தமிழர் நாகரிகம்– சி.இலக்குவனார்

 (இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  20 –  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  21   11. நாகரிகம்                 பண்பாடு அகத்தின் – உள்ளத்தின் – தொடர்புடையது.  நாகரிகம் புறத்தின் பாற்பட்டது.  உணவு, உடை, அணிகலன்கள், வசதி, வாய்ப்புகள், ஊர்தி, வீடு, நகர், வாழ்க்கைமுறை முதலியவற்றின் சிறப்பால் அறியப்படுவது.  உள்ளச் சிறப்பால் உரையாலும், செயலாலும் பண்பாடு வெளிப்படும்.  செல்வச் செழிப்பால் நாகரிகம் உயர்ச்சியும் வளர்ச்சியும் பெறும்.  பண்பாட்டால் நாகரிகம் மாற்றமுறுதலும், நாகரிகத்தால் பண்பாடு வெளிப்படுதலும் உண்டு. …

ஒளவையார்: 9 : ந. சஞ்சீவி

(ஒளவையார்: 8 : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 18 2. ஒளவையார் (தொடர்ச்சி) மூண்டெழும் போருக்கெல்லாம் அடிப்படைக் காரணம் மண் வெறியும் புகழ் நசையுமே என்பதை நன்குணர்ந்த அச்சான்றோர், அம்மண்ணாள் வேந்தர் மனம் கொளும் வகையில் தம் இதயக் கருத்தை எடுத்துரைக்கலானார் : “தேவர் உலகை ஒத்த பகுதிப்பட்ட நாடு தம்முடையது ஆயினும், அஃது எப்போதும் தம்மோடு உரிமைப்பட்டே நடவாது; ஒருவர் அந்நாட்டிற்கு உரியவர் அல்லர். ஆயினும், நற்றவம் செய்தோராயின், அஃது அவர்க்கே உரித்தாகும். ஆகையால், நீவிர் யாசிக்கும் அறவோர்…

பாரி மகளிர் 2 – இரா.இராகவையங்கார்

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் – இரா.இராகவையங்கார். : 18 (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 17. தொடர்ச்சி) 4. பாரி மகளிர் (தொடர்ச்சி) இதன்மேற் கபிலர், அவ்வூரை விடுத்து இளவிச்சிக்கோ என்பானிடஞ் சென்று இம்மகளிரது உயர்குடிப்பிறப்பு முதலியவற்றை எடுத்துரைத்து, இவர்களை மணஞ்செய்து கொள்ளும்படி அவனைப் பாடி வேண்ட, அவன் உடம்படாமையால் இருங்கோவேள் என்பானுழைச் சென்று அவனையும் அவ்வாறு வேண்ட, அவனும் அங்ஙனமே உடம்படானாய் மறுக்க, இதற்காக அவனை முனிந்துபாடி, பாரிகுடிக்கும் மூவேந்தர்க்கும் உண்டாகிய பகைமைபற்றி அரசரொருவரும் இவர்களை மணஞ்செய்துகொள்ள இயையாமையாற் கபிலர் அம்மகளிரைத் தமக்கினிய…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 25

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 24. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 10 அந்த ஆண்டு எனக்குத் துணையாக ஒருவரும் இல்லாவிட்டாலும், தனியாகவே எல்லாப் பாடங்களையும் நன்றாகப் படித்து வந்தேன். அரைத் தேர்வில் கணக்கில் முதன்மையான எண்களும், மற்றவற்றில் ஒவ்வொன்றிலும் ஏறக்குறைய ஐம்பது எண்களும் வாங்கினேன். கணக்கில் முதன்மையாக நின்றதற்குக் காரணமாக இருந்த சந்திரனுடைய உதவியை நினைத்துக் கொண்டேன். உடனே அவனுக்கு ஒரு நன்றிக் கடிதம் எழுதினேன். வழக்கத்துக்கு மாறாக அவன் உடனே மறுமொழி எழுதினான். ஊக்கம் ஊட்டி எழுதியிருந்தான். இந்த முறை பள்ளி இறுதியில்(எசு….

வண்ணதாசனும் கல்யாண்சியும்: சிறப்புரை: கணேசராமன்

குவிகம் இணையவழி அளவளாவல் ஆவணி 13, 2052 ஞாயிறு 29.08.2021 மாலை 6.30 வண்ணதாசனும் கல்யாண்சியும் சிறப்புரை: கணேசராமன் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க விரும்புகிறோம்      நிகழ்வில் இணைய  கூட்ட எண்  / Zoom  Meeting ID: 619 157 9931 கடவுக் குறி / Passcode: kuvikam123                                                    அல்லது இணைப்பு    https://bit.ly/3wgJCibyoutube இணைப்புhttps://bit.ly/3v2Lb38

என் பார்வையில் திருக்குறள் – தோழர் தியாகு

திராவிடர் ஒன்றியச் சமத்துவக் கழகம் இணையக்(Zoom) கருத்தரங்கம் 16   ஆவணி 11, 2052 ஞாயிறு 27.08.2021 மாலை 6.30 என் பார்வையில் திருக்குறள் பொழிவு 3 சிறப்புரை : தோழர் தியாகு பொதுச்செயலர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் குறி எண் (Meeting ID ) : 834 6167 5237 கடவுச் சொல் :  202020 இவண் தகடூர் சம்பத்து 98427 87845 /  88704 87845 வலையொளி (you tube) நேரலை  Dhiravidam 1944

