தமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை தமிழில் படிப்போருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதாக 30.09.2010 இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த ஆணையைக் கண்டு தவறாக நம்பியதுபோல் இப்போது அத் தொடர்பில வெளிவரும் திருத்த ஆணை குறித்தும் நாம் நம்பி ஏமாறுகிறோம். இன ஒதுக்கீட்டைச் சுழற்சி முறையில் பின்பற்ற அரசு ஆணை உள்ளது. தமிழ்வழியில் படித்தோருக்கான முன்னுரிமையை இச்சுழற்சி முறையில் திணித்துள்ளனர். எனவே, உரிய முன்னுரிமை என்பது இல்லாமல் போகிறது. 20 விழுக்காட்டு முன்னுரிமையை முதலில் வழங்கிவிட்டு, எஞ்சிய பணியிடங்களுக்கு ஒதுக்கீட்டுச் சுழற்சி…
குவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020
வைகாசி 18, 2051 ஞாயிறு 31.05.2020 மாலை 6.30 மணி மொழிபெயர்ப்பு என்னும் இலக்கியப் பயணம் – திருமதி கெளரி கிருபானந்தன் கூட்ட எண் 735 1284 9450 கடவுச்சொல் kuvikam315
உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்
வைகாசி 16, 2051 / 29.05.2020மாலை 5.00 கூடலுரை – முனைவர் தனசுபா : தமிழும் கணிதமும்
தமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்! த.தே.பே. தீர்மானம்!
வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்! த.தே.பே. தீர்மானம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் எட்டாவது பொதுக்குழுவின் ஆறாவது கூட்டம், வைகாசி 10, 2051 / 23.05.2020 காணொலி வழியில் நடைபெற்றது. கூட்டத்திற்குத், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கி. வேங்கடராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழுத் தோழர்கள் நா. வைகறை, இரெ. இராசு, க. அருணபாரதி, வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, க. விடுதலைச்சுடர், ம. இலட்சுமி அம்மாள்,…
குவிகம் – இணையவழிச் சந்திப்பு
வைகாசி 11, 2051 / 24052020 / ஞாயிறு மாலை 6.30 குவிகம் – இணையவழிச் சந்திப்பு ஒலி வடிவில் மகாத்துமா காந்தியின் ஐந்து வினாடிகள்வாலெடேர் ஏரிசு சேபெர் எழுதிய செருமானிய நாடகம்தமிழாக்கம் – திரு கிருட்டிணமூர்த்தி கூட்டக் குறி எண்: 778 3561 9238 கடவுச்சொல்: kuvikam245நிகழ்வினைக் கேட்க விரும்புபவர்கள் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கவும். நிகழ்வில் கலந்துகொள்ள இணைப்பு :- https://us04web.zoom.us/j/77835619238?pwd=Wk1pUFllRXZMa2VIUmdiSnBZTGRCZz09 உள் நுழையும்போது தங்கள் பெயரினைத் தெளிவாகக் குறிப்பிடவும்நாடகம் முடியும் வரை உங்கள் ஒலிவாங்கியை (MIKE) அமைதிப்படுத்திவிடவும். நாடகம் முடிந்தபின் நேரமிருப்பின்…
வலிசுமந்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் … முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் !
வலிசுமந்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் … முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் ! வைகாசி 05, 2051 / 18.05.2020 http://tgte.tv/v/lDMXPL அழிக்கப்பட்ட இனத்தின் சான்றாக இன்றும் நிலைத்து நிற்கும் முள்ளிவாய்க்கால் வாரத்தின் வலிசுமந்த வரிகளோடு இரண்டாம் நாள் – கவிதை வைகாசி 06, 2051 / 19.05.2020http://tgte.tv/v/OHjmgf அழிக்கப்பட்ட இனத்தின் சான்றாக இன்றும் நிலைத்து நிற்கும் முள்ளிவாய்க்கால் வாரத்தின் வலிசுமந்த கவிதைகளுடன் 11ஆம் ஆண்டின் மூன்றாம நாள் – களத்தின் கவிதைகள் வைகாசி 07 , 2051 / 20.05.2020 http://tgte.tv/v/8dfxhA
குவிகம் இணைய வழி அளவளாவல் – வைகாசி 04, மே 17
வைகாசி 04, 2051 ஞாயிறு 17.05.2020 மாலை 6.30குவிகம் இணைய வழி அளவளாவல்படித்தால் பிழை தீரும் – திரு என்.சொக்கன்
முள்ளிவாய்க்கால் மே18 – தமிழீழத் தேசியத் துக்க நாளை நினைவேந்தத் தயாராவோம் !
