சங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்

சங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத் தமிழ்த் தொண்டாற்றுபவர் சங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசா. அன்றைய மதுரை /இன்றைய தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி என்னும் சிற்றூரில் சித்திரை 17, 1974 / 30.04.1943 இல் பிறந்தவர்; தமிழ் வளர்ச்சிக்கான அரும்பெரும் பணிகளை ஆற்றி வருகிறார். ஆசிரியர் ப.பரமசிவத்திற்கும் ஆசிரியை ஞா.பொன்னுத்தாய்க்கும் திருமகனாகப் பிறந்ததால் ஆசிரியப்பணியில் இயல்பாகவே நாட்டம் கொண்டார். ஆசிரியக் குடும்பத்தைச் சேர்ந்த ஆசிரியரான இவரின் வாழ்க்கைத்துணைவி திருவாட்டி சு.வனசாவும் இளம்…

புதை நூல் – தமிழரசி இளங்கோவன்

புதை நூல்             “மங்களத்து நாயகனே, மண்ணாளும்..”, என்ற அம்மாவின் பக்திக் குரல் தூபம் காட்டியவாறே வீட்டை வலம் வந்தது. வீடே புகை சூழ இருந்தது.      ‘டப்,டப்,டப்..’, என்று கோழித் தீனியைக் கொத்துவது போல் கமலாவின் அறையிலிருந்து ஒலி எழும்ப, அம்மா, கமலா அறையின் கதவைத் திறந்து தூபம் காட்டும் பெயரில் அறையையும் விட்டு வைக்காமல் ஒரு வலம் வந்தார். கண்கள் கமலாவின் கணினியை வலம் வந்தது.      செய்தி கமலா அப்பாவின் காதுக்கு எட்ட, “கமலா, கமலா!”, என்று அழைத்தார். தோழியோடு…

“மதுக்கடைகளை நிலையாக மூடுக” மகளிர் ஆயம் வேண்டுகோள்!

“மதுக்கடைகளை நிலையாக மூடுக” மக்கள் முழக்கமாகட்டும் ! மகளிர் ஆயம் வேண்டுகோள்! மகுடை(கொரோனா) ஊரடங்கால், தமிழ்நாட்டில் அரசுசாராயக் கடைகள் கடந்த மார்ச்சு மாதம் 27-இலிருந்து ஒரு மாதமாக மூடிக்கிடக்கின்றன. அன்றாடம் குடித்துப் பழகிப் போனவர்கள் 90 விழுக்காட்டினர் ஒரு மாதமாகக் குடிக்க வழியில்லாமல், குடிக்காமல் இருந்து பழகிவிட்டார்கள். குடிகாரர்களில் பத்து விழுக்காட்டினர் மட்டுமே தவறான வழிகளில் சாராயத்திற்கு மாற்றாக வேறு தயாரிப்புகளைக் குடித்திருப்பார்கள். அரசுக் கடைகள் திறந்திருந்த போது, பள்ளி, கல்லூரி மாணவர்களும் குடித்துச் சீரழிந்தார்கள். அவர்களும் இப்போது 1 மாதமாகக் குடிக்கவில்லை. எனவே இது…

கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு! இவரும் தவறு! – இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துக் கதிர் 1.20 அவரும் தவறு! இவரும் தவறு! மகுடைத் தொற்றுத் தடுப்பு தொடர்பாக  அனைத்துக்கட்சிக்கூட்டத்தைக் காணுரை மூலமாக நடத்த வேண்டும்  என எதிர்க்கட்சித்தலைவர் மு.க.தாலின் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார். பிற எதிர்க்கட்சியினரும் அவ்வாறுதான் வேண்டிவருகின்றனர். ஆனால் முதல்வர் தேவையில்லை என மறுத்து வருகிறார். அதற்காக அவரும் பிற அமைச்சர்களும் லும் காரணங்கள் சரியில்லை. எதிர்க்கட்சித்தலைவர் ஆட்சியில் இருந்தவர். சட்டமன்ற உறுப்பினர், மாநகரத் தலைவர், அமைச்சர், துணை முதல்வர்,  எனப் பல பொறுப்புகளை வகித்தவர். இப்பொழுதும் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் எதிர்க்கட்சித்தலைவர்…

ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்! கேட்டாரையும் கேளாரையும் பிணிக்கும் நாவரசர் ஒளவை நடரசான் அவர்களின் எண்பத்தைந்தாவது பிறந்தநாள் பெருமங்கலம் இன்று(24.04.2020). அவரிடம் அலைபேசியில் பேசும் பொழுது “புதுச்சொல் புனையும் திறனாளர் பல்லாண்டு வாழ்க” என வாழ்த்தி மகிழ்வித்தார். நான், மதுரையில் உள்ள தியாகராசர் நன்முறை உயர்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயின்ற பொழுது அவர் ஒரு நிகழ்ச்சிக்கு வந்து உரையாற்றினார். அவருடைய தம்பி மெய்கண்டான்,(இப்பொழுது குழந்தைகள் நரம்பியல் மருத்துவ வல்லுநர் முனைவர் ஒளவை மெய்கண்டான்) என்னுடன் படித்தார். மிகவும் சிரிப்பாகவும் கல்வியை வலியுறுத்தியும் சிறப்பாக…

கவனிக்கப்படாத கவிஞர் சடையப்பன் – கே.சீவபாரதி

கவனிக்கப்படாத கவிஞர் சடையப்பன் ஊருக்குள் செருப்பு போட்டுச் செல்லக் கூடாது; தலையிலோ தோளிலோ இருக்க வேண்டிய துண்டு கக்கத்தில்தான் இருக்க வேண்டும்; உயர் சாதியினரைக் கண்டால், அவர் இளம் வயதினராக இருப்பினும் குனிந்து பணிந்து வணங்க வேண்டும்; உயர் சாதியினர் எவரேனும் இறந்து விட்டால், அந்தத் துயரச் செய்தியை இறந்தவர்களின் உறவினர்கள் வாழும் பிற ஊர்களுக்குச் சென்று சொல்ல வேண்டும். இப்படித்தான் அந்தச் சேரி வாழ் மக்களை உயர்சாதியினர் நடத்தி வந்தனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் ‘சக்கிலிப் பட்டி’ என்ற சிற்றூர்ச் சேரியில்…

கனலே சொரியும் கவியே! – அரிஅரவேலன் யரலவழள

கனலே சொரியும் கவியே!  பாவேந்தர் மெய்ப்புகழ் வண்ணம் தனனே தனன தனனே தனன தனனே தனன தனனே தனன தனனே தனன தனனே தனன தனதனனே   அனலே பொழியும் மொழியே இதழில் உளதோ எனயெம் உளமே வியக்க வளமே விளையும் ஒலியே உறையும் உளந்தனிலே இனமே உயர எழிலே உலவ கனலே சொரியும் கவியே தமிழில் தினமே புனையும் திருவே எந்தம் கனகசுப்பே புயலே எழில்மிகு  வடிவே எடுத்தெம் புயமே துடிக்கும் படிநீ வடித்த கவியே தமிழின் முடியே எனயாம் திளைத்தனமே வளமே…

பனிப்பூக்கள் 2020 சிறுகதைப்போட்டி – வெற்றியாளர் அறிவிப்பு

பனிப்பூக்கள் 2020 சிறுகதைப்போட்டி வெற்றியாளர் முதலாவது பரிசு –  பானுமதி கண்ணன் எழுதிய ‘அப்பா’ இரண்டாம் பரிசு –  விக்கினேசுவரன் எழுதிய ‘நிழல் படங்களும் … நிசச் சடங்களும்’ மூன்றாம் பரிசு –  புதுவைப் பிரபா  எழுதிய ‘இங்கேயும் .. இப்போதும்’     பரிசு பெறாது போன சிறுகதைகள் அனைத்துமே எதோ ஒருவகையில் மிகவும் சிறப்புடன் இருந்தாலும் நூலிடையில் மிகவும் குறுகிய புள்ளி இடைவெளியில் வெற்றி வாய்ப்பை இழந்தன. ஆகவே, உலக அளவில் பங்கேற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் பாராட்டுகள்! வாழ்க தமிழ்! வளர்க…

