எழுக தமிழா! – கருங்கல் கி. கண்ணன்

எழுக தமிழா! எங்கே தமிழா! உன் தமிழ் எங்கே! உன் முன்னெழுத்து எங்கே! உன் வீரம் எங்கே! உன் விவேகம் எங்கே! உன் பண்பாடு எங்கே! உன் பழக்கவழக்கம் எங்கே! இனிக்கும் தமிழ் வார்த்தை எங்கே! மயக்கும் தமிழ் எழுத்துகள் எங்கே! தமிழனின் இலக்கணப் பெட்டகங்கள் எங்கே! அங்கிருந்த எம் தாத்தன் நூல்கள் எங்கே! கலாச்சாரத்தைச் சாற்றும் உடை எங்கே! காதலைக் கூறும் முறை எங்கே!… கழனியில் உழவுசெய்யும் வேளாண்மை எங்கே? காற்றை அறிந்து கலம் செலுத்திய உத்தி எங்கே? மங்கையரை வணங்கிய பாங்கு…

“தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார்” நூலை இரு நாள் இலவயமாகத் தரவிறக்கம் செய்யலாம்.

“தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார்” நூல்இரு நாள் இலவயமாகத் தரவிறக்கம் செய்ய வாய்ப்பு! “தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் என்னும் நூல் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனாரால் எழுதப்பெற்றது. இது குறித்து அவர், தம் வாழ்நாளெல்லாம் தமிழ்நலனுக்காகப் போராடிப் புகழுடல் எய்திய செந்தமிழரிமா சி.இலக்குவனார் அவர்களின் தமிழ்ப்பணி இன்னும் முறையாகப் போற்றப்படவில்லை. 2013-ஆம் ஆண்டு நாடெங்கும் தமிழியக்க நூற்றாண்டு விழாக்கள்  நடத்தியவேளையிலும் அவ் விழாக்களில் அவர் புறக்கணிக்கப்பட்டார்.தெளிந்த அறிவுக்குத் தமிழ்நாட்டில் பஞ்சம் என்பதே காரணம். முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இத்தகைய தவறு நேரவிருந்தது. மன்னை நடராசன்…

தமிழில் பிறமொழிக் கலப்பு 1/4 : மறைமலை அடிகள்

(தனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள் 3 இன் தொடர்ச்சி) தமிழில் பிறமொழிக் கலப்பு 1/4     இந் நிலவுலகிற் பழமைக் காலந் தொட்டு இன்றுகாறும் வழங்கிவரும் மொழி தமிழ் ஒன்றேயாம் என்பதை முன்னர் ஒருமுறை விளக்கிக் காட்டினாம். மற்றை மொழிகளிற் சில பன்னூறாண்டுகட்கு முன்னே இறந்துபோயின, பல சின்னூறாணடுகளாகவே தோன்றி நடைபெறுகின்றன. சில பழமையாகி இறந்தன. பல புதுமையுற்றுப் பிறந்தன. பழமையும் புதுமையும் ஒருங்குடைய ஒரு மொழியை அவற்றினிடத்தே காண இயலாது. மற்று தமிழ் மொழியோ பழமைக்குப் பழமையுமாய்ப் புதுமைக்குப் புதுமையமாய்த் தன் இயல்பு…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 8

(அகல் விளக்கு – மு.வரதராசனார்: 7 தொடர்ச்சி) அகல் விளக்கு : 8 வீட்டுத் திண்ணை மேல் ஏறி நின்று கொண்டு காற்றாடியைச் சிறிது விட்டுப் பார்த்தேன். இரவெல்லாம் அடித்த மேல் காற்று நின்று விட்டிருந்தது. திண்ணையை விட்டு இறங்கித் தெருவில் நின்று காற்றாடியை விட்டு மெல்ல மெல்ல நூலை விட்டவாறே சிறிது ஓடினேன். காற்றாடி உயர எழுந்து பறந்தது. என் உள்ளமும் உயர்ந்து பறந்தது. வடக்கு நோக்கி மெல்ல நடந்து நூலை உயர விட்டுச் சென்றேன். எதிரே ஒரு குதிரை வண்டி வரவே,…

கல்விச் சிந்தனைகள் – 2/3 : தவத்திரு குன்றக்குடி அடிகளார்

 (கல்விச் சிந்தனைகள் 1/3  இன் தொடர்ச்சி) (20-3-94 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை) கல்விச் சிந்தனைகள் – 2/3 இன்று அறிவியல் என்ற பெயரில் வரலாறு, இலக்கியம், தத்துவம் ஆகிய துறைகள் புறக்கணிக்கப் படுகின்றன. ஆதலால், இன்றைய மனிதன் நாகரிகத்தை இழந்து காவல் நிலையங்களின் வளர்ச்சிக்கும், சிறைக் கூடங்களை நிரப்பவுமே உரியவர்களாகி விட்டார்கள். கடந்த சில ஆண்டு களில் காவல் நிலையங்களின் வளர்ச்சியே குற்றங்களின் வளர்ச்சிக்கு நிரூபணமாகிறது. ஆணும், பெண்ணும் இணைந்து வாழவேண்டியது சமூக அமைப்பு. இச்சமூகத்தில் இன்று கல்வித் துறையிலிருந்து காவல்…

திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 3/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்

(திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 இன் தொடர்ச்சி) திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 3/4 –    9.0.0.தனிமனிதர் அளவில் வறுமை ஒழிப்புச் சிந்தனைகள் — குறள்கள் 10             தனிமனிதன், தன் அளவில் வறுமை ஒழிப்புக்கு எவற்றை, எப்படிச் செய்ய வேண்டும் என்பது பற்றித் திருவள்ளுவர் பதிவு செய்துள்ளவற்றை இங்குக் காணலாம். 9.1.0.அக்குறள்கள்:             92, 221, 222, 223, 225, 226, 227, 228, 230, 231 9.2.0.தனிமனிதர் அளவில் வறுமை ஒழிப்புச் சிந்தனைகள் — தொகுப்பு 1.மனமகிழ்ச்சியுடன் வறியவர்க்கு வழங்குதல்…

பேரா.எழுத்தாளர் அய்க்கண், காலனிடம் கதை சொல்லச் சென்றார்!