முள்ளிவாய்க்கால் மே18 – தமிழீழத் தேசியத் துக்க நாளை நினைவேந்தத் தயாராவோம் ! – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல். கறுப்புப்பட்டி அணிதல்சுடரேற்றல்முள்ளிவாய்க்கால் கஞ்சி உலகத்தமிழர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுமுள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரைமரக்கன்றுகள் வழங்குதல் தமிழர் வரலாற்றில் முதன்மையான ஒர் கூட்டு நினைவாக அமையும் மே-18 முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பின், தமிழீழத் தேசிய துக்க நாளினை நினைவேந்திக் கொள்ள நாம் தயாராவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. கறுப்புப்பட்டி அணிதல், சுடரேற்றல், முள்ளிவாய்க்கால் கஞ்சி, முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை, மரக்கன்றுகள் வழங்குதல் எனத் தமிழினப்படுகொலையினை…
நேற்றுவரை கூகுளில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் இன்றைக்கு அதன் அலுவல் மொழி!
கூகுளின் அலுவல் மொழிகளுள் ஒன்றாக நம் அன்னைத் தமிழும் இடம் பெற்றுள்ளது. கூகுளில் தமிழ் அலுவலக மொழிகளுள் ஒன்றாக இடம் பெறக்காரணமாக இருந்த ஈழத் தமிழர் விட்டருக்கும் சுந்தர் பிச்சைக்கும் பிறருக்கும் பாராட்டுகள்! எவ்வாறு நாம் பயனுறுவது என அறிந்து பயன்படுத்துவோம். தமிழன் உயர்ந்தால் தமிழும் உயரும்! தமிழ் உயர்ந்தால் தமிழனும் உயர்வான்! காணுரை காண்க : https://www.youtube.com/watch?v=VWrz6qQs5EE
குவிகம் இணையவழி அளவளாவல் : 10.05.2020
சித்திரை 27, 2051 / 10.05.2020 / மாலை 6.30 தமிழ்வளர்த்த சான்றோர் – முனைவர் வ.வே.சுப்பிரமணியன் இணைய அளவளாவல்
இலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்!- மறைமலை இலக்குவனார்
இலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்! இனத்திற்கும் தமிழினுக்கும் ஏற்றம் காண ஈரோட்டார் பாதையிலே நாட்டம் கொண்டு அண்ணாவும் நாவலரும் போற்றும் வண்ணம் எந்நாளும் கழகத்தின் வெற்றிக் காக இரவுபகல் பாராமல் உழைத்த நல்லோர் சுரதாவால் பாராட்டுப் பெற்ற புலவர் பணத்திற்கோ பதவிக்கோ எந்த நாளும் பற்றின்றி வாழ்ந்திருக்கும் கவிஞர் அன்றோ?1 பெருவளப் பூராரென்று சொன்னால் உடனே இளஞ்செழியன் திருமுகமே கண்ணில் தோன்றும்! தமிழ்ப்புலமை மேலோங்கி மிளிர்ந்த தாலே தன்பேச்சால் கவித்திறத்தால் சிறப்பு பெற்றார் நாவலர்க்கும் செழியனுக்கும் தம்பி…
தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு! – பெ.அ. இளஞ்செழியன்
தமிழியக்கத் தலைமைப் போராளி பேராசிரியர் இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு! 05.02.1967 1.மீசைவைத்த இலக்குவனார் அடடா,அந்த மேதையின்மேல் எனதுள்ளம் வைத்த அன்போ, ஓசைவைத்த கடலினும் பெரிய தாகும்! உண்மைவைத்த நெஞ்சுடையார் தமிழ்மேல் அன்னார் ஆசைவைத்த தைப்போலே வைத்த வர்,யார்? ஆவியையே தமிழ்மேலே வைத்த செம்மல்! மாசைவைத்த மனமுடையோர் அவர்மேல் இங்கே மாறிமாறி வைத்ததுன்பம் மலைநி கர்க்கும்! 2.நாடகப்பே ராசிரியர் என்றன் ஆசான் நடராச னார்க்கே, யாம் விழாஎ டுத்தோம்! பாடுபுகழ் கல்லக்குடி என்னும் ஊரில்! பாராட்டிப் பேசுதற்கே…