காதல் — ஆற்காடு க. குமரன்

காதல் காயப்படுத்தி விட்டுக் களிம்பு பூசுவதும் கட்டப்படுத்திவிட்டுக் கண்ணீர் வடிப்பதும் பாவம் செய்து விட்டு மன்னிப்பு கேட்பதும் துரோகம் செய்து விட்டு துக்கம் கொள்வதும் பாதிக்கப்பட்டவர்க்கு பரிகாரம் அல்ல நொடி நேரத் தவற்றுக்கு நொண்டிச் சாக்கு நொந்த மனம் தந்த தண்டனை பிராயச்சித்தம் பிரியாத என் சித்தம் ஏற்றுக்கொள் குற்றவாளிக் கூண்டில் கூனிக்குறுகி நான்! இவண் ஆற்காடு க. குமரன் 9789814114  

இராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் இலக்கிய விழா

  இராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் இலக்கிய விழா மார்கழி 12, 2051 / 27.12.2020 ஞாயிற்றுக்கிழமை காலை அரவிந்து அரங்கத்தில் நடந்தது. இந்த விழாவானது தமிழ்ச்சங்க முன்னாள் துணைத் தலைவர் அமரர் த. குழந்தை(ச் செட்டியார்) அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவு இலக்கிய விழாவாக நடந்தது. இந்த விழாவுக்குச் செயலாளர் மரு. பொ. சந்திரசேகரன் தலைமை வகித்தார். தொடக்கமாக இறைவாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்துகளை இலதா சேசாத்திரி பாடினார். விழா அறிமுகத்தையும் வரவேற்பையும் தலைவர் பேராசிரியர் மை. அத்துல் சலாம் கூறினார். மகளிர் அணித்தலைவி…

ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்

ஐந்தறிவின் அலறல்   நேர்ந்து விட்டால் போதும் நான் எங்காவது வாழ்ந்து விட்டுப் போவேன் பலி கொடுக்கிறேன் என்கிறான் கிலி பிடிக்கிறது எனக்கு   பேரம் இவனுக்கும் கடவுளுக்கும் சோரம் போவது என் உயிர்   நீரைத் தெளித்தால் நிச்சயம் தலையாட்டும் எல்லா உயிரும்   மௌனம் சம்மதம் மனிதனுக்கு மட்டும் தானா? மௌனமாய் இருந்திருக்கலாம்…   மஞ்சள் நீரைத் தெளித்ததால் மண்டையை மண்டையை ஆட்டியது மரணத்திற்கு வழிவகுத்தது   சாதி மத பேதம் பார்ப்பதில்லை சாப்பிடுவதில் மட்டும் அவனிடம் வரம் பெற அறுபடும் …

நாளைய தமிழுக்கு இன்றைய தேவைகள்!-த.விசயகுமார்

நாளைய தமிழுக்கு இன்றைய தேவைகள்! இந்தத் தலைமுறையில் தமிழ் மன்பதை மக்களிடம் தமிழை வளர்க்க, பாதுகாக்க ஒவ்வொரு தமிழனுக்கும் தலையாய கடமையாக உள்ளது 1) தொலைக்காட்சி, வானொலி இன்றைய காலத்தில் தமிழை வளர்க்க முதல் கடமை தொலைக்காட்சி நடத்துபவர்களுக்கு உண்டு. அதுவும் தமிழர்கள் நடத்தும் தொலைக்காட்சிக்கு முதன்மைப் பங்கு உண்டு. தமிழ் சார்ந்த கல்வெட்டு, கோயில், இலக்கியம், இசை, விளையாட்டு, நாடகம், தற்காப்புக் கலை,  வேளாண்மை, பண்பாடு, சித்த மருத்துவம், வரலாறு இது போன்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்துதல், விவாதம் செய்தல், நேரடி ஒளிபரப்பு…

ஆழிப் பேரலையா? எமனின் கூலிப் படையா? – ப.மு.நடராசன்

ஆழிப் பேரலையா? எமனின் கூலிப் படையா?   நானூற்று அறுபது கோடி அகவை மூதாட்டி பூமித்தாய் பூமியும் கடலும் பெற்ற குழந்தைகள் ஏராளம் ஏராளம் தாய் என்று கும்பிட யாருமில்லையே அவற்றிற்கு மனிதன் பிறந்த பிறகு கிடைத்த மதிப்பு தாய்ப்பட்டம் கடலன்னையின் சீர்வரிசை குடிநீரையே சிக்கனப் படுத்தத் தெரியாத ஊதாரி மனிதனுக்கு எத்தனை முறைதான் தூது விடுவது மேகத்தை? வெள்ளத்தை விழுங்கிப் பூமியைக் காப்பதும் பகைவர் தீண்டாது பாதுகாப்பதும் இப்படியாகக் கடலன்னையின் சீர்வரிசை எத்தனையோ! தத்துப்பிள்ளையின் வெகுமதி கருவைச் சிதைத்து முத்தைக் களவாடுவதும் காலைக்கடன்…