தமிழர் பண்பாடு –– சி.இலக்குவனார்

 (இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  19 –  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  20 10. பண்பாடு நல்லாட்சியின்கீழ்க் கல்வி முதலியன பெற்று இல்லற வாழ்வில் சிறந்து கடவுளுணர்வுடையராய் மெய்யுணர்ந்த மக்கள் பண்பாட்டில் உயர்ந்தோராய் இருந்திருப்பர் என்பதில் ஐயமின்று. ‘பண்புடைமை’யே மக்களை மாக்களினின்றும் பிரித்து உயர்த்துவதாகும்.  பண்படுத்தப்படும் வயல் நல்ல விளையுளைத் தருதல் போன்று பண்படுத்தப்படும் உள்ளமும் உலகிற்கு உயர் பயனை நல்கும்.  பண்புடையாளரால்தாம் உலகம் வாழ்கின்றது என்று திருவள்ளுவர் தெளிவுறக் கூறியுள்ளார். “பண்புடையார்ப் பட்டுண் டுலகம்;…

ஒளவையார்: 8 : ந. சஞ்சீவி

(ஒளவையார்: 7 : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 17 2. ஒளவையார் (தொடர்ச்சி)   ஆனால், அந்தோ! ஒளவையாரின் கவிதையும் கண்ணீருங்கூட இனி அதிகமானை உயிர்ப்பியாவே! அதியமான் வாழ்வு அவ்வளவு கசப்பான பாடத்தைக் கடுந்துயரொடு கலந்து இவ்வுலகுக்கு உணர்த்திவிட்டது. அணுவினும் நுண்ணியதாய்-அணுவைப் பிளந்தால் தோன்றும் ஆற்றலினும் பன்னூறு மடங்கு அதிகமான பேராற்றல் படைத்ததாய் விளங்கும் இயற்கையின் ஆற்றலை-பரந்த பேரூழின் வல்லமையை-என்னென்று கூறுவது! ‘வாளெடுத்தவன் வாளால் மடிவான்,’ என்ற சான்றோரின் வாக்கு அதிகமான் வாழ்வில் எவ்வளவு துயரக் காட்சிகளோடு கலந்து மெய்யாகிவிட்டது!…

பாரி மகளிர் 1 – இரா.இராகவையங்கார்

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் – இரா.இராகவையங்கார். : 17 (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 16. தொடர்ச்சி) 4. பாரி மகளிர் பாரி என்பான், தமிழ்நாட்டுப் பண்டைக்காலத்தே பெரும் புகழ் பெற்று விளங்கிய வள்ளல்கள் எழுவருள் தலைமை வாய்ந்தவன். வேள் என்னும் பட்டம் பெற்ற உழுவித்துண்போர் வகையினன்; கொடையிற் சிறந்த எவ்வி என்பவனது தொல்குடியிற் பிறந்தோன்; செல்வமிக்க முந்நூறு ஊர்களையுடைய பறம்புநாட்டுக்குத் தலைவன்; இவனது பறம்புநாடு, பறநாடு எனவும் வழங்கப்படும். ‘பாரி, பறநாட்டுப் பெண்டி ரடி’ எனவும், ‘பறநாட்டுப் பெருங்கொற்றனார்’ எனவும் வழங்குவது காண்க….

உலகத் தமிழ்ச்சங்கத்தின் தமிழ்க்காப்பியங்கள் கருத்தரங்கம்

தமிழ்க்காப்பியங்கள் – ஒரு பன்முகப்பார்வைஇணைய வழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்ஆவணி 08-11, 2052 – 24-27/08/2021 பொழிவாளர்கள்திருவாளர்கள்பெஞ்சமின் இலபோ, செ.அரங்கசாமி, ந.செல்லக் கிருட்டிணன், இரா.சிங்கராசா பதிவு, உட்புகு, நிகழ் நிரல் விவரங்களை அழைப்பிதழில் காண்க! அன்புடன் தா.கவிதா, இயக்குநர், உலகத்தமிழ்ச்சங்கம்

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 24

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 23. தொடர்ச்சி) அகல் விளக்கு வந்த வழியில் ஒரு குடிசையிருந்தது. அதன் வாயிலில், ஒரு கிழவனும் கிழவியும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். கிழவி புகையிலையைக் கிள்ளித் தர, கிழவன் அதை வாங்கி வாயில் வைத்துக் கொண்டு, வலக்கையை நெற்றியருகே வளைத்து என்னை உற்றுப் பார்த்தான். “யார் சாமி போகிறது?” என்றான். “இந்த ஊருக்கு வந்தேன். வெளியூர்”. “யார் வீட்டுக்கு வந்தீர்கள்?” “சந்திரன் வீட்டுக்கு-அதாவது சாமண்ணா வீட்டுக்கு”. “அதுதானே நினைச்சேன். மொட்டையம்மா தம்பி பிள்ளை மாதிரி இருக்குதே, அந்தப் பிள்ளைதான் இரண்டு நாளைக்கு…

தமிழர் மெய்யுணர்வுக்கொள்கை (தொடர்ச்சி)-சி.இலக்குவனார்

(இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  18 –  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  19 9. மெய்யுணர்வுக் கொள்கை (தொடர்ச்சி) “பொருள்நிலை சீருறின் உலகப் பொல்லாங்கு எல்லாம் ஒழியும்” எனும் பொருளுரையைப் போற்றாதார் தம்மைப் போற்றாதாரே.  எனவே, இதனை நன்கு வற்புறுத்தினர் சங்க காலப் பெரியோர்கள். “ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்லெனச்  செய்வினைக் கைம்மிக எண்ணுதி”                          (குறுந்தொகை-63) “இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்  அசையுநர் இருந்தோர்க்கு அரும்புணர்வு இல்”                   (நற்றிணை-214) என உழைத்துப் பொருளீட்டாதார்க்கு…

1 2 4