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 1/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்

திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 1/4 1.0.0.நுழைவாயில்             “குற்றங்களைப் பெற்றெடுக்கும் நற்றாய், வறுமை”  என்பார் கிரேக்க அறிஞர் அரிசுடாட்டில். தீமைகளுக்கு எல்லாம் மூல காரணம் வறுமையே [Poverty is the root cause of all evils] என்பது வறுமை பற்றிய ஓர் அருமைப் பொன்மொழி; ஒரு நன்மொழி.             இந்த நூற்றாண்டிலும் வறுமையின் விளைவுகளாகத் தற் கொலைகள், பட்டினிச் சாவுகள், குழந்தைச் சாவுகள், கொடிய நோய்கள் போன்ற பல்வேறு கொடுமைகள் உலகில் சில நாடுக ளில் நிகழ்கின்றன என்பது வெட்கக்…

மகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்

மகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் கோடை விடுமுறைக் கொண்டாட்டங்கள் மகுடை(கொரோனா) விடுமுறைத் திண்டாட்டங்கள் அலுவலகம் செல்லாமல் அறையில் முடங்கிக் கிடக்கும் அப்பா அடுப்பங்கரையில் விடுமுறை இன்றி உழைத்துக் கொண்டிருக்கும் அம்மா ஓயாமல் உளறிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி தேர்வு தொலையட்டும் என வேண்டாத தெய்வமில்லை வேடிக்கை பார்க்கும் புத்தகங்கள் வெளியில் செல்லலாம் என்றால் விரட்டுகிறது அரசாங்கம் முடங்கிக் கிடக்க சொல்லி முழங்குது தொலைக்காட்சி சிறகின்றிப் பறக்கும் கிருமி சிறையில் மக்கள் விடுமுறையிலும் ஒவ்வொரு வீடும் உயிர் விலங்குப் பூங்கா காப்பாற்றச்சொல்லிக் கதறினோம் கை கழுவி நகர்ந்தது அடுத்த அவசரச்…

தமிழனே சொந்தக்காரன்! – ஆற்காடு க.குமரன்

தமிழனே சொந்தக்காரன்! வந்தாரை இருகரம் நீட்டி வரவேற்ற தமிழன்! வந்தார்கள் வென்றார்கள் கொன்றார்கள் வாய்க்கரிசி, வரவேற்க நீட்டிய கைகளில்! வாழ வந்தவனை வாழ வைத்து விட்டு வாழ வந்தவனிடம் வாழ வழி கேட்கும் வக்கற்ற தமிழனே! என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் எடுத்துச் செல்பவன் பாடுகிறான் இருப்பவன் சுவைக்கிறான்! பிழைக்க வந்தவனால் பிழைப்பை இழந்து பிழைக்க வந்தவனிடம் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர் கூட்டம் சுவைத்துச் சுவைத்து நசிந்து போனவன் தமிழன் கைதட்டி தன் கைவரிகளைத் தொலைத்தவன் தமிழன் பொழுது போக்குகளில் வாழ்நாள் பொழுதைப்…