வ.அ.தமிழ்ச்சங்கப் பேரவையின் இணைய இசைவிழா

மார்கழி 12, 2051 ஞாயிறு 27.12.2020காலை 8.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை (கிழக்கு நேரம்) வ.அ.தமிழ்ச்சங்கப் பேரவையின் இணைய இசைவிழா இசைக்கடல் பண்பாட்டுக் கடல் அறக்கட்டளை 16ஆம் ஆண்டு விழா பேரன்புடையீர், வணக்கம். வரும் மார்கழி 12, 2051 திசம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு (கிழக்கு நேரம்) வட‍அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 8-ஆம் ஆண்டு தமிழிசை விழா இணையவழி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. www.valaitamil.tv  என்னும் தளத்தின் வழியாக இணைந்து கண்டுகளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  

கிறித்துநாள் வாழ்த்து – ஆற்காடு க. குமரன்

கிறித்துநாள் வாழ்த்து   என் பாவங்களைச் சுமப்பது நீரே உண்மையானால் என் பாவங்களால் பாதிக்கப்பட்டவரைச் சுமப்பது யார்?   பாவங்களைச் சுமப்பது மேன்மையா பாதிக்கப்பட்டவனைக் காப்பது மேன்மையா?   குற்றங்கள் மன்னிக்கப்பட்டால் குற்றங்கள் குறைந்திடலாகுமோ குற்றங்களை மன்னிப்பது குற்றங்களுக்குத் துணைபோவது அல்லவா?   இயேசுவின் இரத்தம் செயம் வாசகம் வாசித்தேன் வருத்தம் மேலிட்டது  இரத்தம் சிந்தும்  நீங்கள் பாவம் அல்லவா?   உயிர்களிடத்தில் அன்பு வை உரக்கச் சொன்ன மதம் உயிர்ப்பலி இடுகிறது இரத்தம் செயம் என்ற உங்கள் மதம் உயிர்ப்பலியை மறுக்கிறது.  …

கடிகாரக் கடவுள் – ஆற்காடு க. குமரன்

கடிகாரக் கடவுள் ஒரே நாளில் அம்பானி ஆக முடியும் என்று எவனாவது சொன்னால் நம்பாதீர்கள்! ஒரே நாளில் அடிமையாகக் கூட ஆக முடியாது   வினை என்னவோ ஒரு நொடிதான் விளைவுக்கு மட்டும் காலம் தேவைப்படும் கடவுள் இருக்கிறானோ இல்லையோ ஆனால் காலம் இருக்கிறது காலம் இருப்பதால்தான் நீயும் அதைக் கடந்து கொண்டிருக்கிறாய் காலம் உன்னை முந்தி கடந்து கொண்டிருக்கிறது   கடவுள் தண்டிக்கிறானோ இல்லையோ காலம் தண்டிக்கிறது நாளும் புரிகிறது ஞாலம் சுழல்கிறது   காலம் தன் கடமையைச் சரிவர செய்வதால்தான் பிறப்பும்…

தமிழ்க்கூடல், 22.12.2020

உலகத்தமிழ்ச்சங்கம்,மதுரை மார்கழி 07, 2051 செவ்வாய் 22.12.2020 முற்பகல் 11.00 உலகத்தமிழ்ச்சங்கப் பெருந்திட்ட வளாகம், மதுரை கூடலுரை : ‘திருக்குறளும் திருவள்ளுவமாலையும்’ : முனைவர் மு. அருணகிரி ‘புதுநெறி காட்டிய புலவன்’ : முனைவர் கோ.இரேவதி சுப்புலட்சுமி  

குவிகம் மின்னிதழ் – ஓர் அலசல், 20.12.2020

மார்கழி 05, 2051 ஞாயிறு 20.12.2020 மாலை 6.30 குவிகம் அளவளாவல் குவிகம் மின்னிதழ் -ஓர் அலசல் கூட்ட எண் / Zoom  Meeting ID: 619 157 9931கடவுக்கோடு / Passcode: kuvikam123     நிகழ்வில் இணைய: https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09 நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்  

தேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம், தை 2052

தமிழ்க்காப்புக் கழகம் தேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம் சமற்கிருதம், இந்தி ஆகிய மொழிகளின் பன்முகத் திணிப்புகளால் இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள தமிழ் முதலிய தேசிய மொழிகள் அழிவுப்பாதைக்குத் தள்ளப்படுகின்றன. தமிழ் முதலிய தேசிய மொழிகள் நசுக்கப்படுவதால்,  தேசிய மொழியினர் உரிமைகள் பறிக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றனர். இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தித் தேசிய மொழிகள் அனைத்தையும் பாதுகாக்கும் முயற்சியில் அனைவரும் ஈடுபடவேண்டும்.  இதற்கிணங்கத் தமிழ்க்காப்புக்கழகம் தேசியமொழிகள் பாதுகாப்பு இணைய வழிப் பன்னாட்டுக் கருத்தரங்கத்தை வரும் தைத்திங்களில்(2052) நடத்த உள்ளது. நாள் முதலான விவரங்கள் பதிவாளர்கள் எண்ணிக்கைக்கேற்ப…