குவிகம் அளவளாவல்: மின்புத்தகம்

  ஐப்பசி 16, 2051 ஞாயிறு   1.11.2020 மாலை 6.30 குவிகம் அளவளாவல்: மின்புத்தகம் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்       நிகழ்வில் இணையஅணுக்கிக் கூட்ட எண்  / Zoom  Meeting ID: 812 1972 7612கடவுக்குறி  / Passcode: 899646பயன்படுத்தலாம் அல்லதுhttps://us02web.zoom.us/j/81219727612?pwd=bVY2aTdHUmlQV2N5QjhhOUJvNDcrQT09இணைப்பைச் சொடுக்கலாம்    

உள்ஒதுக்கீட்டு ஆணைக்குப் பாராட்டு! எழுவர் விடுதலைக்கும் அரசாணை வெளியிடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

View Post உள்ஒதுக்கீட்டு ஆணைக்குப் பாராட்டு! எழுவர் விடுதலைக்கும் அரசாணை வெளியிடுக! அரசுப்பள்ளி மாணாக்கர் நலனைக் கருத்தில் கொண்டு துணிந்து அவர்களுக்காக மருத்துவக்கல்வியில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளமைக்கு மனமாரப்பாராட்டுகிறோம்! மருத்துவப் படிப்பிற்காக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரை அடிப்படையில் சிறப்புச் சட்டம் இயற்றி ஆளுநர் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது அதில் சில திருத்தங்கள் கோரி ஆளுநர் அதை…

முத்தமிழ் ஒன்றே மூவுலகின் எல்லை – ஆற்காடு க குமரன்

View Post முத்தமிழ் ஒன்றே மூவுலகின்  எல்லை!   என் அன்னையே எந்தன் முதல் அறிமுகம் என் அன்னைக்கு நான் புதுமுகம் எனக்கான ஒரே முகம் என் அன்னையின் திருமுகம்   தொப்புள் கொடி உறவு துண்டிக்க தொடங்கியது எந்தன் வரவு   என் அன்னையே என் முதல் ஆசான் கருவறையே நான் கற்கத் தொடங்கிய முதல் பள்ளி வாய் வழியவள் வாசித்த மொழி வசப்பட்டது எனக்குள்ளே வளரவளர வார்த்தைகள் புலப்பட்டன   அம்மா என்று நான் அழைத்த முதல் வார்த்தை கூட அகத்தில் அன்னை கற்றுத்தந்தது கற்றுத்தந்த அவளுக்கான  முதல் காணிக்கை அது…

அறிவியல் தமிழில் ஆக்கிட வாரீர்! – முனைவர் மு.பொன்னவைக்கோ

அறிவியல் தமிழில் ஆக்கிட வாரீர்!   பல்சான் றீரே!  பல்சான் றீரே! அறிவியல் தமிழில் ஆக்கிட வாரீர்! பொறியியல் தமிழில் புதுக்கிடப் புகுவீர்! மருத்துவம் தமிழில் மலரச் செய்வீர்! அருங்கலை பலவும் தமிழில் கொள்வீர்! மாத்தமி ழெங்கும் மணந்திடச் செய்வீர்! மலர்தலை யுலகின் மாந்தர் பலரும் மாத்தமி ழேதன் தாய்மொழி யென்று ஏத்திப் புகழுநாள் எய்திட வார்pர்! காத்திருப் போமெனில் காலம் இல்லை கண்ணிமைப் போழ்தும் கடவா துடனே வண்மை வன்மை வாய்க்கப் பெற்ற வல்லுநர் திரளே விரைகு வீரே! –முனைவர் மு.பொன்னவைக்கோ கிண்டி…

உ.த.ச.வின்இணையத் தமிழ்க்கூடல் 23

ஐப்பசி 12, 2051 / 28.10.2020 புதன் மாலை 4.00 உலகத் தமிழ்ச் சங்கம் இணையத் தமிழ்க் கூடல் 23  ஆத்திரேலியாவின் ஆதி குடிமக்களும் நம்பிக்கைகளும் கூடலுரை – நாகை கா.சுகுமாரன் பதிவுப்படிவம்https://tinyurl.com/y46pop5f இணைப்புhttps://tinyurl.com/yxm3hu8w  