மரம் தான் காற்றின் தாய்! – வித்தியாசாகர்

மரம் தான் காற்றின் தாய்! -எனது அண்ணன் தம்பிகள்அக்காத் தம்பிகள் போல அருகாமைமரங்களும் உறவு மிக்கவை மரங்களிடம் பேசுங்களேன்மரங்களும் பேசும்மரங்களின் மொழி மனத்தின் மொழியாகும் மனத்தின் மொழி மறந்தோரேமரங்களை வெட்டுகையில்வீழ்வது மரங்கள் மட்டுமல்ல நாமும் தானே? உங்களுக்குத் தெரியுமாமரங்கள் தான் நமக்கு முன்னோர் மரம் தான் நமக்குக் கூடுமரம் தான் மேசைமரம் தான் ஆடைமரம் தான் பாடையும்; நமக்கு முதலெழுத்தும்கடையெழுத்தும் மரம் தான் மரம் தான் நமக்கு எல்லாம்மரம் தான் வீடுமரம் தான் மேளம்மரத்தால் தான் நமக்குக் கவிதையும் வாசிக்கக் கிடைக்கிறது, உயிரென்பது காற்று எனில்மரம்…

காலத்தின் குறள் பெரியார் : 11 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

(காலத்தின் குறள் பெரியார் : 10 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி காலத்தின் குறள் பெரியார் அதிகாரம் 11.ஆட்சி 1.அறியாமைத் தீவளர்த்து ஆதிக்கம் புரிவார்   புரியாமல் வாழ்வாய்நீ வீண். 2.மக்களைப் பேணாமல் மாக்களைப் பேணுதல்   மக்களாட்சி என்னல் இழிவு. 3.வெள்ளையர் கொள்ளையர் செய்த உடன்படிக்கை   மக்களாட்சி மாற்றுப் பெயர். 4.உணவுஇடம் ஓர்ஆடை இல்லார் இருப்பை   உணராத ஆட்சி எதற்கு.    5.கெடுதலைச் செய்யும் அரசின்கீழ் வாழ்ந்தால்   விடுதலை மாந்தரா நாம்.       6.இப்பொறுப்பால் தான்வாழ…

குவிகம் இணைய அளவளாவல் – எது இலக்கியம்?

சித்திரை 06.2051 / 19.04.2020 / மாலை 06.30 குவிகம் இணைய அளவளாவல் – எது இலக்கியம்? நெறியாளர் – மரு.பாசுகரன் பங்கேற்போர் பானுமதி + அழகிய சிங்கர் +  சதுர் புசன் + இராய செல்லப்பா + இராசேசு +  மந்திர மூர்த்தி +  எசு.வி.வேணுகோபால் கூட்ட அ.எ.: 619 157 9931 நிகழ்வினைக் கேட்க விரும்புபவர்கள் கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கவும்.  கடவுச்சொல் (password) தேவையில்லை   நிகழ்வில் கலந்துகொள்ள இணைப்பு :-    https://us04web.zoom.us/j/6191579931 உள் நுழையும்போது தங்கள் பெயரினைத் தெளிவாகக் குறிப்பிடவும்…

மணம் ஆகாமலே மணவிலக்கு! – ஆற்காடு.க.குமரன்

மணம் ஆகாமலே மணவிலக்கு!   நினைவுகளைக் காவலுக்கு வைத்துவிட்டு நீயெங்கு சென்றாயடி…….?   நிழலாய்த் தொடரும் உன் நினைவுகளால் உழலுகிறேன் நீங்காது…..   காவல் காக்கும்  உன் நினைவுகள் கல்லறை வரை காத்திருக்கின்றன மீட்க வரவில்லை மீளாத்துயரில் ஆழ்கின்றன!   நினைவுகளை அடைமானம் வைத்து விட்டு வெகுமானம் தேடி நீ சென்றது  காதலுக்கு அவமானம!   நினைவுப் பிள்ளையோடு கைம்பெண்ணாய் காத்திருக்கிறேன் மணம் ஆகாமலே மணவிலக்கு பெற்ற நீ விரும்பிய காதலன்!.   இவண் ஆற்காடு.க.குமரன் 9789814114

1 2 4