பேரா.எழுத்தாளர் அய்க்கண், காலனிடம் கதை சொல்லச் சென்றார்! உலகத் தமிழ் எழுத்தாளா் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவர், பேராசிரியர் எழுத்தாளர் அய்க்கண் நேற்று(11.04.2020)பகலில் நெஞ்சுவலி ஏற்பட்டு இரவில் உயிாிழந்தார். திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மாணவர்களின் அன்பிற்குரியவராகத்திகழ்ந்தவர் எழுத்தாளராக எண்ணற்ற வாசகர்களின் அன்பிற்கும் உரியவரானார். ஏறத்தாழ 1,000 சிறுகதைகள், புதினங்கள், நாடகங்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் 71 நூல்களாக வெளிவந்துள்ளன. பல்கலைக்கழக மாணவர்கள் இவரது படைப்புகளை இளமுனைவர், முனைவர் பட்டங்களுக்கு ஆய்வு செய்துள்ளனர். ஆங்கிலம், இந்தி,…

காலத்தின் குறள் பெரியார் : 10 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

காலத்தின் குறள் பெரியார் அதிகாரம் 10.அரசியல்   1.அமிழ்தா பதவி பெரியார் உமிழ்ந்திட்ட   தாம்பூல மிச்சம் உணர். 2.கெட்டவரைத் தேர்ந்தெடுத்த மக்களைத் தம்சினத்தால்   முட்டாள்கள் என்றுரைத் தார். 3.தான்வாழத் தன்நாக்கில் தேன்தடவித் தந்தாரை   ஏன்ஆள வைத்தாயென் பார். 4.நரம்பில்லா நாக்கு வரம்பில்லா வாக்கு   தெரிந்தளிப்பாய் நின்றனது வாக்கு. 5.கோடிப் பொருள்சேர்க்கும் நோக்குடன் உன்வாசல்   நாடி வருவார் நகர்.          6.கடவுள் மதம்சாதி எல்லாம் வணிகக்   கடையாய் இயங்கும் அரசு. 7.வென்றுவிட்டால் கொக்கரிப்பு…

கல்விச் சிந்தனைகள் 1/3, தவத்திரு குன்றக்குடி அடிகளார்

(எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 5 இன் தொடர்ச்சி) கல்விச் சிந்தனைகள் 1/3 (20-3-94 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை) உயிர்த் தொகுதி பரிணாம வளர்ச்சியில் புல், புழு, விலங்கு. என்று வளர்ந்து கடைசியாக ஐந்து அறிவினாலாகிய விலங்கினின்றும் ஆறறிவுடைய மனிதன் பரிணமித்தான். மனிதன், மிருகமும் அல்லன்; முழு மனிதனுமல்லன். மனிதன் மிருகத் தன்மையிலிருந்து விலகி மனிதனாக வாழ்ந்து அமர நிலை எய்த வேண்டும். இதுதான் மனிதனின் பரிணாம வளர்ச்சி. குறிக்கோள்! ஆனால் எல்லா மனிதருமே விலங்குத் தன்மையிலிருந்து அறவே…

மகுடை 19 விளைவித்த எண்ணங்கள்- பேரரசி முத்துக்குமார்

மகுடை 19 விளைவித்த எண்ணங்கள்        அனைவருக்கும் வணக்கம். எனது பெயர் பேரரசி. நான் பாரிட்டின் மாரா இளம் அறிவியல் கல்லூரி, படிவம் 2 மாணவி ஆவேன். ‘இயக்கக் கட்டுப்பாட்டு ஆணை’ (Movement Control Order)  இன் போது எனது பட்டறிவைப் பற்றி நான் உங்களுடன் பகிர விரும்புகிறேன்.  உலகமயமாக்கலின் இந்த நூற்றாண்டில், நமது அன்புக்குரிய நாடான மலேசியா, மகுடை 19(கொரானா 19) நோயால் தாக்கப்பட்டுள்ளது. மகுடை 19(கொரானா 19) என்றால் என்ன? WHO அதாவது ‘உலக நலவாழ்வு அமைப்பின்’ படி மகுடை 19/COVID…

இந்துக்களே காரணம்! – ஆற்காடு.க.குமரன்

இந்துக்களே காரணம்!   திருச்சோற்றக்காகத் திருவறையைச் சுற்றுவது   கழுவாய் தேடி திருவறையைச் சுற்றுவது   இந்து மதம் அழிய இந்துக்களே காரணம்!   இந்துக்குள்ளும் பிரிவினை சைவம் வைணவம்….. அதிலும் பிரிவினை சாதி……   இந்துக்களை இந்துக்களே கீழ்ச் சாதிக்காரன் என இழிவாய் எண்ணி இறைவன் திருக்கோவில் நுழையத் தடை செய்தது முதல் குற்றம்.   தூணிலுமிருப்பான் துரும்பிலுமிருப்பான் ஆனால் தூங்கிக்கொண்டிருப்பான், ஏங்கித் தவிக்கும் ஏழையை மறந்து!   சிவனுக்குக் கண் கொடுத்த கண்ணப்பர் எந்தச் சாதி…….?   சத்தியம் இருந்தபோது எல்லாம்…