இணையத் தமிழ்ச்சுடர் தேமொழி – இலக்குவனார் திருவள்ளுவன்

இணையத் தமிழ்ச்சுடர் தேமொழி இணையவழித் தன் தமிழ்ப்படைப்புகள் மூலம் சுவையான அருமையான கருத்துகளைத் தெரிவித்து வருபவர் முனைவர் தேமொழி. திருச்சி மரு.முனைவர் சிவக்கண்ணு, சானகி ஆகியோர் திருமகள்.  விலங்கியலில் இளம் அறிவியல் பட்டத்தைச் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் முதுநிலைப்பட்டத்தைப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் ஆய்வியல் பட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றவர்.  திருமணமானதும் கணவருடன் 1987 இல் அமெரிக்கா குடி புகுந்தார். இங்கே  சியார்சு வாசிங்கடன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் (Master of Engineering Management) பெற்றார். நகரகக் கல்வி- பொது மேலாண்மையில் முதுநிலைப்பட்டத்தை (Master…

கவிதைக் குரல்கள் – நூல் வெளியீடு

ஐப்பசி 10, 2051 திங்கள்  26.10.2020 மாலை 5.00 அரிமா புதுக்கண் அரங்கம் 25அ, மேடவாக்கம் நெடுஞ்சாலை சென்னை 600 091 கவிதைக் குரல்கள் -கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு தலைமை பேரா.முகிலை இராசபாண்டியன் ஞாலம் இலக்கிய இதழ்

800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்!

800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்! இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் இராசகுரு, அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறை மாணவி சிவரஞ்சனி, திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த விசாலி, கோகிலா, மனோசு ஆகியோர், இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி நிலக்கிழார் அரண்மனை எதிரில் பழைமையான மண்டபம் போன்ற அமைப்பில் இருந்த அங்காள ஈசுவரி கோயில் விதானத்தில் 6 அடி நீளமுள்ள இரு கல்லில் கல்வெட்டுகள் இருந்ததைக் கண்டறிந்தனர். புதுக்கோயில் கட்ட அம்மண்டபத்தைப் பிரித்தபோது 3 அடி உயரமுள்ள மேலும்…

ஊரடங்கு : கா.ந.கல்யாணசுந்தரம்

* உதிர்ந்த சருகு மிதிபடவில்லை சாலையில் ஊரடங்கு உத்தரவு   * வாலாட்டியபடி தெருவில் நாய் உணவிடுவோர் காணவில்லை   * கரிக்கீல்சாலைகள் முழுக்க கானல் நீர் பாய்கிறது தண்ணீர் தேடும் ஏழை   * சாலையோரம் ஓய்வில் பாரம் சுமந்த வண்டிகள் சோகம் சுமக்கும் தொழிலாளி    * பீதியில் வெளுத்த முகம் பசித்த வயிறு சலவைத் தொழிலாளி  கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம், 94432 59288  

குவிகம்அளவளாவல், 25.10.2020

ஐப்பசி 09, 2051 ஞாயிறு 25.10.2020மாலை 6.30 நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்      நிகழ்வில் இணைய அணுக்கிக் கூட்ட எண் Zoom Meeting ID: 856 3556 4765          கடவுக்குறி Passcode: 172419     பயன்படுத்தலாம் அல்லது    https://us02web.zoom.us/j/85635564765?pwd=OXVaNFpqMG5RdWtpTzFFSlJQZ0pJdz09 இணைப்பைப் பயன்படுத்தலாம் 

கலைமகள் – ஒளவையார் திருவிழா

ஐப்பசி 09, 2051 ஞாயிறு 25.10.2020 கலைமகள் ஒளவையார் திருவிழா அனைத்துலக 18ஆவது அறநெறித் தமிழ் ஆய்வுமாநாடடுக் கருத்தரங்கம்  இடம் – ஒளவையார் கோட்டம், திருவையாறு